28 செப்டம்பர் 2011

உடல் ஒரு அதிசயம்

மனிதனின்  உடல்,  அதிசயங்கள்  நிறைந்தது.  ஒரு  வருடத்தில்  நமது  கல்லீரல்  23   பால்  லாரிகளில்  நிரப்பக்கூடிய   அளவுக்கு   இரத்தத்தை  வடிகட்டுகிறது.  உடலில்  கனமான  உறுப்பு   மூளைதான். இதன்  எடை  சுமார்  ஒன்றேகால்  கிலோ  ஆகும்.  மனித  உடலில் 60  சதவீதம் நீர்  தான்  உள்ளது.  இது  சுமார்  50  லிட்டர்  இருக்கும்.

இதயம்  24  மணி  நேரத்தில்  14   ஆயிரம்   லிட்டர்   இரத்தத்தை   1.68  கோடிமைல்  நீள  இரத்தக்  குழாகளின்  வழியே  பரவச்  செய்கிறது.  இது  உண்டாக்கும்  சக்தி  80  ஆயிரம்  கிலோ  எடையுள்ள  பொருளை  பூமியில்   இருந்து  1 அடி  உயரம்  தூக்க  போதுமானது. இதயம்  ஒரு  நாளில்  லட்சம்  தடவை  சுருங்கி  விரிகிறது.

மூளையின்  அடிப்பகுதியில்  இருக்கும்  பிட்யூட்டரி சுரப்பிதான்  உடல் வளர்ச்சியையும்  பாலின  தன்மையையும்  கட்டுப்படுத்துகிறது.  ஒரு  சிறு  பட்டாணி  அளவே  உள்ள  இது  உடலின்  பல்வேறு  பகுதிகளுடன்  50  ஆயிரம்  நரம்புகளால்   தொடர்பு    கொண்டுள்ளது.    ஒரு  மனிதன்    25   வயதில்  முழுவளர்ச்சி  பெற்று  விடுகிறான். 40  வயதிற்கு  மேல்  வளர்ச்சி  நின்று  விடுவது  மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். இது   குறுத் தெலும்புகள் காய்ந்து  போவதால்  தான்  நேர்கிறது.

நாம்  பகலை விட இரவில் தான் அதிக அளவில் வளர்கிறோம். குழந்தைகள்  கோடைக்காலத்தில் மழைக் காலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். ஒருவரது வாழ்நாளில்  இதயம் சுமார் 200 கோடி  தடவை  துடிக்கிறது. அப்போது 50 கோடி லிட்டர்  ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது உறங்கும்போது கூட மணிக்கு  340  லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.

வளர்ச்சியடைந்த ஆண் ஓய்வாக இருக்கும் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இது 200 வரை உயரும். நாடி துடிப்பு அன்பது இதயத்தின் துடிப்பையே குறிக்கும். மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20  சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17  சதுர அடி இருக்கும்.

ஒவ்வொரு  இரவிலும் தூங்கும்  போது உடலசுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சியடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கிவிடும்.உட்காரும் போதும்  நிற்கும் போதும் முதுகில் உள்ள குறுத்தெலும்புகள்  அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது.  தூங்கும்போது அழுத்தம்  இல்லாததால் நீண்டு வளர்கிறது. சராசரியாக  உடலில் 50  லட்சம் ரோமங்கள் இருக்கும்.  கருத்த முடி உடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உதடு,  உள்ளங்கை,  உள்ளங்கால்,  விரல்களின்  உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே  ரோமம் வளர்வதில்லை.

குழந்தை  பிறக்கும் போது 300  எலும்புகள் இருக்கும். இவற்றுள்  94  எலும்புகள் இளகி  மற்றவற்றுடன்  இணைந்து வளர்ந்த பருவத்தில்  206  ஆகிறது.  எடையை  தாங்குவதில்  எலும்புகள்  கருங்கல்லைவிட  உறுதியானவை.  ஒரு  தீப்பெட்டி  அளவுள்ள  எலும்பு  9  டன் எடையை தாங்கும்.  அதாவது  கருங்கல்லை  போல நான்கு மடங்கு அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...