24 பிப்ரவரி 2014

இளையராஜாவின் யூ ட்யூப் இணையதளம்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

          
இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்!
இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கென யுட்யூப்பில் புதிய பக்கம் தொடங்கியுள்ளனர்.

Ilaiyaraajaofficial எனும் பெயரில் யு ட்யூபில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பக்கத்தில் ராஜாவின் பாடல்களை ஒலி வடிவில் கேட்கலாம்.

ஆன்லைனில் இளையராஜாவின் பாடல்கள்தான் இன்று எங்கு பார்த்தாலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்குபவை மிகக் குறைவுதான்.

அந்தக் குறையைப் போக்கும் வகையில், ராஜாவின் ஆரம்ப படங்களிலிருந்து இன்றுவரை உள்ள பாடல்கள் அனைத்தையும், படங்கள் வாரியாக இந்த யு ட்யூப் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.

ராஜாவின் இசையை இப்போது வெளியிட்டுவரும் அகி மியூசிக்காரர்கள் இந்த தளத்தை உருவாக்கி, பாடல்களை பதிவேற்றி வருகின்றனர்.

இப்போதைக்கு ஆனந்தகும்மி, ஆண் பாவம், வருஷம் பதினாறு, ஆனந்த ராகம் போன்ற படங்களின் முழுப் பாடல்களையும் இந்தத் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கென யுட்யூப்பில் புதிய பக்கம் தொடங்கியுள்ளனர். 

@[8634042100:274:Ilaiyaraaja]official எனும் பெயரில் யு ட்யூபில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பக்கத்தில் ராஜாவின் பாடல்களை ஒலி வடிவில் கேட்கலாம்.

ஆன்லைனில் இளையராஜாவின் பாடல்கள்தான் இன்று எங்கு பார்த்தாலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்குபவை மிகக் குறைவுதான்.

அந்தக் குறையைப் போக்கும் வகையில், ராஜாவின் ஆரம்ப படங்களிலிருந்து இன்றுவரை உள்ள பாடல்கள் அனைத்தையும், படங்கள் வாரியாக இந்த யு ட்யூப் தளத்தில் கேட்டு ரசிக்கலாம். 

ராஜாவின் இசையை இப்போது வெளியிட்டுவரும் அகி மியூசிக்காரர்கள் இந்த தளத்தை உருவாக்கி, பாடல்களை பதிவேற்றி வருகின்றனர்.

இப்போதைக்கு ஆனந்தகும்மி, ஆண் பாவம், வருஷம் பதினாறு, ஆனந்த ராகம் போன்ற படங்களின் முழுப் பாடல்களையும் இந்தத் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
விருப்பம் · · பகிர்க · இன்று ·
·

21 பிப்ரவரி 2014

தமிழ்'99 முறையில் தட்டச்சு செய்யலாம் வாங்க!.

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.
   கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தமிழ்'99முறை தட்டச்சு பயில கீழே உள்ள இணைய எழுதி என்ற கட்டத்தை ஒரு கிளிக் செய்யவும்.அதில் தட்டச்சு செய்யலாம்.அல்லது ஒவ்வொரு எழுத்தாக கிளிக் செய்து மானிட்டரில் தொகுத்த வார்த்தைகளை காப்பி எடுத்து தேவயான இடத்தில் பேஸ்ட் செய்யலாம்.முயற்சி செய்யுங்கள்.                       

19 பிப்ரவரி 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.


                          தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!

18 பிப்ரவரி 2014

கோழி செய்த விளம்பரம்.

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.
  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
     தரமான பொருளாக இருந்தாலும் எந்த ஒரு பொருளையும் விளம்பரம் செய்தால் மட்டுமே அதன் உற்பத்திக்கு பலனாக விற்பனை ஆகும்.அதற்கு உதாரணமாக இந்த கவிதை ஆங்கிலப்பாடலை மொழி பெயர்த்த (முனைவர்) டாக்டர் அ.விநாயக மூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் பல.

     
                    கோழி செய்த விளம்பரம்.

         கெண்டை மீன் இடுகிறது பத்தாயிரம் முட்டை ! 
        அண்டைவீட்டுக்கோழியோ ஒரேயொரு முட்டை!
        சாதனையைக் கெண்டைமீன் சொல்வதில்லை சற்றும்
        சாவகாசமாயதனைப் புறக்கணித்தோம் முற்றும்.
       ஒற்றை முட்டையின்  பெட்டைக் கோழியோ,தன்
      ஒருகால் உயர்த்தி நெஞ்சை நிமிர்த்திக்
     'கொக் கொக்' என்றே சொல்கிறது - நம்
     கவனமும் முட்டைமேல் செல்கிறது.
    ஆமாம்! விளம்பரத்தாலே பயனுண்டு கண்டீர்!.
                

12 பிப்ரவரி 2014

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?என்பதை இந்த பதிவில் காண்போம்.

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம்.

ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.

விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.

1. புதிய மெசேஜ் பெற - Alt + M
2. பேஸ்புக் சர்ச் - Alt + ?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- Alt + 1
4. உங்கள் புரபைல் பேஜ் - Alt + 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் – Alt + 3
6. மெசேஜ் மொத்தம் - Alt + 4
7. நோட்டிபிகேஷன்ஸ் - Alt + 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் - Alt + 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் – Alt +7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் - Alt + 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் - Alt + 9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் - Alt + 0

இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்...!!

05 பிப்ரவரி 2014

வெண்புள்ளியா?"வெண்புள்ளி" நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகி விடுவார்கள். மேலும் மனதிற்குள் அழுவது, சிலருக்கு கைவந்த கலை. "உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும்". சிகிச்சை முறை:- “காலையில் வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கை பிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கி வரவேண்டும். “நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். பத்தியம்:- "வெள்ளை சர்க்கரையை (White Sugar) எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது". நன்றி:- மது. இராமகிருஷ்ணன், இயற்கை விவசாயி, சந்தோஷ் பார்ம்ஸ், பொள்ளாச்சி - 642 114.

கடல் வழியும்-தமிழரும்.

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                    உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்? காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான். கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும். ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது. .இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர். உதாரணம்: தமிழா-------------மியான்மர். சபா சந்தகன்-----மலேசியா ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா கடாலன்------------ஸ்பெயின் நான்மாடல் குமரி----------பசிபிக் கடல் சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா. இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர். இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர். நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன ( நாவாய்---Navy )

சாலை பாதுகாப்பிற்குக் குரல் கொடுப்போம்


மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
                               கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். ''சாலை பாதுகாப்பிற்கு குரல் கொடுப்போம்'' என்ற தலைப்பில் சாலை போக்குவரத்து அவலநிலை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள மரியாதைக்குரிய  டாக்டர். ஆர். கார்த்திகேயன் ஐயா அவர்களை போற்றுவோம்.ஐயா அவர்களது கட்டுரையை வெளியிட்ட தி ஹிந்து நாளிதழுக்கும் நன்றிகள் பல.
                            இந்தியாவின் பிரதான உயிர்க்கொல்லி சாலைகள் தான். நாடுதோறும் ஒரு நாளைக்கு குறைந்தது 300 பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள். 
                        சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் விபத்து காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.26 லட்சம் பேர். இதன் இழப்பு பொருளாதார ரீதியாக ஒரு லட்சம் கோடி ரூபாய். அதாவது நம் ஜி.டி.பி.யில் 3.2%, இது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை தரும் தகவல்.

                         வழவழன்னு ஆறு வழிச்சாலை வந்ததும், சீறிப்பறக்கும் வெளி நாட்டுக்கார்கள் வந்ததும் வளர்ச்சி வளர்ச்சி என்று கூப்பாடு போடுபவர்கள் யாரும் இந்த தகவல்கள் பற்றி பேசுவதாக இல்லை.
                          மனித உயிர்களின் மதிப்பு இங்கு மிகவும் மலிந்து விட்டது. விபத்துகளில் 75% ஓட்டுநர்களின் கவனக் குறைவினால்தான் ஏற்படுகிறது என்கிறது புள்ளிவிவரம். 
                     அதற்கு பொறுப்பு அவர்கள் அதாவது ''சாலை விபத்துக்கு பொறுப்பு ஓட்டுனர்கள்  மட்டும்தானா?'' என்பதுதான் ஆராய வேண்டிய விஷயம்.
                         நாமக்கல்லில் உள்ள அந்த (அசோக் லேலண்ட் நிறுவனத்தாரின்)  ஓட்டுநர் பயிற்சி நிலையத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்கு சேகரித்த தகவல்கள் பல கவலை அளிப்பவையாக இருந்தன. இந்தியாவில் உற்பத்தியாகும் 10% கன ரக வாகனங்கள் ஓட்டுநர்கள் இல்லாமல் பயன்பாடற்று நிற்கிறதாம். எப்போதும் தட்டுப்பாடுள்ள இந்த வேலைகளுக்கு என்றும் ஆட்கள் தட்டுப்பாடுதான். ஏன்?
                            பல குரல்களின் பதிவுகள் இதோ:

      “டிரைவர்னா இப்பல்லாம் பொண்ணு கொடுக்க மாட்டாங்க சார்!”

            “கிளீனரா ஒரு சில வருஷம் இருந்து, அப்பப்ப ஓட்டி சில வண்டிகளில் இடிச்சிட்டு மோதி அதன் பின்னால டிரைவர் ஆனவங்கதான் இந்த வருமானத்தில தாக்கு பிடிக்க முடியும்...”

              “வளர்ந்த நாடுகள்ல ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்கறது ரொம்பக் கஷ்டம். சில சமயம் 10% தான் தேறுவாங்க. இங்க எப்படின்னு நான் சொல்ல வேண்டாம்!”
                   “ நம்ம சட்டத்தில் எல்லாம் சரியா இருக்கு. ஆனா இங்க எதையும் பின்பற்ற விடறதில்ல!”
                           “தூக்கம், பசி, கோபம், அசதி இப்படி எல்லாம் ஒண்ணு சேரும்போது இயல்பா ஓட்டறது கஷ்டம்!”
               “டிரைவர்க்கு மரியாதை கொடுக்காத வரை இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது!”
                 நம் உயிர்கள் மற்றும் உடமைகள் அனைத்தையும் பாதுகாப்பாக கொண்டு செல்லும் இவர்களை அதாவது ஓட்டுனர்களை  நாம் பாதுகாக்கத் தவறிவிட்டோமோ? 
                            ஒரு டாக்டர் ஒரு சமயம் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறார். ஆனால் ஒரு ஓட்டுநர் ஒரே நேரத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்.         நாம் என்றாவது இவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறோமா?
            முக்கியமாக இந்திய பொருளாதாரமே ஓட்டுனர்களின் கையில்தான் இதை சமூகம் உணர வேண்டும்.அரசு துறைகளும் உணர வேண்டும்.

                     சாலை பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், முதல் உதவி, யோகா, எய்ட்ஸ் விழிப்புணர்வு என அனைத்தையும் இலவசமாகவும் மிகக் குறைந்த கட்டணம் கொண்டும் சொல்லித்தருகிறார்கள். அரசு அங்கீகரிக்கும் சான்றிதழும் கொடுக்கிறார்கள். 
                புது மற்றும் அனுபவம் மிகுந்த ஓட்டுநர்களுக்கு சிமுலேட்டர் எல்லாம் வைத்து உலகத்தரப் பயிற்சி அனுபவம் அளிக்கப்படுகிறது. 
                   இருந்தும் இது பிரபலமாகாததற்கு காரணம் நம் சமூக மதிப்பீடுகள்தான்.
                 வளர்ந்த நாடுகளில் கடின உடல் உழைப்பு கொண்ட வேலைகளுக்கும், வீடு/அலுவல் தாண்டி செல்லும் வெளி வேலைகளுக்கும், விபத்து நடக்கும் வாய்ப்புகள் உள்ள வேலைகளுக்கும் சம்பளமும் அதிகம். சமூக மதிப்பும் அதிகம், 
                   அதே போல இந்த தொழில்களில் நுழைவதற்கும் தேர்வுகள் கடினமானவை. குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு தேர்வும் மறு சான்றிதழும் அவசியம். இதனால் தான் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஓட்டுநர்களுக்கு நல்ல மரியாதை.
                          ஓட்டுநர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தேவை என்று கலந்தாலோசிக்கவும் அவர்கள் பாடத்திட்டத்தில் சில புதிய சமூக உளவியல் பாடங்களை சேர்க்கவும் நாமக்கல் போயிருந்தேன்.
                       ஓட்டுநருக்கான தேவைகள் பல. 
                    அரசியல் ஊர்வலமென்றால் ஒரு அல்லக்கை (அதாவது ஜால்ரா கூட்டம்) பஸ்ஸை நிறுத்தும். 
                     வெளி மாநில வண்டி என்றவுடனேயே திருடனைப் பிடித்துவிட்டதைப் போல ஒரு டிராஃபிக் போலிஸ் “எறங்குடா” என்று ஏக வசனத்தில் அதட்டுவார். 
                     பாதி வழியில் பிரேக் டவுன் என்றால் சரியான உதிரி பாகங்கள் கிடைக்காது. 
                        விலை உயர்ந்த சரக்கை கொண்டு செல்லும்போது ஓட்டுநரைக் கடத்திய, காயப்படுத்திய, கொன்ற சம்பவங்களும் உண்டு.
                (குறிப்பு;-அதிக அளவில் அவமானங்களுக்கும்,இழிநிலைகளுக்கும் ஆளாகியவர்களும் அதிகம்.கொலையானவர்களும் அதிகம்.) 
                       மைலேஜ் கிடைக்காவிட்டால் ஓனர் கத்துவார். லைனில் (வண்டிக்கு) போய்விட்டால் வீட்டில் ஒரு நல்லது கெட்டதற்கு போக முடியாது. 
                       இந்த பின்னணியில்தான் ஒரு ஓட்டுநரின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். (அதாவது சாலையே வாழ்க்கையாகிவிட்டநிலைதான் ஓட்டுனர் பணி)
இதன் விளைவு? ஓட்டுநர்களின் தேசிய உணவாக பரோட்டா ஆகி விட்டது.
                    மதியம் சாப்பிட்டா ராத்திரி வரைக்கும் ஊறிட்டு கிடக்கும் சார். டீ குடிச்சிட்டே ஊர் போய் சேர்ந்துடலாம்.
           தூக்கம் வராமல் இருக்க பான் பராக். 
                    ஓய்வு எடுக்க போக்குவரத்து குறைந்த சாலையில் க்ளீனரை ஓட்டச் சொல்லுதல், 
                 குடும்பத்தை விட்டு பிரிந்து வாரக்கணக்கில் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் சபலத்திற்கு ஆளாகி பாதுகாப்பற்ற உடலுறவு, 
                     வண்டியை விட்டு இறங்கினதும் அசதி மறக்க குடி போதை மற்றும் இதர உடல் கேடான விசயங்கள்.
                இப்படி தவறான வாழ்க்கை முறையில் பலர் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.எல்லோருடைய வாழ்க்கையிலும் துன்பங்கள்தான் இருக்கும்.ஆனால் ஓட்டுனர்களுக்கோ துன்பங்களே வாழ்க்கையாக இருக்கிறது!?!.
                       கார், கம்பெனி வேன் ஓட்டுநர்களின் வாழ்க்கை முறையும் பெரும்பாலும் இது தான். ஓட்டாத நேரத்தில் சீட்டாட்டம், 
      உடற்பயிற்சி இல்லாததால் தொப்பை, 
                     தவறான நட்புகளால் பிரச்சினைகள். 
                     இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் பல நேரங்களில் ஓட்டுநருக்கு சரியான தூக்கம், ஓய்வு, சரியான உடல் நிலை உள்ளதா என்று முதலாளிகள் பார்ப்பதில்லை.
                     (அரசு போக்குவரத்துக்கழகங்களே ஓட்டுனர்கள் உடல் நலத்தில் அக்கறை எடுப்பதில்லை.அதற்கு மாறாக குற்றச்சாட்டுக்களும்,தண்டனைகளும்தான் கொடுக்கப்பட்டு சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.ஆளும் கட்சிக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு).
                         விடுப்பும் கிடைக்காது. மீறி எடுத்தால் சம்பளம் போகும். அதனால் பணியை சீக்கிரம் முடித்து திரும்பும் அவசரத்தில் கவனக்குறைவு ஏற்படுகிறது. 
                 இந்த தொழிலில் பத்து வருஷ சர்வீஸ் பத்து வினாடி தவறில் முடிகிறது.
                      கோபப்படுகையில் ஒவ்வொரு தொழிலாளியும் தன் தொழில் கருவியை தான் ஆயுதமாக பயன்படுத்துகிறான். 
                         அரிவாள் வைத்திருப்பவர் கழுத்தில் போடுவதுபோல, 
                   படித்தவர் மொட்டை கடுதாசி போடுவது போல, 
                         ஓட்டுநரின் ஆயுதம் வாகனம். தன் சுக துக்கம், கோபம், விரக்தி என அனைத்தையும் அவர் தன் வாகனம் ஓட்டுவதன் மூலமே உலகிற்கு வெளிப்படுத்துகிறார்.
                          இது ஓட்டுநருக்கான பிரச்சினை மட்டும் அல்ல. நம் அனைவரின் உயிர் மற்றும் வாழ்க்கைப் பிரச்சினை. 
                      ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் நாம் அனைவரும் தடித்த தோலுடன் சுரணை இல்லாமல், “தெரியும்..வந்தா பாத்துக்கலாம்!” என்று இருக்கிறோம்.
               அரசு சட்டம் போடுவதோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. உரிமம் வழங்கு முன் கட்டாயப் பயிற்சியையும், கடினமான தேர்வு முறைகளையும் அமல்படுத்த வேண்டும். 
                          வாகனம் தயாரிப்பவரின் வியாபாரம் ஓட்டுநர் சார்ந்தது. அதனால் ஓட்டுநர் பயிற்சி, நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய வேண்டும். ஓட்டுநருக்கென்று சிறப்பு சலுகைகள் வேண்டும். 
                   கல்வித்திட்டத்தில் ஓட்டுநர் பயிற்சியைக் கட்டாயமாக்கி முறையாக சொல்லிக் கொடுக்கலாம்.
                           தொழில் முறையில் ஓட்டுநர் ஆகாவிட்டாலும் நாம் அனைவரும் நம் சொந்த வண்டிக்கான ஓட்டுநர்கள் தானே?
                                அந்த ஓட்டுநர் பயிற்சி நிலையத்திற்கு உணவுப் பழக்கம், தியானம், பாலியல் கல்வி, தற்காப்புக் கலை போன்று சுமார் இருபது பயிற்சி வகுப்புகள் பரிந்துரை செய்தேன்.
                           உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். ஆட்டோவோ, பஸ்ஸோ, காரோ, வேனோ பயணம் முடிகையில் ஓட்டுநரைப் பார்த்து சினேகமாக சிரித்து நன்றி சொல்லுங்களேன்!
gemba.karthikeyan@gmail.com
   சமூக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கருதி சிறப்பான கட்டுரையை வெளியிட்ட தி ஹிந்து நாளிதழுக்கும் நம் நன்றியினை செலுத்துவோம்.
                                                             என அன்பன்

பணிநிறைவு பாராட்டுவிழா -2023 இன்றுடன் ஓராண்டு நிறைவு 🙏

                                                                   ஓராண்டு நிறைவுபெற்றது.....                         பணிநிறைவு பாராட்டுவிழா...