02 நவம்பர் 2026

தமிழ் என் அடையாளம்..

  தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் - மகாகவி பாரதியார்.

அனைவருக்கும் வணக்கம்.தங்களை 

கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

   








                                          தமிழ் என் அடையாளம்















இலவசமாக தமிழ்மொழிவளப் பயிற்சி வகுப்பு தொடக்கம்...

 கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் சார்பாக எழுத்தாளர் சங்கமம் நடத்தும் இலவச தமிழ்மொழிவளப் பயிற்சி 1-11-2026 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு நிறைவடைந்தது.

  நமது ஈரோடு  மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் மரபுக்கவிதை நூல் திறனாய்வு, 






தாளவாடி KCT மெட்ரிக் பள்ளியின் தமிழுக்கான சமூகப் பங்களிப்பு ,என பல அனுபவங்களைப் பகிர்ந்துரையாடி தமிழ்மொழிவளப் பயிற்சி தொடங்கப்பட்டது. உயிரெழுத்துகள் 12 உயிர்க்குறில் 5 , உயிர்நெடில் 7 உச்சரிக்கும் ஒலிப்புக் கால அளவு குறிலெழுத்துகளுக்கு ஒரு மாத்திரை அளவு,நெடிலெழுத்துகளுக்கு இரண்டு மாத்திரை அளவு,சுட்டெழுத்துகள் அ,இ,உ வினாவெழுத்துகள் ஆ,யா,ஏ,ஓ, 

மெய்யெழுத்துகள் வல்லினம்6 மெல்லினம் 6 இடையினம் 6 என 18 மெய்யெழுத்துகள்.ஒலிப்புக்கால அளவு அரை மாத்திரை. 

உயிரெழுத்துகள் புணர்ந்த மெய்யெழுத்துகள் உயிர்மெய்யெழுத்துகள் அவை உயிர்மெய்க்குறிலெழுத்துகள்,உயிர்மெய்நெடிலெழுத்துகள் என விளக்கப்பட்டன. 

          ஒலியின் உருவமானதே எழுத்து.

நாம்  உச்சரிக்கும் ஒலிகளே எழுத்துகளாகின்றன. 

எழுத்துகள் சேர்ந்து பொருள்தரும் சொல்லாகின்றன.

பொருளுடைய சொற்கள் இணைந்து பொருள்தரும் சொற்றொடராகின்றன.

 சொற்றொடர்கள் முழுமையான கருத்தை தரும்போது வாக்கியமாகின்றன.என்பதுபோன்ற விளக்கங்கள்  உட்பட தமிழ்மொழிசார்ந்த பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டன.

காலை சரியாக 10.00மணிக்குத்தொடங்கிய வகுப்பு சிறிதும் இடைவெளியில்லாமல் தொடர்ச்சியாக மதியம் 12.45 மணிவரை நடத்தப்பட்டது.

    இரண்டாம் வகுப்பு மாணவக்குழந்தைகள் உட்பட 12ஆம் வகுப்பு மாணாக்கர்வரை ஆர்வமுடன் தமிழ்மொழிவளப்பயிற்சியினைக் கவனமாக‍க்கேட்டறிந்தும்விவாதம்செய்தும் இனிதே நிறைவுபெற்றது.












      கோபி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,அருவங்கொரை.மற்றும் கொளப்பலூர் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி,புனித மரியன்னை துவக்கப்பள்ளி, அம்மன்கோவில்பதி MRSமெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து  நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர்.

            கொளப்பலூர்    நூலக வாசகர் வட்ட தலைவர் திரு.ஜெய்சங்கர் அவர்கள்,    MRS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அவர்கள் ,மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள்,கோபி TNSTC நடத்துநர் தமிழார்வலர் திரு.மாணிக்கசுந்தர் மற்றும் தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் வசந்தம் எடைநிலையம் பழனிச்சாமி,  திரு.P.காளீஸ்வரன்,திரு.EB சந்திரசேகரன், கொளப்பலூர் ரோட்டரி சங்கத் தலைவர்  D.பொன்னுச்சாமி, செயலாளர் P. கோபால் உட்பட  கொளப்பலூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

            கொளப்பலூர் ரோட்டரி சங்கம் சார்பாக கொளப்பலூர் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்மொழிப் பயிற்சியாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர்.

        மாதந்தோறும் பயிற்சி நடத்துவதாக அறிவித்திருந்தோம். மாணவ,மாணவியரின் கோரிக்கையை ஏற்று  இனி மாதம் இருநாள் பயிற்சி வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.

 ஒவ்வொரு மாதமும் முதல்ஞாயிறு மற்றும் மூன்றாவது ஞாயிறு கொளப்பலூர் வாரச் சந்தை வளாகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்மொழிவளப் பயிற்சி விழிப்புணர்வுக்கான  துண்டறிக்கை முனைவர் கு.அருளானந்தம் எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர் சு.தாரணி திரவியா ஆகியோர் மாணவ,மாணவியருக்கு வழங்கினர்.எழுத்தாளர் சந்தைமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

         2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையிலான  வகுப்பு மாணவ,மாணவியருடன் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழார்வமுள்ள அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

அடுத்த பயிற்சிமுகாம் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொளப்பலூர் வாரச்சந்தை வளாகத்தில் நடத்தப்படும்.என்ற தகவல் அறிவிக்கப்பட்டது.


                           மாணவர் மட்டும் பயிற்சியில் பங்கேற்க அனுமதியா?அல்லது எல்லோரும் கலந்துகொள்ளலாமா? என 

கோபிசெட்டிபாளையம் அரசுபோக்குவரத்துக்கழக‍க்கிளை நடத்துநர் திரு. மாணிக்கசுந்தர் அவர்கள் கைப்பேசி வழி தொடர்பு வினவினார்.தமிழ்மொழி ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். வயது தடையில்லை என பதிலுரைக்கப்பட்டது. உடனே புறப்பட்டு வருகைபுரிந்து தமிழ்மொழிவளப் பயிற்சியில் கலந்துகொண்டார். பாராட்டி மகிழ்ந்தோம்.



தமிழ் என் அடையாளம்..

  தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் - மகாகவி பாரதியார். அனைவருக்கும் வணக்கம்.தங்களை  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இ...