23 செப்டம்பர் 2011

B.Ed-பட்டப்படிப்பு

அன்பு நண்பர்களே,வணக்கம்.
           இந்த பதிவில் B.Ed., பட்டப்படிப்பு பற்றி காண்போம்.  

                     B.Ed- பட்டப்படிப்பு -


            இன்றைய காலகட்டத்தில், ஆண்-பெண் வித்தியாசமின்றி, பலராலும் அதிகம் விரும்பப்படும் ஒரு படிப்பாக B.Ed., படிப்பு இருக்கிறது.


           வெறும் ஒரு வருட படிப்பு என்ற காரணம் மட்டுமின்றி, அதிக சம்பளம் உள்ள வேலைக்கும் செல்லக்கூடிய படிப்பாகும். அதோடு எப்போதும், எங்கேயும் பணிபுரியக்கூடிய வாய்ப்பையும் தரும் படிப்பு ஆகும்,எனவே, பலரும் B.Ed.,படிப்பை  நோக்கி அலைமோதுகின்றனர்.

          உயர் ஆரம்பநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பள்ளிப் படிப்பு நிலைகளுக்கான ஆசிரியர்களை இந்த B.Ed., படிப்பு உருவாக்குகிறது. தற்போது வரை இது ஒரு வருட படிப்பாக இருந்தாலும், அதில் இருக்கும் அதிகமான எழுத்து வேலை மற்றும் பிற பணி பளுக்களை குறைக்க, B.Ed-படிப்பு இரண்டு  வருட படிப்பாக மாற்றுவதற்கான ஒரு பரிந்துரையும் உண்டு.

         பல முக்கியமான தனியார் கல்வி நிறுவனங்கள், B.Ed. படிப்பில் மாணவர்களை சேர்க்க, இளநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. 
   
        அதேசமயம், ஒருவர் முதுநிலை படிப்பு வரை முடித்திருந்தாலும், இளநிலை தகுதியை வைத்து B.Ed.,படிப்பில் சேரலாம்.


        B.Ed.,படிப்பின் அம்சங்கள்

      B.Ed.,படிப்பில் பொதுவாக,(1) கல்வி தியரி,(2) இந்தியக் கல்வியின் அமைப்புகள் மற்றும் சிக்கல்கள்,(3) கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடு, (4)கல்வி உளவியல், (5)கற்பித்தல் நுண்மம், (6)கல்வி முறைமை, (7)கல்வியின் வரலாறு,(8) ஒலி-ஒளி கல்வி,(9) பலவிதமான பாடங்களின் கற்பித்தல், (10)சமூகப் பணி, (11)பள்ளி ரீதியிலான அனுபவம் மற்றும்(12) மாணவர்களுக்கான தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற பலவித அம்சங்கள் உள்ளன.

      நாடு முழுவதும் பல்வேறான கல்வி நிறுவனங்களில், இந்த B.Ed.,படிப்பானது பரவலாக வழங்கப்படுகிறது.

          பிரிவுகள்

        B.Ed., படிப்பில் பலவிதமான பிரிவுகளும் உள்ளன. அவை,

              மனையியல் படிப்பில்(Home science) B.Ed,. படிப்பு
மனநலம் குன்றிய(Mentally retarderd) குழந்தைகளுக்கான B.Ed., படிப்பு

            இந்த இருவகைப் படிப்புகளும், டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி இர்வின் கல்லூரியால் வழங்கப்படுகின்றன.
 
            மேலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்வி நிறுவனம், நர்சரி B.Ed., படிப்பை வழங்குகிறது. இதன்மூலம், ஆசிரியர்களுக்கு, ப்ரீ-ப்ரைமரி மற்றும் லோயர்-ப்ரைமரி வகுப்புகளுக்கு கற்பிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

           இளநிலைப் படிப்புடன், B.Ed., முடித்திருந்தால் உயர்நிலை பள்ளி ஆசிரியராக பணி புரியலாம். முதுநிலை படிப்புடன் B.Ed.,முடித்திருந்தால், மேல்நிலைப் பிரிவில் ஆசிரியராக பணிபுரியலாம்.

     B.Ed.,படிப்பிற்கான கிராக்கி

           தொடக்க நிலை மற்றும் நடுநிலை அளவிலான பள்ளிகளுக்கு சுமார் 12ஆயிரம் ஆசிரியர்களும், உயர்நிலை அளவில் சுமார் இரண்டு லட்சம் ஆசிரியர்களும் தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவிக்கின்றன. 


         இதன்மூலம் B.Ed., மற்றும் இதர ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கு பெருமளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
         தற்போது கல்வி உரிமைச் சட்டமானது, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை 1-30 என்ற அளவில் குறைத்திருப்பதாலும், ஆசிரியர்களை நியமிப்பதில் சில முக்கிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறியிருப்பதால், 

     மேற்கூறிய B.Ed., படிப்புகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.


      பிறவகையான வாய்ப்புகள்


                இன்றைய மாறிவரும் பொருளாதார நிலைமையால், பி.எட். படிப்பின் மூலம், ஆசிரியர் பணியைத் தவிர, வேறு பலவிதமான வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

     நீங்கள் முயற்சி செய்தால், கல்வி நிர்வாகம், விளம்பரப்படுத்தல், ஆராய்ச்சி, முறைப்படுத்தல் மற்றும் ஆலோசனைப் பணி போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். 

         கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(NCERT), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில்கள்(SCERTs), கல்வி திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம்(NUEPA), இந்திய கல்வி ஆலோசனை மையங்கள்(EdCIL) மற்றும் யுனிசெப்(UNICEF) போன்றவை கல்வி தொடர்பான நிறுவனத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்.


                 கல்வித் துறையில் வணிக ரீதியான தனியார் நிறுவனங்கள்(போன்றவை) ஈடுபடுவதாலும், பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும், பல நிறுவனங்களுக்கு, கல்வி ரீதியான கன்டென்ட் எழுதுபவர்கள் மற்றும் கல்வி ரீதியான ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.

       முன்பு, கல்வியியல் கல்லூரிகள் மானுடவியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களால் நிரம்பியிருந்தது. ஆனால் தற்போது பல கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களும் இப்படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். 

      மீடியா துறையினர், எம்.பி.ஏ. பட்டதாரிகள், விமானப் பணிப்பெண்கள் மற்றும் பல்வேறு வகைப்பட்ட துறைகளை சார்ந்தவர்கள், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளை பெறும் நோக்கோடு, இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர்.

       மேலும், பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஆண்களின் மனைவிகள், இந்தப் படிப்பை விரும்பி தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள். ஏனெனில், தங்களின் கணவர்களுக்கு அடிக்கடி பணி மாறுதல் ஏற்படும்போது, எங்கு சென்றாலும் வேலை வாய்ப்புகளை இப்படிப்பின் மூலம் அவர்களால் பெற முடிகிறது.

            சம்பளம்

         அரசு விதிமுறைகளின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையால், ஆசிரியர்களின் ஊதியம் அதிகளவு உயர்ந்துவிட்டது. 

         ஒரு உயர்நிலை ஆசிரியர் ரூ.26,000 வரை மாத ஊதியமாக பெறுகிறார். மேல்நிலை ஆசிரியர் ரூ.38,000 வரை மாத ஊதியமாகப் பெறுகிறார். 

             அதிக கட்டணம் வசூலிக்கும் சில தனியார் பள்ளிகள், அரசு சம்பளத்திற்கு 70% முதல் 75% வரை தங்களின் ஆசிரியர்களுக்கு வழங்குகின்றன. இத்தகைய மிதமிஞ்சிய சம்பளமும், அதிகளவிலான விடுமுறைகளும் இத்தொழிலுக்கு பலரை ஈர்ப்பதில் பிரதான காரணிகளாக திகழ்கின்றன. 

      
         பொது கருத்துக்கள்


                     பள்ளியில் ஆசிரியர் பணி என்பது காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை என்பது மட்டுமே அல்ல. பாடங்களுக்கு தயார் செய்தல் மற்றும் திட்டமிடுதல் போன்ற பணிகளை அவர் நாள் முழுவதும் செய்ய வேண்டியிருக்கும். 

          பள்ளி ஆசிரியர் பணி என்பது, செய்வதையே திரும்ப திரும்ப செய்வதும், துடிப்பற்றதும் மற்றும் சலிப்புடையதாகும் என்று தவறாக பரவும் கருத்துக்களால், திறமையுள்ள இளைய சமுதாயத்தினர் இந்த பி.எட். படிப்பை ஒதுக்கும் சூழலும் ஏற்படலாம். 

         வாழ்க்கைப் பாதுகாப்பிற்காக வேலை தேடுவோர் மட்டுமே இப்படிப்பை நோக்கி வரும் நிலை ஏற்படும். இந்தக் கருத்துக்கள், தனிப்பட்ட சுய மற்றும் படைப்புத் திறன்கள் இல்லாமல், சாதாரண பாடத்திட்டத்தையே வருடா வருடம் தொடர்ந்து பின்பற்றி வரும் ஆசிரியர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.


               இக்கருத்தின்படி பார்த்தால், ஆசிரியர் தொழில் மட்டுமல்ல, உலகில் ஏறக்குறைய அனைத்து தொழில்களுமே ஒரே மாதிரியான விஷயங்களை திரும்ப திரும்ப செய்வதாகவே அமைந்துள்ளன. 

         எனவே, பள்ளி ஆசிரியர் தொழிலை மட்டுமே இந்தவகையில் குற்றம் சாட்ட வேண்டிய அவசியமில்லை. சுய உந்துதலும், ஆர்வமும், படைப்பாக்கத் திறனும் உள்ளவர்கள், எப்போதுமே ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்வதில்லை. 

             அவர்கள், தங்களது பணிகள் மற்றும் முயற்சிகளில் புதிய அம்சங்களை எப்போதுமே சேர்த்துக் கொள்வார்கள். எனவே, இளைய தலைமுறையினர் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

    புதிய அம்சங்கள்

               சில கல்லூரிகள், தாங்கள் வழங்கும் பி.எட். படிப்புகளில் பல புதுமையான அம்சங்களையும் புகுத்தி வருகின்றன. பி.எட். வகுப்பறைகளில் எலக்ட்ரானிக் பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம், வெறும் எழுதுதல் பணியை மட்டுமல்லாது, பலவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியும். 

              சில கல்வி நிறுவனங்கள், தகவல்-தொடர்பு தொழில்நுட்பங்களை நன்கு பயன்படுத்தியும், மைக்ரோ கற்பித்தல்  உள்ளிட்ட சில புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் பி.எட். படிப்பானது புத்தாக்கம் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

               பிறவகைப் பணிகளைவிட, ஆசிரியர் தொழிலானது அனைத்திலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சமூகத்திற்கு சிறந்த உறுப்பினர்களை(மாணவர்கள்) ஒரு ஆசிரியர் உருவாக்கும்போது, அவர்பால் அந்த சமூகம் என்றென்றும் நன்றியுடைதாய் இருக்கும்.
paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...