அன்பு நண்பர்களே,வணக்கம்.
இந்தப் பதிவில் வங்கி கணக்கு பற்றிய விவரம் காண்போம்.
வங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி?
பயன்கள்
- தங்களுடைய வருமானத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.
- சேமிப்பு தொகைக்கு வட்டியை பெறலாம்.
- மூன்றாம் நபரிடமிருந்து பணத்தை எளிதாக தன் வங்கி கணக்கிற்கு சேர்க்கலாம் (காசோலை, டிராப்ட், ரொக்கம் மற்றும் ஆன்லைன் மூலம்)
- பயன்பாட்டு பில்களை செலுத்தலாம் (LIC பிரிமியம் தொகை, ரெயில் பயணச் சீட்டு பதிவு ஆகியன)
வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவையானவைகள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் (வங்கிகளிலிருந்து பெறலாம்)
- இரண்டு வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- அடையாளச் சான்றுக்கான நகல்
- இருப்புச் சான்றுக்கான நகல்
- ரூபாய் 1000 - க்கான ரொக்கம் (இது வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும்)
- ஒரு உத்திரவாத நபர் (விண்ணப்பத்தில் கையெழுத்திட, அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்)
- கீழே உள்ளவற்றில், ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்று ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
- பாஸ்போர்ட்
- வாக்காளர் அடையாள அட்டை
- அட்டை
- அரசு அடையாள அட்டை
- அங்கீகரிக்கப்பட்ட அலுலவக அடையாள அட்டை
- வாகன ஓட்டுரிமை அட்டை
- தபால் நிலையத்தின் போட்டோ அடையாள அட்டை
- கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை குடியிருப்புச் சான்று ஆவனமாக சமர்ப்பிக்கலாம்.
- கிரெடிட் அட்டையின் வரவு செலவு கணக்கு
- வருமான சீட்டு (விலாசத்துடன்)
- வருமான வரி/சொத்து வரி நிர்ணய ஆவணம்
- மின் இரசீது
- தொலைபேசி இரசீது
- வங்கி கணக்கு விபரம்
- அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்துவரிடம் இருந்து கடிதம்
- அங்கீகரிக்கப்பட்ட பொது ஆணையாளரிடம் இருந்து கடிதம்
- குடும்ப அட்டை
- LPG கேஸ் பில்
வங்கி கணக்கு ஆரம்பித்த பின்னர், கீழ் வரும் ஆவணங்களை நீங்கள் பெறுவீர்கள்
- உங்கள் புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய பாஸ்புத்தகம்.
- ATM மற்றும் டெபிட் அட்டை (குறைந்தது கணக்கு ஆரம்பித்ததில் இருந்து இரண்டு வாரத்தில் கிடைக்கும்)
- காசோலை புத்தகம் (இதுவும் குறைந்தது கணக்கு ஆரம்பித்ததில் இருந்து இரண்டு வாரத்தில் கிடைக்கும்)
வங்கி கணக்கு ஆரம்பிக்ககூடிய வங்கிகளின் பெயர்களை அறிய
Banks and Insurance Companies
Public & Private Sector Banks
Life Insurance Company
General Insurance Company
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக