22 செப்டம்பர் 2011

தங்கம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஒரு நிறுவனத்தின் வட்ட மேலதிகாரி.
தங்கம் எவ்வளவு விலை கூடினாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிறதை குறைச்சுக்க மாட்டாங்களே?! வரும் காலங்களில், ''வாடி என் தங்கம்!'' என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ....?!
அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன். கடந்த 2009ம் ஆண்டு கணக்கின்படி இந்திய ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாகும். (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோவாகும்.) இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் பொதுமக்களிடமும், கோவில்களிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்தால் அது அமெரிகாவின் தங்க இருப்பைவிட அதிகமிருக்க வாய்ப்புண்டு. யார் அறிவார் அந்த ரகசியத்தை!
நம் நாட்டில் தங்கத்திற்கான தேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ) தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.]
தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது.
இந்த ஒரு வாரக்காலத்தில் தங்கத்தின் போக்கு வரலாறு காணத அளவில் தாறுமாறாக விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி தாறுமாறாக விலை ஏறுவதின் காரணம் என்ன? என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம்.
எஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தகுதிக்கான ஏஏஏ குறியீட்டை ஏஏ+ ஆக குறைத்தது. அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் மீது பாய்ந்துள்ளது.
டாலரை நம்பிக்கொண்டிருந்த நாடுகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கத்தை நம்புகிறார்கள். இதில் சீனா தங்கம் சேமிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிரம் காட்டிவருகிறது, தற்போது சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு 1051.10 டன்னாக இருக்கிறது.
எத்தனை இடருகள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதைப் பற்றி அது கவலைப்பட போவதில்லை; காரணம் உலகில் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பதே காரணம். இறுதி ஆயுதமாக அமெரிக்கா நாட்டை காப்பாற்ற தங்கத்தில் கை வைக்கலாம் அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன்.
இரண்டாவது இடத்தில் ஜெர்மனியும் 3406.8 டன், மூன்றாவது இடத்தில் இத்தாலி 3005.3 டன், நான்காவது இடத்தில் பிரான்ஸ் 2435.4 டன் தங்கம் வைத்திருக்கிறது.
கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கத்தை நம் பாரத இந்தியா வாங்கியது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாக உயர்ந்து நம்இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்த வரை தனது அன்னிய பரிமாற்ற இருப்பை, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
முதலாவதாக தனது அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் அளவை கூட்டுதல், டாலர் தவிர யுரோ, ஏன் போன்ற பிற நாடு செலாவணிகளையும் தேவையான அளவிற்கு பரந்துபட்ட அளவில் வைத்திருத்தல் போன்றவைகளை செய்து தனது அந்நிய செலாவணியின் மதிப்பை பாதுகாத்து கொள்கிறது
அமெரிக்கா டாலரை உலக கரன்சியாக அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது. முதல்முறையாக அமரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் குறைந்ததால் டாலரின் மதிப்பும் குறைந்து விட்டது வெகுவிரைவில் உலக கரன்சியிலிருந்து டாலர் நீக்கப்படலாம் அதன் முதல் குரலை சீனாவும் அதற்கு ஆதரவாக பிலிப்பைனும் கொடுத்திருக்கிறது.
இந்த இறுக்கமான சூழலில் கரன்சியிலிருந்து தங்கத்திற்கு நாடுகள் மட்டுமல்ல நாட்டின் கடைநிலை மக்களும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பனது தங்கமே எனக் கருதி தங்கத்தின் மீது செலுத்த தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக தங்கம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒருநாளில் 50 டாலரிலிருந்து 80 டாலர் வரை விலை ஏறிக்கொண்டிருக்கிறது.
உலக பங்குசந்தைகள் சரிந்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கம் மட்டும் ராக்கெட் வேகத்தில் மேலே சென்றுக் கொண்டிருக்கிறது. இது 2013 வரையில் செல்லும் என்பது பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.
இந்திய பங்குசந்தையில் கோல்டு ஈடிஎப் என்ற பெயரில் ஆன்லைன் தங்கம் வர்த்தகமாகிறது. டிமேட் அக்கோண்ட் வைத்திருப்பவர்கள் தங்கத்தை தங்கமாக அல்ல அதன் ஒருகிராம் விலையில் வாங்கி டிமேட் அக்கவுண்டில் வைத்துக்கொள்ளலாம்.
அவ்வபோது தங்கத்தின் விலையில் சிறு சிறு வீழ்ச்சியும் நிகழும் அந்த தருணங்களில் முதலீடு செய்ய எண்ணக்கூடியவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.... நம் நாட்டில் தங்கத்திற்கான
தேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.
ஒரு பவுன் ரூ.36 ஆயிரம்? கல்யாண கனவுகளைக் காப்பாற்றுவது எப்படி?
இருபத்தி நான்கு கேரட் தங்கம், ஒரு பவுன் 20,648 ரூபாயாக உயர்ந்திருக்கிறது....
தலைப்புச் செய்திகளில் தொடங்கி தெரு பெண்களின் குழாயடிச் சந்திப்பு வரை இப்போது பேசப்படுகிற விஷயம்... இதுவரை காணாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு பற்றித்தான்.
நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே தோடு, செயின், மூக்குத்தி, மோதிரம்... என்பது போன்ற நகைகள்தான். ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்கவும் உதவும் என்பதால், இந்த மக்களின் முழு முதலீடும் தங்கமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், வயிற்றில் அடுத்தடுத்து இடியை இறக்கிக் கொண்டே இருக்கும் தங்க விலை உயர்வு செய்தி... மக்களை மிகுதியாகவே கலங்கிப் போகச் செய்திருக்கிறது!
எந்த ஒரு விஷயத்துக்கும் முடிவு என்று ஒன்று கணிக்கப்படும். ஆனால், கணிப்புக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது தங்கத்தின் விலை. கண்டிப்பா ஒருநாள் சடார்னு தங்கத்தோட விலை குறையும் பாருங்க... அப்போ தங்கத்துக்கு மதிப்பே இல்லாமப் போகப்போகுது’ என்பது மாதிரியான நம்பிக்கை’ பேச்சுக்கள், தங்கம் விலையேறும் சமயத்தில் எல்லாம் எழுகிறது. ஆனால், அதற்கெல்லாம் சான்ஸே இல்லை என்று சொல்லிச் சிரிக்கிறது தங்கம்!
நிலைமை இப்படியேதான் போகுமா... இதன் எதிர்காலம் எப்படி? என்பது பற்றி கோயம்புத்தூரில் இருக்கும் ஏஞ்ஜல் புரோக்கிங் லிமிடெட்’ நிறுவனத்தின் வட்ட மேலதிகாரியான சிவகுமாரிடம் பேசினோம்.
தங்கம் விலை உயர்ந்திருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு பவுன் தங்கத்தின் விலை இருபதாயிரத்தைத் தொடும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எதிர்பார்த்தோம். அது இன்று நடந்திருக்கிறது என்று அதிரடியாக ஆரம்பித்தவர்,
அத்தியாவசியப் பொருட்களில் இருந்து பள்ளிக் கட்டணம் வரை அனைத்தும் முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்காக அதையெல்லாம் நாம் வாங்காமல் இருப்பதில்லை. தங்கமும் அப்படித்தான். விலை உயர்கிறது என்பதற்காக யாரும் வாங்காமல் இருக்கப் போவதில்லை. வாங்கும் அளவு வேண்டுமானால் குறையலாம்.
உலகளவில் தங்கச் சுரங்கங்கள் சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. தங்கச் சுரங்கங்களில் வேலை பார்ப்பது மிகக்கடினம் மற்றும் ஆபத்தான வேலையும்கூட. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சம்பளம் குறைவு என்பதால், சம்பள உயர்வு கேட்டு அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் அந்நாட்டு மக்கள். இதனால் தங்கம் எடுக்க முடியாமல் போய், கையிருப்புத் தங்கத்தை அதிகம் பேருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது... விலையும் அதிகரிக்கிறது.
இதுபோன்ற காரணங்களால்தான், தங்கத்தை கண்ணில் காட்டாமலே நடத்தப்படும் ஆன் லைன் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ அறிமுகமாகியிருக்கிறது. கூடிய விரைவில் இது எல்லா வங்கிகளிலும் வந்துவிடும். இன்னொரு பக்கம், உனக்குப் போட்டியாக நானும் வருகிறேன்’ என்று துள்ளிக் கொண்டிருக்கும் வெள்ளியின் விலை ஏற்றத்தால், தங்கத்துக்கு இணையாக வெள்ளியில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது என்ற சிவகுமார், அடுத்துச் சொன்ன தகவல்... அதிர்ச்சி ரகம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்று ஆணித்தரமாகச் சொன்னார்.
தங்கம் விலை ஏறிக் கொண்டிருக்கிற இந்நிலையில், தங்க நகைக் கடைகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய சென்னை, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் மேனேஜிங் டைரக்டர் அனந்த பத்மநாபனிடம் பேசினோம். இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை ஏறிக்கொண்டு இருந்தாலும், முன்பைவிட அதிகமாக மக்கள் வாங்கத் துவங்கிஇருக்கிறார்கள் என்பதும் உண்மை. தங்கம் என்பது மதிப்புமிக்க விஷயம் என்பதால் மக்களிடம் எப்போதும் அதற்கு மதிப்பு உண்டு. விலை ஏற ஏற... எந்தெந்த வழிகளில் எல்லாம் தங்கத்தை வாங்கலாம் என்று மிடில் கிளாஸ் மக்கள் யோசிக்க துவங்கிவிட்டார்கள். அதற்கெனவே தங்க நகைச் சீட்டு போன்ற விஷயங்கள் இருப்பதால், விலை ஏறும்போதும் சிறுகச் சிறுக சேமித்து அதற்கேற்ப தங்கம் வாங்கி விடுகிறார்கள் என்று தன்னுடைய பார்வையைச் சொன்னார்.
பொதுவாக அப்பர் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் சமூகத்து மக்களுக்கு, தங்கம் விலை ஏறினாலும் அதற்கேற்ப தங்கள் வருமானமும் ஏறுவதால், அங்கே பாதிப்பு தெரிவதில்லை. ஆனால்... மிடில் கிளாஸ் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ் மக்களின் நிலை?
கோவையைச் சேர்ந்த வளர்மதி பேசியது... அந்த மக்களின் பிரதிநிதித்துவமாகவே தோன்றியது நமக்கு. அவர் சொன்னது... என் கணவர் டிரைவரா இருக்கார். நான் அக்கவுன்டன்ட்டா இருக்கேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. தங்கம் விலை கிடுகிடு உயர்வு’னு நியூஸ்ல கேட்கற அன்னிக்கு ராத்திரி எல்லாம் என் தூக்கம் தொலைஞ்சு போயிடுதுங்க. பசங்க ஸ்கூல் ஃபீஸ், காலேஸ் பீஸ், வீட்டு செலவுனு எல்லாத்தையும் சமாளிச்சு நிமிர்ந்தா... விலைவாசி உயர்வு, தங்கம் விலை உயர்வுனு அப்பப்போ குண்டைத் தூக்கி போடுறாங்க. ஒவ்வொரு தடவையும் சிறுகச் சிறுக ஒரு பத்தாயிரம் ரூபா அளவுக்கு சேர்த்து தங்கம் வாங்கலாம்னு நினைச்சுட்டு இருப்பேன். சேர்த்து முடிக்கறதுக்குள்ள கூடுதலா ஆயிரம், ரெண்டாயிரம் விலை கூடியிருக்கும். இப்போ நான் சேமிக்கற பணத்துல கிராம்லதான் தங்கம் வாங்க முடியும் போல என்றவர்,
தங்கம் எவ்வளவு விலை கூடினாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிறதை குறைச்சுக்க மாட்டாங்களே?! என்று வருந்தினார் மிடில் கிளாஸ் அம்மாவாக.
வரும் காலங்களில், வாடி என் தங்கம்!’ என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...