30 செப்டம்பர் 2015

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

      தலைப்பு;
          சுற்றுச்சூழலைக் காத்திட வாழ்க்கையை முறைப்படுத்துவோம்.

  முன்னுரை;

         சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்திய அரசியல் சாசன எண் 51A உட்பிரிவு (எ) - ன்படி நம் ஒவ்வொருவரின்  அடிப்படைக் கடமை ஆகும்.நம்மைச்சுற்றியுள்ள காடுகள்,ஏரிகள்,ஆறுகள்,காட்டு விலங்குகள்,மற்றும் பிற உயிரினங்கள் வசிக்கின்ற இயற்கை சுற்றுச்சார்புகளை மேம்படுத்துவதும்,பாதுகாப்பதும் நாம் ஒவ்வொருவரும் கடமையாகக்கொள்ள வேண்டும்.    

      பொருள்;

        (1)  நாகரீகம் வளர,வளர அறிவியல் கண்டுபிடிப்புகளும்,அதற்கேற்ப நம் தேவைகளும்  அத்தியாவசியமானதாக மட்டுமின்றி ஆடம்பரமாகவும் பெருகிக்கொண்டே செல்கிறது.பெருகி வரும் மக்கள்தொகையால் வசிப்பிடங்கள் அதிகப்படுத்துவதாலும்,நாகரீகம் கருதி தனி மனித பயன்பாட்டிற்கு கூட பெரிய பங்களா போன்ற வீடுகளை கட்டி நிலத்தின் பரப்பை கான்கிரீட் போன்ற கலவையால் பூசி நிலத்தடி நீரை பூமியில் சேரவிடாமல் ஓடவிடுகிறோம்.அறிவியல் கண்டுபிடிப்புகளால் நம் பயன்பாட்டிற்கேற்றவாறு வாங்கும் அனைத்துபொருட்களுக்கும் கவரிங் எனப்படும் பொட்டலமாக்குவதற்கு பாலித்தீன் பயன்பாடு,விளம்பரத்திற்கு கண்ணைக் கவரும் இரசாயன வண்ணப்பூச்சுகள்,எடுத்துச்செல்லும் நிமிட நேரத்தேவைக்குக்கூட பாலித்தீன் மற்றும் நெகிழிப்பொருட்கள் பயன்பாடு.என மிகவும் குறைந்த நேரத்திலேயே குப்பையாக நிலத்தில் வீசியெறிந்து பூமியை நஞ்சாக்குகிறோம்.எரித்தாலும் நச்சு வாயுக்களை வெளியேற்றி காற்றை மாசுபடுத்துகிறது. 

 இதை தவிர்க்க;
            குறைந்த எண்ணிக்கையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான அளவு வீட்டை மட்டும் கட்டி பயன்படுத்த வேண்டும்.நிலத்தடி நீரை அதிகப்படுத்த மழைநீர்த்தொட்டி அனைத்து வீடுகளிலும் அமைக்க வேண்டும்.நெகிழிப்பொருட்களை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.அல்லது குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.இறுதியாக மறு சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
  
       (2) இயற்கை சுழற்சி முறையை மீறி கட்டுப்பாடற்ற நமது பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. ஏறக்குறைய தாவர வகைகள்,வன விலங்குகள் மற்றும் நீர்வாழ்வன வகைகள் என அனைத்தையும் பேராசை மிகுதியாலும்,உணவுக்காகவும்,அழகு சாதனப்பொருட்களுக்காகவும்,ஆடம்பரத்திற்காகவும் இயற்கைவிதிகளுக்கு மீறிய அளவு அறுவடை செய்து இயற்கைவளங்களை அழித்து வருகிறோம்.இதனால் பருவநிலை மாறுகிறது,புவி அதிக வெப்பமடைகிறது. மழை குறைந்து நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

 இதை தவிர்க்க;
          நவீன வேளாண்மை முறையில் இரசாயன உரங்களையும்,பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை முறை விவசாயத்தை செய்ய வேண்டும்.வனவிலங்குகளாலும்,நீர் வாழ்வனவற்றாலும்  இந்த பூமிக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்து அவைகளை பாதுகாக்க வேண்டும்.

        (3) சமூக அக்கறை இன்மையாலும்,நம்மால் உருவாக்கப்படும் குப்பைகளாலும் சுற்றுச்சூழல் மாசு உண்டாகிறது.நெகிழிக் குப்பைகள்,வீட்டு உபயோகப்பொருட்களின் ஆயுட்காலம் முடிந்த குப்பைகள்,மருத்துவ உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருட்களின் கழிவுகள்,வேளாண் இடுபொருட்களாகப் பயன்படுத்தும் வேதிப்பொருட்களின் கழிவுகள்,பெருகி வரும் கட்டடப்பொருட்களின் கழிவுகள்,தொழிற்சாலை மற்றும் மோட்டார் வாகனங்களின் திட,திரவக் கழிவுகள் மற்றும் வெளியேற்றும் புகையின் நச்சு,சாக்கடைகளை தேக்கமடையச்செய்தல் போன்ற சமூக அக்கறையின்மை காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.


இதை தவிர்க்க;
          நம்மால் உருவாகும் குப்பைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து குறைக்கவும்,சரியானமுறையில் மேலாண்மை செய்யவும் விழிப்புணர்வு பெற்று செயல்படுத்த வேண்டும்.சாக்கடை நீர் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும்.மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.

          (4) உணவாக உட்கொள்வதிலிருந்து அதன் கழிவுகள் உட்பட கழிவுகளாக வெளியேற்றப்படுபவை வரை சரியான கட்டுப்பாடு இன்மையால் சுற்றுச்சூழல் கேடு உண்டாகிறது.உணவுப்பொருட்கள் பற்றி கவனத்தில்கொள்ளும்போது இயந்திரமயமான அவசர உலகில் நம் தேவை கருதி விரைவு உணவுப்பழக்கங்களை ஏற்படுத்தி வருகிறோம்.விரைவு உணவகங்களும் வியாபார நோக்கில் சுவை கூட்டவும்,அழகான தோற்றத்திற்கான நிறங்களுக்காகவும், நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும்,பழைய உணவுப்பொருட்களை,உணவு தயாரிக்கும் எண்ணெய் வகைகளை தரக்குறைவானதாகவும்,மீண்டும் மீண்டும் பயன்படுத்தியும் நச்சுத்தன்மை வாய்ந்த உணவுகளையும்,சுகாதாரமின்றி,சுத்தமின்றி சாலையோரங்களில் உள்ள உணவகங்களிலும் உட்கொண்டு சுகாதாரச்சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாகின்றோம். 

  இதை தவிர்க்க;                 
          நுகர்வோராகிய நாம் கவர்ச்சியான விளம்பரத்திற்கும், இலவசங்களுக்கும், சலுகைகளுக்கும், தள்ளுபடிகளுக்கும், நயவஞ்சகப் பேச்சுக்கும் ஏமாறாமல் அரசு தர முத்திரை பதித்துள்ள பொருட்களையே வாங்க வேண்டும்.சுத்தமான மற்றும் சுகாதாரமானமுறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே பயன்படுத்த வேண்டும்.                         
                       
       (5) போக்குவரத்து ஆகிய பயணம் தொடங்கி அலுவலகங்களில் பணியினை முடிக்கும்வரை  போதிய விழிப்புணர்வு இல்லாமையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிறது.தனி நபர் வாகனத்தின் தேவையில்லாத பயணத்தாலும் ,மோட்டார் வாகனங்களின் பராமரிப்புக் குறைபாடுகளாலும்,தேவையில்லாத நேரங்களில் இஞ்சினை ஓடவிடுதலாலும்,கரியமிலவாயு அதிகளவில் வெளியேறி சுற்றுச்சூழலை பாதிக்கிறது.பணியின்போது தேவையில்லாத நேரங்களில் இயங்கும்  மின் சாதனங்களை நிறுத்த தவறுவதாலும்,நெகிழிப்பொருட்கள் உட்பட அலுவலகங்களில் பயன்படுத்தும் பொருட்களை குப்பையாக வெளியேற்றுவதாலும் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. 

