16 ஏப்ரல் 2015

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளை மேலாளர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். 

            கடந்த 2015ஏப்ரல்19 ஆம் தேதியன்று தாளவாடியில் மருத்துவத்தாவரங்களை பாதுகாப்போம் என உறுதி ஏற்ற தாளவாடி கிளை மேலாளர் அவர்கள்


           22ஏப்ரல் 2015 இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
      
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை களங்கிட நின்றவர்
வாழ்க
  பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு  புதியது
இல்லை மரணத்தை
போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உளாவிய கண்களும்
எங்கே
மகிழ்ந்து குழாவிய கைகளும்
எங்கே
தேசம் உளாவிய கால்களும்
எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும்
இங்கே
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை
வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொள்வோம்
நித்திரை கொள்வது நியதி
என்றாலும் யாத்திரை
என்றும் தொடர்கதையாகும்
கண்ணில் கண்டது காற்றுடன்
போக
மண்ணில் முளைத்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
பார்வைகள் அனைத்தும்
சூரியனில் சேர்க
போனவர் புண்ணியம்
நம்முடன் சேர்க
நீரில் மிதக்கும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்
சேர்க.

            ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

15 ஏப்ரல் 2015

கோடைக்கால திருவிழா நம்ம சத்தியமங்கலத்தில்!..


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 
        கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம்ம சத்தியமங்கலத்திலுள்ள SRNமெட்ரிக் பள்ளியில் (1)குழந்தைகளை பாதுகாப்போம்,
(2)இன்றைய சூழலும்- சமூகத்தின் நிலையும்,
(3)இளைய சமூகமே எங்கே செல்கிறோம் நாம்?,
(4)பிரிகிறதா குடும்ப உறவுகள்?,
(5)குப்பைகள் தானாக உருவாவதில்லை,
(6)சமையல் திருவிழா,
(7)இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 
என வருகிற2015 மே மாதம் முழுவதும் ஆவலுடன் எதிர்பாருங்க,சமூக நலனுக்கான பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள்.அனைவரும் பங்கு பெறுக..முன் பதிவு மிக மிக அவசியம்.
தொடர்புக்கு;

 PARAMESWARAN DRIVER

MOBILE NUMBER;  +91 9585600733

 E MAIL ;  paramesdriver@gmail.com

11 ஏப்ரல் 2015

மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்.ஈரோடு மாவட்டம்.

                                 மூலிகை வளம் பாதுகாப்பு இயக்கம் 
                                                          அல்லது
                      மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம் 
                                               விரைவில் துவக்கம்........

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
   அடுத்த மாதத்தில்  ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி,கேர்மாளம் மலைப்பகுதி,கடம்பூர் மலைப்பகுதி,பர்கூர் மலைப்பகுதிகளை ஒருங்கிணைத்து நம்ம சத்தியமங்கலத்தில்
 மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம் துவக்க உள்ளோம்.
 அதுசமயம்
 (1)வனத்துறை,
(2)சித்த மருத்துவத்துறை, மற்றும் சித்த மருத்துவர்கள்,
(3)கல்வித்துறை,
(4)நாட்டு மருந்தகங்கள்,
(5)நாட்டு வைத்தியர்கள்,
(6)சித்த மருத்துவ வலைதளங்கள் ,
(7) இயற்கை ஆர்வலர்கள் உட்பட
விருப்பமுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து
  (1)நமது உடலமைப்பும் நோய்களும்
(2) நோய்களுக்கான காரணங்கள்,
(3)மருத்துவ தாவரங்களை கண்டறிதல் மற்றும் அறிமுகம் செய்தல்,(4)நாட்டு மருந்துக்கடைகள் அறிமுகம்,
(5)இயற்கை வைத்தியம்,
(6)நாட்டு வைத்தியம், 
(7)உணவே மருந்தாகுதல்,
(8)அறிந்த தாவரங்களின் அறியாத மருத்துவக்குணங்கள்,
(9)சித்த மருத்துவத்தை விரும்பாமைக்கான காரணங்கள்,(10)மருத்துவத்தாவரங்கள் கண்காட்சி,
(11)கிழங்குவகை மற்றும் வேர் வகை மருத்துவத்தன்மை,
(12)பூ வகை மருத்துவத்தன்மை,
(13)பட்டை வகை,
(14)இலை வகை,
(15)கசாயம்,
(16)சமூலம்,
(17)சூரணம்,
(18)எண்ணெய் வகை,
(19)ஊறவைத்தல்,
(20)காயவைத்தல்,
(21)உட்கொள்ளல்,
(22)வெளிப்பூச்சு,
(23)பற்று போடுதல்,
(24)மூலிகைக்குளியல்,என
            பல்வேறு தளங்களில் கருத்தரங்கம்,ஆய்வுகள்,கண்காட்சி நடத்த திட்டமிட்டு வருகிறோம். 
      கடந்த ஆண்டு சித்த மருத்துவம் பற்றிய ஆலோசனை கொடுத்த SRN மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E.,அவர்களுக்கும்,
 மருத்துவத்தாவரங்களை கண்டறிந்து அறிமுகம் செய்வோம் என ஊக்கம் கொடுத்த அரசு சித்த மருத்துவர் திருமிகு. பாலசுப்ரமணியம் -அரசு மருத்துவமனை சித்தா தலைமை மருத்துவர் அவர்களுக்கும்  நன்றி கூறிக்கொள்கிறோம்.
மூலிகைத்தாவரங்கள் பண்ணை அமைக்க இடம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ள SRN மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 மேலும் விவரங்களுக்கு
  அன்பன்
 பரமேஸ்வரன்.C. 
செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.
மாநில அலுவலகம் சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு  9585600733 
 paramesdriver@gmail.com


06 ஏப்ரல் 2015

எலும்புத்தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
எலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்!
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.
இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.
எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.
இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.
எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
ரெசிபி
பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.
ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
டயட்
பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.
அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.
அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.
மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.
ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.
உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

பானகம் தயாரியுங்க..குடியுங்க..

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.வெயில் காலம் ஆதலால் வெப்பம் வாட்டிவதைக்கும்.வெப்பத்தை தணிக்க இதோ பானகம் தாங்களுக்காக.

வெயிலுக்கு ஏற்ற பானகம்
தேவையானவை:
வெல்லம் - 200 கிராம், புளி - 50 கிராம், பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, புதினா இலைகள் - 5, எலுமிச்சைப்
பழம் - 1.

செய்முறை:
வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானம் இது.

டாக்டர் விகடன் டிப்ஸ்...

01 ஏப்ரல் 2015

பெண் குழந்தை திருமணம் செய்யாதீங்க!.


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குழந்தை திருமணமா?
          புத்தகப்பைகளை சுமக்க வேண்டிய வயதில், பிள்ளைச்சுமையை வயிற்றில் ஏற்கும் பரிதாப நிலைக்கு, இன்றைய வளர் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தை திருமணத்தால், பலரின் வாழ்க்கை, பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர். பெண்ணுக்கான திருமண வயது, 18, ஆணுக்கான திருமண வயது, 21 என்பதை, அதிகாரிகள் முழங்கினாலும், அவற்றை காதில் வாங்காமல், கடமை முடிந்தது என, நினைக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தியாவில் நிலவும் சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தை திருமணம். பீகார், உத்திரபிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், சண்டிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், இன்றும் பருவம் வந்த உடனேயே, திருமணத்தை நடத்தி வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தாய்மையை ஏற்கும் வயதில்லாத நிலையில், அதிகப்படியான வயதுடையவரை, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமை, வடமாநிலம் மட்டுமின்றி, தென் மாநிலங்களிலும் அதிகம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில், கல்வியறிவில்லாத கிராமத்தைச் சேர்ந்தோர், குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். இதற்கு உதாரணமாக, இந்தியாவில் ஆண்டுக்கு, 25 ஆயிரம் வரதட்சணை இறப்புகளும் (வெளியே தெரியாதவை தனி), 5,000 கவுரவ கொலைகளும் நடப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப தாய், சேய் மரணத்துக்கும், முக்கிய காரணமாக குழந்தை திருமணம் உள்ளது. இந்தியாவில் சிசு மரணம், ஒரு லட்சம் மகப்பேறில், 301, தமிழகத்தில் ஒரு லட்சம் மகப்பேறில், 111 என்றளவில் உள்ளது. 20 முதல், 24 வயதில் திருமணம் புரிவோருடன் ஒப்பிடுகையில், மகப்பேறு மரணம், 15 முதல், 19 வயதுக்குள் ஐந்து மடங்காக உள்ளது. 

 குழந்தை திருமணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, வறுமை, போதிய கல்வி அறிவில்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக கருதுவது, இடம் பெயர்ந்து வாழும் நிலை, சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்துவது, வரதட்சணைக் கொடுமை, குறைந்து வரும் பாலின சதவீதம், பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, விழிப்புணர்வு இல்லாதது, சிறுமிகள், இளைஞர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமை உள்ளிட்டவையாகும். இவ்வகை திருமணங்களால், பெண்ணுக்கு கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடையும், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். குடும்பத்தை வழிநடத்த முடியாமல், குழந்தைகள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலைக்கு ஆளாகிவிடுவர். அவர்களதுகுழந்தைகள் அநாதைகளாக சாலையில் திரியும் நிலையை உருவாக்கும். தற்போதைய நிலையில், பெண் பிறப்பு தடுக்கப்படுவதால், ஆண், பெண் எண்ணிக்கை வேறுபாடு அதிகம் உள்ளது. திருமண வயதுடைய ஆண்களுக்கு, பெண்கள் கிடைக்காத சூழலும் உள்ளது. இளம் வயது திருமணத்தை தவிர்க்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க, பெண் குழந்தைகளை மேல்படிப்புக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் வயது திருமண பாதிப்புகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் சமபங்கு அளித்தல், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு, மரியாதை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவியரிடத்தில் இத்தகவல்களை தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்தால், தங்கள் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., பஞ்சாயத்து தலைவர், போலீஸ், சமூக நல அலுவலர், மாஜிஸ்திரேட், 

குழந்தைகள் நல உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம், புகார் தெரிவிக்கலாம். இளைஞர்கள் சமூக சேவையாக கருதி, கிராமப்புறங்களில், கல்வியறிவற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். யார், யாருக்கு காப்பு...: குழந்தை திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாப்பிள்ளை, திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர், முன்னின்று நடத்தும் சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள், புரோக்கர்கள், சமையலர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும், குழந்தை திருமண தடைச்சட்டம், 2006ன்படி குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமினில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அத்திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.

இந்திய திருமணச் சட்டம் ஒரு பார்வை: கடந்த,1891ம் ஆண்டு பெண்ணுக்கு, குறைந்தபட்ச திருமண வயது, 12 என ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியது. மரபுக்கு எதிரானது என மக்கள் எதிர்த்தனர். 1929ம் ஆண்டு, பெண்ணுக்கு ,15 வயது, ஆணுக்கு, 18 வயது என்ற நிலை வந்தது. ஆனால், அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 1948ல், இந்தியாவில் பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்ற சட்டம் வந்தது. 1955ல் இந்து திருமணச் சட்டம் மற்றும் மனவிலக்கு(விவகாரத்து) சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. பலதார மணம் சட்டத்துக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டது. 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இச்சட்டங்கள் இருந்தபோதும், 50 சதவீதத்துக்கு மேல், 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

- தின மலர்  சிறப்பு நிருபர் அவர்களுக்கு நன்றிங்க.. -


பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - PROTECT GIRLS ....


மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.கோபி சார் ஆட்சியர் திருமிகு.கிருஷ்ணன் உண்ணி அவர்கள் ஈரோடு மாவட்ட அளவில் நடைபெறும் பெண் குழந்தைகளை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப்பயணத்தினை   2015 மார்ச் 30 ஆம் தேதி அன்று காலை   கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்.
    கோபி பேருந்து நிலையம் அருகில் 30.03.2015அன்று நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ...

             தொடர்ந்து சத்தியமங்கலத்தில்31.03.2015அன்று காலை பேருந்து நிலையத்தில்  பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 
     சத்தியமங்கலம்  பேருந்து நிலையத்தில் கலைக்குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்......

 குழந்தைகள் ..........
       பதினெட்டு வயது பூர்த்தியாகும் வரை அனைவரும் குழந்தைகள்தாங்க!..
 குழந்தைகளுக்கு தேவை படிப்பு,விளையாட்டு,ஓய்வு மட்டும்தாங்க..வேலையல்ல என்பதை நினைவில் வையுங்க!!.
     குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது சட்டப்படி குற்றம் ஆதலால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறைத்தண்டனைதாங்க.....


   உங்க பகுதியில் குழந்தைகளுக்கு பிரச்சினையா?
          குழந்தைகளுக்கு பிரச்சினை எதுவாக இருப்பினும் உடனே தொடர்பு கொள்ள...
(1)மாவட்ட ஆட்சித்தலைவர்,ஈரோடு-0424 2260207
(2)குழந்தைகள் நலக்குழு(CWC) ஈரோடு - 9443354884
(3)மாவட்ட சமூக நலத்துறை (DSW)ஈரோடு - 0424 2261405
(4)மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU) ஈரோடு - 04242275010
(5)தேசிய குழந்தை தொழிலாளர் முறை 
                       ஒழிப்புத்திட்டம் (NCLP) - ஈரோடு - 04242266736
 (6)குழந்தைகளுக்கான தனிப்பிரிவு CHILD LINE - 1098
(7)ஒருங்கிணைந்த குழந்தைகள்
              வளர்ச்சித்திட்டம்  (ICDS)ஈரோடு - 0424 2273607
(8)மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,ஈரோடு-04242261100
(9) அனைத்து பகுதி காவல் நிலையங்கள் - 
கோபி- ஹைதர் காலம் திரைப்படப்பாடல்கள் பதிவகம்-

 மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.தங்களை  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்....எழுத்துப்பிழைகளை பொருட்படுத்தாமல் தகவல்களை...