எண்ணெய் குளியல்
நல்லெண்ணெய் என அழைக்கப்படக்கூடிய எள் எண்ணெயிலிருந்து நமக்கு கிடைக்கும் பயன்களைப் பட்டியலிட்டாலும் போதாது அந்தளவிற்கு நல்லெண்ணை நமக்குப் பயன்படுகிறது. நோயற்று நூறு ஆண்டுகள் வாழ நமது முன்னோர்கள் நமக்கு உறுதியிட்டு சொன்னவைகள் நான்கு.
1) தினமும் இருமுறை மலம் கழித்திட வேண்டும்
2) வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
3)மாதம் இருமுறை கலவி செய்தல் வேண்டும் (வயது வந்தவர்களுக்கு மட்டும் கூறப்பட்டது)
4) வருடம் இருமுறை 'பேதிக்கு' போகவேண்டும் (வயிற்றினுள் இருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும்)
இதில் மற்றவைகளை தற்போது விட்டுவிடுவோம், இரண்டாவதாக கூறப்பட்டுள்ள "வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்" என்ற வாக்கை நம்மில் யாராவது இதுவரை கடைப்பிடித்ததுண்டா?
குளித்துப்பாருங்கள் உங்களுக்குப்புரியும் அதன் ஆனந்தம். உடலின் மொத்த சூடும் குறைந்துவிடும். கண்கள் எரியாது. தொண்டை அடைப்பு நீங்கிவிடும். தோல் சம்பந்தமான வியாதிகள் ஓடிவிடும். உங்கள் வாழ்வு நீண்ட நாட்கள் நீடித்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கிராமத்திலிருப்பவர்கள் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க முடியும் என நினைத்து நகரத்திளிருப்பவர்கள் ஒதுக்கித்தள்ளி விடாதீர்கள். நகரத்திலிருப்பவர்களும் ஒய்வு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மறக்காமல் குளியலறையில் நுழையும்போது ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் கொண்டு போய் உடலின் மறைவான பாகங்களிலும் தேய்த்து சற்று நேரம் எண்ணெய் இறங்கவிட்டு குளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக