அன்பு நண்பர்களே,வணக்கம்.
துணிகளில் பூவேலை (எம்ப்ட்ராயட்ரிங்) செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம்.
இந்த நவீன காலத்தில் கணினி முன் அமர்ந்தால் நீங்கள் எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம்.நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எத்தனையோ பூவேலை செய்யப்பட்ட துணிகளை உற்று கவனித்தால் அதன் போக்கு தெளிவாகத் தெரிந்துவிடும். அவ்வளவே, அதனை பழைய அல்லது உபயோகப்படுத்தாத துணிகளில் போட்டுப் பாருங்கள். முதலில் உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கும். பின்னர் அதன் நயத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
கடைகளில் எம்ப்ட்ராயட்ரிங் ப்ரேம் என்று ஒரு மரத்தில் கிடைக்கும். அதனை வாங்கி துணியை நன்கு டைட் செய்து கொண்டு பின்னர் துவக்குங்கள்.
பழகப் பழக புதிய புதிய டிசைன்களை நீங்களே உருவாக்குவீர்கள். மேலும் நீங்கள் வைத்திருக்கும் எத்தனையோ உடைகளில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு விதமான எம்ப்ட்ராயட்ரிங்குகளை போட்டுப் பாருங்கள்.
ஓரளவிற்கு நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர், உங்கள் கைக்குட்டை, துப்பட்டா, இரவு உடை போன்றவற்றில் முதலில் உங்கள் கைவண்ணத்தைத் துவக்குங்கள். பிறகு சாதாரண சுடிதாரில் கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் சிறிய சிறிய பூக்களை இட்டு நிரப்புங்கள்.
நீங்கள் போடப்போகும் டிசைனை முதலில் பென்சிலால் துணிப்பகுதியில் லேசாக வரைந்து கொள்ளுங்கள். அதன் மேலேயே பூவேலை வருவது போன்று செய்து பாருங்கள்.
பின்னர் பிளைன் சாரி வாங்கி அதன் இரு புறங்களிலும் அழகான பூக்களை வடிவமைத்துப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக