05 நவம்பர் 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right To Information Act 2005 - RTI Act, 2005)

 

 இணையதள வாசகப்பெருமக்களே,

 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள  முக்கிய குறிக்கோள்களான , சமத்துவம், சமூகநீதி, பாகுபடுத்தாமை, இறையாண்மை, வாழ்க்கைக்கான உரிமை, தனிமனித சுதந்திரம்  போன்ற அம்சங்களை நிறைவேற்றும் உரிமை அவசியமாகிறது. 

ஆங்கிலேயர்களால்  கொண்டுவரப்பட்ட அதிகாரப்பூர்வ ரகசிய பாதுகாப்புச்சட்டம் 1923 (Official Secrets Act,1923)  இந்தியாவில் உளவு வேலைகளைத் தடுப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சார்ந்த ரகசியங்களைப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கியமான சட்டமாகும்.இச்சட்டத்தின்  விதிமுறை அரசின் செயல்பாடுகளை மூடி மறைக்கிறது. இதனை மாற்றி அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவந்து  மக்கள் பங்கேற்பினை உறுதிசெய்து மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்கவேண்டும் என்பதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது.

இந்த RTI 2005 சட்டமானது இந்தியக்குடிமக்களுக்கு கிடைத்த இரண்டாவது  சுதந்திரமாகும்.

இந்திய அரசியல் சாசன சட்டம் விதி 19(1) பகுதியின்கீழ்  தகவல் என்பது மக்களின் அடிப்படைஉரிமையிகளின்படி உறுதி செய்யப்பட்டது.

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் உத்தரவு  அரசாணை எண் 114 /20-08-2008 தேதியிட்டபடி  இந்தியக்குடிமக்களாகிய நாம்  எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதார‍ராகிய நமக்கு உரிய தகவல் தரவேண்டும்.

இந்திய குடிமக்களுக்கு இவ்வளவு சட்டங்கள் சாதகமாக இருந்தாலும் சில அரசு  அதிகாரிகள் சுயநலனுக்காக மக்களுக்கு விழிப்புணர்வுவரக்கூடாது?.

என்ற கேடான எண்ணத்தில்  மனுதார‍ரை எந்தளவு சலிப்படையவைக்கமுடியுமோ,சீரழியவைக்கமுடியுமோ அந்தளவுக்கு தீவிரமாக எதிர்வினையாற்றுவார்கள். நாம் களத்தில் இறங்கிவிட்டால் சலிப்படையாமல் மனுக்களை அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.









தகவல் அறியும் உரிமை இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் உண்டு. அதேவேளை ஒழுக்கம் தவறாமல் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும்.

                   நமக்கு தகவல் தேவைப்படும் அரசு அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு RTI2005 ன்கீழ்  விண்ணப்பம் அனுப்புவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. தவறாமல் பொறுப்புடன் கடைபிடிக்கவேண்டும். 

         உன் பெயர் என்ன? பணிக்குச்சேர்ந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன?. உனது குடும்பத்தினர் எங்கு வசிக்கிறார்கள்?. ஏன்?,எப்படி?,முடியாதா,? எதற்காக செய்தாய்?, என்பதுபோன்ற  அதிகாரத்தோரணையுடன் கேள்விகள் கேட்க‍க்கூடாது. மிரட்டுவதுபோன்று தகவல்கோருவதுகூடாது.

        அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரும் சராசரி மனிதர்களே,பணியாற்றும் எல்லோரும் நம்முடைய உறவினர்களே என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

         இயற்கையாக உருவான பழந்தமிழ்மொழியில்,தமிழ்மொழியில் சுமார் ஆறுஇலட்சம் சொற்களடங்கிய சொற்பெருக்கம்மிகுந்த  செந்தமிழ்மொழியில் பண்பாடு காக்கும் சொற்கள் ஏராளமாக உள்ளன.  எனவே கடுஞ்சொற்களைத் தவிர்த்து , நயமான வார்த்தைகளைக் கையாண்டு எளிமையான வரிகளில் கருத்துச்செறிவுடன் தெளிவானமுறையில்   கேள்விகள்? என்பதை விட தகவல்களாக‍க் கேட்க வேண்டும்.

ஒரு மனுதார‍ர் கீழ்குறிப்பிட்ட தகவல்களைச் சார்ந்து  நூற்றுக்கணக்கான மனுக்களை அனுப்பலாம். ஒரே மனுவில் நமக்குத்தேவைப்படும் எல்லா தகவல்களையும் கேட்க‍க்கூடாது. உதாரணமாக குடிநீர்,சாக்கடைவசதி,தெருவிளக்கு பராமரிப்பின்மை,சாலை பராமரிக்காமை, போக்குவரத்துக் குறைபாடு, நியாயவிலைக்கடைகளில் குறைபாடு என பலதேவைகள் இருந்தாலும், 

             ஒரு தேவைக்கு ஒருமனு மட்டுமே அனுப்பவேண்டும். கோரப்படும் தகவல்களும் சுருக்கமான தெளிவில் கேட்கவேண்டும். 

 தகவல் அறியும் உரிமை2005 மனுவினை கைப்பட எழுதியும் அனுப்பலாம்.தட்டச்சு செய்தும் அனுப்பலாம்.

 முதல் மனுவிற்கு விண்ணப்பக்கட்டணமாக பல்வறே வழிமுறைகள் இருந்தாலும் நமக்கு எளிதானவழி மனுவில்  ₹10/  பத்துரூபாய் மதிப்புள்ள நீதிமன்றக்கட்டணவில்லை (கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் )  ஒட்டலாம். எழுதிப்பட்ட விண்ணப்பதை பலமுறை வாசித்து (1)அனுப்புநர் முழு முகவரி மற்றும் கைப்பேசி எண்,  (2) பெறுநர் முழுமுகவரி, (3)தலைப்பு, (4)தேதி, (5)மனுதார‍ர்கையொப்பம் , (6)நீதிமன்றக்கட்டணவில்லை ஒட்டப்பட்டவிவரம் ஆகிய  எல்லாவற்றையும் பொறுமையாக  சரிபார்த்தபிறகு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும். 

பதிவுத்தபாலில் அல்லது  விரைவுத்தபாலில் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பிஅதற்குரிய அத்தாட்சி ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 –
பிரிவு 2(f) ன்படி .... இந்தியக் குடிமக்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ளவைகள் சார்ந்த தகவல்களை நகல்களாகப் பெறலாம். சம்பந்தப்பட்ட அரசு அலுவலகந்தில் கோப்புகளைப் பார்வையிடலாம்.முதல் ஒருமணிநேரம் இலவசமாக அனுமதிக்கப்படும்.அதன்பிறகு தாமதமாகும் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் கட்டணம் செலுத்தவேண்டும்.

(1) பதிவுகள்(Records),
(2) ஆவணங்கள்(Documents),
(3) நினைவூட்டல்கள்(Memos),
(4) மின்னஞ்சல்கள்(E-Mails),
(5) கருத்துகள்(Opinions),
(6) ஆலோசனைகள்(Advices),
(7) செய்திக்குறிப்புகள்(Press Releases),
(8) சுற்றறிக்கைகள்(Circulars),
(9) உத்தரவு நகல்கள்(Orders),
(10) பதிவு புத்தகங்கள்(Log Books),
(11) ஒப்பந்தங்கள்(Contracts),
(12) அறிக்கைகள்(Reports),
(13) காகிதங்கள்(Papers),
(14) மாதிரிகள்(Models)
(15) மின்னணு வடிவில் உள்ள தரவுகள்(Electronic data),
மற்றும்
(16) தனியார் நிறுவனத்திலிருந்து அரசு அதிகாரிகள் சட்டப்படி பெறக்கூடிய தகவல்களும்
இதில் அடங்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 Right To Information Act - 2005 (RTI Act, 2005) 31 முக்கிய பிரிவுகளையும், பல உட்பிரிவுகளையும் கொண்டுள்ளது.
கீழே ஒவ்வொரு பிரிவும் அதன் உட்பிரிவுகளுடன் வழங்கப்பட்டுள்ளன.

பிரிவு 1 – சட்டத்தின் பெயர், பரப்பு, மற்றும் செயல்பாடு
சட்டத்தின் பெயர் – "தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005" (Right to Information Act, 2005) என அழைக்கப்படும்.
பரப்பு
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கும்.
செயல்பாடு
இந்த RTI_2005 சட்டம் 2005 அக்டோபர் 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

பிரிவு 2 – முக்கிய வரையறைகள் (Definitions)

1. "தகவல்" (Section 2(f)) – ஆவணங்கள், நோட்டுக்கள், மின்னணு பதிவுகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ ஆகியவற்றை உள்ளடக்கியது.

2. "பொது அதிகாரம்" (Section 2(h)) – அரசு துறைகள், அரசால் நிதியுதவி பெறும் தனியார் நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுப் பள்ளிகள்.

3. "பொது தகவல் அலுவலர்" (PIO) (Section 2(l)) – பொது தகவல் கோரிக்கைகளை ஏற்று, பதிலளிக்கும் அதிகாரி.

4. "முதல் முறையீட்டு அதிகாரி" (FAA-FIRST APPELLATE AUTHORITY )
(Section 2(j)) –பொது தகவல் அலுவலர் PIO வழங்கிய தகவலில் திருப்தி இல்லையெனில்,
மேல்முறையீடு செய்யக்கூடிய அதிகாரி.

2(j) தகவலுக்கான ஆய்வை வரையறுக்கிறது.
பிரிவு 3 – தகவல் பெறும் உரிமை (Right to Information)
இந்திய குடிமக்கள் அரசு தகவல்களை கோரலாம்.

பிரிவு 4 – அரசு துறைகள் தாமாக வெளியிட வேண்டிய தகவல்கள்
அரசு துறைகள் தாமாகவே வெளியிட வேண்டிய தகவல்களில் உள்ளவை:
(4(1)(a)) – நிர்வாக அமைப்பு
(4(1)(b)) – வேலைவாய்ப்பு விவரங்கள்
(4(1)(c)) – ஒப்பந்தங்கள், திட்டங்கள்
(4(1)(d)) – நிதி செலவுகள்
இவை இணையதளங்கள், அலுவலக அறிவிப்புகள் மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

பிரிவு 5 – பொது தகவல் அலுவலர் (PIO- Public Information Officer) நியமனம்...

1. (5(1)) – ஒவ்வொரு அரசு துறையிலும் ஒரு பொது தகவல் அலுவலர் PIO நியமிக்கப்பட வேண்டும்.

2. (5(2)) – சில அலுவலகங்களில் உதவிப் பொது தகவல் அலுவலர் (APIO- Assistant Public Information Officer) நியமிக்கப்படலாம்.

பிரிவு 6 – தகவல் கோருவது எப்படி?

1. (6(1)) – எழுத்துப் படிவம், மின்னஞ்சல் அல்லது மனு மூலம் தகவல் கோரலாம்.

2. (6(2)) – காரணம் கூற தேவையில்லை.

பிரிவு 7 – தகவல் வழங்கும் காலக்கெடு...
1. (7(1)) – சாதாரண கோரிக்கைக்கு – 30 நாட்கள்
2. (7(1)) – மனித உயிருக்கு ஆபத்து உள்ள விஷயங்களுக்கு – 48 மணி நேரத்திற்குள்
3. (7(2)) – தகவல் வழங்க மறுத்தால், அதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
4. (7(3)) – தகவல் பெற கட்டண விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
5. (7(5)) – BPL (Below Poverty Line) நபர்களுக்கு கட்டணம் இல்லை.

தகவல் மறுப்பு மற்றும் தடைகள்
பிரிவு 8 – தகவல் வழங்க முடியாத விவரங்கள்
1. (8(1)(a)) – தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்
2. (8(1)(b)) – நீதிமன்ற விசாரணைகள்
3. (8(1)(j)) – தனிநபர் தனியுரிமை (Personal Privacy)

பிரிவு 9 – ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மறுப்பதற்கான தடையில்லை.

பிரிவு 10 – பகுதி தகவல் வழங்கல்
1. (10(1)) – தகவலின் ஒரு பகுதி மறைக்கப்பட்டாலும், மீதமுள்ள தகவல்களை வழங்கலாம்.

மேல்முறையீடு மற்றும் தண்டனை விதிகள்
பிரிவு 11 – தனிப்பட்ட தகவல்களை வழங்க முன்பு அந்த நபரின் அனுமதி பெறுதல்.

பிரிவு 12 – மத்திய தகவல் ஆணையம் (CIC) அமைப்பு.

பிரிவு 13 – CIC உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் விதிகள்.

பிரிவு 14 – CIC உறுப்பினர்களை நீக்குவது தொடர்பான விதிகள்.

பிரிவு 15 – மாநில தகவல் ஆணையம் (SIC) அமைப்பு.

பிரிவு 16 – SIC உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் விதிகள்.

பிரிவு 17 – CIC / SIC உறுப்பினர்களை நீக்குவது தொடர்பான விதிகள்.

பிரிவு 18 – பொது தகவல் அலுவலர் மீது புகார் அளிக்க SIC / CIC-க்கு அதிகாரம்.

பிரிவு 19 – மேல்முறையீட்டு சட்டம்...
1. (19(1)) – பொது தகவல் அலுவலர் (PIO) தகவல் வழங்க மறுத்தால், முதலில் முதன்மை அதிகாரியிடம் (FAA) முறையிடலாம்.
2. (19(3)) – அதற்குப் பிறகு, மாநில அல்லது மத்திய தகவல் ஆணையத்திற்கும் (SIC/CIC) முறையிடலாம்.

பிரிவு 20 – பொது தகவல் அலுவலர் (PIO)-அவர்களுக்கு தண்டனை விதிகள்
1. (20(1)) – நாள் ஒன்றுக்கு ₹250 அபராதம் (அதிகபட்சம் ₹25,000 வரை).
2. (20(2)) – மறைமுகமாக தகவல் மறைத்தால், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தண்டனை விதிக்கலாம்.
RTI சட்டத்தின் பொதுவான விதிகள்
பிரிவு 21 –பொது தகவல் அலுவலர் PIO-விற்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு.
பிரிவு 22 – மற்ற சட்டங்களை விட RTI சட்டத்திற்கே முன்னிலை.
பிரிவு 23 – RTI தொடர்பாக நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு தொடுக்க முடியாது.
பிரிவு 24 – சில அமைப்புகள் RTI-யில் இருந்து விலக்கு (RAW, IB, CBI).
பிரிவு 25 – ஒவ்வொரு ஆண்டும் RTI செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிட SIC / CIC கட்டாயம்.
பிரிவு 26 – RTI சட்டத்தை பிரச்சாரம் செய்ய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பிரிவு 27 – மாநில அரசுகள் RTI செயல்பாடுகளை முன்னெடுக்க விதிகள் உருவாக்கலாம்.
பிரிவு 28 – மத்திய அரசு விதிகளை உருவாக்க அதிகாரம் பெறும்.
பிரிவு 29 – சட்டம் நடைமுறைக்கு வந்த தேதி.
பிரிவு 30 – பூர்வீக சட்டங்களை நீக்குதல்.
பிரிவு 31 – அனைத்து விதிமுறைகளும் தெளிவாக அமல்படுத்தப்படும்.

என்னறிவுக்கெட்டிய தகவல்களை பதிவிட்டுள்ளேன்.
தகவல்அறியும்உரிமைசட்டம்2005 சம்பந்தமான விழிப்புணர்வு அரசுகளும் ,பல தன்னார்வ அமைப்புகளும்,வழக்குரைஞர்களும் ,பாதிக்கப்பட்ட தனிநபர்களும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் இணையதளத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
நான் பின்பற்றும் சாதாரணமனிதன் தளங்களை இங்கு பகிர்கிறேன்.

commonMan திரு முருகேசன் மற்றும் RTI2005 ஆசிரியர்திரு. ஹக்கீம் அவர்களும் எளிமையாக விழிப்புணர்வு தருகின்றனர்.

திரு.RTI முருகேசன் அவர்களின் இணையவழிதளங்களைப் பகிர்ந்துள்ளேன்.அவைகளில்
அதிகப்படியான தகவல்களைப்பெறலாம்.

யூடியூப் வீடியோவில் youtube.com/@ commonManRTI,

instagram.com இல் https://www.instagram.commonman9095,

Twitter இல் twitter.com/Muruges909511?s=09

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில்
ஆகியவற்றில் பார்வையிட்டு தெளிவடையுங்க.

திரு. RTI முருகேசன் அவர்களின் நோக்கம்.

"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்" சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோம்... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் பற்றிய சந்தேகங்கள் பற்றிய வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகள் வெளியிடப்படும்..

02 நவம்பர் 2026

தமிழ் என் அடையாளம்..

  தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் - மகாகவி பாரதியார்.

அனைவருக்கும் வணக்கம்.தங்களை 

கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

   








                                          தமிழ் என் அடையாளம்















இலவசமாக தமிழ்மொழிவளப் பயிற்சி வகுப்பு தொடக்கம்...

 கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் சார்பாக எழுத்தாளர் சங்கமம் நடத்தும் இலவச தமிழ்மொழிவளப் பயிற்சி 1-11-2026 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு நிறைவடைந்தது.

  நமது ஈரோடு  மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் மரபுக்கவிதை நூல் திறனாய்வு, 






தாளவாடி KCT மெட்ரிக் பள்ளியின் தமிழுக்கான சமூகப் பங்களிப்பு ,என பல அனுபவங்களைப் பகிர்ந்துரையாடி தமிழ்மொழிவளப் பயிற்சி தொடங்கப்பட்டது. உயிரெழுத்துகள் 12 உயிர்க்குறில் 5 , உயிர்நெடில் 7 உச்சரிக்கும் ஒலிப்புக் கால அளவு குறிலெழுத்துகளுக்கு ஒரு மாத்திரை அளவு,நெடிலெழுத்துகளுக்கு இரண்டு மாத்திரை அளவு,சுட்டெழுத்துகள் அ,இ,உ வினாவெழுத்துகள் ஆ,யா,ஏ,ஓ, 

மெய்யெழுத்துகள் வல்லினம்6 மெல்லினம் 6 இடையினம் 6 என 18 மெய்யெழுத்துகள்.ஒலிப்புக்கால அளவு அரை மாத்திரை. 

உயிரெழுத்துகள் புணர்ந்த மெய்யெழுத்துகள் உயிர்மெய்யெழுத்துகள் அவை உயிர்மெய்க்குறிலெழுத்துகள்,உயிர்மெய்நெடிலெழுத்துகள் என விளக்கப்பட்டன. 

          ஒலியின் உருவமானதே எழுத்து.

நாம்  உச்சரிக்கும் ஒலிகளே எழுத்துகளாகின்றன. 

எழுத்துகள் சேர்ந்து பொருள்தரும் சொல்லாகின்றன.

பொருளுடைய சொற்கள் இணைந்து பொருள்தரும் சொற்றொடராகின்றன.

 சொற்றொடர்கள் முழுமையான கருத்தை தரும்போது வாக்கியமாகின்றன.என்பதுபோன்ற விளக்கங்கள்  உட்பட தமிழ்மொழிசார்ந்த பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டன.

காலை சரியாக 10.00மணிக்குத்தொடங்கிய வகுப்பு சிறிதும் இடைவெளியில்லாமல் தொடர்ச்சியாக மதியம் 12.45 மணிவரை நடத்தப்பட்டது.

    இரண்டாம் வகுப்பு மாணவக்குழந்தைகள் உட்பட 12ஆம் வகுப்பு மாணாக்கர்வரை ஆர்வமுடன் தமிழ்மொழிவளப்பயிற்சியினைக் கவனமாக‍க்கேட்டறிந்தும்விவாதம்செய்தும் இனிதே நிறைவுபெற்றது.












      கோபி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,அருவங்கொரை.மற்றும் கொளப்பலூர் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி,புனித மரியன்னை துவக்கப்பள்ளி, அம்மன்கோவில்பதி MRSமெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து  நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர்.

            கொளப்பலூர்    நூலக வாசகர் வட்ட தலைவர் திரு.ஜெய்சங்கர் அவர்கள்,    MRS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அவர்கள் ,மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள்,கோபி TNSTC நடத்துநர் தமிழார்வலர் திரு.மாணிக்கசுந்தர் மற்றும் தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் வசந்தம் எடைநிலையம் பழனிச்சாமி,  திரு.P.காளீஸ்வரன்,திரு.EB சந்திரசேகரன், கொளப்பலூர் ரோட்டரி சங்கத் தலைவர்  D.பொன்னுச்சாமி, செயலாளர் P. கோபால் உட்பட  கொளப்பலூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

            கொளப்பலூர் ரோட்டரி சங்கம் சார்பாக கொளப்பலூர் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்மொழிப் பயிற்சியாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர்.

        மாதந்தோறும் பயிற்சி நடத்துவதாக அறிவித்திருந்தோம். மாணவ,மாணவியரின் கோரிக்கையை ஏற்று  இனி மாதம் இருநாள் பயிற்சி வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.

 ஒவ்வொரு மாதமும் முதல்ஞாயிறு மற்றும் மூன்றாவது ஞாயிறு கொளப்பலூர் வாரச் சந்தை வளாகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்மொழிவளப் பயிற்சி விழிப்புணர்வுக்கான  துண்டறிக்கை முனைவர் கு.அருளானந்தம் எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர் சு.தாரணி திரவியா ஆகியோர் மாணவ,மாணவியருக்கு வழங்கினர்.எழுத்தாளர் சந்தைமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

         2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையிலான  வகுப்பு மாணவ,மாணவியருடன் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழார்வமுள்ள அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

அடுத்த பயிற்சிமுகாம் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொளப்பலூர் வாரச்சந்தை வளாகத்தில் நடத்தப்படும்.என்ற தகவல் அறிவிக்கப்பட்டது.


                           மாணவர் மட்டும் பயிற்சியில் பங்கேற்க அனுமதியா?அல்லது எல்லோரும் கலந்துகொள்ளலாமா? என 

கோபிசெட்டிபாளையம் அரசுபோக்குவரத்துக்கழக‍க்கிளை நடத்துநர் திரு. மாணிக்கசுந்தர் அவர்கள் கைப்பேசி வழி தொடர்பு வினவினார்.தமிழ்மொழி ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். வயது தடையில்லை என பதிலுரைக்கப்பட்டது. உடனே புறப்பட்டு வருகைபுரிந்து தமிழ்மொழிவளப் பயிற்சியில் கலந்துகொண்டார். பாராட்டி மகிழ்ந்தோம்.



19 ஆகஸ்ட் 2026

பவானிசாகர் புத்தகத்திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி, மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி - 2026

 



மதிப்பிற்குரிய வாசகர்களே,

         வணக்கம். வருகின்ற 2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமையும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இரண்டுநாட்கள்  னவானிசாகர் பேருந்துநிலையம் அருகிலுள்ள  தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் ஐயா அவர்கள் நினைவு அரங்கத்தில்,


     சத்தியமங்கலம் மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு,யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் இணைந்து, மக்களின் வாழ்வாதாரத் திருவிழாவாக

 பவானிசாகர் புத்தகத் திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி மற்றும் பள்ளிகளின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி மற்றும் குறிப்புரை வழங்குதல் நிகழ்வு என நடத்துகின்றன.



பேரன்புகொண்ட பொதுமக்களே,  வாசகர்கள் மற்றும் வேளாண்பெருங்குடி மக்களே,

வணக்கம்.பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் மரபு விதைகள் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம் .அனுமதி இலவசம்,அனைவரும் வருக.அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்க.

 தெற்காசியாவின் மிகப்பெரிய மண் அணை அமைந்துள்ள பவானிசாகரில் ஈரோடு பாசனத் தந்தை தியாகி M.A.ஈஸ்வரன் அரங்கத்தில்,

சத்தியமங்கலம் தாலுக்கா மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு, யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் கிளப்  மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் இணைந்து ,

முதன்முறையாக ,

பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் விற்பனை, மரபு விதைகள் கண்காட்சி மற்றும் விற்பனை,பள்ளி மாணவ,மாணவிகள்  பங்கேற்கும் மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி

வருகின்ற 2026- ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை மற்றும் 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள்   நடத்துகின்றன.

காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பல்லாயிரக்கணக்கில் 

பொது அறிவுப் புத்தகங்கள் கண்காட்சி &10℅தள்ளுபடி விற்பனை,

நாட்டுக் காய்கறி விதைகள், கீரை விதைகள், மூலிகை விதைகள், விதைக் கிழங்குகள், விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களுக்கும் தேவையான உபகரணங்கள்,இடுபொருட்கள்,கண்காட்சி & விற்பனை நடைபெறுகின்றன.

2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை காலை சரியாக 10.00 மணிக்கு மீன்வளத்துறை,வனத்துறை உட்பட  வேளாண்துறைகளின் விஞ்ஞானிகளும்,அரசு ஊழியர் பயிற்சிநிலையம், பேரூராட்சி மன்றத்தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்கள்,வணிகர் சங்கம்,வியாபாரிகள் சங்கம்,சமூக சிந்தனையாளர்கள் உட்பட சான்றோர் மேன்மக்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

மாலை 3.00 மணியிலிந்து 4.00 மணிவரை வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் வேளாண் கருத்தரங்கம் மற்றும்  தற்போது நம்மை மிரட்டிவரும் எல்- நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்கொள்ளும் வறட்சி,அதிகவெப்பம், மற்றும் பெருமழையின் பாதிப்புகளும் பாதுகாப்பும் கலந்தாலோசனைகளும் நடைபெறுகின்றன.இரவு 6.00 மணிக்கு இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அடுத்தநாள் 2026 ஆகஸ்டு 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு

மகளிர் சுய உதவிக் குழுக்களும்,தன்னார்வ அமைப்புகளும் ,குடும்பப் பெண்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.அதுசமயம், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுப் பொருட்கள்,தின்பண்டங்கள்,நஞ்சில்லா உணவுகள்,கைவினைப் பொருட்கள்,கைத்தறி ஆடைகள் கண்காட்சியும் குறைந்தவிலையில் விற்பனையும் நடைபெறுகின்றன.

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

மதியம் 2.00 மணிக்கு மீனவர் நலனில் தமிழக அரசு தலைப்பில் ஒளிப்படக்காட்சியுடன் மீனவர்கள் குடும்பவிழாவும் மீன் உணவுகள் விற்பனையும் நடைபெறுகின்றன.

மாலை 4.00 மணிக்கு சித்த மருத்துவர்களும், மூலிகை மருந்துகள் விற்பனையாளர்களும்,மூலிகைத் தாவரங்கள் சாகுபடியாளர்களும் சூழல் ஆர்வலர்களும் கலந்துகொள்ளும், " தமிழ்வழி மருத்துவம் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

மாலை 6.00 மணிக்கு நிறைவுவிழாவுடன் நிறைவுபெறுகின்றது.







தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right To Information Act 2005 - RTI Act, 2005)

   இணையதள வாசகப்பெருமக்களே,  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள  முக்கி...