அன்பு நண்பர்களே,வணக்கம். தங்கம் பற்றி ஒரு விளக்கம் இது.
o என்றும் மங்காமல் புகழ் தங்குவதால்தான் தங்கத்திற்கு `தங்கம்` என்று பெயரிட்டார்களோ என்னவோ! தங்கம் அழகு ஆபரணம் மட்டுமல்ல. அவசர காலங்களில் அனேக குடும்பங்களின் ஆபத்து காப்பவனாக இருப்பதே தங்கம்தான்.
நாட்டின் செல்வ வளத்தையும் தங்கத்தால் தான் அளவிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தங்கம் நீண்ட காலமாகவே ஆபரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
o தங்கம் இருப்பது தெரிந்ததும் அந்த இடத்தில் தொடர்ந்து மண்ணை குடைந்து கொண்டே செல்வார்கள். அப்போது மண் சரிந்து விழாமல் இருக்க பக்கவாட்டில் மரத்தாலோ, சிமெண்டினாலோ அடைப்புகளை ஏற்படுத்துவார்கள்.
200 அடி ஆழம்வரை ஏணி வைத்தே ஏறி இறங்குவார்கள். அதற்கு கீழ் செல்லும்போது இரும்பு கூண்டுக்குள் மனிதர்கள் மற்றும் கருவிகளை வைத்து இறக்குவார்கள். இதில் டெலிபோன் மூலம் தகவல் தொடர்பும் நடக்கும்.
o தங்கம் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. தங்கம் பாறைகளுக்கு நடுவே கொடிபோல் பரவிக் கிடக்கிறது. தங்கம் படர்ந்திருக்கும் அத்தகைய பாறைகளை தங்கப் படிகக்கல் என்கிறார்கள். தங்கம் அடர்த்தியாய் படிந்திருந்தால் சிறிய கொடிபோல் கண்களுக்குப் புலப்படும்.
தங்கத்தை சுரங்கம் தோண்டித்தான் வேட்டி எடுக்க வேண்டும். அதிக ஆழத்தில் தங்கம் காணப்படுவதால் முதலில் தங்கத்தை தேட குழிகள் தோண்டி ஆராய்கிறார்கள்.
o ராஜ திராவகம் எனப்படும் பாதரசத்தில் தங்கம் எளிதில் கரைந்து தங்க டிரை குளோரைடாக மாறும். தனித்த அமிலங்களில் செலினிக் அமிலம் மட்டும் தங்கத்தை கரைக்கும் திறன்கொண்டது.
குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை தங்கத்துடன் நேரடியாகக் கூடும்.
தங்கம் உறுதியற்ற உலோகம். எனவே ஆபரணங்கள், நாணயங்கள் செய்யும்போது தங்கத்துடன் செம்பும், வெள்ளியும் கலக்கப்படுகிறது.
o தங்கத்தின் மதிப்பு எல்லாக்காலத்திலும் மாறாமல் இருப்பதால் நாட்டின் செலாவணியை தங்கத்தின் மூலமும் அளவிடுகிறார்கள். இதை தங்கப் பிரமாணம் (கோல்டு ஸ்டாண்டர்டு) என்று குறிப்பிடுகிறார்கள்.
இம்முறைப்படி நாட்டின் செலாவணியாக ஒரு நாட்டின் பணத்தை, குறிப்பிட்ட எடையளவு கொண்ட தங்கத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
தங்கப்பிரமாணம் மூன்று வகைப்படும். அவை முழுத்தங்க பிரமாணம், தங்ககட்டி பிரமாணம், தங்கமாற்று பிரமாணம்.
o காகிதப்பணத்தை தங்க நாணயமாகவோ, தங்கக்கட்டியாகவோ மாற்றிக் கொள்வது முழுத் தங்க பிரமாண முறையாகும். ஒவ்வொரு நாட்டு நாணயத்தையும் தங்கத்தால் மதிப்பிட்டு ஒரு நாட்டு செலவாணியை இன்னொரு நாட்டுச் செலவாணியாக மாற்றி அதற்குப் பொன்னைப் பெறலாம்.
இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இம்முறை சிலகாலம் கையாளப்பட்டன. உலகம் முழுவதும் தேவையான அளவு தங்கம் இல்லாததால் பிற்காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டது.
o தங்கம் மஞ்சள் நிறமும், பளபளப்பும் கொண்ட உலோகம். எவ்வளவு காலம் ஆனாலும் தங்கம் காற்றால் பாதிக்கப்படாது. 1063 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் தங்கம் உருகும். அப்போது இதன் நிறம் பச்சையாகத் தோன்றும்.
o வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்தும் தன்மை உடையது. இதனை தகடாக அடிக்கவும், கம்பியாக நீட்டுவதும் எளிது. எனவே ஆபரண ராஜாவாக தங்கம் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக