அன்பு நண்பர்களே,வணக்கம்.
இந்தப்பதிவில் ஒலி மற்றும் ஒளி அலைகள் பற்றிய விபரம் காண்போம்.அதிர்வெண் அல்லது அலைவெண் (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும்.
இதனை எளிமையாக விளக்க ஓர் ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம்.
ஊஞ்சலை ஆட்டிவிட்டால் அது அசையாது நிற்கும் நிலையில் இருந்து முன்னே நகர்ந்து எட்ட விலகி ஓர் எல்லைக்குப் போய், பிறகு மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து, பின் எதிர்ப்புறமாகப் போய்ப் பின்னர் தொடங்கிய இடத்துக்கே வரும் பொழுது அது ஒரு சுழற்சி அடைந்தது. (ஆனால், அது மேலும்,மேலும் முன்னும் பின்னுமாய் அலையும்.)
ஒரு மணித்துளி நேரத்தை ஓர் அலகுநேரம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனை முழுச் சுழற்சிகள் அந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பது அதிர்வெண் அல்லது அலைவெண் ஆகும்.
ஒரு நொடிக்கு ஒரு முழு சுழற்சி என்னும் கணக்கு ஓர் ஏர்ட்சு (Hertz) என்று கூறப்பெறுகின்றது. முன்னர் இதனை நொடிக்கு ஒரு சுழற்சி (cycle per second) என்று குறித்தனர்.
ஒலியலைகளும், ஒளியலைகளும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நாம் உணருமாறு பண்புகள் கொண்டிருக்கும். ஒலியினது அதிர்வெண் அதன் சுருதியை தீர்மானிக்க உதவுகின்றது. அதிக அல்லது உயர்ந்த அதிர்வெண் கொண்ட துடிப்பலைகள் "கீச்" என்று உணரப்படும் உயர்ந்த சுருதியுடையனவாகவும்,
குறைந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் (அடிவயிற்றில் இருந்து எழுவதுபோன்ற ஒலியாகிய) தாழ்ந்த சுருதி உடையனவாகவும் இருக்கும்.
இதே போல ஒளியலையின் அதிர்வெண்ணைப் பொருத்து, அதன் நிறம் தென்படுகின்றது.
அதிக அதிர்வெண் கொண்ட காணக்கூடிய ஒளி அலைகள் நீலமாகவும், குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள் சிவப்பு நிறமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
அனைத்துலக அடிப்படை அலகின் படி, அதிர்வெண் ஏர்ட்சு (Hertz) என்ற அலகில் அளக்கப்படுகிறது
ஒரு ஏர்ட்சு என்பது, ஒரு நிகழ்வு ஒரு நொடியில் எத்தனை முழுச் சுழற்சிகள் இடம்பெறும் என்கின்ற அளவாகும்.
ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப் படுகின்றன.
பொதுவாக அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது.
அலை-துகள் இரட்டைத் தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
பொதுவாக அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது.
அலை-துகள் இரட்டைத் தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
அலைகள் இருவகைப்படும்: அவை இயக்க அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves) ஆகும்.
நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள் ஆகும்
நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள் ஆகும்
ஓளி அலைகள், எக்ஸ் X கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள் ஆகும்.
இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. ஆனால், மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.
paramesdriver.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக