31 ஜூலை 2014

Http://www.ilovesathy.blogspot.com-நான் விரும்பும் சத்தி

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
                  ''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.  அரசியல்,மதம்,இனம்,சாதி,மொழி வேறுபாடின்றி செயலாற்ற  I LOVE SATHY அதாவது ''நான் விரும்பும் சத்தி'' விளக்கமாக கூறவேண்டுமானால் , நான் விரும்பும் சத்தியமங்கலம்..என்னும் பெயரில் சமுதாய நலனுக்கான குழு- புதியதாக உருவாக்கி உள்ளோம்.     நம்ம சத்தியமங்கலத்தின் இணையதளத்தினை   பயன்படுத்தும் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு வலைப்பின்னலை உருவாக்கி,24 X 7 முறையில் இளைய சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை வழிகாட்டுதல்,எதிர்காலத்தில் வாழ்க்கைமுறையினை ஒழுங்குபடுத்துதல்,சமுதாய மற்றும் கலாச்சார சீர்கேட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுதல்,மகளிருக்கான வன்முறை மற்றும் வெளியூர் வேலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பு முறையினை தெளிவுபடுத்துதல்,மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு வகையான பயிற்சிகளை அல்லது பயிற்சி மையங்களை நிறுவி அவ்வப்போது பயிற்சி கொடுத்தல்,இயற்கை வளங்களை பாதுகாத்தல்,மருத்துவ தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் வெளிக்கொணர்தல்,உடலின் இயக்கம் மற்றும் உடல் பராமரிப்பு ,சுற்றுலாவின் முக்கியம்,முதியோர்களை பாதுகாத்தல்,குழந்தைகளை பேணி காத்தல்,சிக்கனத்தை போற்றுதல்,தேவையற்ற பொருட்களை வாங்காமல் இருத்தல்,உள்ள சூழலுக்கேற்ப வாழ்க்கையினை மகிழ்ச்சி கரமாக்குதல்,போதைப்பொருட்களை தவிர்த்தல்,குடும்ப உறவு பேணுதல்,மன அழுத்தமும் வாழ்க்கைமுறைகளும் மற்றும் உணவு முறைகளும் உடல் நலமும்  பற்றிய கருத்தரங்கு என  இன்னும் பல சமூகம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சேவைப்பணிகளை செய்யலாம் ,சிறு கையேடு அச்சிட்டு வெளியிடலாம்,பிற சமூக அமைப்புகளோடு இணைந்து பணியாற்றலாம்,பள்ளிகள்,கல்லூரிகள்,பொதுமக்களுடன் ,அரசு துறைகளுடன்,காவல்துறையுடன்,இணைந்து நம்ம தனித்துவம் இழக்காமல் பணியாற்றலாம்,வாங்க..
உங்களுடைய கருத்தினையும் கூறுங்க...மேலும், 
''நான் விரும்பும் சத்தி'' -  I LOVE SATHY
இணையதள நண்பர்கள் குழுவிற்காக http://www.ilovesathy.blogspot.com 
    என்னும்  புதிய வலைப்பூ ஒன்றினையும் துவக்கி உள்ளோம்.அதனையும் பார்வையிடுங்க..உங்களது தொடர்புக்கு நாங்க மதிப்பளிக்கிறோம்,உங்க கருத்துக்கு நாங்க மதிப்பளிக்கிறோம்.செய்பவர் யார்?என்பது முக்கியமில்லைங்க! செயல்களே முக்கியமுங்க!!..ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுங்க.அல்லது தங்களது கருத்தினை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்க.... எனது மின்னஞல் முகவரி; paramesdriver@gmail.com மொபைல் எண் #+91 9585600733 நன்றிங்க! என அன்பன் ,


30 ஜூலை 2014

கால்குலேட்டரின் பட்டன்கள்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
        கால்குலேட்டரின் குறியீடுகள் விளக்கம் இது..இதன் விளக்கம் இன்னும் எனக்கு தெளிவாக கிடைக்கவில்லைங்க.தெரிந்தவர்கள் இங்கு பதிவிடலாமே!.


How do you use the MC, MR, MS, and M+ button on a calculator?

I've aways noticed these buttons on calculators, but have never had a reason to use them, I want to know how to each each one. Please provide an example if possible. 
 These buttons work with the calculator's memory, which stores one number:

MC = Memory Clear sets the memory to 0
MR = Memory Recall uses the number in memory, acts as if you had keyed in that number yourself
MS = Memory Store puts the number on the display into the memory
M+ = Memory Add takes the number on the display, adds it to the memory, and puts the result into memory

The buttons can be handy for doing repeated calculations with a single number. For instance, if you wanted to multiply a bunch of numbers by pi, you could key in the following:

3.14159.. MS (stores the number)
4 x MR = (gives you 4 times pi)
25 x 25 x MR = (gives you 25x25 times pi)

The M+ button can be handy for figuring out complicated expressions if you don't happen to have a scientific calculator. For example, to calculate (5 x 6) + (12 x 2) + (3 x 7), you can do the following:

5 x 6 = (calculator says 30)
MS (stores 30 in memory)
12 x 2 = (calculator says 24)
M+ (takes 24, adds it to 30, stores result 54 in memory)
3 x 7 = (21)
M+ (takes 54, adds 21, stores the result 75)
MR (displays the result 75) 
=================================================
 MC= Memory Clear. this clears all contents of the memory
MR= Memory Recall. This displays the current content in the memory
MS= Memory Save. This saves the current display to memory.
M+= Memory Add. This adds the current figure to the value already present in memory.

C just clears the current display, and you can continue with your calculations just as if you had not typed what you just did. CE clears everything and whatever you input next will start a new calculation 
============================================
 Memory Clear
Memory Recall
Memory Save
Memory Add

(Kind of like a hidden tally, when you need to add a lot of numbers)

C clears the whole calculator, CE just clears the last entry, in case you made a mistake while entering a number. 
========================================
 mc= memory clear
mr= memory recall
ms= memory save
m+= memory added
c is clear the current function
and ce is clear everything 
=============================================
 Memory Clear
Memory Recall
Memory Store
M+ can mean the same as MS

Clear
Clear Everything (includes memory) 
==============================
 MC- Memory Clear
MR- Memory Recall
MS- Memory Store
M+- Add the number stored in memory
C- Clear the number on the screen
CE- Clear Equasion (the problem you have been working) 
=================
 MC=memory clear
MR=memory recall
MS=memory store
M+=adds sum to memory
C=clears everything
CE= clears the error if you punched in a wrong number.
 ==================================================================
 M+ will add whatever number is on your screen to the memory. If you haven't saved anything to the memory yet, there is 0 in there. Let's say you want to calculate 4/7 + 2/9. First you do 4/7 & the calculator will show 0.571428..... Now you don't have a way to do the second half of this equation without losing this first answer or writing it down. Instead, press M+ and it will now be in the memory. Typically some symbol will show on the screen so you know something is in the memory. Now do the second half of the problem, 2/9 and 0.22222..... will show on the screen. To finish the equation hit +, so now your calculator is ready to add something to 0.222222... and then hit MR (memory recall), and it will put the 0.571428... on the screen, then hit equal & the answer will show up. The 0.571428 is also still in your memory if you need it again. If not, hit MC (memory clear) and it will reset your memory to 0.

