22 செப்டம்பர் 2011

ஏ. நரசிங்க ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. நரசிங்க ராவ் (1892 - 1967) ஒரு கணித அறிவியலாளர். நாற்பது ஆண்டுகள் அவர் இந்தியக் கணித வானில் ஒரு சிறந்த ஆசிரியராகவும், பலதரப்பட்ட பொருள்களில் ஆராய்ச்சி செய்த வல்லுனராகவும் திகழ்ந்தார். வடிவவியலில் மிகப்பண்பியப் பொருள்களிலும் சரி, aerodynamics போன்ற பயனியற் கணிதமானாலும் சரி, இரண்டிலும் பரந்தும் ஆழவும் அறிந்தவர். ஆசிரியர்களில் அவர் ஒரு முன்னோடியாகவே கருதப்பட்டார்.

பணிகள்

  • கணிதப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் : இரண்டு பத்தாண்டுகள்
  • கணித இயற்பியல் பேராசிரியர், ஆந்திரா பல்கலைக்கழகம்: ஐந்தாண்டுகள்.
  • பேராசிரியர், சென்னை தொழில் நுட்பநிறுவனம் (M.I.T.) : பல ஆண்டுகள்.

கௌரவப்பணிகள்

  • 1949-1951: இந்தியக்கணிதக் கழகத்தின் தலைவர் (President).
  • 1944-1947: இந்தியக்கணிதக்கழகத்தின் பொருளாளர்.

'Mathematics Student' என்ற ஆய்வுப்பத்திரிகை

இந்தியக்கணிதக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி (1933) யின்போது இப்பத்திரிகை தொடங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியர் நரசிங்க ராவ். அப்பொறுப்பை 17 ஆண்டுகள் சுமந்து அதற்கு கணித உலகத்தில் ஒரு நிரந்தரமான் பெயரை ஏற்படுத்தினார்.. புதிய நூல் விமரிசனங்கள், கழகத்தைப் பற்றிய மாதாந்திரத் தகவல்கள், மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்ட கணித உரைகள், கணிதப் புதிர்கள், புதுப்புது கணித ஆய்வுப்பிரச்சினைகள் முதலிய எல்லா விஷயங்களையும் உள்ளடங்கியது இப்பத்திரிகை. இவைகளுக்கெல்லாம் அடிகோலியவர் நரசிங்க ராவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...