19 செப்டம்பர் 2011

      காற்று மாசுபடுதல் பயிர்சாகுபடியைக் குறைக்குமா?

ஆம்! குறைக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சிக்குழு.
மாசுபடுதல் தெற்காசியாவின் நெல்சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஆராய்ச்சி குழுவொன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபடுதலில் பெட்ரோலிய எரிபொருள்களால் உண்டாகும் வாயுக்களே முக்கிய காரணியாக அமைகிறது. 1980 முதல் இந்தியாவில் முக்கிய உணவுப்பொருட்களின் சாகுபடி குறைந்து வருகிறது. உலகில் இதுபோன்ற பிரச்சனையால் தெற்காசியாவும் அதிகம் பாதிப்படையவுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வானத்தை ஆக்கிரமிக்கும் மாசுப்பொருள்களான பசுமையில்ல வாயுக்கள், சிறுதுகள்கள் மற்றும் புகை பெட்ரொலிய பொருட்கள் எரிவதால் பெரும்பாலும் உண்டாகின்றன. இவை சூரிய கதிர்கள் பூமியடைவதையும் வெகுவாக தடுக்கின்றன மழைபெய்தலையும் குறைக்கின்றன.

தற்போது, வரலாற்று நெல்சாகுபடி தகவல்கள் மற்றும் காலநிலை அமைப்பின் மூலம் நெல்சாகுபடி குறைவில் மாசுபடுதலின் பெரும்பங்கை தெளிவாக ஆராயப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. வானிலுள்ள
பழுப்பு மேகம்எனப்படும் மாசுமண்டலம்  இல்லாதிருந்தால், நெல்சாகுபடி 11%-ஆக உயர வாய்ப்பிருப்பதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆரய்ச்சியாளர் கூறியுள்ளார். மேலும் அவ்வறிக்கையில், இத்தகைய மாசுமண்டலம் குறைவதால் நெல்சாகுபடி அதிகரிக்கும் என மேலும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, க்ளோபல் வார்மிங் மற்றும் காற்று மாசுபடுதல் வெறும் ஒரு தனிநாட்டிற்கானதல்ல, உலகிற்கானது. அடுத்ததாக இவ்வாராய்ச்சிக்குழு சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆய்வை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மீது படர்ந்துள்ள பழுப்புமேகத்தின் நாசா செயற்கைக்கோள் படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...