30 ஏப்ரல் 2020

kidney stone-சிறுநீரகக் கல்&பித்த கல்

                                          சிறுநீரகக் கல் மற்றும் பித்தப்பை கல்
                                                Kidney Stone And Gallbladder Stone
                                                          -----------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 இந்தப் பதிவில் நமக்கு அதிக தொந்தரவை தருகின்ற... சிறுநீரகத்திலும்,பித்தப் பையிலும்  கல்  உருவாவதற்கு காரணங்களும்,தீர்வுகளும் பார்ப்போம்.
                 நமது உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றிநாம் அறியவில்லை என்பதே உண்மை..இவற்றில் சிறுநீரகக்கல் அதிகமாக நம்மை பாதிக்கிறது.அடுத்ததாக பித்தப் பையில் தோன்றும் கல் நம்மை பாதிக்கிறது.

                கல்லடைப்பை நீக்க நம்பிக்கை,பொறுமை,கடைப்பிடிக்கும் தன்மை மனதில் உறுதியாக இருத்தல் அவசியம்....

(1)சிறுநீரகக் கல் உருவாக காரணங்களும்,தீர்வுகளும்....
 சிறுநீரகங்கள் (kidneys) 
                நமது உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். தன்னுள் பாய்ந்த ரத்தத்திலிருந்து சத்துப்பொருட்களையும்,கழிவுகளையும் வடித்தல், மீண்டும் உறிஞ்சுதல், சுரத்தல், கழிவகற்றல்ஆகிய நான்கு பணிகளைச் செய்தாலும் இதன் முக்கிய பணி  யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்றுவது ஆகும்.
                மேலும் அமில-காரங்களை சமன் செய்வதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 கிட்னி ஸ்டோன் எனப்படும்
சிறுநீரகக்கல் உருவாகுவதற்கான  காரணங்கள்...
       
               தண்ணீர் சரிவர குடிக்காதது,ஊறுகாய்,அப்பளம்,மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகள்,நொறுக்குத்தீனிகள்,அதிக காரமுள்ள உணவுகள்,அசைவ உணவுகளை காரமாக சாப்பிடுவது,ஒரே நேரத்தில் அதிகமான காரத்தை சேர்ப்பது போன்றவைகளும் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணங்களாகின்றன.(konguthendral.blogspot.com)

 தீர்வு......
            ரணகள்ளி இலை துளிர் இலையில் ஆரம்பித்து தினமும் ஒரு இலை வீதம் பறித்து நான்குமிளகு,இந்துப்பு சேர்த்து  ஏழுநாட்களுக்கு அடுத்தடுத்து கீழே உள்ள இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வாங்க.எப்பேர்பட்ட கல்லும் கரைந்துவிடும்.
                  வாழைத்தண்டு,பெருநெருஞ்சில்,சுரைக்காய்,வெண்பூசணி,கேரட்சாறு,பீட்ரூட்சாறு,எலுமிச்சைச் சாறு,நெல்லிச்சாறு,இவைகளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையாவது அதிகமாக குடித்துவாங்க.துளசிச்சாறு 100மில்லி காலையிலும்,மாலையிலும் குடித்து வாங்க.சப்போட்டா விதை 10 எடுத்து அரைத்து தண்ணீரில் கரைத்து அருந்திவாங்க.ஆனால் சப்போட்டா பழம் சாப்பிடக்கூடாது..
(konguthendral.blogspot.com)
 .கவனியுங்க.உப்பு,சர்க்கரை,ஐஸ் சேர்க்கக்கூடாது.


(2)பித்தப் பை கல் உருவாக காரணங்களும் தீர்வும்...
                        பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். கரும்பச்சை நிறத்தில் காணப்படும் இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவை ஜீரணிப்பதற்குத்  தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவைப்பட்டபோது குடலுக்குள் செலுத்துகிறது(konguthendral.blogspot.com).அதாவது...
   தினமும் ஒரு லிட்டரிலிருந்து ஒன்றரை லிட்டர் வரை பித்தநீர் சுரக்கும் கல்லீரலானது நமது உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகவும் பெரியது ஆகும்.கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது முன்சிறுகுடலுக்கு பித்தநீர்க்குழாய்கள் வழியாக வருகிறது.கூடுதலாக   பித்தப்பையிலும் சென்று தேங்குகிறது.
பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.
அதிகப்படியான கொழுப்புச்சத்துக்களை செரிப்பதற்கு தன்னை சுருக்கி பித்தநீரை முன்சிறுகுடலுக்கு அனுப்பி உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.

 படத்தின் பாகங்கள் (1) கல்லீரல், (2) பித்தநீர் குழாய், (3)பித்தப் பை

பித்தப்பை கல்...
ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது..
        பித்தப் பையில் தோன்றும் கற்கள் மூன்று வகைப்படும்.அவை             (1)பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும்.(konguthendral.blogspot.com)
(2) கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.
(3) கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.
கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.
 பித்தப்பை கல் கரைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும் ஆதலால் பொறுமை வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்க.இனிப்பு,காரம்,அசைவம் சாப்பிடவேண்டாம்.சீரகம் போட்டு கொதித்த தண்ணீரை அருந்திவாங்க.கேரட் மற்றும் பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் இவைகளை சம அளவு எடுத்து மைய அரைத்த விழுதினை காலையிலும்,மாலையிலும் சாப்பிட்டு வாங்க.
தினமும் உணவுக்கு முன் காலையில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் மாலையில் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாங்க..சாப்பிடுங்க.
(konguthendral.blogspot.com)
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு...
   கூடுதலாக விபரங்களை சேர்க்கும்வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.
தாங்கள் அறிந்த தகவல்களையும் கருத்துப்பெட்டியில் பதிவிட்டு உதவுங்க.

பொறுப்பாகாமை அறிவிப்பு...
                         அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேதம் அல்லது அல்லோபதி மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.

அன்புடன்
செ.பரமேஸ்வரன்,
 (konguthendral.blogspot.com)

குமார் பணிநிறைவு பாராட்டுவிழா-2020

              M. குமார் பணி நிறைவு பாராட்டுவிழா நிகழ்வு-30-4-2020
                                       -------------------------------------

26 ஏப்ரல் 2020

PILES மூலநோய்

                                                               மூலநோய்

                                                                  ------------
 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனக்கு எற்பட்ட மூலநோய்அனுபவத்தை இங்கு பகிரலாம் என்ற எண்ணத்தில்......... (konguthendral.blogspot.com)

 ஆமாங்க!.........................
                        கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவுக்கு பணிந்து வீட்டிலேயே 23-3-2020 அன்று முதல் அடைபட்டுக்கிடந்தபோது  ஊர் சுற்றிய உடம்பு அல்லவா! அதனால் ஓரிடத்தில் அடங்க மறுக்கவே? இந்த ஓய்வுநாட்களை பயனுள்ளவகையில் கழிக்கலாம! என்ற எண்ணத்தில்
முதலில் திருக்குறள் பெருமை அறிவோம் என்ற தொடரை எழுதி வந்தேன்.
தொடர்ந்து சமையல் கலை பற்றிய தொடரை எழுதி வந்தேன்.
அதன் பிறகு மூலநோய் தாக்குதலால் கணினி முன் உட்காரக்கூட முடியவில்லைங்க.....
 
 22-4-2020அன்று ஆசனவாயில் ஏற்பட்ட வீக்கத்தினால்  உட்காரக்கூட முடியாமல் வலியால் அவதிப்பட்டபோது......

          மற்றவர்களைப்போன்றே  கூச்சப்பட்டு  வெளியில் சொல்லாமல் தாக்குப்பிடிக்க முயற்சித்தும் தோல்வியைத் தழுவியதால் வெட்கமில்லாமல் வெளியில் சொன்னபோதுதாங்க  ........
     அதுதாங்க மூலவியாதி என்றார்கள். (konguthendral.blogspot.com)

              மூலவியாதியில் 21 வகை இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள்.
தற்போது நவமூலம் அதாவது 9மூலநோய்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
அவைகளை வெளி மூலம்,உள்மூலம்,ரத்த மூலம் என வகைப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள்.

 சரிங்க!..
அதுவல்ல  நமக்கு முக்கியம்?
மூலநோய் யாருக்கெல்லாம் வரும்?
மூலநோய் வருவதற்கு காரணங்கள் என்ன?
மூலநோய் வந்துவிட்டால் வேதனை எப்படி இருக்கும்?
மூல நோய் குணமடைய என்ன செய்ய வேண்டும்?
என்ற காரணங்களையும் தீர்வுகளையும்  இங்கு காண்போம்!


மூலநோய் என்பது.. (konguthendral.blogspot.com)
                ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் முளைப்பு, புண், ரத்தப்போக்கு, சதை போன்று வளர்ச்சி, பலூன் போல வீக்கம், உட்புறமாக திட்டுதிட்டாக கட்டிகள் என பல்வேறு வடிவங்களில் உருவாகின்றன.
ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வருகின்றன.
தற்சமயங்களில் இளைய சமூகத்திற்கும் மூலநோய் வருவது வேதனைக்குரியது.நம்பிக்கை இருந்தால் எனது அனுபவத்தைக்கூறியுள்ள சிகிச்சைகளை மேற்கொள்ளுங்க...சந்தேகமிருந்தால் அரசு சித்த மருத்துவமனைக்கு செல்லுங்க.வெட்கப்படாமல் சொல்லுங்க..ஆயுர்வேதம் மருத்துவமும்,ஓமியோபதி மருத்துவமும்  நல்ல பலனளிக்கிறது....                     மூலநோய் வருவதற்கு காரணமே மலச்சிக்கல் மற்றும் உடல் சூடுதாங்க.
                      மலச்சிக்கல் வருவதற்கு காரணம் நமது  சமீபத்திய உணவுமுறைகள்.
பருவகாலத்திற்கேற்ற உணவுகளை எடுக்கத் தவறுவதும்,சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும்,காரசாரமான உணவுகளை உட்கொள்வதும்,மசாலாப்பொருட்களை சாப்பிடுவதும்,விரைவு உணவுகளை சாப்பிடுவதும், கடைகளில் வணிக நோக்கத்தில் கலக்கப்படும் நிறமூட்டிகள்,சுவையூட்டிகள்,கெடாமலிருக்க பயன்படுத்தும் ரசாயனப்பொருட்கள் இவைகளை உண்பதாலும் மூலநோய் வருகிறது.

                 இயற்கை உணவுகளையும்,நார்ச்சத்து மிகுந்த உணவுகளையும்,தானியவகை உணவுகளையும்,சிறுதானிய உணவுகளையும்,காய்கறி பழங்களையும் அதிக அளவில் உண்ணவேண்டும். மோர்,எலுமிச்சை சாறு,நன்னாரி சர்பத்,இளநீர் கம்மஞ்சோறு, பழைய சோறு இவைகள் சின்னவெங்காயத்துடன் தினமும் சாப்பிட்டுவரவேண்டும்.நெல்லிக்காய்,மாங்காய்,கொய்யா,பப்பாளி,முள்ளங்கி,பாகற்காய்,கேரட்,பீட்ரூட்,வெண்பூசணி,சுரைக்காய்.இவைகளை சாப்பிட்டு வரவும். (konguthendral.blogspot.com)

(கவனியுங்க;...கத்தரிக்காய்,முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரை போன்ற வெப்பத்தை தரும் உணவுகளை  கோடைகாலங்களில் சேர்க்கவேண்டாம்...SEASON  என்னும் பருவகாலங்களில் கோடைகாலமானது வெயில் வாட்டும் வெப்ப நாட்களோடு வருடத்தின் காலாண்டாக இருக்கிறது.அதாவது ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில்தாங்க மூலநோய் நம்மை பெரும்பாலும் தாக்குகிறது..)

மோட்டார் வாகன ஓட்டுனர்கள், வங்கி போன்ற அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் காசாளர்கள்,கணினி இயக்குநர்கள்,எழுத்தர்கள்,தையல்கலைஞர்கள், நின்றுகொண்டே வேலை செய்யும் லேத் டெக்னீசியன்கள் போன்ற பணிகளில் ஈடுபடுவோர்களுக்குத்தாங்க அதிகளவில் பாதிப்பை எற்படுத்துகிறது.
ஆதலால் உடல் உஷ்ணமடையாமல் இருக்க
பருத்திநூலாலான துண்டு போட்டு உட்காருங்க.
            கோடைகாலங்களில் பருத்தி ஆடைகளை அதுவும் இளக்கமாக அணியுங்க.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்களாவது எழுந்து நடைபயிற்சி செய்து ஆசனவாய்க்கு காற்றோட்டம் கொடுங்க. (konguthendral.blogspot.com)
     பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் அதிக எடை கூடி மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் ஏற்படுகிறது.
சிலருக்கு பரம்பரைநோயாகவும் வருகிறது.

மூலநோய் குணமாக...

                

    துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து புழு,பூச்சி இல்லாமல் நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்க.சின்னவெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்க.நல்லெண்ணெய்,அல்லது விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம்,வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தையும் துத்திகீரையையும் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து, ஆறு நிமிடங்கள்  வேகவையுங்க (konguthendral.blogspot.com).பிறகு எடுத்து ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றிலும்,மாலையிலும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிடுங்க.எப்பேற்பட்ட மூலநோயும் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடும்.

                    துத்தி இலையை சின்னவெங்காயத்துடன் சேர்த்து பச்சையாகவும் காலை வெறும்வயிற்றில் ஒருவாரம் சாப்பிடலாம்.

                   துத்தி இலையை பறித்து வந்து மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து  ஒர டம்ளர் (200மில்லி) தேங்காய்ப்பாலில் அல்லது மோரில் சேர்த்தும் காலையில்வெறும் வயிற்றில் ஒருவாரம்  குடித்து வரலாம். (konguthendral.blogspot.com)

                    சோற்றுக்கற்றாழையின் ஒரு மடலை எடுத்து தோலை சீவி உள்ளிருக்கும் ஜெல் எனப்படும் ஊண் பகுதியை  காலை வெறும் வயிற்றிலும்,மாலையிலும்  ஒரு வாரம் சாப்பிட்டுவந்தால் மூலநோய் குணமாகும்.

                கருணைக்கிழங்கு மூலநோய்க்கு அற்புத மருந்தாகும்.கருணைக்கிழங்கை நறுக்கி சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

                துத்தி இலையையும்,நாயுருவி இலையையும் சேர்த்து மைபோல அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்து கோவணம் கட்டி வந்தால் வெளிமூலம் சுருங்கும். (konguthendral.blogspot.com)

                சோற்றுக்கற்றாழை ஒரு மடலை எடுத்து இரண்டாக பிளந்து  தீயில் லேசாக வாட்டி இளஞ்சூட்டில் மலவாயில் வெளிமூல வீக்கத்தின்மேல்  கட்டி வரலாம்.
                  தொட்டால்சுருங்கி இலையை ஒரு கைப்பிடி எடுத்து அம்மியில் மைபோல அரைத்து ஆசனவாயில் கட்ட மூலநோய் வீக்கம் குறையும்.
 (konguthendral.blogspot.com)
                தினமும் இரவில் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட்டுவரலாம்.
வெள்ளை முள்ளங்கியும் அற்புத மருந்தாகும்.வெண்பூசணிச்சாறு அருந்திவர மூலநோய் குணமாகும்.தினமும் சுண்டைக்காய் சாப்பிட்டுவாங்க.தினமும் காலையில் 4 பச்சைவெண்டைக்காய் சாப்பிட்டு வாங்க.கனிந்த செவ்வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வாங்க..

                      
கேரட் சாறு,எலுமிச்சை சாறு,நன்னாரி சர்பத்,இளநீர், பீட்ரூட் சாறு,கரும்புச் சாறு,அருகம்புல்சாறு இவைகளை பருகிவந்தால் உடல் உஷ்ணத்தைக்குறைத்து மூலநோய் வராமல் தடுக்கும். (konguthendral.blogspot.com)


 2020 மார்ச் 16ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறியப்பட்டு மார்ச் 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தியது ஒருபுறமிருந்தாலும் நம்மை நாமே பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டபடியால் சமூக விலகலைக் கடைப்பிடித்து தனியாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது தாங்க... உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியதாயிற்று.அதன் விபரத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கலாமே என்ற எண்ணத்தினால் மூலநோய் பற்றிய பதிவு இட்டுள்ளேன்.இனி கல்லீரல்,மண்ணீரல்,கணையம்,பித்தப்பை,சிறுநீரகம் இருதயம்,நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாப்பது பற்றியும் இதிலிருந்து தொடராக  பதிவிடவுள்ளேன்.நான் பெரிய அறிவியலாசான் இல்லையென்றாலும் இணையங்களில் தேடித்தேடி தகவல்களை நோட்டில் எழுதி குவித்து பின்னர் தாங்கள் விரும்பி வாசித்து ஏற்குமளவு கருத்து மாறாமல்  சுருக்கி பதிவிடுகிறேன்.தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களையும் எனக்கு அனுப்புங்க.இதே பக்கத்தில் கீழே உள்ள கருத்துரை வழங்கும் பெட்டியில்  பின்னூட்டமிடுங்க.

பொறுப்பாகாமை அறிவிப்பு...
                         அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேத மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.
என
  சமூக நலன் கருதி..
 அன்பன் செ.பரமேஸ்வரன்,
  கொங்குத்தென்றல் வலைப்பக்கம்,
 சத்தியமங்கலம்..ஈரோடு மாவட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------

15 ஏப்ரல் 2020

நீங்களும் சமைக்கலாம் - பகுதி 16

                                                  தொக்கு வகைகள்
                                                     ------------------------
                              
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)           தொக்கு வகைகள்  எளிதான சமையல் வகையாகும். தொக்கு வகைகளை பக்குவமாக செய்தால் ஒருவாரம் முதல் ஒரு வருடம் வரை  பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.
(https://konguthendral.blogspot.com)
தொக்கு வகைகளை ...
                     (1) தக்காளித் தொக்கு, (2)பிரண்டைத் தொக்கு, (3)புதினாத் தொக்கு, (4)வெங்காயத் தொக்கு, (5)மிளகு கறிவேப்பிலைத் தொக்கு, (6)சுண்டைக்காய்த் தொக்கு, (7)பாகற்காய்த் தொக்கு, (8)கத்தரிக்காய்த் தொக்கு, (9)வாழைப்பூதொக்கு, (10)நெல்லிக்காய்த் தொக்கு, (11)அருநெல்லிக்காய்த் தொக்கு, (12)பச்சை சுண்டைக்காய்த் தொக்கு, (13)இஞ்சித் தொக்கு, (14)சேப்பங்கிழங்குத் தொக்கு, (15)கீரைத் தொக்கு, (16)பச்சைமிளகாய்த் தொக்கு, (17)கருணைக்கிழங்கு தொக்கு, (18)புளிப்பு மாங்காய்த் தொக்கு, (19)வெந்தயத் தொக்கு, (20)நீர்ச்சத்து இல்லாத காய்கறிகள் தொக்கு, (21)கொத்துமல்லித்த்தழை தொக்கு, (22)வத்தக்குழம்புத் தொக்கு, (23)பேரீச்சம்பழத்தொக்கு என பலவகைகளாக செய்து பயன்படுத்துங்க...
  (https://konguthendral.blogspot.com)
உதாரணமாக...

(1)தக்காளி தொக்கு
 தேவையானவை: 
  தக்காளி – ஒரு கிலோ,
வற மிளகாய் – 15,
பூண்டு – 4கட்டை,
எலுமிச்சம்பழம் – 3 ,
மஞ்சள் தூள் – சிறிதளவு, 
பெருங்காயத்தூள் -சிறிதளவு,
 நல்லெண்ணெய் –தேவைக்கேற்ப,
கடுகு
சீரகப்பொடி – ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
(https://konguthendral.blogspot.com)
செய்முறை: 
தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வையுங்க. வெந்ததும், மேல் தோலை எடுத்துவிட்டு, ஆற வைத்து மசித்துக் கொள்ளுங்க.
பூண்டு உரித்து வையுங்க. 
எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துகொள்ளுங்க.
 மிளகாயில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்க.
இந்த விழுதுடன், சீரகப்பொடி, மஞ்சள்தூள், மசித்த தக்காளி சேர்த்துக் கலந்துகொள்ளுங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்குங்க.
 பூண்டு சிறிது வதங்கியதும் தக்காளி கலவையை ஊற்றி, கெட்டியாகும் வரை கொதிக்க வையுங்க.
 எலுமிச்சைச் சாறு ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவைத்து பயன்படுத்துங்க.
ஒரு மாதம் வரை  கெடாது..

(2)காய்கறித் தொக்கு
தேவையானவை:
 நீர் இல்லாத காய்கறிகள் (உ-ம்: முருங்கை, அவரை, உருளைக்கிழங்கு, கேரட்) – அரை கிலோ,
வற மிளகாய் – 15,
புளி – எலுமிச்சை அளவு,
 நல்லெண்ணெய்-30மில்லி,
கடுகு - 1ஸ்பூன்,
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்,
 வெந்தயப்பொடி கால் ஸ்பூன்,
பெருங்காயத்தூள் சிறிதளவு ,
உப்பு – தேவையான அளவு.
(https://konguthendral.blogspot.com)
செய்முறை:
காய்கறிகளை அளவான தண்ணீர் சேர்த்து  வேக வைத்து  தண்ணீரை வடித்துக்கொள்ளுங்க.
 வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வற மிளகாயை லேசாக வறுத்து எடுங்க,
வறுத்த வறமிளகாயுடன்   வேக வைத்த காய்கறிகள், புளி, உப்பு சேர்த்து  விழுதாக அரைத்து எடுங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபிறகு கடுகு,   வெந்தயப் பொடி,மஞ்சள் தூள்,பெருங்காயப் பொடி போட்டு தாளியுங்க.
 இதனுடன்  அரைத்து வைத்து உள்ள காய்கறி விழுதைச் சேர்த்து சுருள வதக்குங்க. அதாவது எண்ணெய் பிரிந்து மிதங்கும் வரை வதக்குங்க.
சாதம் மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கு ஏற்றது.
ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

(3)பிரண்டைத் தொக்கு
தேவையானவை:
பிரண்டை - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 30 மில்லி
சீரகம் - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - 1இணுக்கு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
புளி -கொட்டைப் பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
  (https://konguthendral.blogspot.com)
செய்முறை:
பிரண்டையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்க.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடானவுடன்  சீரகம், வறமிளகாய் -3, பூண்டு,  கறிவேப்பிலை பாதியளவு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, புளி, நறுக்கிய பிரண்டை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்க.
 இனி  மிக்சியில் போட்டு  விழுதாக அரைத்து எடுங்க.
பிறகு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு  போட்டு பொரிந்தவுடன் மீதமுள்ள வறமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்குங்க.
இதில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்குங்க.
 சாதம்,இட்லி,தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கும் பயன்படுத்தலாம்.

(4)சேனைக்கிழங்கு தொக்கு
தேவையானவை:
  சேனைக்கிழங்கு –கால் கிலோ,
 புளி -எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3டேபிள் ஸ்பூன்,
கடுகு -சிறிதளவு,
உளுந்து - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
 உப்பு – தேவையான அளவு.
  (https://konguthendral.blogspot.com)
செய்முறை:
    (சேனைக்கிழங்கு நறுக்குவதற்கு முன்னதாக கைகளில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்க.அரிப்பு எடுக்காது)
      சேனைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி எடுங்க.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சேனைக்கிழங்கைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்க.
 வாணலியில்  எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பிறகு, வதக்கிய சேனைக்கிழங்கை போட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், உப்பு, புளி எல்லாவற்றையும் போட்டு வதக்குங்க.
 ஆற வைத்து மிக்சியில் விழுதாக அரைத்து எடுங்க.
சிறிது எண்ணெயை லேசாகக் காய்ச்சி, அரைத்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கு விழுதின் மீது பரவலாக ஊற்றி பக்குவப்படுத்துங்க..
சாதம்,இட்லி,தோசை வகைகளுக்கு சுவையாக இருக்கும்.
 ஒரு வாரம் வரை கெடாமல் பயன்படுத்தலாம்.
(https://konguthendral.blogspot.com)
                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

மனதை கொள்ளையடிக்குதே!.....

                                      உறவின் வலிமை!...

        மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்!
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை!! என்று......
           ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல்…

நீங்களும் சமைக்கலாம் - பகுதி 15

                              பச்சடி வகைகள் - நம்ம ஊரு சமையல்
                                                 -----------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)


தயிர்ப் பச்சடி,வெள்ளரி பச்சடி,வெண்டை பச்சடி, வெங்காய பச்சடி, பீட்ரூட் பச்சடி, கேரட் பச்சடி,உருளைக் கிழங்கு பச்சடி, என விருப்பத்திற்கேற்ப பச்சடி வகைகளை விரைவாகவும்,எளிதாகவும் செய்யலாம்... (https://konguthendral.blogspot.com)
 இனி...விளக்கமாக...

1. தயிர்ப் பச்சடி
தேவையான பொருட்கள்..
(1)புளிப்பில்லாத தயிர் - 1 கப் (200மில்லி)
(2)பச்சை மிளகாய் - 5
(3)வறமிளகாய் -2
(4)பெரிய (அ) சின்ன வெங்காயம் - 100கிராம் (ஒரு கைப்பிடி)
(5)தேங்காய்த் துருவல் - ஒரு கப் (கால் மூடி)
(6)பெருங்காயம் சிறிது,
(7)கடுகு,
(8)கறிவேப்பிலை,
(9)உப்பு,
(10)மல்லித்தழை
செய்முறை..
பச்சைமிளகாய்,தேங்காய்,உப்பு இவைகளை விழுதாக அரைத்து தயிருடன் கலக்குங்க.எண்ணெயில் கடுகு, வெங்காயம்,வறமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தை கரைத்து சேர்த்து தயிருடன் கலங்குங்க..தயிர்ப் பச்சடி தயார்.
இந்த தயிர்ப் பச்சடியில் 
(1)வெள்ளரிக்காய் தோல் சீவி விதைகள் அகற்றி பொடியாக நறுக்கி அல்லது துருவி 2சிட்டிகை உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு பிழிந்து எடுத்து   சேர்த்து உபயோகியுங்க..
அல்லது
(2)வெங்காயம் 200கிராம் அல்லது (3) காய்ந்த வேப்பம் பூ ஒரு கைப்பிடி அல்லது (4)குடமிளகாய் 2 அல்லது (5)தக்காளி 2 அல்லது (6)வாழைத்தண்டு அரை சாண்,அல்லது (7)கேரட் 200கிராம், இவைகளில் ஒன்றை எண்ணெயில் வறுத்தெடுத்து தயிர்ப் பச்சடியில் சேர்க்கலாம்.அல்லது(8)வெண்டைக்காய் 200கிராம் எடுத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து தயிர்ப் பச்சடியில் சேர்க்கலாம்.


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம். (https://konguthendral.blogspot.com)

நீங்களும் சமைக்கலாம் பகுதி -14

                                                     பொரியல் வகைகள் - 
                                                        ----------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)


காய்கறிகளை பொரியலாக செய்வது மிகவும் எளிதானது.

   கத்தரிக்காய்&உருளைக் கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு பொரியல்,கத்தரிக்காய்பொரியல்,பாகற்காய்பொரியல்,வெண்டைக்காய்பொரியல், பீர்க்கங்காய்பொரியல்,புடலங்காய் பொரியல்,வாழைப்பூபொரியல்,வாழைத் தண்டுபொரியல்,கீரை வகைகள் பொரியல் செய்யலாம்..
(https://konguthendral.blogspot.com)

கத்தரிக்காய் உருளைக் கிழங்கு பொரியல்..
தேவையான பொருட்கள்..
(1)கத்தரிக்காய் -4
(2)உருளைக் கிழங்கு - 1
(3)தக்காளி - 1
(4)மஞ்சள்தூள் - அரை டீ ஸ்பூன்
(5)சாம்பார்த் தூள் - அரை டீ ஸ்பூன்
(6)தேங்காய்த் துருவல் - 1 ஸ்பூன்
(7)சின்ன வெங்காயம் - 10
(8)வறமிளகாய் - 2
(9)கறிவேப்பிலை - 1இணுக்கு
(10)எண்ணெய் - 1 ஸ்பூன்
(11)கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
 (12)உளுந்து - 1 ஸ்பூன்
(13) உப்பு - தேவையான அளவு.
செய்முறை;
கத்தரிக்காய்,உருளைக் கிழங்கு இவைகளை நறுக்கி தண்ணீரில் போடுங்க.
,சின்னவெங்காயம்,தக்காளி,மிளகாய் இவைகள் நறுக்குங்க.
வாணலியில் எண்ணெய்  சூடானதும் கடுகு ,கடலைப் பருப்பு,உளுந்து போடுங்க.
 பொரிந்தவுடன் நறுக்கிய சின்னவெங்காயம்,தக்காளி,வறமிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்குங்க..
        பிறகு கத்தரிக்காய் துண்டுகளையும்,உருளைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு மஞ்சள் தூளையும்,சாம்பார்த் தூளையும்,தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்குங்க.
  பிறகு இவைகளை  மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி அளவான தீயில் 10நிமிடம் வேக வையுங்க. பின்னர் தேங்காய்த் துருவலை போட்டு வதக்கி கிரேவியாக இருக்கும்போது இறக்கி வையுங்க...
இதே போன்று உருளைக் கிழங்கு,கத்தரிக்காய்,பாகற்காய்,வெண்டைக்காய், பீர்க்கங்காய்,புடலங்காய் பொரியல் செய்யலாம்.
 (https://konguthendral.blogspot.com)

2.வாழைக்காய் பொரியல்..

 தேவையான பொருட்கள்.
(1)வாழைக்காய் -2
(2)துவரம் பருப்பு -50கிராம்
(3)வறமிளகாய் - 4 அல்லது பச்சை மிளகாய்
(4)சின்ன வெங்காயம் - 5
(5)தேங்காய்த் துருவல் -
(6)மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
(7)சீரகம்,
(8)எண்ணெய்,
(9)கடுகு,
(10)உளுந்து,
(11)கடலைப் பருப்பு,
(12)கறிவேப்பிலை,
(13)உப்பு

செய்முறை;
 முதலில்  துவரம் பருப்பை தண்ணீரில் அலசி  10 நிமிடம் ஊறவைத்து வேகவையுங்க.
.பிறகு வாழைக்காயை தோல் சீவி இரண்டாக வெட்டுங்க. குறுக்காகவும்,நீளமாகவும்,தகடாகவும் வெட்டி ,வெட்டி தண்ணீரில் போடுங்க.(இல்லையேல் கறுத்துவிடும்).
தேங்காய்,சீரகம்,வெங்காயத்தை அரைத்து வைத்துக்கொள்ளுங்க.
  வாணலியில் போட்டு மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து அளவான தண்ணீரில் வேகவையுங்க.
 அரைத்த தேங்காயை வாழைக்காயுடன்  சேர்த்து  நன்றாக பிசைந்துகொள்ளுங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து,மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய் போட்டு தாளித்து  பிசைந்த வாழைக்காயை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறி வதக்கி இதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை  தண்ணீர் பிழிந்து போட்டு  கறிவேப்பிலை,மல்லித்தழை சேர்த்து இறக்கி வையுங்க....
இதேபோன்று
இதே போன்று வாழைப்பூ,வாழைத் தண்டு,கீரை வகைகள் பொரியல் செய்யலாம்...                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம். (https://konguthendral.blogspot.com)


14 ஏப்ரல் 2020

நீங்களும் சமைக்கலாம் - பகுதி 13

                                      துவையல் & சட்னி வகைகள்
                                                      ---------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver) துவையல் மற்றும் சட்னி வகைகளை இந்தப் பதிவில்  அறிந்துகொள்வோம்...
                கெட்டியாக அரைத்தால் துவையல் அதுவே தண்ணீர் அதிகமாகிவிட்டால் சட்னி இவ்வளவுதாங்க வித்தியாசம்.


1.பிரண்டைத் துவையல்...
  தேவையானவை...
  (1) இளம்பிரண்டை - ஒரு கைப்பிடி அல்லது பத்து கொழுந்து,
  (2) நல்லெண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்,
  (3) சின்ன வெங்காயம் -10,
  (4) காய்ந்த மிளகாய் - 5,
  (5) புளி - நெல்லிக்காய் அளவு,
  (6) கடலைப் பருப்பு- 1ஸ்பூன்,
  (7) உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்,
  (8) கறிவேப்பிலை - 2இணுக்கு,
  (9) கடுகு - சிறிது,
(10) பெருங்காயம் -சிறிது,
(11) உப்பு ,
(12) பனங்கருப்பட்டி அல்லது வெல்லம் - சிறிதளவு (விரும்பினால்)

குறிப்பு;
             பிரண்டை அரிப்பை தடுக்க கைகளில் நல்லெண்ணெய் சிறிது தடவிய பிறகு நறுக்குங்க..

செய்முறை....
                          முதலில் பிரண்டையை கழுவி சுத்தம்செய்து  சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்க..
                   இரண்டாவதாக வாணலியை அடுப்பில் வைத்து  நல்லெண்ணெய் விட்டு  சூடானபிறகு  கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வறமிளகாய், வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றை  கருகவிடாமல் தாளித்து கூடவே பிரண்டையையும் போட்டு நன்றாக  வதக்குங்க... இதனுடன் புளி,உப்பு,மல்லித்தூள்,மல்லித்தழை,வெல்லம்,ஆகியவற்றை சேர்த்து  துவையலாக அரைத்துக் கொள்ளுங்க.(https://konguthendral.blogspot.com)

மேற்கண்ட பொருட்களில் பிரண்டைக்குப் பதிலாக
(2)கொத்துமல்லித்தழை துவையல்,
(3)புதினா துவையல்,
 (4)கறிவேப்பிலை துவையல்,
(5)இஞ்சி துவையல்,
(6)தேங்காய் துவையல்,
(6)பொட்டுக் கடலை துவையல்,
(7)சிறு பருப்பு துவையல்,
 (8)துவரம் பருப்பு துவையல்,
 (9)கடலைப் பருப்பு துவையல்,
 (10)தனியா (கொத்துமல்லி விதை) துவையல்  ..என முக்கிய பொருளை மட்டும் மாற்றி துவையல் வகைகளை செய்யலாம்.
          (https://konguthendral.blogspot.com)


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம். (https://konguthendral.blogspot.com)

நீங்களும் சமைக்கலாம் - பகுதி 12

                                           நம்ம ஊரு சமையல் - ரச வகைகள்
                                                                ---------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)


  ஒவ்வொரு சமையலுக்கும் அதன் முக்கியப் பொருட்களின் பெயர்களை  வைத்தே பெயரிட்டு அழைக்கிறோம்.
                     அந்த வரிசையில் இந்தப் பதிவில் ரச வகைகள் பற்றி அறிவோம்.

(1)புளி ரசம், (2)பருப்பு ரசம், (3)தக்காளி ரசம், (4)எலுமிச்சை ரசம், (5)மிளகு ரசம், (6)சீரக ரசம், (7)தூதுவளை ரசம், என நமது விருப்பத்திற்கேற்ப ரச வகைகள் செய்து சுவைக்கலாம்.... (https://konguthendral.blogspot.com)
ரசப்பொடி ;
 வறமிளகாய்,மல்லித்தூள்,மிளகு,சீரகம்,கடலைப் பருப்பு,துவரம் பருப்பு வறுத்து அரைத்தால் ரசப் பொடி தயார்.
(https://konguthendral.blogspot.com)
ரச வகைகளுக்கு உளுந்து போட்டு தாளிக்க வேண்டாம்..
1.பருப்பு ரசம்..
தேவையான பொருட்கள்,
(1)துவரம் பருப்பு - 100கிராம்,
(2)புளி - எலுமிச்சை அளவு,
(3)மிளகாய் வற்றல் -5,
(4) மிளகு - 1 ஸ்பூன்,
(5)தனியா(மல்லி விதை) - 1 ஸ்பூன்,
(6)சீரகம் - 3 ஸ்பூன்,
(7)பூண்டு - 10 பல்,
(8)பெருங்காயம் - சிறிது,
(9)எண்ணெய்
(10)கடுகு,
(11)கறிவேப்பிலை,
(12)மல்லித்தழை,
(13)உப்பு,

செய்முறை.... (https://konguthendral.blogspot.com)
முதலில் துவரம் பருப்பை கழுவி எடுத்து  மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்க...
 புளியை கரைத்து உப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை போட்டு கொதிக்கவையுங்க...
பூண்டு,கறிவேப்பிலை,மல்லிவிதை,மிளகு,சீரகம் ஆகியவற்றை அம்மியில் கொரகொரப்பாக அரைத்து வெந்துகொண்டிருக்கும் பருப்புத் தண்ணீரில் போடுங்க..விரும்பினால் சிறிது இனிப்பு சேர்க்கலாம்.கொதித்து நுரை கட்டியபிறகு கடுகு ,கறிவேப்பிலை தாளித்து போடுங்க.இதனுடன் கொத்துமல்லித் தழையை நறுக்கிப் போட்டு இறக்கி வையுங்க...ரசம் தயார்...

2.தக்காளி ரசம்..
 பருப்பு ரசத்தைப் போலவே செய்து புளியை மட்டும் பாதியாக குறைத்து கால்கிலோ தக்காளியை நறுக்கி,கரைத்து சேர்த்துக்கொள்ளுங்க..

3.எலுமிச்சை ரசம்..
  பருப்பு ரசத்தைப் போலவே  செய்து புளிக்குப் பதிலாக மூன்று எலுமிச்சைபழங்களைப் பிழிந்து பச்சைமிளகாய் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளுங்க.

4.மிளகு ரசம்..
ரசப்பொடிக்கு பதிலாக ஒரு மேஜைக் கரண்டி (15மிகி) நேர்த்து பருப்பு ரசத்தைப்போலவே செய்யுங்க..

5.சீரக ரசம்..
 சீரகம் இரண்டு ஸ்பூன் அதிகமாக சேர்த்து  பருப்பு ரசத்தைப் போலவே செய்யுங்க.

6.தூதுவளை ரசம்..
 மிளகு ரசத்தில் தூதுவளை கொழுந்து ஒரு பிடி,வாதநாராயணன் கொழுந்து இவைகளை வதக்கி சேர்க்கவும்.
   (https://konguthendral.blogspot.com)                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம். (https://konguthendral.blogspot.com)

நீங்களும் சமைக்கலாம் பகுதி -11

                                    நம்ம ஊரு சமையல்- கலவை சாதங்கள்
                                                        -----------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)
ஓர் உணவு அதன் சமையல் செயல்முறைகளின் அடிப்படையைக் கொண்டு வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அதாவது  ஒவ்வொரு சமையலுக்கும் அதன் முக்கியப் பொருட்களின் பெயர்களை  வைத்தே பெயரிட்டு அழைக்கிறோம்.
                     அந்த வரிசையில் இந்தப் பதிவில் கலவை சாதங்கள் பற்றி அறிவோம்.
                (1)துவரம் பருப்பு சாதம், (2)தக்காளி சாதம், (3)எலுமிச்சை சாதம், (4)புளியோதரை, (5)தயிர்சாதம்,(6) தேங்காய் சாதம், (7)மாங்காய் சாதம், (8)உளுந்தம்பருப்பு சாதம், (9)பூண்டு சாதம், (10)கறிவேப்பிலை சாதம், (11)நெல்லிக்காய் சாதம், (12)காய்கறி சாதம்,(c.parameswaran Driver)
   என பலவகை சாதங்கள் செய்கிறோம்,உண்டு மகிழ்கிறோம்.....
                    கொஞ்சம் பொறுமையாக கவனித்தீர்களேயானால் அனைத்து உணவுகளுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களே பெரும்பான்மையாக இருக்கும்....
அதனடிப்படையில்....
 அனைத்து சாதங்களுக்கும் பொதுவான பொருட்கள்
(1)அரிசி, (2)தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3)மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4)உப்பு, ஆகியனவாகும்.(c.parameswaran Driver)
இனி ஒவ்வொரு சாதமும் செய்யும் முறைகளை காண்போம்.

1. து.பருப்பு சாதம்
(1) அரிசி, (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு,
இவைகளுடன் கூடுதலாக (5) துவரம் பருப்பு 100கிராம், (6) பூண்டு-5பல், (7)பெருங்காயம் சிறிதளவு, (8)வெந்தயம்-கால் ஸ்பூன், (9)புளி-எலுமிச்சையளவு, (10)தக்காளி-1, (11)நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

2. தக்காளி சாதம்
 (1) அரிசி, (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு,
இவைகளுடன் கூடுதலாக (5)தக்காளி -கால் கிலோ, (6)பச்சை மிளகாய்-4

3.எலுமிச்சை சாதம்,
  (1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு,
இவைகளுடன் கூடுதலாக (5) எலுமிச்சை பழம் -2 எண்ணிக்கை, (6) வெந்தயம் - கால் ஸ்பூன், (7)பச்சை மிளகாய்-4

4.புளியோதரை (1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு, இவைகளுடன் கூடுதலாக (5)புளி - எலுமிச்சை அளவுக்கும் சற்று அதிகமாக, (தேவைக்கேற்ப) (6)பெருங்காயம் - 1 ஸ்பூன், (7) நல்லெண்ணெய் பயன்படுத்துங்க,

5. தயிர்சாதம்,
  (1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்) (3)உப்பு, இவைகளுடன் கூடுதலாக (4)தயிர் - ஒரு கப்

6.காய்கறி சாதம்,
  (1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்) (3)உப்பு, இவைகளுடன் கூடுதலாக(4) நறுக்கிய(கேரட்,பீன்ஸ்,பச்சை மிளகாய்) காய்கறிகள் (5)பூண்டு, (6)மல்லித்தழை,(7)பட்டை,கிராம்பு,ஏலக்காய்


இவ்வாறாக ஒவ்வொரு சாதவகைகளுக்கும் தேவைக்கேற்ப  மசாலாப்  பொருட்களை  கூடுதலாகவோ,குறைத்தோ,மாற்றியோ பயன்படுத்துங்க...
 (c.parameswaran Driver)


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.


நீங்களும் சமைக்கலாம் பகுதி - 10

                                                 நம்ம ஊரு சமையல்
                                                       ---------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

         கொங்கு வட்டாரத்தில் அரிசீம்பருப்புச் சோறு என்றழைக்கப்படும்
 'துவரம் பருப்பு சாதம்' செய்வது பற்றி இங்கு காண்போம்...
(தக்காளி சாதம் பற்றி கீழே)
தேவையான பொருட்கள்..
(1)அரிசி - 400கிராம் (2 டம்ளர்)
(2)துவரம் பருப்பு - 100கிராம்
(3)புளி - எலுமிச்சை அளவு
(4) சின்ன வெங்காயம் -ஒரு கைப்பிடி அளவு(சாம்பார் வெங்காயம்)
(5)காய்ந்த மிளகாய் - 10 அல்லது சாம்பார்த் தூள் தேவைக்கேற்ப,
(6) கறிவேப்பிலை - இரண்டு இணுக்கு
(7)கடுகு - 2 ஸ்பூன்
(8)வெள்ளை உளுந்து - 1 ஸ்பூன்
(9)மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
(10)சீரகம் -1 ஸ்பூன்
(11)பூண்டு - 10பல்
(12)தேங்காய் - அரை மூடி
(13)உப்பு - தேவையான அளவு
(14)தக்காளி - 1
(15)நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
(16)தாளித வடகம் இருந்தால் ஐந்தாறு சேர்க்கலாம்.

செய்முறை... (c.parameswaran Driver)
 முன் தயாரிப்பு..
 மிளகாய் வற்றல்,சீரகம் இரண்டையும் நன்றாக அம்மியில் மசித்து அதாவது பொடித்துக் கொள்ளவும்.தேங்காயை துருவிக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க...
  குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும்,வெ.உளுந்து,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்  போட்டு தாளித்து,தக்காளி நறுக்கிப் போட்டு  நன்றாக வதக்கவும். துருவிய தேங்காய்,புளிக் கரைசல்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு,அரிசியின் அளவில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி அரிசி,துவரம் பருப்பு போட்டு கலந்து உப்பு சரிபார்த்து  மூடி 4விசில் விட்டு இறக்கவும்.
கவனி;
                 இந்த சாதத்தில் துவரம் பருப்புக்கு பதிலாக தக்காளி ஐந்தாறு நறுக்கி  எண்ணெய் கொஞ்சம் அதிகம் ஊற்றி தாளித்து சேர்த்தால் தக்காளி சாதம் ஆகும்.

                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

அங்காயப் பொடி என்னும் சமையல் மூலிகைப் பொடி

                                 நீங்களும் சமைக்கலாம்  - பகுதி -09
                                               நம்ம ஊரு சமையல்
                          
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

(எ) அங்காயப் பொடி....
நமது  உடலின் ஐந்து பாகங்களின் ஆரோக்கியப் பொடி....
  கடவுள் பஞ்ச பூதங்களை படைத்தார்
ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர், நிலம் என்றவை
நாமும் பஞ்சபூதங்களால் ஆனவர்கள்
இயற்கை அன்னை எப்படியோ
அப்படியே ஒவ்வொரு உயிரும் உள்ளது.
சாதாரணமாகப் பஞ்சபூதங்களுக்கிடையே ஒரு முழுமையான இசைவு இருக்கிறது. நமது உடலும் பஞ்சபூதங்களால் தான் ஆக்கப்பட்டது. பஞ்சபூதங்களைச் சமநிலையில் நாம் வைத்திருந்தால் நாம் ஆரோக்கியமாக இருப்போம்.அந்த பஞ்ச பூதங்களை சமநிலைப்படுத்துவதற்கான மூலிகைப் பொடிதாங்க அங்காயப் பொடி..
 +++++++++++++++++++
தேவையான பொருட்கள்...
(1)வேப்பம் பூ - அரை கப் (100கிராம்)
(2)தனியா (கொத்துமல்லி விதை) - அரை கப் (100கிராம்)
(3)துவரம் பருப்பு -  2 தேக்கரண்டி( டீ ஸ்பூன்)
(4)கருப்பு உளுந்து -  2 தேக்கரண்டி( டீ ஸ்பூன்)
(5)கறிவேப்பிலை - 1கைப்பிடி
(6)மணத்தக்காளி வற்றல் - 2 தேக்கரண்டி( டீ ஸ்பூன்)
(7)சுண்டைக்காய் வற்றல் - 2 தேக்கரண்டி( டீ ஸ்பூன்)
(8)சீரகம் - 2தேக்கரண்டி( டீ ஸ்பூன்)
(9)மிளகு - 1 தேக்கரண்டி( டீ ஸ்பூன்)
(10)சுக்கு - 1 இன்ச் நீளம்
(11)பெருங்காயம் - 2கட்டி
(12) வற மிளகாய் - 2எண்ணிக்கை
(13)உப்பு - தேவையான அளவு
ஒவ்வொன்றையும் வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒன்றாக சேர்த்து  அரைத்துக் கொள்.
சாதம் உட்பட உணவுகளுக்கு சேர்த்து சாப்பிடலாம். மருத்துவக் குணமுள்ளது.ருசியாகவும் இருக்கும்.

பிரார்த்தனை

“உயிரையும் ஒளியையும் படைத்த இறைவா
நன்றி கூறுகிறோம் தங்களுக்கு
எழில்மிகுந்த இவ்வுலகைப் படைத்ததற்கு
ஏறுவதற்குக் குன்றுகள் உள்ளன
நீந்திச் செல்ல ஆழ்ந்த நீர் உள்ளது
வறண்ட நிலத்தில் பெய்த மழையின் சுகமான நறுமணமும் உள்ளது
ஒரு கணத்தில் இதயத்தை நிறையச் செய்து
சுவர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் இசையும் உள்ளது
நேசக்கரம் பற்றும் நண்பனும் இங்கே
இவ்வனைத்தையும் படைத்த தங்களுக்கு
நன்றி கூறுகிறோம் இறைவா நன்றி கூறுகிறோம்”


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

நீங்களும் சமைக்கலாம் - பகுதி-08

                                        நம்ம ஊரு சமையல் -
                                  சமைத்துப் பழகலாம் வாங்க!                                                  
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

 
            பொடி வகைகள் தொடர்ச்சி...

 (உ) கறிவேப்பிலை பொடி
தேவையான பொருட்கள்
(1) கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு,
(2) சீரகம் - 2 தேக்கரண்டி  (டீ ஸ்பூன் ),
(3) உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி  (டீ ஸ்பூன் ),
(4) சோம்பு -  1 தேக்கரண்டி (டீ ஸ்பூன்),
(5) கடலைப் பருப்பு - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்),
(6) மிளகு - 1 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்),
(7) பச்சரிசி - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்),
(8) பெருங்காயம் - சிறிதளவு,
(9)உப்பு - தேவையான அளவு.  
மேற்கண்ட பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறைந்த தீயில் பொன்வறுவலாக வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்சியில் அல்லது மெஷினில் கொரகொரப்பாக அரைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்க....
சாதம்,இட்லி,தோசை என எல்லாவற்றுக்கும் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுங்க.....
-------------------------------------
(ஊ) பருப்புப் பொடி
தேவையான பொருட்கள்..
(1)துவரம் பருப்பு -100கிராம்
(2)கடலைப் பருப்பு - 100கிராம்,அல்லது
சிறு பருப்பு (பாசிப் பருப்பு)
(3)பொட்டுக் கடலை - 100 கிராம்,
(4)மிளகாய் -6
(5)மிளகு - 15கிராம், 
(6)சீரகம் - 15கிராம்,
(7)பெருங்காயம் - 1 கட்டி,
(8)கறிவேப்பிலை - கொஞ்சம்,
(9)வெள்ளைப் பூண்டு - 10 பல்
(10உப்பு - தேவைக்கேற்ப...
செய்முறை.........
குறைந்த தீயில் வறுத்தெடுக்க வேண்டும்.கருகிவிடக் கூடாது...
பொட்டுக்கடலையை சூடு தட்டுமளவு வறுத்துக் கொள்.
பூண்டு நசுக்கி அல்லது தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி மொறுமொறு என வறுத்துக் கொள் .
பெருங்காயக் கட்டியை சிறிது எண்ணெய் ஊற்றிபொறித்துக் கொள்.
மற்றவற்றை தனித்தனியாக வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்.இனி எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்...மிக்சியில் அரைத்தால் முதலில் மிளகாயைப் போட்டு அரைத்துக்கொண்டு பிறகு மற்றவற்றைப் போட்டு அரைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு பயன்படுத்துங்க..                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

13 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam Part -07


                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி -07
                             சமைத்துப் பழகலாம் வாங்க!                                                    
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

 (ஆ) ரசப் பொடி...
      தேவையான பொருட்கள் மற்றும்  அளவுகள்....
(1)தனியா(கொத்துமல்லி)-150 கிராம்.,
(2)சீரகம் - 300கிராம்,
(3)மிளகு- 300கிராம்,
காரத்திற்கு மிளகு இன்னும் அதிகமாக சேர்த்தால் மிளகாய் தேவையில்லைங்க...
 (4) மிளகாய்-25கிராம்,
(5)துவரம் பருப்பு-50கிராம்,
(6)கடலைப் பருப்பு-50கிராம்,
(7)வெந்தயம்-30கிராம்,
(8)கறிவேப்பிலை- மூன்று கட்டு அல்லது தேவைக்கேற்ப ,
 (9)பெருங்காயம்-25கிராம்,
(10)உப்பு-தேவைக்கேற்ப, (c.parameswaran Driver)
                    ஆகியனவற்றை தனித்தனியாக  வறுத்து எடுங்க. குறைவான தீயில்  கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்தெடுத்து எடுங்க.
ஆறவைத்து அரைத்து பத்திரப்படுத்துங்க....
                        -----------------------------------------
(இ) கரம் மசாலா பொடி
(மீன் தவிர மற்ற அசைவ வகைகள், சைவ குருமா,காய்கறிவறுவல்,சூப் வகைகளுக்கு)
தேவையான பொருட்கள்...
(1)தனியா(கொத்துமல்லி)-200கிராம்,
(2)சீரகம் - 100கிராம்,
(3)மிளகு - 30கிராம்,
(4)லவங்கப் பட்டை-10 ,
 (5)கிராம்பு-30கிராம்,
(6)சோம்பு - 30கிராம்,
 (7)ஏலக்காய் -10,
(8)பிரிஞ்சி இலை -10,
 (9)அன்னாச்சி மொக்கு ( நட்சத்திர சோம்பு ) -2,
 (10)கல்பாசி -30கிராம்,
 (11)ஜாதிப் பத்திரி -30கிராம்,
 (12)ஜாதிக்காய் -1,
 (13)விரலி மஞ்சள் -2 (c.parameswaran Driver)
மேற்கண்ட பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுங்க...
கருகவிடாமல் குறைவான தீயில் கவனமாக வறுத்துக் கொள்ளுங்க..
மிக்சி அல்லது மெசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்க.
                                    ------------------------------
(ஈ) மீன் மசாலா.....
( மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வதற்கு)
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்

செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் எண்ணெய் விடாமல் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளுங்க... ஆறவைத்து ஒன்றாக போட்டு அரைத்துக் கொள்ளுங்க.. (c.parameswaran Driver)
இதே மசாலா பொடியை புளிக்குழம்பு,காரக் குழம்பு ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்...
                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

Neengalum Samaikkalam Part 06

                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி 06
                                    சமைத்துப் பழகலாம் வாங்க!
                                            ------------------------------
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)
   வாசனை மட்டும் இருந்தால் போதுமா?ருசியும் வேண்டுமல்லவா!
              சமையல் விரைவாக முடிக்க முன்னரே சில பொருட்களை பொடிகளாகவும்,வேறு சில வடிவங்களிலும் மாற்றி இருப்பில் தயாராக வைத்திருக்க வேண்டும்.அந்த வரிசையில்....
(1)அங்காயப் பொடி,(2)மிளகாய்ப் பொடி,(3)மஞ்சள் பொடி,(4)தனியாப் பொடி(கொத்துமல்லிவிதை பொடி),(5)சாம்பார்ப் பொடி,(6)ரசப் பொடி,(7)கரம் மசாலாப் பொடி(கறி மசாலாப் பொடி),(8)கறிவேப்பிலைப் பொடி,(9)பருப்புப் பொடி(இட்லிப் பொடி),(10)பூண்டுப் பொடி,(11)இஞ்சிப் பொடி,(12)வெங்காயப் பொடி,(13)தக்காளிப் பொடி,(14)மாங்காய்ப் பொடி,(15)தேங்காய்ப் பொடி,(16)சுக்குப் பொடி,(17)மிளகுப் பொடி,(18)லவங்கப் பொடி என சமையலுக்கான மூலப்பொருட்களை   தனிவகை பொடியாகவும்,கூட்டு பொருட்கள் பொடியாகவும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....

            நாம் அதிகமாக பயன்படுத்தும் பொடிகளான (அ)சாம்பார்ப் பொடி, (ஆ)ரசப் பொடி, (இ) கரம் மசாலாப் பொடி ஆகிய மூன்று பொடிகளுக்கும்  பொதுவாக பயன்படுத்தும் மூலப் பொருட்களாவன....(1)தனியா(கொத்துமல்லி)., (2)சீரகத் தூள், (3)மிளகுத் தூள் ஆகியனவாகும்.இவற்றுடன் கூடுதலாக (4) மிளகாய், (5)துவரம் பருப்பு, (6)கடலைப் பருப்பு, (7)வெந்தயம், (8)கறிவேப்பிலை, (9)பெருங்காயம், (10)உப்பு ஆகிய மூலப்பொருட்கள் (அ) சாம்பார்ப் பொடி மற்றும் (ஆ) ரசப் பொடிகளுக்கு சேர்க்கப்படுகின்றன.இந்த மூலப் பொருட்களுடன் கூடுதலாக (11)அரிசி,(12)கடுகு, (13)வெள்ளை உளுந்து ஆகியன (அ)சாம்பார்ப் பொடிக்கு சேர்க்கப்படுகின்றன.
(இ) கரம் மசாலாப் பொடிக்கு முதல் பட்டியலில் குறிப்பிட்டுள்ள (1)தனியா(கொத்துமல்லி), (2)மிளகு, (3)மிளகுத்தூள் ஆகியவற்றுடன், (1)லவங்கப் பட்டை, (2)கிராம்பு, (3)சோம்பு, (4)ஏலக்காய், (5)பிரிஞ்சி இலை, (6)அன்னாச்சி மொக்கு ( நட்சத்திர சோம்பு ), (7)கல்பாசி, (8)ஜாதிப் பத்திரி, (9)ஜாதிக்காய், (10)விரலி மஞ்சள் ஆகிய மசாலாப் பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.
  என்னங்க குழப்பமாக இருக்குதா? கவலையே வேண்டாம்...இனி  ஒவ்வொரு பொடியையும் தனித்தனியாக செய்வது பற்றி அறிவோம்....

 (அ) சாம்பார் பொடி...
தேவையான பொருட்கள் மற்றும்  அளவுகள்....
(1)தனியா(கொத்துமல்லி)-அரை கிலோ.,
(2)சீரகத் தூள் - 150கிராம்,
(3)மிளகுத் தூள்- 150கிராம்,
காரத்திற்கு மிளகு இன்னும் அதிகமாக சேர்த்தால் மிளகாய் தேவையில்லைங்க...
 (4) மிளகாய்-500கிராம்,
(5)துவரம் பருப்பு-100கிராம்,
(6)கடலைப் பருப்பு-100கிராம்,
(7)வெந்தயம்-100கிராம்,
(8)கறிவேப்பிலை- மூன்று கட்டு அல்லது தேவைக்கேற்ப ,
 (9)பெருங்காயம்-100கிராம்,
(10)உப்பு-தேவைக்கேற்ப,
 (11)அரிசி-50கிராம்,
(12)கடுகு-50கிராம்,
(13)வெள்ளை உளுந்து-100கிராம்,
ஆகியனவற்றை தனித்தனியாக  வறுத்து எடுங்க. குறைவான தீயில்  கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்தெடுத்து எடுங்க.
ஆறவைத்து அரைத்து பத்திரப்படுத்துங்க....
 அடுத்த பதிவில் ரசப் பொடி,கரம் மசாலாப் பொடி
 தயாரிப்பது பற்றி பார்ப்போம்.


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

Neengalum Samaikkalam -05

             

                          நீங்களும் சமைக்கலாம் பகுதி -05
                             சமைத்துப் பழகலாம் வாங்க!                                                       
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

                    இந்தப் பதிவில் சமைத்தலுக்கு தேவையான நேர அளவுகளும்,தண்ணீர் போன்ற கலவைகளின் விகித அளவுகளும்,பற்றி அறிவோம்.

பிரஷ்சர் குக்கர் பயன்படுத்தும்போது.........
     LPG காஸ்,கரசின்,மின்சாரம்,கரி என எந்தவகை அடுப்பினை பயன்படுத்தினாலும் அதிக வெப்பத்தில் (Hi Flame & Pressure) அழுத்தம் உருவாக்கிய பின்னர் அந்த அழுத்தமானது நிலைக்க சூட்டினை(Low Flame) குறைத்திடுங்க!...

                 இனி குக்கரில் சமைக்கத் தேவையான தண்ணீர் அளவினை பார்ப்போம்.
            கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல உணவு தயாரிக்கும் நேரம் கூடுதலாகும்.இது இயற்கையின் விதி.....
        கீழ்கண்ட தண்ணீரின் அளவானது இடத்திற்கேற்ப,தங்களது விருப்பத்திற்கேற்ப சற்று மாறுபடும்.(c.parameswaran Driver)
   (1) அரிசி  குக்கரில் சமைக்க ... 3நிமிடங்கள்.
      அரிசிக்கு  தண்ணீர் இரண்டரை அல்லது (1:3) மூன்று பங்கு சேர்க்கவும்.
            
     கீழ்கண்ட பருப்பு வகைகளுக்கு தண்ணீர் மூன்று பங்கு அல்லது      
                             தேவைக்கேற்ப சேர்க்கவும். (c.parameswaran Driver)
  (2) துவரம் பருப்பு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்
  (3) பயத்தம் பருப்பு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்
  (4) கொள்ளு பருப்பு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்
  (5) தட்டைப்பயறு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்

          கீழ்கண்டவைகளுக்கு  தேவைக்கேற்ப அல்லது
      மூழ்கும் அளவுக்கு சற்று அதிகமாக தண்ணீர்                
     சேர்க்கவும்.அதிகமாகிவிட்டால் நாம்தாங்க சாப்பிடுகிறோம்.
      அடுத்தமுறை சரிப்படுத்திக்கொள்வோம். (c.parameswaran Driver)
      (6) உருளைக்கிழங்கு  குக்கரில் சமைக்க.....4நிமிடங்கள்
  (7) வெங்காயம்  குக்கரில் சமைக்க.....3நிமிடங்கள்
   (8) தக்காளி  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
  (9) கேரட்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(10) உலர்ந்த பட்டாணி குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(11) பச்சைப் பட்டாணி  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
 (12) காலிஃபிளவர்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(13) முட்டைக்கோசு  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(14) பீன்ஸ்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(15) புடலங்காய்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(16) பரங்கிக்காய்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(17) முள்ளங்கி  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
கீழ்கண்ட அசைவ வகைகளுக்கு தண்ணீர்  நான்கு மடங்கு அல்லது தேவைக்கற்ப சேர்க்கவும்.(c.parameswaran Driver)
(18) ஆட்டுக்கறி குக்கரில் சமைக்க.....12நிமிடங்கள்
(19) கோழி  குக்கரில் சமைக்க.....10நிமிடங்கள்
(20) மீன்  குக்கரில் சமைக்க.....3நிமிடங்கள்

 பயமே வேண்டாங்க!..
                  மேற்கண்டவைகளில் சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் உணவுகளின் விபரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்க.இனி சமைக்க,சமைக்க ஓரிரு நாட்களில் பழகிவிடும்...ஒருஉணவுமுறையை பழகிவிட்டாலே அடுத்த உணவுவகைகள் சமைப்பதற்கு எளிதாக இருக்கும்.குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே கூடுதலாகவோ,குறைவாகவோ பயன்படுத்துகிறோம்.அதுவும் பெரும்போக்காக பயன்படுத்துகிறோம்.எரிக்கப்படும் தீயின் அளவு முக்கியம்.தாளித்தல்,வதக்குதல் போன்றவைகள் கருகிவிடாமல் இருக்க வேண்டும்.அதேபோன்று வேகும் அளவு குறையக்கூடாது.                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

11 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam -04

                                நீங்களும் சமைக்கலாம் பகுதி -04
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!
                                                    ---------------------------
மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
உதாரணத்திற்காக... கிளிப் மாட்டும்  பட்டியல் தாள்
                                                  மேற்கண்டவாறு ஒரு தாளில் தேவையான பொருட்கள் பற்றிய விபரம் எழுதுங்க.அதில்  முன் தயாரிப்பு விபரம்,அரைத்து நசுக்குவதற்கான பொருட்கள் விபரம்,வறுத்துப் பொரித்தலுக்கான பொருட்கள் விபரம்,வதக்குதலுக்கான பொருட்கள் விபரம்,தாளிப்பதற்கான பொருட்கள் விபரம்,செய்முறை விபரம் என படிப்படியாக எழுதி சமைத்துப் பழகுங்க....

  (1)தாளில் பட்டியலிடுதல்...
        சமைத்து அனுபவமாகும்வரை  சமைக்கும் ஒவ்வொரு உணவுக்கும் தேவையான பொருட்களை கண்ணில்படும்படி ஒரு தாளில் தெளிவாக வரிசைப்படுத்தி எழுதி சமையலறையில் கிளிப் போட்டு தொங்கவிடுங்க!மறவாதீங்க..அடுப்பு பற்றவைப்பதிலிருந்து,தீ குறைவாகவா,சாதாரணமாகவா? அதிகமாகவா? என எரியவிடுதல்,கருகிவிடாமல் தாளித்தல்,பொன்னிறமாக வறுத்தல்,அடிப்பிடிக்காமல் வதக்குதல் உட்பட ஒவ்வொன்றாக வரிசைப்படி எழுதிக்கொள்ளுங்க!..(c.parameswaran Driver - 9585600733)

(2)என்ன சமைக்கலாம்? என்ற முடிவெடுத்தல்....
காலை,மதியம்,இரவு என எத்தனை வேளை உணவு?,
சிறியவர்& பெரியவர் என சாப்பிடுவோர் எண்ணிக்கை!,
 என்ற திட்டமிடுதல் தேவைங்க...

(3)தீர்மானித்த உணவு சமைக்கத் தேவையான மூலப்பொருட்களை தனியே எடுத்துக்கொள்ளுங்க.....அதாவது பொடிவகைகள்,தாளிப்பு பொருட்கள்,எண்ணெய் வகைகள்,காய்கறிகள்,மசாலாப்பொருட்கள்,என தேவையானவற்றை முதலிலேயே தனித்தனியாக அதற்கான அளவான கிண்ணங்களிலோ,தட்டுக்களிலோ எடுத்துவையுங்க...

(4)இனி முன்தயாரிப்பு வேலைகளைச் செய்துகொள்ளுங்க...
முன் தயாரிப்பு வேலைகளில் சில
தங்களது சிந்தனைக்காக....
                    அரிசியை அலசி களைதல், புளி ஊறவைத்தல், வெங்காயம் தோலுரித்து நறுக்குதல், மிளகாய் காம்பு கிள்ளி பொடிப்பொடியாக நறுக்குதல், பூண்டு தோலுரித்தல், தக்காளி நறுக்குதல், கறிவேப்பிலை நறுக்குதல்,  இஞ்சி& பூண்டு நசுக்கி விழுதாக்குதல்(PASTE), காய்கறிகளை நறுக்குதல், தேங்காய் துருவுதல், வறுத்துப் பொடிக்க வேண்டியபொருட்களை வறுத்துப்பொடித்தல், வதக்கி நசுக்கவேண்டிய பொருட்களை வதக்கி நசுக்கிவைத்தல், தாளிப்பதற்குத் தேவையான பொருட்களை சிறு,சிறு கிண்ணங்களில் எடுத்துவைத்தல். உப்பு, மிளகாய்த்தூள் போன்ற பொடிவகைகளை தனியாக எடுத்து வைத்தல் போன்றவை....

அவ்வளவுதாங்க..அடிப்படை என்னும் புள்ளி போட்டாச்சு!...
(c.parameswaran Driver - 9585600733)
               கிளிப் மாட்டிய தாளில் உள்ளவாறு ,செய்முறை பற்றிய விபரங்களை பார்த்து,பார்த்து ,சமைத்தல் என்னும் கோலத்தினை விருப்பத்துடனே போட்டு அசத்துங்க....

   நீங்களும் சமைக்கலாம் இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.