Tamil Nadu Common Entrance Test TANCET
அன்பு நண்பர்களே,வணக்கம்.
இந்தப்பதிவில் ''டான்செட்'' நுழைவுத் தேர்வு பற்றி காண்போம்.
'இளங்கலை அறிவியலின் (U.G.) பல்வேறு பாடப்பிரிவுகளில் இறுதி ஆண்டில் நுழைந்திருக்கும் உங்களது முதுநிலை (P.G.) கல்விக் கனவு... M.C.A., அல்லது M.B.A.,ஆகியவை என்றால் .
தரமான TOP கல்லூரிகளில், பெற்றோருக்கு அதிகம் செலவு வைக்காத வகையில் அவற்றைப் படிக்க, 'டான்செட்’ (Tancet -Tamil Nadu Common Entrance Test) நுழைவுத்தேர்வு எழுதுவதுதான் சிறந்த வழி
M.C.A.,M.B.A., |
ஆகிய படிப்புகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும்தங்கள் மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
அந்த வகையில் தமிழக இளநிலை பட்டதாரிகளுக்கு மெரிட் அடிப்படையில் முன்னுரிமை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு 'TANCET’ நுழைவுத் தேர்வை நடத்துகிறது.
இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்தும் (M.C.A.-M.B.A. இவற்றோடு பொறியியல் முதுநிலை மேற்படிப்பான M.E.நுழைவுத்தேர்வும் இதில் அடங்கும்). இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
M.C.A.,M.B.A.,ஆகிய படிப்புகளில் சேர பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டு U.G. டிகிரி முடித்திருப்பது அடிப்படை கல்வித்தகுதி. அல்லது பத்தாம் வகுப்புக்குப் பின் மூன்றாண்டுகள் DIPLOMA மற்றும் மூன்றாண்டு U.G.-டிகிரி (10+ 3+ 3) முடித்திருப்பது அவசியம்
M.B.A. என்றால், ஏதாவது ஒரு U.G.டிகிரியே போதுமானது. M.C.A.-வுக்கு +2 அல்லது டிகிரியில் கணிதப் பாடம் அவசியம்.
நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படுவதால்,TANCET- தேர்வில் போட்டியும் சற்று கடுமையாகவே இருக்கும்.
சில அடிப்படை உத்திகள் மற்றும் முறையான பயிற்சியைப் பெற்றிருந்தால் இந்த போட்டியில் வெற்றிபெற முடியும். இளநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே... வழக்கமான படிப்போடு தினசரி ஒரு மணி நேரம் இந்த நுழைவுத் தேர்வுக்கென ஒதுக்கினால் போதும். அல்லது கல்லூரி முடித்ததுமே முழு நேரப் பயிற்சியாக 100 முதல் 120 மணி நேரங்களை ஒதுக்கினால் போதும்.
TANCET பயிற்சிக்கு நிறுவனங்களைப் பொறுத்து சுமார் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பயிற்சிக் கட்டணம் வேறுபடுகிறது.
இந்தப் படிப்புகளுக்குத் தகுதி தரும் படிப்புகளில் தற்போது இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டரில் படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான மையங்கள்:
# Anna University Chennai
# Govt College of Technology, Coimbatore
# Thiagarajar College of Engg, Madurai
# Govt College of Engg, Salem
# Bishop Heber College, Trichy
# Govt. College of Engg, Tirunelveli
# Thanthai Periyar Govt. Institute of Technology, Vellore
இதற்கான விண்ணப்பத்தை அண்ணா
பல்கலைக்கழகத்திடமிருந்தோ அல்லது மேலே கூறப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்தோ மட்டுமே பெற முடியும்.
ஆன்லைனிலும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இத் தேர்வு தொடர்பான முழு விபரங்களை
www.annauniv.edu/zancez2008
இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
# Anna University Chennai
# Govt College of Technology, Coimbatore
# Thiagarajar College of Engg, Madurai
# Govt College of Engg, Salem
# Bishop Heber College, Trichy
# Govt. College of Engg, Tirunelveli
# Thanthai Periyar Govt. Institute of Technology, Vellore
இதற்கான விண்ணப்பத்தை அண்ணா
பல்கலைக்கழகத்திடமிருந்தோ அல்லது மேலே கூறப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்தோ மட்டுமே பெற முடியும்.
ஆன்லைனிலும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இத் தேர்வு தொடர்பான முழு விபரங்களை
www.annauniv.edu/zancez2008
இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
இத்தேர்விற்கு விண்ணப்பித்தோரில் தகுதியானவர்களுக்கு, "ஹால் டிக்கெட்'கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
ஹால் டிக்கெட்டை தொலைத்தவர்கள், "The Director, Entrance Examinations, Anna University Chennai'' என்ற முகவரிக்கு, "டிடி' எடுத்து, தங்களுக்கு விருப்பமான விசாரணை மையத்தில், மாற்று ஹால் டிக்கெட்டை பெறலாம்.
ஒவ்வொரு வருடமும் மே மூன்றாவது அல்லது இறுதி வாரத்தில் சனிக்கிழமை காலையில் M.B.A-வுக்கான நுழைவுத்தேர்வும்
மதியம் M.C.A-வுக்கான நுழைவுத்தேர்வும் தனித்தனியாக நடைபெறும் (மறுநாள் ஞாயிறு காலையில் M.E. படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும்).
தேர்வுக்கான கால அவகாசம்... 2 மணி நேரம். நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையளிப்பது, ஒவ்வொரு வினாவுக்கும் எத்தனை மணித்துளிகள் ஒதுக்குவது போன்றவற்றில் திட்டமிடுதலும் பயிற்சியும் அவசியம்.
கடந்த ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் நூற்றுக்கு 40 மதிப்பெண்கள் எடுத்தாலே முன்னுரிமை வரிசையில் இடம்பெற போதுமானதாக இருக்கிறது.
'TANCET’டில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு மூலம் விரும்பும் கல்லூரிச் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்கும்.
தேர்வு முடிந்த பிறகு, ஒதுக்கீடு கிடைத்த கல்லூரிகளில் சேர்வதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவி, சுயநிதி என கல்லூரி எதுவானாலும் அதற்கென அரசு ஒதுக்கியிருக்கும் கல்விக் கட்டணம் மட்டுமே கட்டினால் போதுமானது!''paramesdriver.blogspot.com-sathy & thalavadi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக