16 ஜூன் 2014

கணினி கேமராவை கண்காணிப்பு கேமராவாக மாற்ற


மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணினி கேமராவை கண்காணிப்பு கேமராவாக மாற்ற

Webcamera-வை C.C.T.V. Cameraவாக எளிதில் மாற்ற‍லாம் முற்றிலும் இலவசமாக . . ..

சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவா கும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள cameraவை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றிவிடலாம்.

இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்தி க் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சி யான செய்தி என்னவெ னில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.

இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதிஉள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்பட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமரா வை கண்காணிக்காது இருக்கும்போது வீட்டில் யாராவது புகுந்தால் அதை நமக்குதெரியப்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.

இன்டர்நெட்மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள்வீட்டை அல்லது கடையை கண்காணித்து
கொள்ளலாம். இதில் கூடுதல் ஒரு வசதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.

இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்று ள்ளது.

Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages

பின் வரும் இணையத்திற்கு சென் று இந்த மென்பொருளை இலவச மாக Download செய்து கொள்ளலா்ம:

http://www.yawcam.com/download.php

இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் வீடியோ:

இன்டர்நெட் மூலம் பார்ப்பதற்கு உங்கள் Routerல் Port forward செய்ய வேண்டும். இதை எவ்வாறு செய்து என்பதை பின்வரும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்:

http://portforward.com/english/routers/port_forwarding/routerindex.htm

- அப்படியா . . .

நன்றி : விதை2விருட்சம்

12 ஜூன் 2014

கையெழுத்தின் தலையெழுத்து என்ன?

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
       
கையெழுத்தின் தலையெழுத்து என்ன?
                                               மரியா கொன்னிகோவா
கல்விப் பயிற்சிக்கும் கையெழுத்துக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது...
கையால் எழுதுவது இன்னமும் அவசியமா? அப்படியொன்றும் அவசியமில்லை என்றே பல கல்வியாளர்கள் கருதுகின்றனர். கையால் எழுதுவது அந்தக் கால வழக்கம் என்று அந்தப் பழக்கத்தைப் பரணில் தூக்கிப்போட காலம் இன்னும் வந்துவிடவில்லை என்று உளவியலாளர்களும் நரம்பியல் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். கையெ ழுத்துக்கும் கல்விப் பயிற்சிக்கும் ஆழ்ந்த தொடர்பு இருப்பதை விளக்கும் சான்றுகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன.
                       முதலில் கையால் எழுதப் பழகுவதன் மூலம் குழந்தைகள் பாடங்களை வேகமாகக் கற்றுக்கொள் வதுடன், புதிய கருத்துகளைச் சிந்திக்கவும் ஏற்கெனவே கற்றுத்தரப்பட்டவற்றை மனதில் இருத்திக்கொள்ளவும் நன்கு பயிற்சி பெறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் என்ன எழுதுகிறோம் என்பதல்ல - எப்படி எழுதுகிறோம் என்பதே முக்கியம்.

        எழுத்தும் மூளையும்
                              நாம் எழுதும்போது, மூளையுடன் தொடர்புள்ள நரம்புமண்டலத் தொடர் தானாகவே செயல்படத் தொடங்குகிறது என்கிறார் பாரீஸ் நகரில் உள்ள பிரெஞ்சுக் கல்லூரியைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்தானிஸ்லாஸ் தெஹானே. “எழுதப்பட்ட சொல்லில் இருக்கும் அசைவோட்டத்தின் அடிப் படையை மூளை இனம்கண்டுகொள்கிறது. ஒரு வகையான பாவனை ஒத்திகையினை மூளை அடையாளம் கண்டுகொள்கிறது. மூளையில் இருக்கும் இந்த நரம்புத் தொகுப்பு நம்மால் உணர முடியாத வகையில் தனித்துவமான முறையில் பங்களிக்கிறது. கற்றல் என்பது இதனால் எளிமையாகிறது” என்கிறார் அவர்.
                        இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கரின் ஜேம்ஸ் என்ற உளவியலாளர் 2012-ல் நடத்திய ஆய்வு இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது. இதுவரை எழுதவோ, படிக்கவோ கற்றிராத குழந்தைகளிடம் சிறு அட்டையில் எழுத்து உருவோ, ஒரு வடிவமோ கொடுக்கப்பட்டது. அதைப் போலவே ஓர் உருவத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு மூன்று வழிகள் கொடுக்கப்பட்டன. அந்த மூன்றில் ஒன்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். அந்த எழுத்து அல்லது உரு மீது டிரேஸ் பேப்பர் என்ற மெல்லிய காகிதத்தை வைத்து, கீழே உள்ளதைப்போல அப்படியே புள்ளிபுள்ளியாகச் சேர்க்குமாறு முதலில் கூறப்பட்டது. அடுத்ததாக, வெள்ளைத் தாளில் அந்த உருக்களை அப்படியே பார்த்து வரையுமாறு கூறப்பட்டது. அதற்கும் அடுத்தபடியாக ஒரு கணினி விசைப்பலகையில் தட்டுமாறு வாய்ப்பு தரப்பட்டது. பிறகு அவர்களுடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிக்க ஸ்கேனர் கருவியுடன் இணைப்பு தரப்பட்டது.
வெள்ளைத் தாளில் அப்படியே பார்த்து எழுதுமாறு கூறப்பட்டபோது மூளைப் பகுதியில் செயலூக்கம் மிகுந்தது. பெரிய பையன்கள் படிக்கும்போதும் எழுதும்போதும் மூளை எப்படிச் சுறுசுறுப்பாக, விரிவாக வேலை செய்யுமோ அதே வகையில் மூளையின் மூன்று பகுதிகளில் செயல்கள் நிகழ்ந்தன. டிரேஸ் பேப்பர் வைத்து வரைந்தபோதும் கணினியில் விசைப்பலகையைத் தட்டியபோதும் வெகு பலவீனமாகத்தான் மூளை யின் செயல்பாடு இருந்தது.
சுதந்திரமும் சிந்தனையும் அதிகம்
                       சுயமாக எழுதும்போது எழுத்தின் வடிவத்தை மனதில் வாங்கிக்கொண்டு அதை எங்கே ஆரம்பிப்பது, எப்படி வளைப்பது, எங்கே கொண்டுபோய் முடிப்பது என்பதையெல்லாம் சுயமாகத் தீர்மானிப்பதால் சுதந்திரமும் அதிகம், சிந்தனையும் அதிகம், செயலும் அதிகம். முதல்முறையாகப் பார்த்து எழுதும்போதோ, வரையும்
போதோ அப்படியே அச்சுஅசலாக இருக்காது. சில வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுகள்தான் கற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். எழுத்தைச் சரியாக வரைய முடியவில்லையே என்று தோன்றி யதும் எழுத்தின் வடிவத்தைக் கூர்ந்து கவனிக்கவும் எழுதும் முறையைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். இது கவனித்தல், கற்றல், நினைவில் வைத்தல் ஆகிய பயிற்சிகளை ஒருங்கே அளிக்கிறது என்கிறார் டாக்டர் ஜேம்ஸ். டிரேஸ் பேப்பர் வைத்து வரையும்போதும் கணினி விசைப்பலகையில் பார்த்துத் தட்டும்போதும் இந்தச் செயல்களுக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு.
A என்ற ஆங்கில எழுத்தை முதல்முறையிலேயே அப்படியே எழுத வராது என்பதால் குழந்தைகள் அதைத் திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து அதன் வடிவத்தை அப்படியே கொண்டுவர மூளையின் உதவி நாடப்படுகிறது. இப்படி, பயிற்சி மூலம் மூளையில் பதிந்ததை எழுத்தில் கொண்டுவருவதற்கு கையெழுத்துப் பழக்கம் மிகவும் உதவுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார் ஜேம்ஸ்.
                          தாங்களாகவே எழுத்தை அமைக்கும் குழந்தை களுக்கும் அதை வெறுமனே வேடிக்கை பார்க்கும் குழந்தைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று மூளையின் செயல்பாட்டைக் கவனித்ததில், தாங்களாகவே எழுத்தை அமைக்கும் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் சிந்தனை கைவழியே எழுத்துருவாக வருவதைக் கண்டார். இந்த முயற்சியானது எழுத்துகளை அடையாளம் காண்பதோடு மட்டும் நிற்பதல்ல.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்ஜீனியா பெர்னிங்கர் என்ற உளவியலாளர் கையெழுத்துப் பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொண்டார். அச்சில் வார்த்து எழுதும்போதும் கையால் சேர்த்தெழுதும்போதும் கணினி விசைப் பலகை மூலம் திரையில் எழுதும்போதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் செயல்கள் நடப்பதைக் கண்டார். ஒவ்வொரு செயலுக்குமான விளைவு தனித்துவத்துடன் திகழ்வதைப் பதிவுசெய்துள்ளார்.
குழந்தைகள் கையால் எழுதியபோது அதிக வார்த்தைகளை அதிக வேகத்தில் எழுதியதுடன் அதிக அளவு கற்பனையையும் வெளிப்படுத்தினர். அவர்களுடைய மூளையைக் கருவி கொண்டு பார்த்து வந்ததில், எழுதுவதற்கும் கற்பனைக்கும் ஆழ்ந்த, நெருக்கமான உறவு இருப்பது தெரிய வந்தது.
  சேர்த்தெழுதுதல்
                                     சொந்தமாக ஒரு கட்டுரை எழுதிவாருங்கள் என்று அவர்களுக்கு வேலை கொடுத்தபோது, நல்ல கையெழுத்து உள்ள மாணவர்கள் சுவை யான கட்டுரைகளை எழுதிக் காட்டினார்கள். இப்போதெல்லாம் காப்பி நோட்டுகளில் (இரட்டை வரி, நாலு வரி) சேர்த்தெழுதச் சொல்லும் பழக்கம் குறைந்துவருகிறது.
கற்பதில் குறைபாடு உள்ள சிலருக்கு அச்சில் உள்ள எழுத்துகளைப் படிப்பதில் சிரமமும், கையெழுத்தில் உள்ளதை எளிதில் படிக்கும் ஆற்றலும் காணப்படுகிறது. வேறு சிலருக்கு, இதில் நேர்மாறான தன்மையும் இருக்கிறது. நினைவுக்கும் எழுத்துக்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பையே இவை யெல்லாம் உணர்த்துகின்றன.
                         சேர்த்தெழுதும் பழக்கமானது சுயக்கட்டுப் பாட்டை வளர்ப்பதுடன் நினைவிழத்தல் நோய் போன்றவற்றிலிருந்தும் தடுக்கக்கூடிய வாய்ப் பிருக்கிறது என்று டாக்டர் பெர்னிங்கர் கருதுகிறார். கையால் எழுதுவதன் பலன் குழந்தைப் பருவம் தாண்டியும் நமக்குத் துணைக்கு வருகிறது. பெரிய வர்களானதும் விசைப்பலகையில் தட்டுவதில் வேகமும் தேர்ச்சியும் ஏற்படலாம். ஆனால், புதிய தகவல்களைப் பெறும் ஆற்றலும் எழுத்தாற்றலும் குறையக்கூடும்.
                           பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கலிபோர் னியா பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்களை வெவ்வேறு விதமான எழுத்துப் பயிற்சிகளில் ஆழ்த்தி சோதனை மேற்கொண்டனர். கையால் எழுதிய மாணவர்களே கற்றதை நன்கு பதிவு செய்தனர். கையால் எழுதும் மாணவர்கள் வகுப்பறை
களில் ஆசிரியர் கூறுவதை வரிசை மாற்றியும், தங்களுடைய நினைவேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் எழுதிக்கொள்வது தெரியவந்தது. அதனால், அவர்கள் அந்தப் பாடத்தை நன்கு புரிந்துகொள்வதுடன் எளிதாகவும் மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். கையால் எழுதுவதன் சிறப்பைப் பலர் வலியுறுத்தினாலும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் அறிஞர் பால் புளூம் ஒப்புக்கொள்ள வில்லை. “கையால் எழுதுவதன் மூலம், முக்கியம் என்று நீங்கள் கருதுவதன் மீது மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள், அதனால்தான் நன்றாகச் சிந்திக் கிறீர்கள் என்று கூறலாம்” என்கிறார்.
- நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

சாந்தி பெட்ரோல் பங்க்-கோயமுத்தூர்

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
   
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே .
                நம்முடைய கோயமுத்தூரில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , 

         சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக SHANTHI SOCIAL SERVICE "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.
அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :
1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)
2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)
3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.
4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.
5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.
மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளைக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் ,
ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.

இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
விவரங்களுக்கு http://www.shanthisocialservices.org/index.html

11 ஜூன் 2014

வாழை இலையின் பயன்கள்

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    
வாழை இலையின் பயன்கள்
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

வாழை இலையின் பயன்கள்
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.


இன்றைய இயற்கை உணவு :-
காலை பானம் - தர்பூசணி ஜூஸ்
சிற்றுண்டி காய்கறி சாலட் ( காரட், முள்ளங்கி, தக்காளி, கருவேப்பில்லை, மல்லி தழை, டிரெஸ்ஸிங் - எலுமிச்சை சாறு மிளகுடன்.
நேற்று மாலை இடையில் பசித்த போது பருக பனைவெல்லம் பானகம்
திரவ உணவையும் திட உணவையும் நான் ஒன்றாக சாப்பிடுவதில்லை
இதுவரை இக்குழுவில் இயற்கை உணவில் இறங்காதவர்கள் உங்கள் உணவு பழகத்திற்கு இடையே முயற்சித்து பாருங்கள்.. செய்வீர்களா !!! செய்வீர்களா !!!

உழவன் உணவகம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.உழவன் உணவகம் பற்றி காண்போம்.

            ''இங்கே உணவகம் நடத்தும் விவசாயிகள்... தங்கள் வயல்களில் வரகு, சாமை, தினை, கேப்பை, கம்பு முதலிய சிறுதானியங்களைப் பயிரிட்டு, அவற்றையே சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இன்னபிற சிறுதானியங்களை சந்தையில் விலைக்கு வாங்கியும் சமைக்கின்றனர். உணவைப் பற்றிய கருத்து மற்றும் விமர்சனங்களையும் வாடிக்கையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, சமையலை இன்னும் மெருகேற்றுகின்றனர் விவசாயிகள்'' என்று சொன்ன உழவன் உணவகத்தைச் சேர்ந்த பாலாஜி, சிறுதானிய உணவுகளில் சிலவற்றை சமைத்துக் காண் பித்ததோடு... சமைப்பது எப்படி என்பது பற்றி பாடமே நடத்தினார்.
சாமைப் பொங்கல்!
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 300 கிராம்
பாசிப் பருப்பு - 150 கிராம்
சீரகம் - 10 கிராம்
மிளகு - 5 கிராம்
இஞ்சி - 10 கிராம்
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் நெய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு, வாசம் வரும் வரை நன்றாக வறுத்து பிறகு, முந்திரி, இஞ்சி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். 1/4 மணி நேரம் ஊற வைத்த அரிசி, பாசிப் பருப்புடன், மூன்று பங்கு நீரையும் சேர்த்து, உப்பு போட்டு, குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வரும்வரை அடுப்பை 'சிம்’மில் வைத்திருந்து இறக்கிப் பரிமாறவும்.
காய்கறி முடக்கற்றான் சூப்!
தேவையான பொருட்கள் :
கேரட், பீட்ரூட், குடை மிளகாய், தக்காளி - தலா 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
ஆய்ந்த முடக்கற்றான் கீரை - ஒரு கைப்பிடி
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
(கார்ன் ஃப்ளார்)உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காய்கறிகளையும் கீரையையும் சேர்த்து வேக வைக்கவும். தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து, வாணலியில் இட்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும். கரம் மசாலாவைச் சேர்க்கவும். பிறகு, வேகவைத்த காய்கறிக் கலவையுடன் வதக்கிய மசாலாவைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, மக்காச்சோள மாவு (கார்ன் ஃப்ளார்) போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கினால், சுவையான சூப் ரெடி.
கம்பு, சோளம், தினை, வரகு பணியாரம்!
தேவையான பொருட்கள்:
கம்பு, சோளம், தினை, வரகு, அரிசி - தலா 250 கிராம்
உளுந்து - கைப்பிடி
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கருப்பட்டி - 1 உருண்டை
வெல்லம் - 1 உருண்டை

செய்முறை:
தானியங்கள் அனைத்தையும் நன்றாக ஊற வைத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கருப்பட்டியையும் வெல்லத்தையும் பதமாகக் காய்ச்சி வடிகட்டி, மாவில் ஊற்றிக் கலந்து பணியாரச் சட்டியில் ஊற்றி எடுத்தால், சுவைமிக்க சிறுதானிய இனிப்புப் பணியாரம் தயார்.
2 கேரட், 5 சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய், சிறிது இஞ்சி, 3 பல் பூண்டு ஆகியவற்றை நறுக்கி, அரைத்த மாவுடன் கலந்து ஊற்றி, காரப் பணியாரமும் செய்யலாம். இதற்கு கருப்பட்டி, வெல்லம் சேர்க்கக் கூடாது.

கம்பு அடை!
தேவையான பொருட்கள்:
கம்பு - 250 கிராம்
கடலைப் பருப்பு - 200 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1 டீ ஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறுதுண்டு

செய்முறை:
கம்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அவை, அரைபட்டுக் கொண்டிருக்கும் போதே காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, தேவையான அளவு உப்பு கலந்து, 2 மணி நேரம் வைத்திருந்து, அடையாக ஊற்றவும்.
கேழ்வரகு இட்லி!
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 250 கிராம்
கேழ்வரகு - 250 கிராம்
உளுந்து - 150 கிராம்
வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
வரகரிசி, கேழ்வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்து, தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து... தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, நான்கு மணி நேரம் வைத்திருந்து இட்லியாக அவிக்கவும்.
தினை - முள்முருங்கை தோசை!
தேவையான பொருட்கள்:
ஆய்ந்த முள்முருங்கைக் கீரை (கல்யாண முருங்கைக் கீரை) - ஒரு கைப்பிடி
தினை - 200 கிராம்
அரிசி - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்

செய்முறை:
தினை, அரிசி இரண்டையும் ஊற வைத்து, அவற்றுடன் உளுந்தைச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். முள்முருங்கைக் கீரையைத் தனியாக அரைத்து, மாவில் கலந்து தோசையாகச் சுட்டெடுத்தால் மணக்கும் முள்முருங்கைக் கீரை தோசை தயார்.
முடக்கற்றான் கீரை-சோள தோசை!
தேவையான பொருட்கள்:
ஆய்ந்த முடக்கற்றான் கீரை - ஒரு கைப்பிடி
நாட்டுச் சோளம் - 1 கிலோ
உளுந்து - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
நாட்டுச் சோளத்தையும் உளுந்தையும் எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். பிறகு, முடக்கற்றான் கீரையைச் சேர்த்து நன்கு கலந்து, தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஊற்றி எடுத்தால், மூட்டுவலிகளை விரட்டும் முடக்கற்றான் கீரை தோசை தயார்.

சோளம் சாப்பிடுங்க

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

சோளம் சாப்பிடுங்க...
            சோளக் கதிர்களை சீசனின்போது சாப்பிடுகிறோம். வாரத்தில் மூன்று நாள்களாவது சோள அடை சாப்பிடலாம். முக்கியமாக வயது அதிகரிக்கும்போது பார்வைக் குறைவு எற்படும். இதைத் தடுக்க சோளத்தில் இரண்டு அரிய ரசாயனப் பொருள்களும், புற்றுநோயைத் தடுக்கும் ஃபெருலிக் அமிலமும் உள்ளன. எனவே, நாற்பது வயதுக்காரர்கள் இன்று முதல் சோள உணவையும் வாழ்நாளை உயர்த்தும் உணவாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து பாப்கார்ன் சாப்பிடலாம்.
சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. மனது வெறுமையாக இருக்கும்போது ஒரு பாக்கெட் பாப்கார்ன் சாப்பிடுங்கள். மூளையில் உடனே செரோட்டனின் உற்பத்தியாகி உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ள நல்லவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து உங்களை உடனே
உற்சாகப்படுத்திவிடும். அந்த அளவு சூப்பரான உணவு
பாப்கார்ன்.

ஆதாரம்: இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள்

அருகம்புல்

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 
        ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்
                          இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை . தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.
அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.
உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.
சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.
அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.
தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.
தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.
எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.
அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.
அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.
இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
காலை உணவாக
அருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.
புல்லின் தனிமங்கள்
அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.

பனைமரம்

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
கற்பகதரு - பனைமரம்
------------------------------------

பழந் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி "கற்பகதரு" என்பர். பனையின் பயன் பற்றி
அறியாதிருக்கும் சிலர் அதனை அறிந்து கொள்வதற்காக இதோ..........

பனை மரம் ஒரு இயற்கை வளம். இலங்கை, மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், 
ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர். உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

● பனையின் பயன்கள் :-
(1) பனை ஓலை:
குருத்து:-
வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகளை குருத்து என்பர்; இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும். குருத்து ஓலையானது கைவினைப்பொருட்களான பூக்கள், பூச்சாடிகள் போன்றவற்றையும் நாளாந்த பாவனைப்பொருட்களான பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நீத்துப்பெட்டி, இடியப்ப தட்டு போன்றவற்றையும் செய்யப் பயன்படுகிறது.

அத்துடன் காகிதங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னர் எழுத்து வடிவங்கள் எழுதுவதற்கும், நூல்கள் எழுதுவதற்கும், ஏட்டுச் சுவடிகள் எழுதுவதற்கும் இவ்வோலைகளே பயன்பட்டன.
முற்றிய ஓலையானது மாட்டுக்கு உணவாகவும், வீட்டுக் கூரை வேய்வதற்கும், சுற்று வேலிகள் அடைக்கவும், பசளையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
(2) நார்:
பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள்/ விளக்குமாறு
செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

(3) மரம்/ தண்டு:
கட்டுமானப் பணிகளுக்கு குறிப்பாக வீட்டுக் கூரைகளுக்கு சிலாகை, தீராந்தி , வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.
(4) பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap):
மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறு
பதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு,வினாகிரி செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும் கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க சுண்ணாம்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மாற்றிவிட கூடியது. யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையும் நொதித்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விற்றமின் பி, கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின், கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாராயம் வடிக்கவும் பயன்படுகிறது.
(5) நுங்கு:
முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாகும் அதேவேளை; அதிக பனைவளத்தைக் கொண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
(6) பனம் பழம்:
சீக்காய்:- இது பனங்காயின் செங்காய்ப்பதம்; இதன் தோலைச் சீவி,மஞ்சள்சதைப் பகுதியை அரிந்து தட்டுத்தட்டாக சப்பிச்சாறையுறிஞ்சி விட்டு, தும்பைத் துப்புவார்கள்; இனிமையான மாலை ஆசைத் தீனி.
பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழக்கூழானது (Fruit pulp) பழப்பாகு (ஜாம்), பனாட்டு, குளிர்பானம், பனங்காய்ப் பணியாரம் என்பன செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
சுவையான சிற்றுண்டியான பனங்காய்ப் பணியாரம் ஈழத்தில் வெகு பிரபலம். பிழிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமைமாச் சேர்த்து கொதிக்குமெண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது தான் பனங்காய்ப் பணியாரம். மிக வாசமாகவும், சுவையாகவும் இருக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேச பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்து தட்டுத்தட்டாக வெட்டி மடித்து ஓலை உமலில் கட்டி; அடுப்படிப் பறனில் புகை படக்கட்டி வருடக்கணக்கில் பாதுகாத்து உண்ணும் பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் மிக அருமையாக இருக்கும்; இது காலை;மாலை உணவு.
சவர்க்காரம் (சோப்பு) கிடைக்காத போர்க் காலத்தில் பனம்பழம் கொண்டுதான்
உடுப்பு தோய்த்தார்கள். பனம் பழத்தின் வாசத்தில் மாடுகள் உடைகளை சாப்பிட்டதாகக்கூட சொல்லுவார்கள். அதை விட, பனம் பழத்தைத் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.

(7) பனங்கிழங்கு:
பூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்.
நன்கு வேரோடிய பனங்கிழங்கு அவித்து உண்ணக் கூடியது.
ஒடியல்:-
"நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின்பிளந்தன்ன வாய்" என உவமிக்கப்பட்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் பச்சை ஒடியல் என்பர். இதை இடித்தரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை,சேர்த்துப் பிட்டவிப்பர்; கறியுடனோ;சீனி,சக்கரையுடனோ சாப்பிடலாம்.அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவு. அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு;கூழ் இதில் சைவக்கூழ்;மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள்.ஒடியல்மாவுடன் மிளகாய்;உள்ளி;மிளகு;புளி;உப்பு கரைசல்; உழுந்து,பயறு,மரவள்ளிக்கிழங்கு;பூசணிக்காய்;ஈரப்பலாக்காய்;
பலாக்கொட்டை;அவரைக்காய்;முல்லை;முடுட்டை; முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவது; தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு.இது சைவ உணவு உண்பவர்களுக்குத் தயாரிப்பது ,இத்துடன் மீன்;நண்டு,கணவாய்,இறால்;திருக்கை;மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது;மச்சக்கூழ்; இது மச்சப் பிரியர்களுக்கு.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல் அப்படியே உண்ணக் கூடியது. அத்துடன் புளுக்கொடியல் மா சிற்றுண்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பனம் பொருட்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிகக்குறைவாகவே நடைபெறுகிறது. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது. மேலும்,
நடைபெற்றுள்ள பெரும்பாலான ஆய்வுகள் கூட மக்களால் அதிகம் பயன்படுத்தப்படாத பழக்கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.

(8) பழக்கூழ் (Fruit pulp):
இந்தப் பழக்கூழானது மருத்துவக் குணங்களுள்ள பல்வேறு இரசாயனங்களைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவையாவன:
1. கரோட்டினோயிட் (Carotenoids):
100கிராம் பனம் பழத்தில் 2253 மில்லிகிராம் மஞ்சள் நிறமான கரோட்டினொயிட் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது கண்பார்வைக்கு அத்தியாவசியமான பீட்டா கரோட்டின் எனப்படும் விட்டமின் A யின் மூலப்பொருளாகும்.

2. பெக்ரின்
இது உணவு உற்பத்தியில் உணவுப் பொருட்களை உறுதியாக்கவும், அவற்றைக் கூழ் நிலையில் பேணவும்
உதவும்.

3. Flabelliferin பிலபெல்லிபெரின்
இதுதான் பனம் பழத்தில் காணப்படும் கசப்புச் சுவைக்குக் காரணமான பதார்த்தமாகும். இதனை பழக்கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழக்கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும்.
அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.
இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்ச்சியில் Flabelliferin ஆனது குருதியில் உள்ள வெல்லத்தின் (குளுக்கோஸின்) அளவைக்
குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறெனில், நீரிழிவு நோயாளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்தபோது, அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல (குளுக்கோஸ்) அளவில் குறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் பனாட்டில் இருக்கும் Flabelliferin தான் என விஞ்ஞானிகள் அநுமானித்துள்ளார்கள் .

மேலும், இலங்கையில் பனை அபிவிருத்திச் சபையானது
பழக்கூழில் இருந்து பற்பசை செய்து மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.

பனை பற்றிப் பேச முற்பட்டால் பக்கம் பக்கமாகப் பேசலாம். எனினும் கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறைவடைகிறது.
“பனை வளம் காப்போம்!
பயன் பல பெறுவோம்!!”

கொங்குத்தென்றல் சார்பாக இந்தியன் குரல்சேவை அமைப்புக்கு நன்றி

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
  கொங்குத்தென்றல் சார்பாக இந்தியன் குரல் சமூக நலனுக்கான இலவச சேவை அமைப்புக்கு நன்றி சொல்வோம்...

இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) இந்தியக் குடிமக்கள் யாவர்க்கும்- (அ) சுதந்திரமாக சிந்திப்பதற்கும், எடுத்துச் சொல்வதற்கும், (ஆ) ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கும், (இ) சங்கங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கும், (ஈ) இந்திய எல்லைக்குள் எத்தகைய தடையுமின்றி நடமாடுவதற்கும், (உ) இந்திய எல்லைக்குள் தாம் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும் தங்குவதற்கும், (ஊ) சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பனை செய்யவும், வைத்திருக்கவும், (எ) எந்தத் தொழிலையும் செய்வதற்கும், நடத்துவதற்கும், எந்தப் பணியிலும் ஈடுபடுவதற்கும், எத்தகைய வாணிபத்தையும் செய்வதற்கும் உரிமை இருக்கிறது

RTI மூலம் தனியார் மருத்துவமனையின் தகவல்களை கோர முடியுமா என்று நண்பர் ஒருவர் நமது பக்கத்தில் கேள்வி எழுப்பிருந்தார். அதற்கான பதில் :-
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தனியார் துறையை கேட்க விரும்பினால் அதனை கண்கானிக்கும் அரசு அமைப்பு மூலம் தகவல் கோரலாம்.
தனியார் மருத்துவமனை என்று வருகின்ற பொழுது வருமான, வரி போன்ர தகவல்களை கோருவது என்றால் வருமான வரித்துறை மூலம் கேட்கலாம்.
மருத்துவம், நோயாளி, மருந்து இருப்பு போன்ற மருத்துவம் சார்ந்த தகவல்களுக்கு , மாவாட்ட சுகாதார துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு மனு செய்யலாம்...

தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பம்

http://voiceofindian.org/know-local-body-govt-rti/

பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி  செயல்பாடுகளை அறிய இந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்

http://voiceofindian.org/know-local-body-govt-rti/
http://voiceofindian.org/know-local-body-govt-rti/
பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி செயல்பாடுகளை அறிய இந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்
http://voiceofindian.org/know-local-body-govt-rti/

புதிய குடும்ப அட்டை கேட்டு RTI-2005

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1) இன் கீழ் விண்னப்பம்
பதிவு தபால் ஒப்புகை அட்டையுடன் தேதி:

விடுநர்,

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்,
___________ மாவட்டம்,


ஐயா,
பொருள் : புதிய குடும்ப அட்டை கேட்ட எனது விண்ணப்ப தேதி: ________ அதற்கான மனு எண் :____

புதிய குடும்ப அட்டை கேட்டு நான் செய்த விண்ணப்பத்தின் மீது நாளது வரை எனக்கு வழங்கிடவில்லை. இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் தகவல்கள் அளிக்க வேண்டுகிறேன்.
1) மேற்காணும் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மானப் பதிவேட்டின் ; பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ; பதிவு அஞ்சல் பதிவேட்டின் சிறப்புப்பதிவேட்டின் ; சம்பந்தப்பட்ட பக்கத்தின் ஒளிநகல்.
2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் நடைமுறைகளைக் காட்டும் ஆணையின் ஒளிநகல்
3) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் பதவி அலுவலக விலாசம் விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் அவர்களின் நாட்குறிப்பின் அந்த நாட்களின் ஒளிநகல்
4) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அளிக்க வேண்டும் , அளிப்பத்தை எந்த காரணங்களால் நிறுத்தி வைக்கலாம், நிராகரிக்கலாம்; என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
5) மேற்காணும் எனது விண்ணப்பத்தினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளிநகலையும் அலுவலகக் குறிப்புக்கட்டுடன் வருவாய் ஆய்வாளரின் தனிபதிவேட்டில் சிறப்பு பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியப்பட்டுள்ள பக்கத்தின் ஓளிநகல்
6) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, விலாசம், அதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்
7) நான் கோரிய புதிய குடும்ப அட்டை எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள காரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
8) குடும்ப அட்டை விண்ணப்பங்களை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற எத்தனை தினங்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட சுற்றறிக்கையின் ஒளி நகல்
9) 1.5.2013 முதல் 9.6.2014 வரையிலான தங்கள் அலுவலக “புதிய குடும்ப அட்டை வழங்கல் பதிவேட்டின்” ஒளி நகல்
10) மாவட்ட , கோட்ட , வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பிர்க்க வருவாய் அலுவலர்களின் செல்பேசி மற்றும் முகவரிகளை வழங்கவும்

குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 4 இன் படி மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு துறை பொது தகவல் அலுவலர்கள் விவரங்கள் அவர்களின் முகவரிகள், எந்த தகவல்களுக்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படாத காரணத்தால் உரிய பொது தகவல் அலுவலர் முகவரி தெரியாத காரணத்தாலும் தங்களுக்கு இந்த மனுவை அனுப்புவதோடு சட்ட பிரிவு 6(3) இன் படி நடவடிக்கை வேண்டுகிறேன்.
இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இணைப்புகள்:
1) எனது புதிய குடும்ப அட்டை மனு
2) புதிய குடும்ப அட்டை கேட்டும் விண்ணப்பித்த மனுவின் ஒப்புகைச் சீட்டு
3) எனது நீக்கல் சான்று நகல்
தங்கள் உண்மையுள்ள,

++++++***************+++++

09 ஜூன் 2014

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

"தோப்புக்கரணம்"

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
 "தோப்புக்கரணம்" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"வீட்டுப்பாடம் செய்யாதவங்க எல்லாம் தோப்புக்கரணம் போடு.." என்று பள்ளியில் ஆசிரியர் சொல்வதை கேட்டிருக்கிறோம்... பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக தோப்புக்கரணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம்.. இவைகள் எல்லாம் சில பல வருடங்களுக்கு முன்பு மிகச் சாதாரணமாய் நடக்கும் நிகழ்வுகள்... ஆனால் இப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் தண்டனையாகவோ, பிரார்த்தனையாகவோ நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த "தோப்புக்கரணம்" போடும் பழக்கம் ஒரு மிகப்பெரிய "அக்குபஞ்சர்" சிகிச்சை முறை என்பதும்.. அது உடலின் பல உறுப்புகளை தூண்டும் முறை என்பதும் நமக்குத் தெரியாதது. தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால். முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.

இரு கால்களுக்கும் சற்று இடைவெளி விட்டு நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவதே தோப்புக்கரணம் ஆகும். இடது கையால் வலது காதுமடலையும், வலது கையால் இடது காதுமடலையும் பிடிக்க வேண்டும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும். (வலது கை இடது கையின் மேல் இருக்க வேண்டும்.) முதுகுதண்டு நேராக இருக்கும்படியும், தலையை நேராய் பார்த்த படியே முச்சுக் காற்றை மெதுவாகவும் சீராகவும் விட்ட படியே உட்கார்ந்து எழ வேண்டும். அதிக சிரமப்படாமல் முடிந்த அளவு உட்கார்ந்து முச்சை இழுத்துக்கொண்டே பொறுமையாக எழவேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது. மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.இதனால் மூளையின் நரம்பு மண்டலங்களின் வழியாக சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.

தோப்புக்கரணத்தின் மகிமையை ஆராய்ந்த அமெரிக்கர்கள் நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெற்று நியூரான்களும் புத்துணர்ச்சி அடைந்து, மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளைப் பெற்று மூளையின் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை நிரூபித்துள்ளனர்..

விநாயகர்வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது முழு உடல்நலத்திற்கும் உகந்தது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. (அமெரிக்காகாரன் சொன்னாதான் நம்ம ஊருக்காரங்க நம்புவாங்க)

"ஆட்டிசம்"போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை தினமும் பயிற்சி செய்து வந்தால் வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் என்று அமெரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மூட்டுவலிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உடலில் உப்புச் சத்து குறைந்தாலும், அதிகமானாலும் சவ்வு பாதிக்கப்பட்டு மூட்டுவலி ஏற்படும். மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் பாதிப்பால் மூட்டுவலி உண்டாகிறது. சிறுநீரகம் செயல்பாடு குறைவும் ஒரு காரணம். தேவைக்கதிகமான கொழுப்புச்சத்து மற்றும் அதிகபடியான நீர் சேர்வதாலும், உடல் எடை அதிகரிக்கும். பால்வினை நோயாலும் மூட்டுவலி ஏற்படும். கருப்பை அகற்றிய பெண்களுக்கும் எலும்பு தேய்ந்து மூட்டுவலி வர வாய்ப்புள்ளது.

தரையில் சமமாக கால் பதிக்கக் கூட சிலரால் முடியாது. அப்படியே காலை வைத்தாலும் அதில் ஒரு பிடிமானம் இல்லாமல் ஆடுவது போன்ற உணர்வு இருக்கும். வலி அதிகமானப் பிறகு யோகா, தியானம் என சில பயற்சிகளை செய்யத்தொடங்குவார்கள்... ஆனால் அப்படியும் கூட வலி குறையாமல் அதிகமானதாக சிலர் கூறுவார்கள்.

பெரியவர்கள் மூட்டுவலி என்று கூறும் காலம் போய் இப்போது இளவயதினர் கூட கூறும் வார்த்தை இது தான். அதிக எடை மற்றும் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்தல், உடல் உழைப்பும், உடற்பயிற்சியின்மையும் இதற்கு காரணம்.
ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் தைலம் தேய்ப்பது, ஒத்தடம் போடுவது தற்காலிகத் தீர்வையே தரும்.

எளிய தோப்புக்கரணத்தின் பலன்களோ மிகவும் அற்புதமானவை. தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும். தரையில் உட்கார்ந்து எழும்போது இரத்த ஓட்டம் இதயத்தில் சீராக இருப்பதால், இதயம்ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலின் ஒவ்வொரு பாகமும் பலனடைகிறது. குறிப்பாக, தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுக்களும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. முழு ஆரோக்கியம் நம் உடலுக்கு வேகமாக கிடைக்க இதை விட்டால் வேற வழியே இல்லை எனலாம். இதை உங்கள் வாழ்நாள் முழுதும் பூரண ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இதனால் காலில் உள்ள தசைகள் வலுப்பெறுவதுடன் உடலில் உள்ள தசைகளும் சேர்ந்தே வலுவடையும். உடலின் மொத்த உறுப்புகளும் மிகுந்த பயன் அடையும். இந்த எளிய பயிற்சி மூலம் நம் உடல் மேற்புறமும், கீழ்புறமும் சமமாக வலுவடையும். இயல்பாக எந்த வேலை செய்தாலும் தசைகளை சமநிலைப் படுத்தி வலுவுடனும் மிகவும் இலகுவாக வலியற்று நகரும் தன்மையுடன் செயல்பட வைக்கிறது. உடல் எடையை குறைந்து மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் போகும். வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்தும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் நல்ல பயனளிக்கும். இடுப்பு மற்றும் மூட்டுகளுக்கு வலுவடைந்து தசைப்பிடிப்பு, மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவை நம்மை விட்டொழியும். முக்கியமாக உடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியற்றப்படுகிறது , உடலில் உள்ள சக்தி சீராக தசை, உள்ளுறுப்புகள், மற்றும் சுரப்பிகளுக்கு அனுப்பபடுகிறது. இதனால் பெருங்குடல் வலுவடைந்து, சீரான அசைவுகளின் மூலம் மலத்தை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் தீர்வதற்கு இது மிகச் சிறந்த வழியாகும்.

இந்த பயிற்சியை நாம் எங்கு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். ஜிம்க்கு போகவும் வேண்டாம். வேறு எந்த உபகரணமும் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 15-20 முறை தோப்புக்கரணம் போடலாம் (அ) படத்தில் கூறியுள்ளது போல உட்கார்ந்தும் எழலாம். வயதானவர்கள் தன்னிச்சையாக நின்ற நிலையில் தோப்புகரணம் போட முடியாது ஆகவே அவர்கள் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டோ, நட்டுவைக்கப்பட்ட இரும்பு, மரத்தூண்களை பிடித்துக்கொண்டோ உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், மலத்தை அடக்குவதும் அறவே கூடாது. காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். சீரணமாக அதிக நேரம் எடுக்கும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். Aaranyam அக்குபஞ்சர் அறிவோம்

கீபோர்டு ஷார்ட் கட் வழிகள்...

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

Tintu-Mon
More than 100 Keyboard Shortcuts must read
SHARE IT........

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)

MMC COnsole Windows Shortcut keys
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா?

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். 
                      
தள்ளுபடி - Thallubadi

ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகத்துடன், மலிவு விலை பொருட்கள் எப்படி வாங்குவது குறித்த சற்றே விரிவான கட்டுரைதான். பொறுமையாக படித்து நண்பர்களுடன் ஷேர் செய்து அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகப்படுத்துங்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா? உங்களுக்குதான் இந்த கட்டுரை

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சுறுசுறுப்படைந்து கடந்த ஒரு வருடமாக அதி வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தயங்கி வருகிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் என்றால் ஒருவித பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் காரணங்கள்....

ஆன்லைன் ஷாப்பிங்-ல ஏமாத்திடுவான்.......பொருள் தரமா இருக்காது.... நேரா போய் தொட்டு பார்த்து வாங்குற மாதிரி வருமா?.....முகம் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்புறது எப்படி... கொண்டுட்டு ஓடிப் போயிட்டா.... என்று பலவித காரணங்கள், குழப்பங்கள்.

அறியாமையே இந்த குழப்பங்களுக்கு காரணம். ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் இளைஞர்கள் மட்டும் தான் என்று இருந்த காலம் மாறி முதியவர்களும் சரளமாக கம்ப்யூட்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இணையமா...? பேஸ்புக்கா...? நமக்கெல்லாம் ஒத்து வராது என்று ஓடியவர்கள், பிரபலங்கள் எல்லாம் இன்று பேஸ்புக்கில் வெளுத்து வாங்குகிறார்கள். இதெல்லாம் இல்லேன்னா நம்ம பொழப்பு ஓடாது என்று நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஏன்?

இவை எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று ஆகி விட்டது. ரேஷன் கார்டுல பேர் இல்லாதவர்களை கூட காணலாம்.... பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவரை பார்க்க முடியாது என்ற நிலை. தெரிந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங்கும். அறிந்து கொள்வது, கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம். வருங்காலத்தில் பெரும்பாலான பொருட்கள் ஆன்லைனில் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது பொருள் வாங்க அடுத்தவர் உதவிக்காக காத்திருப்பது கஷ்டம். எனவே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பியுங்கள். சிறிது சிறிதாக பழகுங்கள்.

இந்தியாவில் Ebay, Flipkart, Amazon, Myntra, Jabong, Snapdeal, Shopclues உள்ளிட்ட நல்ல தரமான ஷாப்பிங் தளங்கள் தங்கள் சேவையை செவ்வனே செய்து வருகின்றன. தங்களால் இயன்றவரை கஸ்டமர்களை திருப்தி படுத்துகின்றன. எனவே தான் அவை மேன்மேலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.

நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு என எளிமையான கட்டணம் செலுத்தும் வழிமுறைகள். வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு வசதி இல்லாதவர்களுக்கு, வீட்டுக்கு கொண்டு வந்து பொருட்களை கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொள்ளும் Cash on Delivery வசதி.

பொருட்கள் அளவு உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் வேறு அளவு மாற்றிக் கொள்ளும் Exchange வசதி. பொருள் பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெறும் Easy Return வசதி என இந்திய ஆன்லைன் தளங்கள் உலகத் தரத்தில் சேவையை வழங்கி வருவது உண்மை. உங்கள் வீடு தேடி வந்து பொருட்களை திரும்ப பெற்று செல்வார்கள்.

Flipkart , Amazon, Jabong போன்ற நிறுவனங்கள் பெரும்பாலான இந்திய நகர்களில் தனக்கென பிரத்தியேகமாக தங்கள் கூரியர் அலுவலகங்களை திறந்து உள்ளன.

சரி சார்... எனக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யணும்னு ஆர்வமாத்தான் இருக்கு,,,,,எங்கிருந்து ஆரம்பிப்பது?

துவக்கத்திலேயே பெரிய அளவில் பணம் போட்டு பொருட்களை வாங்குவதை விட சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கிப் பழகுங்கள். ஆன்லைனில் ரூ. 10, ரூ. 20 போன்று மொபைல் ரீசார்ஜ் செய்து பாருங்கள். மொபைல் ரீசார்ஜ் செய்ய சிறந்த தளங்கள். http://paytm.com/ , http://freecharge.in/ . உடனுக்குடன் ரீசார்ஜ் ஆகி விடும்.

