28 செப்டம்பர் 2011

தண்ணீர் ஏன் பருகுகிறோம்...?

எனக்கு  தண்ணீர்  தேவை  என்று  உடல்  கேட்பதுதான்   தாகம்.  தீராத  தாகம்   ஏற்படுவது  கோடையில்தான்!  எவ்வளவு  தண்ணீர்  குடித்தாலும்  தாகம் தீராது.

தாகம்  ஏற்படும்போது  தண்ணீர்  குடிக்க  தாமதமானால்  உடல்  சோர்ந்து போகிறது. உடலில்  இருந்து  கழிவு  வெளியேற... அதிகமாக  தண்ணீர்  குடிக்க   வேண்டும்.  தாகம்   ஏற்பட்டாலும்   சிலர்  தண்ணீர்  குடிப்பதில்லை.  இதனால்  உடம்பில்  தண்ணீர்  தன்மை  குறையும்.  இதன்  காரணமாக  சிறுநீர்  கற்கள்  தோன்றி  உடலில்  பல்வேறு  நோய்களை  உருவாக்கும்.

பிறந்த  குழந்தை   அழுதவுடன்...அம்மா  பால்  புகட்டுவார்.  பிறந்து  ஒரு வருடம்  ஆகும்வரை.....அம்மா  பால்  மூலம்  குழந்தையின்   தண்ணீர்   தேவை  ஈடுக்கட்டப்பட்டு   விடுகிறது.

அடுத்த கட்டத்தில் உணவை   ஜீரணமாக்கவும்,  உறுப்பு  வளர்ச்சிக்கும்  தண்ணீர்  தேவை.  இதனால்  பால்  தவிர்த்து  மற்ற  உணவுகளை  சாப்பிடும்போது,  குழந்தைகளுக்கு  தண்ணீர்  கொடுக்க  வேண்டும்.

அறிவு,  மனம், உடல்  என  அனைத்திற்கும் அடிப்படை  மூளை  தான்.  இதில்  90  சதவீதம்  தண்ணீர்  தொடர்புடையதாக  உள்ளது.  தண்ணீர்  இல்லாவிட்டால் மூளை  சுதந்திரமாக  இயங்காது.  உடலில்  உள்ள  மற்ற  உறுப்புகளுக்கு  எவ்வளவு  தண்ணீர்  தேவை என்பதை முடிவு  செய்வது  மூளைதான்.

மூளையின்  கட்டமைப்புக்கு   தண்ணீர்  பற்றாக்குறை   ஏற்படும்போது  மூளை  மற்ற  உறுப்புகளில்  இருந்து  தண்ணீரை  இழுக்கும்.  அப்போது  திசுக்கள்,  தசைகள்,  நாடி  நரம்புகள்  சோர்வடைந்து  விடுகின்றன.

60  கிலோ  எடையுள்ள  ஒருவர்  தினமும்   3 1/2 லிட்டர்  தண்ணீர்  குடிக்க வேண்டும். நம்  நாட்டில்  சராசரியாக  தினமும்  2 1/2 லிட்டர்  தண்ணீர்  குடிக்கின்றோம். தண்ணீர்  மற்ற  பானங்கள்  மூலம்  1000 -1200  மில்லி கிடைக்கும்.  தற்போதைய  கணக்குப்படி ஒருநாளைக்கு  நமக்கு  1  லிட்டர்  தண்ணீர்  பற்றாக்குறை  ஏற்படுகிறது.

நவீன  கண்டுப்பிடிப்பின்படி,  திசுக்களின்  ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்   திசுக்கள்  இறந்துவிடுவதால்  புற்றுநோய்  வருவதாக  அறிந்துள்ளனர்.  புற்றுநோய்  பாதிப்பு  வராமல்  இருக்க  அதிகமாக  தண்ணீர்  குடிக்க வேண்டும்.  தண்ணீரை  அதிகமாக  குடிப்பதால்  திசுக்களின்  ஆக்ஸிஜன் அதிகரிக்கிறது.  இதனால்  புற்றுநோய்  பாதிப்புகள்  ஏற்படுவதில்லை.

அதேபோல்,  மாத்திரை  சாப்பிடும்போது  தண்ணீர்  அதிகமாக குடிக்க வேண்டும். ஒரு மாத்திரைக்கு  குறைந்த  பட்சம்  125  மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு  குடிக்காவிட்டால் மாத்திரை இரைப்பை பகுதியில் எங்காவது  ஒட்டிக்கொள்ளும்.  மாத்திரையோடு குறைந்த அளவு தண்ணீர் பருகினால், அல்சர், நெஞ்செரிச்சல்  ஆகியப் பிரச்சனைகள் தோன்றும். மாத்திரை சாப்பிட்டவுடன் படுக்கவும்  கூடாது.

பருகும் தண்ணீர்  எப்போதும் மிக சுத்தமாக இருக்கவேண்டும். அதேபோல் தண்ணீரை சூடுப்படுத்தி சுகாதாரமானதாக குடிக்கும் பழக்கமும் இருக்கவேண்டும்.

நம்முடைய  தோலினை மென்மையாகவும்,  மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கு உடலில் உள்ள தண்ணீரே  உதவுகிறது.  பிறந்த குழந்தைகள் உடல் மிகவும் மென்மையாக இருக்கும்.  அதற்கு காரணமும் தண்ணீர்தான்.  பிறந்த குழந்தையின் உடலில் சுமார்  75  முதல் 80  சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருக்கும்.

முதுமையை எட்டும்போது,  உடலில் உள்ள தண்ணீர் அளவு 50  சதவீதமாக  குறைந்து விடுகிறது.  அதனால் தான் முதுமையில் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

சிலருக்கு இளமையிலும் தோலில் மென்மை குறைந்து சுருக்கம் காணப்படலாம்.  அப்படி பட்டவர்கள் தினமும் குறைந்தது 8  டம்ளர்  தண்ணீராவது  குடித்து வரவேண்டும்.  அப்போது தான் தோலில் சுருக்கங்கள்  ஏற்படுவதை  தள்ளிப்போட  முடியும்.

தண்ணீர் என்பது சாதாரணமானது இல்லை. நமது உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.  அதை  புரிந்துக்கொள்ள வேண்டும்.  தண்ணீரை  நிறைய  அருந்த  வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...