இதை தவிர்க்க;
            அருகிலுள்ள அலுவலகங்களுக்கோ,வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கோ நடந்தோ சென்று அல்லது மிதிவண்டியில் சென்று வரலாம்.இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் நமது உடலுக்கும் பயிற்சியாக அமைகிறது.அலுவலகங்களிலோ,வீட்டிலோ பொது இடங்களிலோ தேவையில்லாமல் தண்ணீர் வீணாவதை கண்டாலோ,மின் சாதனங்கள் இயக்கத்தில் இருந்தாலோ உடனே நிறுத்த வேண்டும்.வீட்டில் துணி துவைப்பதிலிருந்து,மாவு ஆட்டுதல்,அரைத்தல் போன்ற வீட்டு வேலைகளை பழைய முறைப்பழக்கத்திற்கு மாற வேண்டும்.இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் நமது உடலுக்கும் ஆரோக்கியமான பயிற்சியைப் பெறலாம்.

      (6) நம் தேவைகளை பெருக்கிக்கொள்வதற்கேற்ப சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.

மனம் விரும்புதலுக்கேற்றவாறு தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிக்குவிப்பதாலும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுகிறது.மற்றவர்களைப்பார்த்து அவர்களைப்போலவே நாமும் பொருட்களை வாங்கி வீட்டில் குவித்தால்தான் பெருமை என்ற தவறான எண்ணங்களாலும் தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டில்  குவிப்பதாலும் குப்பையாக பயன்பாடு இன்றி சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது.

இதை தவிர்க்க;
        மனம் போன போக்கில் எல்லாப்பொருட்கள் மீதும் ஆசைப்படாமல் தேவைக்கேற்றவாறு அத்தியாவசியப்பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.மீண்டும்,மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.சிக்கனமே சீரான வாழ்வு என்பதை உணர வேண்டும்.

       (7) பயன்படுத்தும் மின் சாதனங்களாலும்,மின்னணுப்பொருட்களாலும் கதிர்வீச்சு ஏற்பட்டும்,நச்சு வாயுக்கள் வெளியேறியும்  சுற்றுச்சூழல் கேடு உண்டாகிறது.குளிர்சாதனப்பெட்டிகள்,குளிரூட்டும் கருவிகள்,சூடுபடுத்தும் மின்சாதனங்கள்,மின் அடுப்புகள்,துணி தேய்க்கும் கருவி,துணி துவைப்பான்,இயந்திர ஆட்டுக்கல்,இயந்திர அரைப்பான், எக்ஸ் ரே மற்றும்  ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்கள்,மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தும்போது அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி  சுற்றுச்சூழலை பாதிக்கிறது.மேசைக் கணினி,மடிக்கணினி,அலைபேசி,கணக்கிடும் கருவி,மின்கலத்தால் ஒளிரும்  விளக்குகள்,மின்கலத்தால் இயங்கும் கடிகாரம்,என  மின்சாரத்தை தேக்கிவைக்கும் மின்கலங்கள் ஆகியன ஆயுட்காலம் முடிந்தபிறகு குப்பையாக தூக்கி எறியும்போது அதில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப்பொருட்களால் நச்சுத்தன்மை பரவி சுற்றுச்சூழலை நாசமாக்குகிறது.

இதை தவிர்க்க;
         பயன்படுத்தும் மின் சாதனங்களையும்,மின்னணு சாதனங்களையும் தரமானதாக அரசு தர முத்திரை பெற்றுள்ளவையாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.இதனால் அவைகளின் ஆயுட்காலம் நீடிப்பதுடன் சுற்றுச்சூழலைப்பாதிக்கும் காரணிகள் கட்டுப்படுத்தப்படும்.

  (8) நுகர்வோரைக் கவர்ந்து விற்பனையை அதிகரிப்பதற்காக நடக்கும் வணிக மோசடிகளாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவுப்பொருட்களிலிருந்து உயிர் காக்கும் மருந்துகள் வரை தேவையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம்.அவையனைத்துமே இரசாயன வண்ணம் பூசியும்,நறுமணத்திற்காக  சில வேதிப்பொருட்களை சேர்த்தும்,சுவைக்காகவும்,அழகுக்காகவும்,இனிப்புக்காகவும்,இரசாயனப்பொருட்கள் கலந்தும்,பொட்டலம் கட்டும் கவர்கள் நெகிழியாலும்,பாலித்தீன் தாளினாலும் கட்டப்பட்டு அதன் மேற்புறம் மினுமினுப்பாக தோற்றமளிக்க இரசாயனக்கலவை பூசியும்,கலப்படப்பொருட்களை கலந்தும் இலாப நோக்கத்தற்காக சமூக நலனைப்பற்றிக்கவலைப்படாமல்  சம்பாதனையே குறிக்கோள் என்ற வணிக மோசடியாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது.

இரசாயனச் சேர்க்கை நடைபெறும் அனைத்து  பொருட்களாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்க;
  நமது தேவைகளுக்காகவே அனைத்து விற்பனைப்பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே நாம் நுகர்வோர் விழிப்புணர்வு பெற்று தரமான அரசு தர முத்திரை பதித்த பொருட்களையே வாங்க வேண்டும். நேர்மையான வணிகர்களை ஊக்குவிக்க வேண்டும். போலியான வணிகர்களை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிவுரை;
     மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் நமது சுயநலமே முக்கியமானதாக கருதி வாழ்ந்து வரும் நாம் இனியாவது  இயற்கைக்கு மாறான செயல்களாலும்,இயற்கை வளங்களை நாசமாக்கும் வேதிப்பொருட்களின் தீங்குகளாலும் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்து அவற்றைத்தவிர்ப்போம்.சுற்றுச்சூழலை பாதுகாத்து இந்த வளமான பூமியை நமது வருங்கால தலைமுறையினருக்கு விட்டுச்செல்வோம்.
 
உறுதிமொழி;
வகை (2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது இந்த படைப்பு.
''சுற்றுச்சூழலை காத்திட வாழ்க்கையை முறைப்படுத்துவோம்'' என்ற தலைப்பிலான இந்தப் படைப்பு எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்.இந்தப்படைப்பு,''வலைப்பதிவர் திருவிழா-2015'மற்றும் தமிழ் இணையக்கல்விக்கழகம் நடத்தும் ''மின் தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015''க்காகவே எழுதப்பட்டது என்றும் இந்தப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல,முடிவு வெளி வரும்வரை  வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதி அளிக்கிறேன்.
வலைப்பதிவர் பெயர்;C. பரமேஸ்வரன்,
 வலைப்பதிவு முகவரி;http://konguthendral.blogspot.com
 அலைபேசி எண் 9585600733
 மின்னஞ்சல் முகவரி; paramesdriver@gmail.com

27 செப்டம்பர் 2015


வகை (3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப்போட்டி

                     தலைப்பு;
                                    சமூகமே! பெண்களுக்கும் சம உரிமை கொடு.

 முன்னுரை;
          காலங்காலமாக தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும், மகளாகவும்  என குடும்பத்துடன் பின்னிப் பிணைந்து நம்முடைய இனத்தை விருத்தி செய்யும் மாபெரும் சக்தியாக விளங்கி வரும் பெண்களை இந்த சமூகமானது குறிப்பாக ஆணாதிக்கமானது அடிமைப்படுத்தி வைத்திருப்பது சமூகத்தின் முன்னேற்றத்திற்கே பெரும் தடையாக இருக்கிறது.ஆதிகாலத்தில் சமூகத்திற்கு தலைமையேற்று வழிநடத்திய பெண்ணினமானது  இயற்கையின் விதிப்படி மாதந்தோறும் அந்த மூன்று நாட்கள் போன்ற காரணங்களுக்காக சுகாதாரத்திற்காகவும்,ஓய்வெடுக்கவும்  வீட்டில் தங்கியது போன்ற  பல்வேறு காரணங்களைக்கூறி அடிமைப்படுத்தப்பட்டாள். 19ம் நூற்றாண்டுகளுக்குப்பிறகு விழிப்படைந்த பெண்கள் குழுக்களாக உருவாகி தங்களுக்கும் கருத்துரிமை,செயல்பாடுகள்,வாக்குரிமைகளில் சுதந்திரம் வேண்டும் என போராடியதன் விளைவாக உலக அளவில்  1848ஆம் ஆண்டு மார்ச் 8ந் தேதி முதல் சர்வதேச மகளிர்தினவிழா கொண்டாடப்பட்டு உலகெங்கும் கருத்தரங்குகளாலும்,விவாதங்களாலும்  பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர்.

 பெண்கள் மீதான இன்றைய சமூகப்பார்வை;
             இந்த சமூகமானது  நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் பெண்ணினத்தை தன் தவறான கண்ணோட்டத்தால் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதோடு பெண்களை கருவிலேயே அழிப்பதும்,பிறந்துவிட்டால் கள்ளிப்பால்,நெல் கலந்த பால்,போன்றவற்றை ஊட்டிக் கொல்வதும் அல்லது அடிமைப்படுத்தி சமூகத்தில் இரண்டாம் நிலையில் வைத்து ஆண்களுக்கே முதலிடம் கொடுக்கிறது.
  பெண்ணானவள்  பருவநிலை எய்திய சமயத்தில் முதல்முறை மாதவிடாய் நிகழ்வை திருவிழா போல ஊரைக்கூட்டி கொண்டாடும் இந்த சமூகம் அடுத்துவரும் நிகழ்வுகளில்,சுகாதாரம் மற்றும் ஓய்வு கருதி ஒதுக்கிவைக்கப்படும் அந்த மூன்று நாட்களில் தீண்டத்தகாதவளாக ஒதுக்குகிறது.தூய்மையை ''தூமை என்னும் தீட்டு''  என்று சொல்லி கேவலப்படுத்துகிறது. இதனால் பெண்ணினமே கூனிக் குறுகும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது.மனித சமூகம் என்பது பலர்பால் ஆக இருந்தாலும் அது மரியாதை காரணமாக ஆண்களையே குறிப்பிடுகிறது.
எல்லா வகை நிகழ்வுகளிலும் வெற்றி என்றாலே அது ஆண்களே என்ற மனப்பான்மையை தருகிறது.பெண்கள் வெற்றியடைந்தால் ஏளனமாகப் பார்க்கும் நிலை நிலவுகிறது.

       அறிவியல் வழியானாலும் சரி,ஆன்மீக வழியானாலும் சரி பெண்களை தாழ்த்தியும்,ஆண்களை உயர்த்தியும் இந்த சமூகம் பார்க்கிறது.பெண்கள் என்றாலேஆணின் உடற்பசியை தீர்ப்பவளாகவும்,ஆணின் விருப்பத்திற்காகவே பிறந்தவளாகவும்,அலங்காரப்பொருளாகவும்,சமையல் வேலை உட்பட வீட்டுவேலைக்காரியாகவும்,குழந்தை பெற்று வளர்ப்பவளாகவும்,இந்த சமூகம் பார்க்கிறது.குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடையவளாக பார்க்கும் சமூகம்  பல பெண்களுடன் உறவு வைக்கும் ஆண்களை மட்டும்  கண்டுகொள்வதும் இல்லை,கண்டுகொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை.
பெண்களைப்பொறுத்தவரை தன்னுடைய கணவன் உயிருடன் இருந்தால் மட்டுமே பூவும்,பொட்டும் வைத்துக்கொண்டு  அணிகலன்கள் உட்பட அழகிய வண்ண ஆடைகளை உடுத்தும் தகுதியுடையவளாக இந்த சமூகம் பார்க்கிறது.கணவன் இறந்துவிட்டாலோ எவ்வித ஆசைகளோ,விருப்பங்களோ இருக்கக்கூடாது என்று கூறி வெள்ளை உடை உடுத்தி தனிமைப்படுத்தி சமூகத்தால் அடையாளப்படுத்தப்படுகிறாள்.உடன்கட்டை ஏற்றப்படுகிறாள்.(தற்போது இந்நிலை இல்லை என்பது வேறு) ஆனால் ஆண்களுக்கோ  தன் மனைவி இறக்க நேரிட்டால்  உடனே வேறொரு பெண்ணை மணமுடித்து வைக்கின்றது.பெண் குழந்தைகளையும் வயதான ஆணுக்கு திருமணம் செய்து வைக்கிறது.ஆண்களிடம் உள்ள குறை காரணமாக  குழந்தைப்பேறு நடைபெறாமல் போனால் கூட பெண்களே மலடி என்ற இழிசொல்லுக்கு ஆளாக்கப்படுகிறாள்.
                            இந்த சமூகமானது இலக்கியங்கள்,கிராமப்புறக் கலைகளான ஆடல்,பாடல்களிலும் பெண்களின் உடல் உறுப்புகளைப் பற்றிய ஆபாச வசனங்களையே உச்சரித்து  மனமகிழ் கொள்கிறது.

                   சிறு வணிகத்திலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை வியாபார விருத்திக்கான விளம்பரங்களில் பெண்களின் உடலமைப்புகளை  கவர்ச்சியாக காட்டுகிறது.இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களான திரைப்படங்கள்,இணையதளங்கள்,சமூக வலைத்தளங்கள், அலைபேசி வலைத்தளங்கள்,தொலைக்காட்சி நாடகங்கள்  போன்ற எல்லா நவீன தொழிற்நுட்ப சாதனங்களிலும் பெண்களை ஆபாசமாகவும்,போகப்பொருளாகவும் சித்தரித்துக் கேவலப்படுத்துகிறது.தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

           ஆண்களின் செய்கைகள் மற்றும் நடத்தைகளைப் பற்றிக்  கண்டுகொள்ளாத சமூகம்  பல பெண்களோடு தொடர்பு கொள்வதை அலட்சியமாக கருதும் இந்த சமூகமானது ஒரு பெண் இன்னொரு ஆணுடன் பேசினாலே பாலியல் குற்றமாகக் கருதுகிறது.
  திருமண வயது வந்த ஆண் எப்படி இருந்தாலும் கவலைப்படாத சமூகமானது அவனுக்கு மனைவியாகத் தேடும் பெண் மட்டும் அழகுடையவளாக இருக்க வேண்டும்,பத்தினியாக இருக்கவேண்டும்,குடும்பத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்,பண்பாடு உடையவளாக,பணிவுடையவளாக இருக்க வேண்டும்.இள வயது உள்ளவளாகவும் வேண்டும்.உடலில் எவ்விதக்குறைகளும் இல்லாதவளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

                    தனது வயிறு,தொப்புள்,மார்பு என மேற்சட்டையில்லாமல் அரை நிர்வாணமாக திரியும் ஆண்களை கண்டுகொள்ளாத இந்த சமூகமானது பெண்களை மட்டும் அவளது விருப்பத்திற்க்கேற்றபடி சற்று அளவு குறைவான ஆடைகளை அணிந்திருந்தால் கூட ஆபாசமாகப் பார்க்கிறது.

            சமூகமானது பெண்கள் வேலைக்குச்சென்று சம்பாதிக்கும் இன்றைய காலத்தில்கூட  சம்பாதித்த பணம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் ஆணிடம் கொடுத்துவிட்டு சமைப்பது,துவைப்பது,சுத்தம் செய்வது, போன்ற வீட்டு நிர்வாகத்தை மட்டும் பெண்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது.பெண்களுக்கு நல்வழி காட்டவேண்டிய  வயதில் மூத்த பெண்களே இவ்வாறாக பெண்களைஅடிமைப்படுத்துவதுதான் வேதனை தருகிறது. ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை பெண்குழந்தைகளுக்கு கொடுக்க இந்த சமூகம் மறுக்கிறது. குழந்தைப்பருவத்திலிருந்தே பெண்களுக்கு சின்னஞ்சிறு விசயங்களுக்குக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கிறது.பிஞ்சு மனதிலேயே அடிமைத்தனத்தை விதைக்கிறது.

 பெண்கள் முன்னேற யோசனைகள்;
               தாயில்லாமல் யாருமே இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.நம்மை ஈன்ற தாயே பெண்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.முதலில் நம் வீட்டில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.பெண்கள் வீட்டில் சமைப்பது,சாப்பிடுவது,கணவனுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வது,குழந்தை பெற்று வளர்ப்பது,தொலைக்காட்சி நாடகங்களைப்பார்த்துவிட்டு தூங்குவது என்பதையே தங்களது வேலைகளாக ஏற்கும் நிலையில் மாறுதலைக்கொண்டுவர வேண்டும்.

                       கல்வி கற்க வேண்டும்,பொது விசயங்களை அறிந்து கொள்ள செய்திகளை பார்க்க வேண்டும்,வெளியுலக நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும்,வாய்ப்புக்கிடைத்த நேரங்களில் எல்லாம் வாசிப்புத்திறனை அதிகப்படுத்த வேண்டும்,அதற்காக நூலகங்களைப் பயன்படுத்த வேண்டும்.நல்ல புத்தகங்களை தோழியாக்கிக்கொள்ள வேண்டும்.இணையதளங்களிலுள்ள மின்னூல்களையும்,சமூக வலைத்தளங்களையும், படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.தன்னிடம் உள்ள குறைகளையும்,பலவீனங்களையும் அறிந்து அவற்றை நீக்க வேண்டும்.கணவனுக்கு மனைவியாகவும்,குடும்ப நிர்வாகத்தைமட்டும் கவனிப்பவளாகவும்,குழந்தை பெற்று வளர்ப்பதுமே வாழ்க்கை என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும்.
 ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதே குடும்பம்  குடும்பங்கள் சேர்ந்ததே சமூகம் என்பதை உணர வேண்டும்.ஆணின் முன்னேற்றத்திற்கு ஒரு பெண்ணின் துணை அவசியத்தைப்போல ஒரு பெண்ணுக்கான சுதந்திரத்திற்கும் ஒரு ஆணின் ஆதரவு அவசியம்.ஆதலால் பெண்களும் சுதந்திரமாக சுய சிந்தனையுடன் தன் விருப்பம்போல வாழ அனுமதி கொடுக்க வேண்டும்.சம உரிமை கொடுக்க வேண்டும்.  சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதற்காக மது அருந்துதல்,போதைப்பொருட்கள் பயன்படுத்துதல்,புகை பிடித்தல் என பொரும்பாலான ஆண்கள் செய்யும் தவறுகளை  பெண்களும் செய்யக்கூடாது.சம உரிமை என்பது பெண்களைப்போல் ஆண்களும் தவறான பழக்கங்களை செய்யக்கூடாது என்பதாகும்.அதே நேரத்தில் சம உரிமை,சுதந்திரம் என்பதற்காக கட்டுப்பாட்டை இழக்காமல் எச்சரிக்கையுடன் தான் அணியும் உடையிலிருந்து,நமது குறிக்கோள், சமூக அக்கறை,பொது அறிவினை வளர்த்துக்கொள்ளல்  உள்ளிட்ட பழகும் தன்மை வரை அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.

முடிவுரை;
               பெண்கள் அனைவருமே ஆண்களுக்கு நிகராக சம அறிவும்,ஆற்றலும்,செயலும் கொண்டவர்கள்,நமது இனவிருத்திக்காகவே இருபாலினமாக பிறந்துள்ளோம் என்ற உண்மையினை அனைவரும் உணர வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும்.
               சாலைப்பயணத்தில் முன்,பின் அறிமுகம் இல்லாத ஓட்டுநருக்கு முன் இருக்கையில் இடம் கொடுத்து அமரவைத்து நம்பிக்கையுடன் பயணிக்கும் நாம்,நமது வாழ்க்கைப்பயணத்திலும் முன்னேற நமது பெண்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னேறும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்.அரசாங்கமும் அக்கறைகொண்டு அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்புடன் முன்னேறுவதற்கான உரிய வழிகாட்ட வேண்டும்.பெண்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றமாகும்.

 வகை (3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைப்போட்டிக்கு எழுதிய  -   சமூகமே! பெண்களுக்கும் சம உரிமை கொடு.என்ற தலைப்பிலான  இந்தக் கட்டுரையானது எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்.இந்த படைப்பு ,வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் ,மின் தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015 க்காவே எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன்.இந்தப்படைப்பானது இதற்கு முன் வெளியான படைப்பல்ல,முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.
  எனது பெயர்;
C.பரமேஸ்வரன், 9585600733
வலைத்தள முகவரி
 http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.16 செப்டம்பர் 2015

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப் போட்டி-2015

சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து,
         விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள்.                                   தலைப்பு; 
 சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்திடு!,சந்ததியினரைக் காத்திடு!!.

முன்னுரை;
              இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிரினங்கள் உட்பட நாம் வாழத் தகுதி படைத்த உயிர்க்கோள் ஆகும்.நம்மைச்சுற்றியுள்ள நிலம்,நீர்,காற்று,வெப்பம்,ஆகாயம் ஆகிய ஐம்பெரும் சூழல்களே  நம் வாழ்வுக்கு ஆதாரம் ஆகும்.இவ்வாறான சுற்றுச்சூழலின் பாதுகாப்பை அறியாமல் நாகரீகம் என்ற போர்வையில் மயங்கி நம் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி மனம் போனபடி உபயோகப்படுத்துகிறோம்.கண்ட இடங்களில் வீசி குப்பைகளாக குவிக்கிறோம்.இதனால் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களும்,நச்சு வாயுக்களும்,அபாயமான கதிர்வீச்சுகளும் உருவாகி  மண்ணும், விண்ணும், நீரும், கடலும், காற்றும், மாசுபட்டு  பருவநிலை மாறி புவி அதிக வெப்பமடைந்து நமக்கு பல்வேறு பாதிப்புகளை கொடுத்து வருகின்றன.ஓசோன் படலம் பாதிப்படைந்து வருகிறது.இந்நிலை நீடித்தால் உயிரினங்களே வாழத் தகுதியற்று இவ்வுலகம் அழிந்து விடும்.

1.(அ). வன வளமே நம் வளம்.
              வன வளங்களில் முதன்மையான தாவரங்களுக்கும் நமக்கும் நேரடித்தொடர்பு உண்டு.நாம் வெளிவிடும்  கரியமில வாயுவான நச்சுக்காற்றை தாவரங்கள் உறிஞ்சிக்கொண்டு நாம் உயிர்வாழத் தேவையான பிராணவாயு என்னும் உயிர்க்காற்றை தருகின்றன.உணவைக்கொடுத்து,மழையைக் கொடுத்து நிலத்தடி நீரை சேமித்து நிலத்தைக்காத்து,சீரான தட்பவெப்ப நிலையைக் கொடுக்கின்றன.இவ்வாறு நமக்கு வாழ்க்கையை கொடுக்கும் தாவரங்களை குறிப்பாக மரங்களை வெட்டி அழித்து வருகிறோம்.இதனால் கரியமிலவாயு போன்ற நச்சுக்காற்றினை சுத்தம் செய்ய இயலாமல் புவி வெப்பமடைகிறது.பருவநிலை மாறுகிறது.மழை குறைகிறது.குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது.வேளாண்மை பாதிக்கிறது.பல துன்பங்களை அனுபவிக்கிறோம்.

1. (ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
             வனங்களே நமக்கு வாழ்வாதாரம் என்பதை உணர்வோம்.கரிம மற்றும் நீர் சுழற்சியில் முக்கிய பங்காற்றும் வனத்தைக் காப்போம்.மரம் ஒன்று வெட்டினால் இரண்டினை  நட்டு வளர்ப்போம். அதற்கென சேவைப்பணியாற்றி வரும் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து மரம் நடும் வேகத்தை அதிகப்படுத்துவோம்.ஆற்றங்கரை,ஓடை,ஏரி,குளக்கரைகளிலும்,சாலையின் இருபுறமும், தரிசு நிலங்களிலும்,வீட்டுச்சுற்றுப்புறங்களிலும் மரங்களை நட்டு வளர்ப்போம்.

2.(அ)நெகிழிப்பொருட்களை பயன்படுத்தும் வேகமும்,தீங்கும்.
             எழுதுபொருட்கள் துவங்கி தனி மனித பயன்பாட்டுக்கான பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள்,தகவல் தொடர்பு சாதனங்கள்,வேளாண்மைக் கருவிகள்,மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள்,தொழிற்சாலைக் கருவிகள், மோட்டார் வாகனங்களின் பாகங்கள்,உடல் உறுப்பு மாற்று பாகங்கள்,மின் சாதனங்கள்,மின்னணுபொருட்கள்,என விண்வெளி ஓடம் வரை நெகிழி பொருட்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து பயன்படுத்துகிறோம்.இதன் மூலப் பொருட்கள் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களால் ஆனவை.மற்றும் வெப்பநிலை மாறுபாட்டால் வேதிவினை புரிந்து நச்சு வாயுக்களை வெளியிட்டு காற்றை  மாசுபடுத்துகின்றன.உணவுப்பொருட்களை நஞ்சாக்குகின்றன.வீசி எறிந்தால் எளிதில் மக்குவது இல்லை.மழைநீரை நிலத்தடியில் செல்ல விடுவதில்லை. மாறாக மண்ணையும்,நீரையும் நஞ்சாக்குகின்றன.கால்நடைகளும்,பறவைகளும்,நீர்வாழ் உயிரினங்களும் உணவு எனக்கருதி உட்கொண்டு இறக்கின்றன.நமக்கு பலவித நோய்கள் உண்டாக்குகின்றன.
 2.(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
     நெகிழிப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அபாயமான கேடு விளைவிக்கின்றன என்பதை உணர்ந்து விழிப்படைய வேண்டும்.நாகரிகம் மற்றும் விலை மலிவு மற்றும் எளிதான பயன்பாடு காரணமாக எடுத்துச் செல்லும் தூக்குப்பைகளாக பயன்படுத்தும் பாலித்தீன் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.பதிலாக துணிப் பைகளையோ,மூங்கில் கூடைகளையோ,பாத்திரங்களையோ பயன்படுத்த வேண்டும்.நெகிழிப் பயன்பாட்டினை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.பிறகு மறு சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.

3.(அ)மின் சாதனங்களும் மின்னணுப்பொருட்களும் தீங்குகளும்.
          மின்சாரமே மனிதவாழ்வு என்ற நிலையில் ஒளிரும் விளக்கு,விசிறி,குளிரூட்டிகள், இயங்கும் மோட்டார் போன்ற மின்சாதனங்களையும் அலைபேசி,தொலைபேசி,தொலைக்காட்சி,கண்காணிப்பு கருவி,கணினி,கணிப்பான்,தொலை அச்சு,இசைக்கும் கருவி,குறுந்தட்டு,வன்தட்டு,விரலி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களையும் ஓடும் மின்சாரத்தின் உதவியுடனோ,சேமிக்கும் மின்சாரத்தின் உதவியுடனோ பயன்படுத்தி வருகிறோம்.இதே மின்சாரம் விளக்கு மூலமாக வெளிச்சத்துடன் வெப்பத்தையும் கொடுக்கிறது.கார்பன் நச்சுவையும் கொடுக்கிறது.குளிரூட்டிகளும் கார்பன் நச்சுவினை பெருமளவு வெளிப்படுத்துகின்றன. இவை சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களைத் தடுத்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை பெருமளவு சிதைக்கிறது.இதனால் புதுவிதமான பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.புவி வெப்பத்தை அதிகரிக்கின்றன.பருவநிலையை மாற்றி அதிக மழையோ,அதிக வறட்சியோ,சுனாமி,நில நடுக்கம்,போன்ற இயற்கை சீற்றங்களையோ ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்துகின்றன.பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்கிறது.மின்கலங்களின் ஆயுட்காலம் முடிந்தபிறகு குப்பையில் போடும்போது அதிலுள்ள வேதிப்பொருட்கள் நிலத்தை பாழ்படுத்துகிறது. நச்சுவாயுவை வெளிப்படுத்தி காற்றை மாசுபடுத்துகிறது.எக்ஸ் -ரே போன்ற மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகளும், அலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்களும் அதிகப்படியான கதிர்வீச்சை வெளிப்படுத்தி புற்றுநோய் உட்பட பலவிதமான நோய்களை கொடுத்து உயிருக்கு ஆபத்தை கொடுக்கின்றன.

3.(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
          மின் சக்தி குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கையாளும் நட்சத்திரக் குறியீடு தரமுத்திரை பெற்ற நிறுவனங்களின் தயாரிப்பு சாதனங்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும்.மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.தேவையில்லாதபோது நிறுத்தி வைக்க வேண்டும்.
அலைபேசி போன்ற  சாதனங்களை வாங்கும்போது SAR என்னும் கதிர்வீச்சு ஆற்றலைக்  கட்டுப்படுத்தும் தர முத்திரை பெற்ற சாதனங்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும்.சுருக்கமாகவும்,விரைவாகவும் பேசி முடிக்க வேண்டும்.அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம்.தரைவழி இணைப்பு தொலைபேசியை பயன்படுத்தலாம்.
           
      4.(அ) தொழிற்சாலைகளின் உற்பத்தியால் ஏற்படும் கழிவுகளின் தீங்குகள்
            அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கேற்ப அதிகப் பயன்பாடுகள் நுகரப்படுகின்றன.தேவைக்கேற்ப உற்பத்திசெய்யப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள்,மற்றும் நச்சுவாயுக்கள்,இரசாயனம் கலந்த கழிவுநீர்கள் வெளியேற்றப்பட்டு நிலமும்,நீரும்,காற்றும் அதிகளவில் மாசுபடுகின்றன.இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசடைகிறது.
(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை;
        மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைப்படி மாசு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.வெளிவிடும் புகையினை வடிகட்ட வேண்டும்.திடக்கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அழிக்க வேண்டும்.

5.(அ)  வாகனங்கள் போக்குவரத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பும்,
               நாட்டின் முதுகெலும்பே மோட்டார் வாகனங்களின் போக்குவரத்து என்ற கட்டாயத்தில் உள்ளோம்.நமது பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும்,நாம் பயணிக்கவும்  போக்குவரத்து தேவைப்படுகின்றன.பொருள் போக்குவரத்து  ஓட்டுநர்கள் போதிய பயிற்சி இன்மையாலும்,அலட்சியத்தாலும் தேவையில்லாமல் வாகனங்களை இயக்குகின்றனர். பராமரிப்புக் குறைபாட்டால் எரிபொருள் சரிவர எரியாமல்  அதிகளவில் வெளிவிடுகின்றன.கலப்பட எரிபொருட்களை பயன்படுத்தி புகைமாசு ஏற்படுத்துகின்றனர்.ஆயில்,மசகு எண்ணெய் கசிவுகளால் சாலையில் ஒழுகி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.தனி நபர்கள் தன் விருப்பத்திற்காகவும், தற்பெருமைக்காகவும் இரு சக்கர வாகனங்களையும்,நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கி நடைதூரத்திற்குக் கூட வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். தேவையில்லாத பயணத்தை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர்.சாலை பாதுகாப்பு விதிகளை அறியாமல் இயக்குவதாலும்,மோட்டார் வாகன அறிவு குறைபாட்டால் இயக்குவதாலும் ,பராமரிப்பு இல்லாததாலும் அதிக எரிபொருள் செலவாகி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.சாலைகளை விரிவுபடுத்துவதற்காக மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.சாலைகளை தார் மற்றும் கான்கிரீட்களால் தளம் அமைப்பதால் நிலத்தடி சேமிப்பது தடைபடுகிறது.

5.(ஆ)ஆக்கப்பூர்வ ஆலோசனை;
            அலுவலகம் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்காக  குறைவான தூரம் செல்பவர்கள் நடந்தோ,மிதிவண்டிகளிலோ பயணிப்பது  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சிறந்த பயிற்சியாக அமைந்து உடல் ஆரோக்கியம் பெறும். தனி நபர் வாகனங்களை தவிர்த்து பொது வாகனங்களில் பயணிக்க வேண்டும்.வணிக  லாப நோக்கில் பொருட்களை எதிரும் புதிருமாக இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.இயன்றவரை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு பாரம் ஏற்றக்கூடிய கனரக வாகனங்களையே பயன்படுத்த  வேண்டும்.எரிபொருள் வீணாவதை தவிர்க்கவும்,எரிபொருள் சரிவர எரியாமல் கார்பன் மோனாக்சைடு வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் முறையான பராமரிப்பு செய்ய வேண்டும்.சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து வாகனத்தை தற்காப்புடனும் சீரான வேகத்துடனும் இயக்க வேண்டும்.நிற்கும் வாகனங்களின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்தி எரிபொருளை மிச்சப்படுத்த வேண்டும்.சாலையோரங்களில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.அதேபோல மழைநீரை சேமிக்கும் தொட்டிகள் ஆங்காங்கே அமைத்து நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும்.

6.(அ)நவீன வேளாண்மையும் சுற்றுச்சூழல் பாதிப்பும்.
               இன்றைய உணவுத் தேவையை பூர்த்தி செய்ய குறுகிய காலத்தில் அதிக  உற்பத்தியைப் பெருக்க மரபணு விதைகளையும்,வீரிய ஒட்டு ரகங்களையும் பயன்படுத்துகிறோம்.விளைச்சலை அதிகப்படுத்த இரசாயன உரங்களையும்,
ஊக்க மருந்துகளையும்,களைகளை கட்டுப்படுத்தவும்,நோய்த்தாக்குதலை குறைக்கவும்,பூச்சிகளை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம்.இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இறந்துவிடுகின்றன.நிலம் மலடாகிவிடுகிறது.பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களின் நஞ்சு மண்ணிலேயே தங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.மருந்து தெளிக்கும்போது துகள்களாக காற்றில் கலந்து காற்றையும் மாசுபடுத்துகிறது.நீரில் கலந்து  தண்ணீர் மாசு அடைகிறது .இதனால் நச்சுத்தன்மையுள்ள காய்கறிகளை,கீரைகளைத்தான் உணவாக எடுத்துக்கொள்கிறோம்.
6.(ஆ) ஆக்கப்பூர்வமான ஆலோசனை,
         சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கைமுறை விவசாயமுறையை பயன்படுத்த வேண்டும்.நன்மை தரும் பூச்சிகளை வளர்த்தும்,பஞ்சகாவ்ய முறையை பயன்படுத்தியும்  நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை தடுக்க வேண்டும்.இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும். நாட்டுரக பயிர்களையே விளைவிக்க வேண்டும்.நவீன சாகுபடிக்கான மூடாக்கு செய்யும் நெகிழி மற்றும் பாலித்தீன் பேப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.அதிக கால்நடைகளை வளர்த்து இயற்கை உரம் சேமிக்க வேண்டும்.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் உத்திகளை கையாள வேண்டும்.

7.(அ)மக்கள் தொகைப் பெருக்கமும்,பயன்பாட்டு மோகமும்.
      மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப குடியிருப்புகளும் அதிகப்படுத்தப்படுகின்றன.விளைநிலங்கள் காலி மனையிடங்களாக விற்பனையாக்கப்படுகின்றன.அடுக்குமாடி குடியிருப்புகளையும்,தொழிற்சாலைகளையும் கட்டும்போது நிலத்தடி நீரை தேங்கவிடாமல் கான்கிரீட் போட்டு தளத்தை நிரப்பிவிடுகின்றோம். நாகரிகம் வளர்வதற்கேற்ப அறிவியல் கண்டுபிடிப்புகளால் புதுவகையான பொருட்களும் சந்தைப்படுத்தப்படுகின்றன.வணிக நோக்கில் கவர்ச்சிகரமாக விளம்பரமும் செய்யப்படுகின்றன.தற்பெருமைக்காகவும்,பேராசையாலும்,மனம் போன போக்கில் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி குவிக்கின்றோம்.பயன்படுத்தும் பொருட்களின் ஆயுட்காலம் நிறைவடையும் முன்னரே குப்பையில் போட்டுவிட்டு புதுவடிவில் வெளியிடும் பொருட்களை வாங்குகிறோம்.பழுதடைந்த மின் விளக்கு,மின்கலம் போன்ற  சாதனங்களையும்,குறுந்தகடு,சிலிக்கான் பலகை,போன்ற மின்னணுப்பொருட்களையும்,மின்னணுப்பொருட்களில் பயன்படுத்திய காலாவதியான மின் கலங்களையும்நெகிழிப்பொருட்கள்,போன்ற எதுவாக இருந்தாலும் பழுது ஆனாலோ அதன்மீது சலிப்பு ஏற்பட்டாலோ வீட்டிற்கு வெளிப்புறங்களில் வீசி எறிந்துவிடுகிறோம்.இதனால் சுற்றுச்சூழல் கெட்டு சுகாதாரக்குறைவால் பலவித நோய்களுக்கு ஆளாகின்றோம்.உடனடி நிவாரணத்திற்காக வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் அல்லோபதி மருந்துகளை அதன்பக்கவிளைவுகளை அறியாமல்உணவுக்குப் பதிலாக உட்கொள்கிறோம்.சிறுசிறு நோய்களுக்குக்கூட இரசாயனக்கலவை மருந்துகளை உட்கொண்டு அதன் கழிவுகளை வெளிப்புறங்களில் வீசி எறிந்து மருந்துப்பொருட்களின் குப்பையை உருவாக்குகிறோம்..

(ஆ) ஆக்கப்பூர்வ ஆலோசனை<
      நாகரீகம் கருதி சமூகத்தைப் பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.இயற்கைக்கு தீங்கு தராத பொருட்களை வாங்க வேண்டும்.சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டும்.
 கைகளால் அரைக்கும் ஆட்டுரல்,அம்மிக்கல் போன்றவைகளை பயன்படுத்தி ,துணிகளை துவைத்து உடலுக்கும் உழைப்பைத் தர வேண்டும்.மின்சாரமும் சேமிப்பாகும். மின் சாதனங்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.தேவையில்லாதபோது மின்சாதனங்களின் இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும்.இயன்றவரை நடந்தோ,மிதிவண்டியில் சென்றோ வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிவர வேண்டும்.சிறு வியாதிகளை குணப்படுத்த மருத்துவத்தாவரங்களை பயன்படுத்த வேண்டும்.இதற்காக வீட்டில் மூலிகைத்தாவரங்களை வளர்க்க வேண்டும்.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை;
         நாம் வசிக்கும் வீடு,வீதி உட்பட கடைவீதி,அடுக்குமாடி வீடுகள்,சந்தைகள்,பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள்,சுற்றுலாத்தளங்கள்,தொழிற்சாலைகள்,பண்டிகைக்காலங்கள்,
திருவிழாக் காலங்கள்,
திருமண மண்டபங்கள்,விளையாட்டரங்கம்,கடற்கரைப் பகுதிகள், திரையரங்கம் என மக்கள் கூடும் இடங்களில் குவிக்கப்படும் குப்பைகளையும்,வெளியேறும் கழிவுநீரையும் கவனிக்க வேண்டும். இவை உருவாகுவதற்கான காரணங்களையும்  அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ,சுகாதாரக் கேடுகளையும் உணர வேண்டும்.எனவே இனியாவது விழிப்புணர்வு கொண்டு ஆண்டுதோறும் உலக மக்கள்  கடைப்பிடித்து வரும் (அ) ஜூன் 5 ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்திலும்,(ஆ)செப்டெம்பர் 16 ந்தேதி உலக ஓசோன் தினத்திலும், (இ) மார்ச் 21 ந் தேதி உலக வன தினத்திலும், (ஈ) மார்ச் 22 ந் தேதி உலக தண்ணீர் தினத்திலும், (உ) அக்டோபர் 5 ந் தேதி உலக இயற்கைச்சூழல் தினத்திலும், (ஊ) ஏப்ரல்5 ந் தேதி உலக கடல் தினத்திலும், (எ) ஏப்ரல் 22 ந் தேதி உலக பூமி தினத்திலும், (ஏ) ஏப்ரல் 7ந் தேதி உலக சுகாதார தினத்திலும், கலந்துகொண்டு விழிப்புணர்வு பெறுவோம். (ஐ) டிசம்பர்14 ந்தேதி முதல் 20 ந் தேதிவரை தேசிய எரிசக்தி வாரத்தையும் கடைப்பிடித்து சுற்றுச்சூழலை பாதுகாத்து நாம் அனுபவித்துவரும் இந்த பூமியை வளம் குன்றாமல் நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்வோம் என உறுதி எடுப்போம்.

(1) இந்தப் படைப்பு எனது சொந்தப்படைப்பே என்று உறுதியளிக்கிறேன்.

(2)இந்தப் படைப்பு,''வலைப்பதிவர் திருவிழா-2015''மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் 'மின் இதழ் இலக்கியப்போட்டிகள்-2015'' க்காகவே எழுதப்பட்டது' என உறுதியளிக்கிறேன்.

(3) 'இதற்கு முன் வெளியான படைப்பல்ல,முடிவு வெளிவரும்வரை வேறு இதழ்கள் எதிலும் வெளிவராது'என உறுதியளிக்கிறேன்.

வலைப்பதிவரின் பெயர்; C.பரமேஸ்வரன்,

 வயது 53 (பிறந்த தேதி 15 ஏப்ரல் 1963),

மின்னஞ்சல் முகவரி ; paramesdriver@gmail.com

 செல்பேசி எண் +91 9585600733

       வருகிற 2015 அக்டோபர் 11 ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் 4-வது வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படும் கையேட்டிற்கு எனது விவரங்களை கொடுத்துவிட்டேன்.

வலைப்பதிவு முகவரி; http://konguthendral.blogspot.com
ஈரோடு மாவட்டம்-
சத்தியமங்கலம் - 638402
    


13 செப்டம்பர் 2015

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். வருகிற 2015செப்டெம்பர்30ந் தேதிக்குள் உங்க படைப்புகளை அனுப்புங்க.பரிசும் பாராட்டும் காத்திருக்கிறதுங்க..நான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை எழுதி அனுப்புகிறேன்...வெற்றி என்பதல்லங்க முக்கியம்..புதுகை விழாக்குழு  நண்பர்களுக்கு ஊக்கம் தருவதே முக்கியம். தன்னலம் கருதாமல் தமிழ்ச்சமூக வளர்ச்சி மற்றும் தமிழ் விழிப்புணர்வுக்காக ஒன்றிணைவோம் வாங்க...வருகிற 2015அக்டோபர் 11 ந்தேதி புதுக்கோட்டையில்...

வலைப்பதிவர் சந்திப்பு 2015: உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -  “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் ....

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -
                                மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  
            கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி- 
              கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(2) 
                    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
           சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(3)     
            பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - 
       பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 

வகை-(4)  
                     புதுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு

வகை-(5)   
                   மரபுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே.  மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம். 

      மிகச்சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் தமிழுக்காக இணையத் தமிழுக்காக அயராது மாதக்கணக்கில் செய்து வரும் நண்பர் திருமிகு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மற்றும் விழாக்குழுவினரை வலைத்தமிழுலகம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறேன்..
 என
அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-638402
ஈரோடு மாவட்டம்.

09 செப்டம்பர் 2015

இந்திய மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம். இந்திய மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் பற்றி கொஞ்சம் அறிவோம்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.
ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு:-
1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).
மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது.ஆதலால் மேற்கண்ட நோய்களுக்கு சிறப்பு மருத்துவர் அதாவது ஸ்பெஷலிஸ்ட் என்று மருத்துவர்கள் எவரும் சொல்லக்கூடாது என சட்டம் கூறுகிறது...

மொபைல் போன் பயன்பாட்டை குறையுங்க..

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். மொபைல் போன் பற்றிய விவரங்களைத்தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்க மொபைல் போனுக்கான  முக்கிய எண்கள்... 
               [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
 

*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
 

#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
 

*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
 

*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
 

*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
 

*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
 

#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
 

*#67705646# – clears the LCD display(operator logo).
 

*#147# – This lets you know who called you last (Only vodofone).
 

*#1471# – Last call (Only vodofone).


#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
 

#pw+1234567890+2# – Network Lock Status.
 

#pw+1234567890+3# – Country Lock Status.
 

#pw+1234567890+4# – SIM Card Lock Status.
 

*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
 

*#2640# – Displays phone security code in use.
 

*#30# – Lets you see the private number.
 

*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
 

2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
 

2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
 

1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
 

2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
 

2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
 

#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
 

*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
 

*#746025625# – Sim clock allowed status.
 

#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
 

*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
 

*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
 

*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: 

*#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345


*#3925538# – used to delete the contents and code of wallet.

செல்போன் மேலாண்மை.அதாவது .மொபைல் போன் மேலாண்மை

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். செல்போன் மேலாண்மை பற்றி அறிந்துகொள்வோம்.சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்போம்.
செல்போன் எனப்படும் அலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்.

               செல்போன் எனப்படும் அலைபேசிகள் இன்றைய உலகில் ஒரு அத்தியாவசிய பயன்பாட்டுப்பொருளாகி விட்டது. அதே சமயம் மின்னணு சாதனமான செல்போன் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.இருந்தாலும் செல்போன் கதிர்வீச்சில் இருந்து முழுவதுமாக தப்பிக்க முடியாது.
                    ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நமக்கு பாதிப்பை கொடுக்கவே செய்யும். சிட்டுக்குருவிகள் கூட இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
                 இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு அதன்படி செல்போனை மேலாண்மை செய்வது  நமது குடும்பம் உட்பட நமக்கும்  நமது சந்ததியினருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
                          இந்த அலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

                 ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் அலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே  நாம் அலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
             1. முடிந்த அளவு அலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் அலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைப்பேசிகளால் கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம்.
           2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
         3. குழந்தைகளிடம் மொபைல் போனை பயன்படுத்தவோ, பேசுவதற்கோ, கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
         4. உங்கள் அலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
          5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைப்பேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் போது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
        6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
          7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பில் இணைந்த பிறகு  போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதிர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
            8. கைப்பேசிகளில் பேசும் பொழுது வலது புறக் காதில் வைத்து பேசாமல் இடது புறக் காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
            9. அலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்கள் சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
          10. அலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
          11. அலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
           12. அலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

08 செப்டம்பர் 2015

என்ன படித்தால் மனிதர் ஆகலாம்?.

                அன்பு மகளுக்கு தந்தையின் கடிதம் 

(பெற்றோர்அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கடிதம்)

என் அன்பு மகளுக்கு, 

               உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு  நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.   

          

           அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.            கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழியின் ஒரு பகுதி தான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள், ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்வி அறிவு!  

                அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர  முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.              ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித் தந்ததை நான் என் நண்பர்களிடமெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் "இது எப்படிங்க? என்செல்பேசியிலும் வச்சுத்தாங்களேன்?" என்று சொல்லும் போது "இது என் மகள் வச்சுத் தந்தது, எனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்" என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

                இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள்  ஒருபக்கமிருக்க, வேறுபல திசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்             இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், மிகுந்த பன்முக- திறமைசாலிகளாக இருப்பதை, சில செய்தி-தொலைக்காட்சி-களில் பார்த்து வியந்து மகிழ்ந்தும் ருக்கிறேன்.  

              புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள்,  விஜய்  தொலைக்காட்சியில் வரும் நீயா-நானா விவாதங்கள், சூப்பர்- சிங்கர்,  கலைஞர்  மற்றும்  சன்  தொலைக் காட்சிகளில்  வரும் சில பேச்சு மற்றும நேரலையாகக் கருத்துக்கூறும் நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. 

             அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும்  பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து  மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!               இதுபோல் நல்ல நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்காமல், குறும்புசெய்து திட்டும் குட்டும் வாங்காமல், நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்து "ஓடிவிளையாடு பாப்பா"  என்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனை என்று சொல்லமுடியும்? அவர்கள் படிப்புக்காக குழந்தைப் பருவத்தையே  தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.           முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே?  

                 பல பள்ளிகளில் முக்கியமாக "மாநில முதலிடம், இரண்டாமிடம், மற்றும் 450 க்கு மேல் 800 பேர்" என்று விளம்பரம் செய்து கல்வியை வியாபாரத்துக்காக விளம்பரம் செய்யும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம்,விளையாட்டு, சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளி பிசகாமல் "வாந்தி எடுத்து"  எழுதிக் காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனைதான். 

            பன்முகத் திறமையை வளர்த்துக் கொண்டு, எந்தத் திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல் மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா  யோசித்துப் பார்!              இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், "என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான,  எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!" என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும்.  இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான். எனினும், அதில் இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?            ஆனால், எனது நண்பர் ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும், மற்றொரு பக்கம் உறுத்தத்தான் செய்கிறது. அவர் சொன்னார் – "சார், நாங்கள்ளாம் 1985 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால், இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது. நான் 37 ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தை, என்மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்"  "ஆகா, இதுவல்லவா மகிழ்ச்சி" என்று நான்சொல்ல, அவர் சற்றும் மகிழ்ச்சியில்லாமல், உச்சுக்கொட்டிக்கொண்டு, "அட போங்க சார், வாழ்க்கைன்னா என்னன்னு  தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே வாழ்ந்து முடிச்சிடுறாங் சார்!  பெரியபடிப்பு, கைநெறய சம்பளம், ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறது, பெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்சும்மா டென்ஷன் டென்ஷன்னு... 27 வயசுக்காரன் சொன்னா, 60 வயசுல நா என்ன சொல்றது?" என்று அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. (திருமணமான சிலமாதங்களில் விவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணமும் இதுதான்)            யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே போனதற்குக் காரணம் என்ன? அந்தப் பாவத்தை நமது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது! 
        
            குதிரைக்குக் கண்படாம் போட்டது போல, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல் "நேராக" பார்! மதிப்பெண் மட்டும் தெரிகிறதா? சரி என, பயிற்சிபெறும் யாரும் யதார்த்த உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில் புரியாமலே- மனப்பாடம் செய்வதில் தொடங்கிவிடுகிறது அல்லவா?             இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால், படிப்பை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது?  எதை, எதற்காகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துதான் படிக்கிறார்களா?   எம்.பி.பி.எஸ். படித்தால், மருத்துவர் ஆகலாம்,                                                        பி.ஈ. படித்தால் பொறியாளர் ஆகலாம்.                                                  

   பி.எல். படித்தால் வழக்குரைஞர் ஆகலாம்,                                         

ஐ.ஏ.எஸ். படித்தால் மாவட்ட ஆட்சியர் ஆகலாம்,                                                 எதுவுமே படிக்காமல் மந்திரியும் ஆகலாம்.                                              

ஆனால்,  

             என்ன படித்தால் மனிதர் ஆகலாம்?                                                  
   மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம்.
  என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.         அதனால், நீ என்ன வேண்டுமானாலும் படி,      எல்லாவற்றுக்குள்ளும் மனிதரை மட்டும் மறக்காமல் படி, அல்லது மனிதருக்காக எதுவேண்டுமானாலும் படி. ஆனால், நேர் எதிராகச் சிலர், படிப்பு ஏற ஏற மனிதரை மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்!         கலைஇலக்கிய வாதிகள் பலர் பள்ளி கல்லூரிப்படிப்பே இல்லாதவர்கள். ஆனால், அந்தப் "படிக்காதவர்கள்"தான் பல நூறு பேர்களுக்குப் பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும்  கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு உலவிவரும் "கல்வி முதலாளி"களை அல்ல! அது இன்றைய நம் சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர் விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்ல வந்தது அவர்களையும் அல்ல. 

               கல்லூரிப்படிப்புப் படிக்காத ஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3 ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பலநூறு பேர் "முனைவர்"  (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?             பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி வரும், போகும், பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால், பதவிகளை வகிக்கும் மனிர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்"-குறள் இதைத்தானே சொல்கிறது? பதவிகளுக்காகவே வாழும் மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-            "தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!"  இது எப்படி இருக்கு? ரொம்ப எதார்த்தமா இருக்குல்ல?           ஆமாம் அவ்வளவுதான், பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும், மனதளவில் செத்துப் போவது அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்று நினைக்கும் இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூட "தோழர்" எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும்  "தா.பா. வர்ராராமில்ல?"  "ஜி.ஆர். பேசுறாராமில்ல?"  என்று பெயர்ச் சுருக்கத்தைச் சொல்லிச் சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம், மாவட்டங்களையே பெயர் சொல்லி அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!           சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதோ அந்தக்கவிதை - 


"எழுதிவைத்த புத்தகத்தில் முழுகிப் போவாய்,

எதிரிருக்கும் மானுடரைப் படிக்கமாட்டாய்,

கழுதைகளும் புத்தகத்தை மேயும், பின்னர்

கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா"   என்பது,.

              புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை? அதை நடைமுறைப்படுத்த, மனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும்.            முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், "முதல் மதிப்பெண்" மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக்கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே! இதைத்தான் நமது மகாகவி பாரதி


"அணிசெய்  காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்"   என்று சொன்னான். இதுவும் புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான்  சொல்ல வேண்டும்.              கடந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன்அம்மா கூறினார். அது போதும் மகளே! முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே! உனக்கு மட்டுமல்ல, வழக்குரைஞராக இருக்கும் உன் அக்காவுக்கும், கணினிப் பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.          பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்து "உருப்போட்டு", முதல் மதிப்பெண் எடுப்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால், அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல பத்தாண்டுகளாக "மாநில அளவில் முதல்மதிப்பெண்" பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் முதல்மதிப்பெண் சாதனைக்காக- பல பல பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக்காட்சிகளின் கதாநாயக/நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்ன? தோழர்-தோழியர் தூக்கிவைத்துக் கொண்டாடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி. அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது அல்லவா?    நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, "பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநில முதன்மை எடுப்பேன்" என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும் அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை.         இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால், கடந்த சில பல நாட்களாக, பள்ளியிறுதி (SSLC),, மற்றும் மேல்நிலை (+2) வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்து, செய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார்பள்ளி கல்லூரிக் "கல்விவள்ளல்"களின் விளம்பரங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின் பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ! மாநிலஅளவில் முதல் மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32 பேர் மூன்றாமிடத்திலோ 148பேர்!    இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும், நன்றாகவே படித்து, விரும்பும் உயர்கல்வியை விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்து, நல்ல தேர்ச்சிகாட்டி, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, மாவட்டஆட்சியராகவோகூட வந்துவிடலாம் ஆனால், அந்த மதிப்பெண் சாதனையாளர்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி என்பது கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவது, நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது, குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, கார்வாங்குவது, பங்களா கட்டுவது என்று "செட்டில்" ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே! இதைத்தானே பாரதிதாசன் மண்டையில் அடித்தாற் போலச் சொன்னார்?


''தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
                                                        
சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்
                                  
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
                                                     தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்"          நாட்டின் நல்லகுடிமகனாக, சிறந்தமனிதராக, புகழ் பெறாவிட்டாலும் சாதாரணமாக அடுத்தவர் நினைவில் தோன்றும்போது (IMAGE) நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கையின் அடையாளம். இதைத்தான் வள்ளுவப் பெரியாரும்

"தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்று சொல்லியிருக்க வேண்டும்.          மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல,அறியாமையை அதாவது தெரிந்துகொள்ளாமையை அளக்கும் கருவி.

               நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60 மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40 மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக் கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100 மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.                  தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு "சமூக மனிதனாக" நாலுபேருக்கு நன்மை செய்து, சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். தேர்வில் வெற்றி பெறுவது முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா? என்று கேட்டால் கிடைக்கும்  விடை இதை உனக்கு இன்னும் விளக்கிவிடும். 

                ஆனால், முதல் மதிப்பெண் வெற்றி தானே வாழ்க்கை வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று கேட்டால் பெருவெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை! என்னும் வரலாற்று உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும். 

              தனது பள்ளிப்படிப்பில் மற்ற பாடங்களை விடவும் குறைவாகவே வரலாற்றுப் பாடத்தில் மதிப்பெண் எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே தன் வாழ்க்கையால் மாற்றி எழுதினார். இன்னொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கிய லெனின் அந்தப் படிப்புக்குத் தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையே புதிதாக எழுதிவிட்டார்!                 படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி,, நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு சிலர் பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு வா. 

                சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே! அப்புறம் பாடப்புத்தகம் தவிரவும்- என்ன புத்தகம் புதிதாகப் படித்தாய் என்றும் மின் உலகில் புதிதாக எனக்கென்ன கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு. 

                                      

சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...                             

நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...                                சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்                                         புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்                                                   

எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க...                                        எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க...

இது – பட்டுக்கோட்டையார்  பாடல்அவ்வளவுதான் மகளே! 

அன்புடன் 

உன்னை முழுமையாக நம்பும்
உன் அப்பா.

நன்றி; எனது முகநூலில்  இதை எழுதிய நண்பருக்கு நன்றிங்க.. 
 என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் 2013ஜூன் 19 ந் தேதி

கோபி- ஹைதர் காலம் திரைப்படப்பாடல்கள் பதிவகம்-

 மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.தங்களை  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்....எழுத்துப்பிழைகளை பொருட்படுத்தாமல் தகவல்களை...