அறிமுக சலுகையாக, பல இலவச ரீசார்ஜ் சலுகைகளும் வழங்குகிறார்கள். அவற்றை பயன்படுத்தி பாருங்கள். உதாரணத்திற்கு சில

Freecharge.in -ல் ரூ. 20 க்கு இலவச மொபைல் ரீசார்ஜ் சலுகை - http://goo.gl/XtCcNX
Freecharge.in -ல் ரூ. 10 க்கு இலவச மொபைல் ரீசார்ஜ் சலுகை - http://goo.gl/Kh9lYM
Paytm.com -ல் ரூ. 50 செலுத்தி ரூ. 100 ரீசார்ஜ் பெறுங்கள் - http://goo.gl/pmXLPb

அடுத்து சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கி பழகலாம். அதற்கு ஏற்ற தளம் http://shopclues.com/

இந்த இடத்தில் shopclues தளம் பற்றி சிறிய விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த தளத்தில் பொருட்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும். நீங்கள் கொடுக்கும் விலைக்கு நல்ல மதிப்புடன் இருக்கும். அதே நேரம் ரூ. 100 கொடுத்து விட்டு ரூ. 1000 அளவுக்கு அதிக தரம், வசதி எதிர்பார்க்க கூடாது. உங்கள் அதிக எதிர்பார்ப்பே உங்களுக்கு ஏமாற்றம் தரும். கொடுத்த காசுக்கு ஓக்கேவா .... என்பது சரி.

ஒரு லட்ச ருபாய் பணம் கொடுத்து விட்டு ஆடி கார் வரும் என எதிர் பார்க்க கூடாது. மாருதி கார் வந்திருக்கா சூப்பர்... . சுருங்க சொல்ல வேண்டும் என்றால் shopclues என்பது நமது ஊர் பாண்டி பஜார், பர்மா பஜார் மாதிரி சைனா பஜார்.

பொருட்கள் வாங்கும் முன்பு கீழே அந்த பொருட்களை ஏற்கனவே வாங்கிவர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை (Reviews) படித்துப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்.

Shopclues தளம் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் "Sunday Flea Market" என்ற பெயரில் மலிவு விலை சந்தை போன்று பொருட்களை விற்பார்கள். ரூ. 23 -லிருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. பெரும்பாலும் வீட்டு உபயோகப் பொருட்கள். உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். ஒரு வாரத்தில் உங்கள் வீட்டுக்கு பொருட்கள் வந்தடையும்.

Sunday Flea Market மலிவு விலை பொருட்களை பார்வையிட - http://goo.gl/ljRSO

உதரணத்திற்கு சில சலுகைகள் :
ரூ. 90 மதிப்புள்ள 6 கோல்கேட் டூத் பிரஷ்கள் ரூ. 53 மட்டுமே, Flipcover for Samsung & Micromax, Nokia , Motorola, Sony and Lava xolo ரூ. 73 மட்டுமே., மூன்று 1 லிட்டர் மில்டன் வாட்டர் பாட்டில் ரூ. 83 மட்டுமே. ரூ. 150 மதிப்புள்ள மரத்தாலான 5 கரண்டிகள் ரூ. 83 மட்டுமே. ரூ. 75 மதிப்புள்ள ரஸ்ணா ரூ. 45 மட்டுமே.

மேலும் இது போன்ற தினசரி சலுகைகளை அறிந்து கொள்ள நீங்கள் துட்டு.காம் http://thuttu.com/ தளத்தை சரியானது. அவ்வப்போது வரும் சலுகைகளை உடனுக்குடன் பதிவார்கள். பெரும்பாலான சலுகைகள் சில மணி நேரங்களில் காலாவதி ஆகி விடும் அல்லது விற்றுத் தீர்ந்து விடும். எனவே முந்துபவர்களுக்கே தள்ளுபடி சலுகைகள்.

பேஸ்புக்கில் இருந்தபடியே தொடர்ந்து சலுகைகளை பெற https://www.facebook.com/thallubadi தள்ளுபடி பக்கத்திற்கு Like போட்டு இணைந்து கொள்ளுங்கள்.

சிறிய வயதில் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நமது பெற்றோர் நமக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்கள். ஆன்லைனில் பொருட்கள் மலிவான விலையில் சிறப்பாக வாங்குவதை சிறுக சிறுக நாமே கற்றுக் கொள்வோம்.

நன்றி.

இவ்வளவு நேரம் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி. இதனை Share செய்வதன் மூலம் அதிகம் நண்பர்களை இந்த செய்தி சென்றடைந்து, அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் பற்றி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்

கோபம் குறைய எளிய வழி

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 
கோபம் குறைய எளிய வழி (அக்குபிரஷர்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சமகால வாழ்க்கை முறையில் கோபம் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகி விட்டது.. ஒரு மனிதனுக்கு கோபமே வரவில்லை என்றால் அவன் எக்காலத்தை பற்றியும் யோசிக்கும் திறனில்லாத மனநிலை தவறியவராக இருக்க வேண்டும்.. (அ) முக்காலமும் உணர்ந்த ஞானியாக இருக்க வேண்டும்.. ஆனால் நம்மில் யாரும் இங்கே மனநிலை தவறியவரும் இல்லை.... ஞானியும் இல்லை... ஆகவே சராசரி வாழ்க்கை வாழும் எல்லோருமே கோபப்படாமல் இருக்க முடிவதில்லை...

உடலில் நோய்கள் குடியேறுவதற்கான நுழைவாயிலே கோபம் தான். கோபத்தை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழலாம். எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான். எளிமையான எதிர்பார்ப்புகளுடனும், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைக் குறைத்தாலும் போதும் மன அழுத்தம் பெருமளவில் குறைந்தும் போகும். ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக கவனம், குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணங்கள்.
மனிதராய் பிறந்த நாம் முடிந்த வரை கோபத்தை குறைத்து கொள்வதும், மற்றவர் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்வதும் நல்லது. மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனும், ஒரு காரியம் தன்னால் முடியாது என்று நினைப்பவனும் தான் அதிகக் கோபப்படுகிறான். கோபம் அவனை தன்னிலை இழக்க செய்வதுடன் எந்தவொரு செயலையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது.
அதிகமாக கோபப்படும் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடிவதில்லை. நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகள், வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் கோபம் ஒருவருக்கு வருகிறது. பிறரைப் புரிந்து கொள்ள முயலாமல் எப்போதும் ஒரு முணுமுணுப்பு, தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்ற ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை (inferiority complex), தமக்குத்தான் எல்லாமே தெரியும்.. மற்ற எல்லோருமே முட்டாள்கள் என்ற உயர்வு மனப்பான்மை (superiority complex) என்று இது போன்ற பல விஷயங்கள் மனிதனின் மனதை பரிதவிக்க வைத்து எரிச்சல் மற்றும் கோபத்துடன், இயலாமையும் சேர்ந்துக் கொண்டு மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.
கோபம் வர எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்... நம் பேச்சை கணவன்/மனைவி கேட்கவில்லை என்பது தொடங்கி அலுவலகத்தில் யார் பேச்சையோ நாம் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் வரை கோபம் வர பல காரணங்கள்... சாலையில் நடக்கும் போது யாராவது நம் மீது மோதிவிட்டு "சாரி" கேட்காமல் சென்றால் கோபம்... தாறுமாறாக வாகனம் ஓட்டினால் கோபம், பக்கத்து வீட்டில் சத்தமாக பாட்டு வைத்தால் கோபம், தெருவில் குழந்தைகள் கூச்சல் போட்டால் கோபம்.. இப்படி பல்வேறு காரணங்கள்...
அந்த கோபங்கள் சில இடங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டவர் மீது வெளிப்படும் ... பல இடங்களில் எங்கேயோ இருக்கும் கோபங்கள் வீட்டில் இருப்பவர்கள் மீதோ, பணியிடங்களில் நமக்கு கீழாக வேலை செய்பவர்கள் மீதோ வெடிக்கும்... ஆனால் அந்த வாய்ப்பு கூட இன்று பலருக்கு கிடைப்பதில்லை...அப்படி வெளிப்படுத்த முடியாத கோபங்கள் தான் மனதிற்குள்ளேயே தங்கி மன அழுத்தமாக உருவாகிறது...வாழ்க்கையில் மனிதனுக்கு வரும் நோய்களில் 90% நோய்கள் இந்த மன அழுத்தத்தால் மட்டுமே வருகிறது என்று எத்தனையோ ஆராய்ச்சிகள் ஆதாரங்கள் வந்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஒன்றின் மீது நாம் ஏற்படுத்திக்கொள்கிற அதீத ஆவலே நமக்கு டென்ஷன் ஆகி தலைவலியில் முடிவடைகிறது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் (அ) சூழல் நெருக்கும்போது அது கோபாமாக, எரிச்சலாக வெளிப்பட்டு மனஅழுத்தம் உண்டாகிறது. 'ஒரே டென்ஷனா இருக்கு' என்று பத்து வயது பிள்ளைகள் கூட அடிக்கடிச் சொல்லக் கேட்டு இருக்கிறோம். டென்ஷன் - நவீனம் வளர்த்தெடுத்த மிக கொடிய நோய்களில் ஒன்று.
டென்ஷன் ஒருவரை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சார்ந்த அனைவரையும் தொற்றிக்கொள்ளும். கோபம் கொண்ட ஒருவரால் அந்த குடும்பமே நிம்மதியை தொலைக்கும். மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட நெருக்கடி தான் இது என்றாலும் மனிதனால் முற்றிலும் இதிலிருந்து விடுபட முடியாவிட்டாலும் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கலாம் இல்லையா?..
நாம் ஒவ்வொரு மனிதனுடைய இயல்புகளையும் மாற்ற முயற்சிக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொண்டோமானால் கோபமே நம் மீது கோபப்பட்டு நம்மை விட்டு ஒடி விடும்.
சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழ்ந்தாலே போதும்.
அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும்.

ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். ஆனால் எல்லாவற்றிக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுதியால் தவிக்கும் போது தான் தேவையில்லாத இறுக்கம் உண்டாகிறது. பல சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை என்ற முடிவுடன் மனதைத் தளர்த்தி இறுக்கமாக இருப்பதை தவிர்க்கலாம்.
மனதிற்கு பிடித்த இசையுடன் கூடிய ஓய்வு எடுக்கலாம். உடலிற்கு தேவையான ஓய்வும், தூக்கமுமே மன அமைதியை கொடுக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருப்பவர்கள் அடுத்த நாள் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல், தன் கோபத்தை பார்க்கும் அனைவரின் மீதும் வெளிப்படுத்தி, இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் இழப்பார்கள்.
ஆத்திரம் அறிவுக்கு சத்துருவோ இல்லையோ முகத்திற்கும் தான். கோபத்தின் போது நம் முகத்தை நம்மாலே பார்க்க முடியாத அளவு விகாரமாகி போவதை கண்ணாடி பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம். கோபம் போக எளிய உபாயம்.. உடனே நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது தான்.
சிலர் ஏதாவது கோபம், டென்ஷன் என்றால் ஓடிப்போய் ஒரு சிகரெட்டை பற்றவைத்து நுரையீரலை புகையில் குளிப்பாட்டுவார்கள்... அப்படி செய்தால் கோபம், டென்ஷன் குறையும் என்ற ஒரு மாயையை அவர்களே கற்பித்துக்கொண்டு அதை செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள்..மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கத் தான் செய்யுமே தவிர குறைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனமான நம்பிக்கை.
கோபம் மன அழுத்தம், கவலை உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் கல்லீரல், இதயம், சிறுநீரகங்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அல்சர், மலசிக்கல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலத்தையும், உடல் நலத்தையும் கெடுத்து மேலும் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும்.
கோபத்தை கட்டுப்படுத்த தியானங்கள், ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுவது, எளிய உடற்பயிற்சிகள், எட்டு நடைப் பயிற்சி (எட்டு நடை பயிற்சி பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் பார்க்கவும்... www.nalam-acu.blogspot.com), நல்ல பலன் அளிக்கும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த வழிமுறைகள். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் கோபத்தை விரட்ட முடியும்.
இத்தனை பெரிய கோபம் மன அழுத்தம், கவலை அக்குபிரஷரில் போக்க எளிய வழி இருக்கிறது. எப்போது எல்லாம் கோபம் வரும் சூழ்நிலை உணடாகிறதோ அப்போதே அந்த இடத்தை விட்டு அகல வேண்டும். முடியாத பட்சத்தில் உடனே நம் கையின் நடு விரல் முழுவதும் மெதுவாக 3 நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் அந்த விரலின் நகக்கண்ணின் இருபுறமும் லேசாக அழுத்தம் கொடுத்தால் போதும். கோபம் உடனே அகலும்...மனம் தெளிவாகும்...இந்த முறையை எப்போது எல்லாம் கோபம் வருகிறதோ அப்போது எல்லாம் பின்பற்றாலம்.
இதற்கு முந்தைய பதிவில் சொல்லி இருப்பது போன்ற வளையம் கையில் இருக்கும் பட்ச்சத்தில் அந்த வளையத்தை உடனடியாக நடு விரலில் முன்னும் பின்னும் உருட்டலாம்.. அது இன்னும் கூடுதல் நலம் பயக்கும்....இன்றே முயற்சி செய்து பாருங்கள். கை மேல் பலன் என்று இதை தான் சொல்லி சென்று இருப்பார்களோ நம் முன்னோர்கள்.
இன்றைய நிலையில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளில் சுமார் 80% பேர் இப்படியான கோபத்தால் குற்றமிழைத்துவிட்டு இப்போது வாழ்க்கையை தவணை முறையில் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அதே போல தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% சதவிகிதம் பேர் இப்படி யார் மீதாவது உள்ள கோபத்தில் வாழ்க்கையை மொத்தமாய் தொலைத்து விடுகிறார்கள்...
அக்குபிரஷர் முறையில் செலவே இல்லாத, யாருடைய துணையும் தேவை இல்லாத 3 நிமிட பயிற்சியை செய்வதன் மூலம் கோபத்தை வென்று ஆனந்தமாக வாழலாமே.
மரியாதைக்குரிய ஈஸ்வரி ரகு அம்மையார் அவர்களுக்கு நன்றி...

இரட்டைக்கிளவி

   இரட்டைக்கிளவி கலகல காட்சியில் திமு திமுவென மழலைகள் சுறுசுறுப்பாக  ஓடுவதேன்! சுளீர் சுளீரெனும் வெயிலில் மளமளவெனப் பொறுக்குவதென்ன! வளவளவெனப...