One more thing, if you want to add lots of stuff together, like 4/7 + 2/9 + 3/5 + 1/8 + 3/11, each time you divide one of the numbers hit M+ after & it will add that number to what's already in the memory. So you would go 4/7 = M+ 2/9 = M+ 3/5 = M+ 1/8 = M+ 3/11 = M+. Now you can hit MR to see your answer.
=====================================================================
what is the difference between the two, and how do you use the MC, MR, MS and M+ functions. My elementary teachers never explained these to me. :( 

One is clear, the other is clear everything. Use clear to just change the last number you put in. Clear everything to start all over again. The other keys relate to memory, of which your calculator seems to be able to store *one* number.
MC clears the memory (sets it to zero)..
MR recalls the memory (puts the number from memory into the display, so that you can add to it or whatever.
MS stores the number on the display into memory.
M+ adds the nmuber on the display to the number in memory  


CE= clear entry, this will only clear your last entry, not the whole equation
C= Clear and it clears everything.

MC = Memory Clear
MR = Memory Reminder
MS = Memory Subtract
M+ = Add to memory C - clears the screen
CE - clears the last entry, if doing an addition problem for example

MC - clears the memory
MR - memory recall
MS - memory store: click that then usually 1,2, or 3 to store the number displayed on the screeen

M+ - not really sure

26 ஜூலை 2014

நியூட்டனின் மூன்று விதிகள்


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 
       கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நியூட்டன்விதிகள் மூன்றும் எக்காலத்திற்கும் அழியாத அறிவியல் விதிகளாகும்.

முதல் விதி;    INTERTIA
                    விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.அசையா நிலை விதி எனலாம்.
          ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது
Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it 

உதாரணம்;- ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நாம் அதை நிறுத்தினால்..மாடும் நிற்கும்.இது முதலாவது விதிக்கு உதாரணம் ஆகும்.

இரண்டாவது விதி;-  F=MA
                   விசையின் அளவு மற்றும் விசையால் நகரும் திசை பற்றிய வரையறையை விளக்குகிறது.இதை நகர்ச்சி விதி எனலாம். 
            பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்
       The Change of Momentum is directly proportional to the Force Applied (அல்லது)  
        The acceleration a of a body is parallel and directly proportional to the net force F acting on the body, is in the direction of the net force F = M A
            நாம் தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள்.அப்போது .மாடு மா (MA) என்று கத்தும் இது  இரண்டாம் விதிக்கு உதாரணம் ஆகும். 
மூன்றாவது விதி;-  EQUAL & OPPOSITE (F1=F2)
           விசையின் தன்மையை விளக்குகிறது. விசைக்கேற்ற பின்விளைவு உண்டு எனலாம்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
For Every action, there is an equal and opposite reaction

                   நாம் உதைத்ததால் மாடும் நம்மை உதைக்கிறது, இது மூன்றாவது விதிக்கு உதாரணம் ஆகும்.

Pan card அவசியம் ஏன்?

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Pan card அவசியம் ஏன்? எப்படி வாங்குவது?

             நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

1. PAN CARD
என்றால் என்ன?
Permanent Account Number
என்பதின் சுருக்கமே.

2.
அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

3.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

4.
அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே
செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.

5. PAN CARD -
ன் அவசியம்:
1)
ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2)
வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3)
ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.
4)
அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசியம்.
5)
ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6)
வங்கி கணக்கு துவங்கும் போது.
7)
தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8)
தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/-மிகும் போது அவசியம்.
9)
ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
10)
வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11)
சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.
12)
முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.

"
மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் Form49- என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பப் படிவத்தைhttp://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or)www.incometaxindia.gov.in,ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணையத்தளத்தை நாடலாம்.

சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.

பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456Bஎன்று வைத்துக்கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.

C - Company
P - Person
H - HUF(Hindu Undivided Family)
F - Firm
A - Association of Persons (AOP)
T - AOP (Trust)
B - Body of Individuals (BOI)
L - Local Authority
J - Artificial Juridical Person
G - Government

5
வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இரட்டைக்கிளவி

   இரட்டைக்கிளவி கலகல காட்சியில் திமு திமுவென மழலைகள் சுறுசுறுப்பாக  ஓடுவதேன்! சுளீர் சுளீரெனும் வெயிலில் மளமளவெனப் பொறுக்குவதென்ன! வளவளவெனப...