மனித உடல்
மனித மூளை 40 ஆயிரம் வருடங்களாக இதே அளவில்தான் இருக்கிறது. 40 ஆயிரம் வருடங்களில் மூளையின் மேல் மெலிதான 'மையலின்' என்ற ஜவ்வு மட்டுமே வளர்ந்துள்ளது. மூளையின் எடை 1.2 கிலோவாகும். மூளை 10 ஆயிரம் கோடி நியூரான்கள் என்ற நரம்புச் செயல்பட்டால் வினாடிக்கு 1.1 கோடி பதிவுகளைச் செய்யமுடியும்.
தலைமுடியின் எண்ணிக்கை ஒரு லட்சம். மனித உடலில் மொத்தம் 50 லட்சம் ரோமக்கால்கள் உள்ளன.
மனிதனின் கண் ஒரு உயிருள்ள கேமராவாகும். இதன் மூலம் 2.5 கிலோ தூரம் வரை பார்க்க முடியும். லாக்ரிமல் என்ற சுரப்பியால்தான் கண்களில் கண்ணீர் சுரக்கிறது.
மனித உறுப்புகளிலே மனிதன் இறக்கும் வரை வளர்வது காது மட்டுமே. மனிதன் 200 வருடம் வாழ்ந்தான் என்றால் அவனது ஒவ்வொரு காதும் பனைமட்டை விசிறி அளவுக்கு வளர்ந்திருக்கும். நமது காதின் மூலம் 20 முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் துடிப்புகள் கொண்ட ஒளியை கேட்க முடியும்.
மனிதனுக்கு மூக்கு அவசியமான ஒன்று. மனிதன் காடுகளில் வாழ்ந்த காலங்களில் இரைகளை நுகர்ந்து பார்த்து வேட்டையாட மூக்கு உதவி செய்தது.
மூக்கின் உட்புறத்தில் எபிலிதியல் என்ற திசுவில் 10 ஆயிரம் நிசப்பட்டர் என்ற செல்கள் உள்ளன.
இந்த செல்களால்தான் நாம் துர்நாற்றத்தையும் நறுமணத்தையும் உணர முடிகிறது. மொத்தம் மனிதனால் ஏழு வகையான வாசனைகளை மட்டுமே உணர முடியும். மற்ற வாசனைகள் எல்லாம் இந்த ஏழும் சேர்ந்த கலவைதான்.
மனிதனது பற்களில் மிகவும் கெட்டியானது ' எனாமல்' என்ற பொருள்தான். மனிதனை எரித்து சாம்பலாக்கி பல ஆண்டுகள் ஆனாலும் கூட பற்கள் மட்டும் அப்படியே வடிவம் மாறாமல் இருக்கும். இதற்கு பல்லின் மீது இருக்கும் எனாமலே காரணமாகும்.
மனிதனது நாக்கு 9 ஆயிரம் சுவை மொட்டுக்கள் கொண்டது. உப்பு, சர்க்கரை, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு சுவைகளை மட்டுமே நாக்கு அறிந்துகொள்ள முடியும். நான்கும் சேர்ந்த வெவ்வேறு கலவைகளை தந்து நமக்கு வேறு வேறு ருசிகளை அறிகிறோம்.
மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இவை மட்டுமல்லாமல்
100 கிராம் இதயம், 12.5 லிட்டர் தண்ணீர், 5.5 லிட்டர் இரத்தம், 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டணுவும், 86 நாட்களுக்கு மூளையில் உள்ள புரோட்டினும், 14 வருசத்திற்கு எலும்புலுள்ள கால்சியமும் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஒரு வினாடிக்கு 30 லட்சம் புதுப்பிக்கப்படுகிறது. மனிதன் தனது வாழ்நாளில் 20 வருடங்கள் தூங்குகிறான். 3 லட்சம் கனவுகள் காண்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக