26 மே 2014

அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை பற்றி தெரிந்து கொள்வோம்.


மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பூமியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
             Latitude என்னும் அட்ச ரேகைகள் (நில நேர்க்கோடு) கிழமேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு.
 (ஆமாங்க இந்தக்கோடு நம்ம எளிய பயனுக்காக கற்பனையாக கோடுகள் இருப்பது போல மனதில் எண்ணிக்கொள்வது).
  இந்தக்கோடு பூமியின் மையப்பகுதியில் அதிக விட்டத்தைக்கொண்டது.பூமியை சரிபாதியாக பிரிக்கிறது.அதனை பூமத்தியரேகை என்கிறோம்.இந்த நிலநேர்க்கோடு  தென் துருவம் மற்றும் வடதுருவம் செல்லச் செல்ல அதன் விட்ட அளவு குறையும்.அதாவது  வெவ்வேறு விட்டங்களைக் கொண்டது.
          பூமத்திய ரேகையை 0 டிகிரி என வைத்து வடதுருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும்(N90 Degree) தென் துருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும் கணக்கிடப்படுகிறது.

         Longitude என்னும் தீர்க்க ரேகைகள் (நிலநிரைக்கோடு) இவை பூமியின் தெற்கு வடக்காக வரையப்படும் கற்பனைக்கோடுகள்.இவை அனைத்தும் பூமியை இரு சம பகுதிகளாகப் பிரிக்கின்றன.ஒரே அளவு விட்டமுள்ளவை.வளைகோடுகளாகத் தெரிகின்றன.இங்கிலாந்து நாட்டில் உள்ள  கிரீன்விச் நகரத்தில் அமைந்திருக்கும் ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தை மையமாக வைத்து செல்லும் தீர்க்க ரேகையை 0 டிகிரி என ஆரம்பமாக கணக்கிட்டு கிழக்குப்பகுதி சர்வதேச தேதிக்கோடு வரை
180 டிகிரி கிழக்கு எனவும்,மேற்குப்பகுதி சர்வதேச தேதிக்கோடு வரை 180 டிகிரி மேற்கு எனவும் கணக்கிடப்படுகிறது.


இந்த படத்தில் காணப்படும் Equator என்பது பூமியின் மத்தியில் அமைந்துள்ள பூமத்திய அட்ச ரேகை ஆகும்.
Prime Meridian என்பது இங்கிலாந்து நாட்டின் கிரீன்விச் நகரத்தில் உள்ள ராயல் வானிலை ஆய்வு மையத்தின் வழியாக செல்லும் ஆரம்ப தீர்க்க ரேகை ஆகும். இதை  0 டிகிரி என துவக்கமாக வைத்து   காலநிலையைக் கணக்கிடப்படுகிறது.இந்த தீர்க்க ரேகையின் கிழக்கு நோக்கி செல்லச் செல்ல கூடுதல் மணியாகவும் இந்த தீர்க்க ரேகையின் மேற்கு நோக்கி செல்லச்செல்ல குறைவான மணியாகவும் கணக்கிடப்படுகிறது.இந்தக்கோட்டிற்கு மறுபகுதியில் அதாவது பூமிக்கு அடுத்த பாதியில் International Date Line எனப்படும் சர்வதேச தேதிக் கோடு  வரையப்பட்டு உள்ளது. அதன் தீர்க்க ரேகை 180 டிகிரி ஆகும்.

1 கருத்து: