அன்பு நண்பர்களே,வணக்கம்.
பி.எட்., படிப்பில் சேர்க்கை நடைபெறும்முறை பற்றி இந்தப்பதிவில் காண்போம்.
தமிழ்நாட்டில் அரசு பி.எட் கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் சுமார் 22 ஆயிரம் பி.எட் இடங்கள் உள்ளன. இவற்றை கலந்தாய்வு மூலம் ஆண்டு தோறும் நிரப்பப்படுகிறது.
2011-12-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்தின் விலை ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு ரூ.175 ஆகும். விண்ணப்பம் நேரில் மட்டுமே வழங்கப்படும். பணமாகவோ, டிராப்ட் ஆகவோ அளிக்கலாம்.
சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி கல்லூரி, குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய அரசு கல்லூரிகளிலும்
காந்தி கிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு என்.கே.வி.எஸ்.டி. கல்லூரி, சேலம் சாரதா கல்லூரி, பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேசியஸ் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி ஆகிய 13 இடங்களில் பி.எட் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
பி.எட் படிப்பில் சேர இளநிலை பட்டதாரிகள் இதர வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்ணும், பிற்பட்ட வகுப்பினர் 45 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 43 சதவீத மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மாற்று திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற முகவரிக்கு மட்டும் அனுப்ப வேண்டும்.
இந்த மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும்.
அரசு, உதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தவிர மற்றவற்றை தமிழ்நாட்டில் 640 தனியார் சுயநிதி பி.எட்.கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை அந்த நிர்வாகமே முழுமையாக நிரப்பி கொள்கிறது.
நன்றி : மாலைமலர் paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக