19 செப்டம்பர் 2011

இரைச்சல்-டெசிபல் 01


அன்பு நண்பர்களே,வணக்கம்.         

       காதை உறுத்தும் இரைச்சல் பற்றி இங்கு காண்போம்.


       இரைச்சல் 130 டெசிபலை எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக்கொண்டு விடுவோம்.

      டெசிபல் என்பது சத்தத்தின் அளவை அளவிடப் பயன்படும் ஓர் அலகு. சப்த அலைகளின் பலத்தைக் குறிப்பது ..

       காற்றில் இருக்கும் இலட்சக் கணக்கான மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக்கொள்வதால் சப்தம் எழுகிறது.

      தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹம்பெல்லை பெருமைப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் உருவாக்கிய வார்த்தை தான் டெசிபல் என்பது. 

        சப்த அலைகளில் கிரஹம்பெல் கொண்ட ஆர்வம்தான் அவர் தொலைபேசியை கண்டுபிடிக்கக் காரணமானது.

    நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா?

           மரத்தின் இலைகள் காற்றில் இலே சாய் அசைந்து ஒருவித சப்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.

         சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் இரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல்.

         தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சப்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். 

         ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். 

       ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் ‘புரொப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை 120 டெசிபல்கள்.
 paramesdriver.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...