28 ஏப்ரல் 2014

இதைப் படியுங்க..சிகரெட் பிடியுங்க.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள்!! சிகரெட் பிடிப்பவர்கள் த
தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள்!!
சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...!

1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது.

2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது.3. நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.?

எப்படி?

புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப் கோதுமைமாவை உங்களால் சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப் கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம் போடுகிறது!.

அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?

ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன் சொன்ன சிறிய துவாரம் கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!!

உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்…..

கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு ஆப்பு அடித்தது போல மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.

பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது சிகரெட்டுகள் பிடிப்பதன் மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!.

திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை !

ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை.


ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்ல வேண்டும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்…. உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன நியாயம்?

இது தேவையா?

21 ஏப்ரல் 2014

தபால் ஓட்டுபோலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் திடீர் மாற்றம்

போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.
போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.
தேர்தல் பணியாற்றும் போலீஸாருக்கான தபால் ஓட்டுப் போடும் வாக்குச்சாவடி மையம், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது. இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட போலீஸார் தபால் வாக்கைச் செலுத்தி வந்தனர்.
இந்த வாக்குச்சாவடி மையத்துக்கு சிறப்பு அலுவலராக சகாயமேரி நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு பணிக்காக வெளியூர் செல்லும் போலீஸார் தங்களது பணி ஆணையை காண்பித்து தபால் ஓட்டு போட்டுவிட்டுச் சென்றனர். இந் நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சோ.மதுமதி இம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். மிகவும் குறுகலான இடத்தில் வாக்குச்சாவடி மையம் இருப்பதைப் பார்த்த அவர், அதை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் அரங்குக்கு இம் மையம் உடனடியாக மாற்றப்பட்டது. சனிக்கிழமை 101 பேர் தபால் ஓட்டுப் போட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 208 பேர் ஓட்டுப் போட்டிருந்தனர். மொத்தமுள்ள 443 பேரில் இதுவரை 309 பேர் வாக்களித்துள்ளனர்.

தபால் ஓட்டு சீட்டு தயார்!

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவம் இருந்தால், அரசு அலுவலர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குள் எந்த ஓட்டு சாவடி யில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இதன் மூலமாக தபால் ஓட்டு போடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என தெரிகிறது. கோவை மாவட்ட அளவில் 15 ஆயிரம் தபால் ஓட்டு படிவம் மற்றும் தபால் உறை (படிவம் 13 ஏ) அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பெயர், கட்சியின் பெயருடன் இந்த படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. சின்னம் அச்சடிக்கப்படவில்லை. வரும் 15ம் தேதி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அன்றைய தினம் கோவை, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்படும். தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் இந்த ஓட்டு பெட்டியில் தபால் ஓட்டு போடலாம். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஒரு மணி நேரம் முன்பு வரை தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

18 ஏப்ரல் 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க

மரியாதைக்குரியவரே,வணக்கம்.
    

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்

சுத்தமான தேன் 500 கிராம்

whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்

தோலை நீக்கிவிடக்கூடாது

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் 

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. 

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். 

மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும். 

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு 
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . 

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் 
இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். 

யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! 

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு 
டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. 

கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… 

நாம மனசு வைச்சா எல்லாம் முடியும் .


                புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

               புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம்
இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு
டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..

கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க…
நாம மனசு வைச்சா எல்லாம் முடியும் .

16 ஏப்ரல் 2014

வெங்காயம்-மருத்துவம் ...மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.வெங்காயம் மருத்துவக் குணங்கள் கொண்டது.அதனைப்பற்றி இங்கு காண்போம்.
 
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் :-
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

15 ஏப்ரல் 2014

மீன் மருத்துவப்பண்புகளில் சில....

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.மாமிச உணவுகளில் மீன் உணவே சிறந்தது...

மீன்களின் மருத்துவப்பண்புகள் சில…
 1.  மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.
 2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
 3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
 4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
 5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
 6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
 7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
 8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.
 9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.
இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.
சரி… இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா?… இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது?…
மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது.
ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்…
இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்…
அவை என்னென்ன?…
மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்…
தரமான மீன்கள் என்றால்…
 1. மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.
 2. தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும்.
 3. கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
 4. செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
 5. மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
 6. மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
 7. தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.
தரம் குறைந்த மீன்கள் என்றால்…
 1. மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
 2. விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
 3. மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.
 4. செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 5. மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
 6. மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
 7. தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.


13 ஏப்ரல் 2014

கல்விச் சான்றிதழ் தொலைந்துவிட்டதா???

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 
    பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்கள் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி?

பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:

பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:

பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

பத்திரப்பதிவு செய்வது எப்படி?

ஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

பத்திரப் பதிவின் அவசியம் என்ன?

பத்திரப்பதிவின் நோக்கம் ஒரு வீட்டை, ஒரு கடையை, ஒரு நிலத்தை, ஒரு சொத்தை இன்னாரிடமிருந்து இன்னார் பெற்றுக்கொண்டார் என்பதற்கான அடிப்படை ஆதாரமே. அதாவது பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதற்கான ஆவணம். ஆனால் பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாறுதல் செய்துகொள்ளும்போதே அது முழுமையாகும்.

எங்கே பதிவு செய்வது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

என்னென்ன இணைக்க வேண்டும்?

விற்பவர், வாங்குபவர் இருவரின் முகவரிச் சான்று
விற்பவர், வாங்குபவர் இருவரின் அடையாளச் சான்று
விற்பவர், வாங்குபவர் இருவரும் ஆளுக்கொரு சாட்சியை அழைத்துவர வேண்டும் அல்லது வாங்குபவர் மட்டுமே இரண்டு சாட்சிகளை அழைத்துவரலாம்.
விற்பவர், வாங்குபவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.
பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.

முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்பட வேண்டும்?

முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்குண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம், சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

வாங்குகிற இடத்தின் அளவு, அது இருக்கும் திசை, அதைச் சூழ்ந்துள்ள விவரக்குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

நிலம், கட்டிடம் ஆகிய சொத்துக்களை விலை கொடுத்து வாங்கினாலோ அல்லது குத்தகைக்கு ஒப்பந்தம் செய்தாலோ முறைப்படி பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பத்திரப்பதிவின்போது சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு இரண்டையும் ஒப்பிட்டு அதன்படி முத்திரைத்தாளில் எழுதவேண்டும். வாங்கும் சொத்து மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சொத்து மதிப்பில் இருந்து எட்டு சதவீதத்தை முத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும் (நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவீதத் தொகைக்கு முத்திரைத்தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் சந்தை மதிப்புத் தொகை பதிவுக்கட்டணமாகவும் பெறப்படும்.)

சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும் சிலர் ஒப்பந்தம் செய்து கொள்வதுண்டு. இதற்கு ஒப்பந்தம் செய்ய 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய 50 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த வேண்டும். பதிவுக்கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

சொத்தின் உரிமையாளர் பல்வேறு காரணங்களால் தனது சொத்துக்களின் மீதான உரிமையை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ, பராமரிப்பதற்கோ பவர் ஆஃப் அட்டர்னியாக ஒருவரை நியமிப்பதுண்டு. இத்தகைய அதிகாரம் வழங்கினால் இதற்கான முத்திரைத்தாள் கட்டணமாக அசையா சொத்துக்கு 100 ரூபாயும், பதிவுக்கட்டணம் பத்தாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். இதுவே அசையும் சொத்துக்கு (நகை போன்றவற்றிற்கு) முத்திரைத்தாள் கட்டணம் 100 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை:

*ஒருவர், தான் வாங்குகிற இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசி முடிவு செய்ய வேண்டும். அதையும் வழிகாட்டி மதிப்பின்படியே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

*எந்தப் பகுதியில் இடம் அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று, அந்த இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட வேண்டும்.

*பின்னர் பத்திரப்பதிவு அலுவலரிடம் சென்று, பத்திரப்பதிவுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

*முதலிலேயே முத்திரைத்தாளில் எழுதிவிடாமல் ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து, விவரங்கள் ஏதேனும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டுமெனில் அதனைத் திருத்தம் செய்துகொண்டு இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.

*முன்தொகை போக, மீதமுள்ள தொகையை பத்திரப்பதிவு செய்யும் நாளில் கொடுக்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யுமுன் மொத்தப் பணத்தையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*பத்திரப்பதிவு செய்யும் சிலமணி நேரத்திற்கு முன்பாகவே சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விட வேண்டும்.

* பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதைக் கேட்டு வாங்க வேண்டும். பின்னர் அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து, பத்திரத்தை வாங்கிவிட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம் வாங்கியதும் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பித்து விட வேண்டும்

கண் பார்வைத்திறன் பற்றிய விளக்கம்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
             
               கண் பார்வை திறனை பற்றி  கொஞ்சம் மேல்மட்டம் வரைக்கும் சென்று அலசுவோம்.
                பார்வைத்திறனைக் குறிக்க 6/24, 6/18, 6/12, 6/6 என்றெல்லாம் எழுதுவதை பார்த்திருப்பீர்கள். 
               ஒரு கண் பரிசோதனை அறையில் 6 மீட்டர் தொலைவில் மாட்டி வைக்கப்பட்டுள்ள இந்த சார்ட்டில் ஒருவரால் அதிலுள்ள முதல் வரி எழுத்தை மட்டும்தான் படிக்க முடிகிறது அல்லது தெரிகிறது என்றால் அவரது பார்வையின் அளவு : 6/60 . அதேபோல முறையே இரண்டாவது வரிசை மூன்றாவது வரிசை ....என்று வரும்போது 6/36, 6/24, 6/18, 6/12, 6/9, 6/6 என்று கணக்கில் கொள்ளப்படும்.

       இந்த கணக்கு எதற்கு?
              அதாவது ஒருவர் போர்டில் உள்ள முதல் வரி எழுத்தை மட்டும் படிக்கிறார் என்றால் அவரது பார்வையின் அளவு 6/60. ஒரு சரியான பார்வை உள்ளவரால் 60 மீட்டர் தூரத்தில் பார்க்க முடிந்த ஒரு பொருளை இந்த 6/60 பார்வை உள்ளவரால் வெறும் 6 மீட்டர் தொலைவில் வைத்தால் மட்டும்தான் பார்க்கமுடியும். அதேபோல 6/24 என்றால் 24 மீட்டரில் பார்க்கவேண்டிய காட்சி 6 மீட்டரில் வைத்தால்தான் அவரால் பார்க்கமுடியும். அப்ப 6/6 என்றால் என்ன? 6 மீட்டர் தொலைவில் பார்க்க வேண்டிய பொருளை அவரால் 6 மீட்டரிலேயே பார்க்க முடிகிறது. எனவே 6/6 என்பதுதான் மனிதர்களுக்கான சரியான பார்வை (normal vision ).

        ஏன் எல்லாவற்றிற்கும் 6 மீட்டரையே எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் நம் கண்பார்வை குவியத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் ஆறு என்னும் 6 மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள்தான் குவியாமல் parallel ஆக வரும். 
             ஆறு மீட்டர்க்கு மேல் 7,8,9,10 என எல்லா மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் parallel ஆக வந்தாலும் 6ஐ மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம் மிக குறைந்த தூரம் என்பதால் இடவசதி காரணமாக உலகெங்கிலும் பார்வையை அளவீடு செய்யும் தொலைவாக ஆறு என்னும் 6 மீட்டரையே    எடுத்துக்கொள்கிறார்கள்.

             இந்தியாவில் பொதுவாக எல்லா இடங்களிலும் மீட்டர் கணக்கில் பார்வையை அளவிடுவார்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 6 மீட்டர் என்பதை 20 அடிகளாக வைத்து குறிப்பிடுவார்கள். 6/6 என்பதும் 20/20 என்பதும் ஒன்றுதான். 
              கீழேயுள்ள இந்தப்படத்தில் எழுத்து வரிசைகள் மீட்டர் மற்றும் அடிகள் என்ற இரண்டிலுமே குறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
கண் பார்வை திறனை பற்றி சிலர் அவ்வப்பொழுது வினா எழுப்புவதால் அதைப்பற்றி கொஞ்சம் மேல்மட்டம் வரைக்கும் சென்று அலசுவோம்.

பார்வைத்திறனை குறிக்க 6/24, 6/18, 6/12, 6/6 என்றெல்லாம் எழுதுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு கண் பரிசோதனை அறையில் 6 மீட்டர் தொலைவில் மாட்டி வைக்கப்பட்டுள்ள இந்த சார்ட்டில் ஒருவரால் அதிலுள்ள முதல் வரி எழுத்தை மட்டும்தான் படிக்க முடிகிறது அல்லது தெரிகிறது என்றால் அவரது பார்வையின் அளவு : 6/60 . அதேபோல முறையே இரண்டாவது வரிசை மூன்றாவது வரிசை ....என்று வரும்போது 6/36, 6/24, 6/18, 6/12, 6/9, 6/6 என்று கணக்கில் கொள்ளப்படும்.

அப்படியென்றால் என்ன?
 
அதாவது ஒருவர் போர்டில் உள்ள முதல் வரி எழுத்தை மட்டும் படிக்கிறார் என்றால் அவரது பார்வையின் அளவு 6/60. ஒரு சரியான பார்வை உள்ளவரால் 60 மீட்டர் தூரத்தில் பார்க்க முடிந்த ஒரு பொருளை இந்த 6/60 பார்வை உள்ளவரால் வெறும் 6 மீட்டர் தொலைவில் வைத்தால் மட்டும்தான் பார்க்கமுடியும். அதேபோல 6/24 என்றால் 24 மீட்டரில் பார்க்கவேண்டிய காட்சி 6 மீட்டரில் வைத்தால்தான் அவரால் பார்க்கமுடியும். அப்ப 6/6 என்றால் என்ன? 6 மீட்டர் தொலைவில் பார்க்க வேண்டிய பொருளை அவரால் 6 மீட்டரிலேயே பார்க்க முடிகிறது. எனவே 6/6 என்பதுதான் மனிதர்களுக்கான சரியான பார்வை (normal vision ).

ஏன் எல்லாவற்றிற்கும் 6 மீட்டரையே எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தான் குவியாமல் parallel ஆக வரும். ஆறுக்கு மேல் 7,8,9,10 என எல்லா மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் parallel ஆக வந்தாலும் 6ஐ மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம் மிக குறைந்தது என்பதால் இடவசதி காரணமாக உலகெங்கிலும் 6மீட்டரை பார்வையை அளவீடு செய்யும் தொலைவாக எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்தியா வில் பொதுவாக எல்லா இடங்களிலும் மீட்டர் கணக்கில் பார்வையை அளவிடுவார்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 6மீட்டர் என்பதை 20 அடிகளாக வைத்து குறிப்பிடுவார்கள். 6/6 என்பதும் 20/20 என்பதும் ஒன்றுதான். கீழேயுள்ள இந்தப்படத்தில் எழுத்து வரிசைகள் மீட்டர் மற்றும் அடிகள் என்ற இரண்டிலுமே குறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அறுவகை சுவை!.......

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
                   அறு சுவை என்ன என காண்போம்.


    (1) காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

  (2) கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

  (3) இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

  (4) புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

  (5) துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

   (6) உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

கேன்சர் மற்றும் கிட்னி செயலிழப்புக்கு தீர்வு.....

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

  கிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவரா?
இனி டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை,
எந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.?

           (இங்கு பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் இங்கு பகிர்கிறேன்.ஒருமுறை முயற்சி செய்து பார்க்கவும்)
 

            நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும்
 

பார்வை நாள் ;-
வாரத்தில்
ஞாயிறு மற்றும் வியாழன் இரண்டு நாட்களில் மட்டும் .
 

வைத்தியர் மற்றும் மருந்தின் செலவு  நூறு ரூபாய் மட்டுமே.
வைத்தியத்திற்கு செல்லும் ரயில் வழி
(கர்நாடக மாநிலம்)

          (கீழ் கண்ட தொடர்பு எண்ணில் ஊர் விவரம் மற்றும் செல்லும் வழித்தடம் பற்றி விசாரித்துவிட்டு செல்லவும்.ஒரு ஊருக்கு நேர்வழியாக இருக்கும்.அதே வழி இன்னொரு ஊருக்கு சுற்றுவழியாக இருக்கும்.புரிந்து கொள்க.)
பெங்களூர் to சிமோகா toஆனந்த புரம் to நரசிபுரா
ஈஸ்வர் குமார் 09840012852,

நமது உடல் உறுப்புகளை வைத்து என்ன நோய்? என அறியலாம்.

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 
உங்களுக்கு என்ன நோய்? 
       உடல் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

11 ஏப்ரல் 2014

கர்நாடகா RTO -CODE குறியீட்டு எண்கள்.


மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.கர்நாடகா மாநில (RTO-CODE) வட்டார போக்குவரத்து  அலுவலகங்களின் குறியீட்டு எண்கள் பற்றி காண்போம்.பதிவிட்டுள்ள கர்நாடகா மோட்டார் வாகன வலைத்தளத்திற்கு நன்றிகள் பல.

(1) ஆங்கில சுருக்க எழுத்துக்களும் அவற்றின் விரிவாக்கங்களும்...

 TC – Transport Commissioner

JCT – Joint Commissioner for Transport

DCT – Deputy Commissioner for Transport

RTO -- Regional Transport Office/r


ARTO -- Assistant Regional Transport Office/r

IMV --  Inspector of Motor Vehicles.

MV ACT --  Motor Vehicles Act

CMV Rules – Central Motor Vehicles Rules

KMVR – Karnataka Motor Vehicles Rules

KMVTA – Karnataka Motor Vehicles Taxation Act

KMVTR – Karnataka Motor Vehicles Taxation Rules

DL – Driving Licence

RC – Registration Certifricate

LL – Learner’s Licence

IC – Insurance Certificcate

NOC – No Objection Certificate

CC – Clearance Certificate.

ETC – Emission Testing Centre

KSTA – Karnataka State Transport Autority

KSTAT – Karnataka State Transport Appellate Tribunal

  (2) வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் அமைவிடங்களும் அவற்றின் குறியீட்டு எண்களும். 


Sl.No.
Registering Authorities
(RTO/ARTO)
RTO / ARTO Code No. - KA-
1
Bangalore Central
1
2
Bangalore West
2
3
BAngalore East
3
4
Bangalore North
4
5
Bangalore South
5
6
Tumkur
6
7
Kolar
7
8
K.G.F
8
9
Mysore West
9
10
Chamarajnagar
10
11
Mandya
11
12
Madikeri
12
13
Hassan
13
14
Shimoga
14
15
Sagar
15
16
Chitradurga
16
17
Davanagere
17
18
Chickmaglur
18
19
Dakshina Kannada
19
20
Udupi
20
21
Puttur
21
22
Belgaum
22
23
Chikkodi
23
24
Bailhongal
24
25
Dharwar
25
26
Gadag
26
27
Haveri
27
28
Bijapur
28
29
Bagalkot
29
30
North Canara
30
31
Sirsi
31
32
Gulbarga
32
33
Yadgir
33
34
Bellary
34
35
Hospet
35
36
Raichur
36
37
Gangavathi
37
38
Bidar
38
39
Bhalki
39
40
Chickballapur
40
41
Rajarajeswarinagar, Bangalore
41
42
Ramanagar, Bangalore Rural District
42
43
Devanahalli, Bangalore Rural District.
43
44
Tiptur, Tumkur District
44
45
Hunsur, Mysore District
45
46
Sakaleshapur, Hassan Dist.
46
47
Honnavar, Uttarakannada Dist.
47
48
Jamakhandi, Bagalakote Dist.
48
49
Gokak, Belgaum Dist.
49
50
Yelhanka, Bangalore.
50
51
Banneraghatta, Bangalore.
51
52
Nelamangala, Bangalore Dist.
52
53
K.R.Puram, Bangalore.
53
54
Nagamangala, Mandya Dist
54
55
Mysore East .
55
56
Basavakalyana
56
57
Bangalore STU and AR
57
நன்றிங்க.
இரட்டைக்கிளவி

   இரட்டைக்கிளவி கலகல காட்சியில் திமு திமுவென மழலைகள் சுறுசுறுப்பாக  ஓடுவதேன்! சுளீர் சுளீரெனும் வெயிலில் மளமளவெனப் பொறுக்குவதென்ன! வளவளவெனப...