எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்
.
சதமங்கலம் ரவி ஸ்ரீனிவாஸ வரதன் (பிறப்பு: ஜனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.வாழ்க்கைக் குறிப்பு
வரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். 1959 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்ஸ்) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்திய புள்ளியியல் இன்ஸ்டிட்யூட்டில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963 இல் முனைவர் பட்டம் பெற்றார். Postdoctoral Fellow ஆக, கொராண்ட் கணிதவியல் இன்ஸ்டிட்யூட்டில் 1963இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968 இல் இணைப்பேராசிரியரானார். 1972 இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, 1980 இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.அவர் மனைவி வசுந்தரா வரதன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.
பரிசுகளும் பெருமைகளும்
பேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு:- Visiting Position at Stanford University (1976-77)
- Visiting Position at Mittag-Leffler Institute (1972)
- Visiting Position at the Institute for Advanced Study, Princeton (1991-92)
- Alfred P. Sloan Fellow (1970-72)
- Guggenheim Fellow (1984-85)
- அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)
- Margaret & Herman Sokol Award of the Faculty of Arts & Sciences of New York University (1995)
- மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் கௌரவப்பட்டம் (2003)
- கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் கௌரவப்பட்டம் (2004)
- சர்வ தேச கணித காங்கிரஸின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவர் (1994)
ஏபெல் பரிசு
- முதன்மைக் கட்டுரை: ஏபெல் பரிசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக