23 செப்டம்பர் 2011

மின்நூல்- நூலகம்

             
    அன்பு நண்பர்களே,வணக்கம்.
      இந்தப்பதிவில்   மின்நூல் நூலகம் மற்றும் புத்தகம் தேட உதவும் தளம் பற்றி காண்போம்.
       உலகின் மிகச் சிறந்த மின் நூல் நூலகம் ஒன்று செயல்படும் விதம் மிகச் சிறப்பாகவும் புதியதாகவும் இருந்தது.

           இதன் இணைய முகவரி http://booksbuddies.com இந்த தளத்தில் இலவசமாகத் தரப்படும் நூல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையை ஊட்டும் நூல் களாகும். தன்னார்வத்துடன் பல துறைகளில் வளரத் துடிப்பவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும், சோம்பலைப் போக்கி, தளர்ச்சியை நீக்கி எவ்வாறு முன்னேற வேண்டும் என வழி காட்டும் பல நூல்கள் இங்கு உள்ளன. 
               இவற்றைப் படிப்பதன் மூலம் நம் திறமை என்னவென நாம் உணர முடிகிறது. இதனால், நாம் ஊக்கம் பெறு கிறோம். நம் சக்தி வலுப்பெறுகிறது. நம் கனவுகளையும் இலக்குகளையும் நோக்கி நம்பிக்கையுடன் செல்ல முடிகிறது. இதில் உறுப்பினராகி நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்திட என்ன செய்ய வேண்டும்? 


             மேலே தரப்பட்டுள்ள இணையப் பக்கம் சென்று, அங்கு உங்கள் பெயர், , மின்னஞ்சல் முகவரி, யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்தால் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி கிடைக்கும். 
           அதில் ஏற்கனவே தயாரான அஞ்சல் வாசகத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு லிங்க் கிடைக்கும். இதனை அப்படியே உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். அதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து உங்கள் நண்பர்களும் இது போல பதிந்து கொள்ளலாம். எதற்காக உங்கள் லிங்க் என்று எண்ணுகிறீர்களா? 


           இந்த தளத்தில் பதிந்து கொண்ட வுடன், இங்கு உள்ள நூல்களில் நான்கினைத்தான் நீங்கள் டவுண்லோட் செய்திட முடியும். உங்கள் நண்பர்கள், உங்கள் லிங்க் மூலம் பதிந்து கொண்டால், ஒவ்வொரு நண்பர் பதிவு செய்கையில், உங்களுக்கு மேலும் சில நூல்கள் டவுண்லோட் செய்திட அனுமதி கிடைக்கும். நான் ஏறத்தாழ 200 நண்பர்களுக்கு அனுப்பினேன். அதில் 30 பேர் முகவரி ""சரியில்லை'' என்று திரும்பி வந்தது. பலர் நன்றி கூறி பதிந்தனர். இப்போது நான் பல நூல்களை டவுண்லோட் செய்திடும் உரிமையைப் பெற்றுள்ளேன். 


            உரிமை பெறுவது பெரிய விஷயமில்லை. இதில் உள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்து அனுபவ அறிவு பெறுவதே நல்லது. என் லிங்க் முகவரி வேண்டும் எனில், இதோ: http://booksbuddies.com?ref=cbose இந்த தளத்தில் உள்ள இன்னொரு வசதி, பதிந்து கொண்டுள்ள நண்பர்களுடன் சேட் செய்திடலாம். நல்ல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். பதிந்து என்ன இருக்கிறது என்றுதான் முயற்சி செய்யுங்களேன். வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தினை உணர்வீர்கள்.
   நன்றி : MPM pages//   paramesdriver.blogspot.com

    (2)      புத்தகம் தேட ஒரு வலைத்தளம்.


    புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகிள் தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி உள்ளது.
இணையதள முகவரி : http://www.saveitt.com
இத்தளத்திற்கு சென்று  இருக்கும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான் வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும். சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக  புத்தகத்தை தறவிரக்கலாம். Doc, Pdf, PPT,  XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தறவிரக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். paramesdriver.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...