19 செப்டம்பர் 2011

ஒலி

   அன்பு நண்பர்களே,வணக்கம். 
             
         இந்தப்பதிவில் ஒலி பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வோம்.          
      ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. 

        மேலும் கீழுமாக ஒரு பொருள் அதிரும் பொழுது காற்று அமுக்கப்பட்டும், விரிவடைந்தும் அழுத்த வேறுபாடுகள் தோன்றுகின்றன. 

      இந்த அழுத்த வேறுபாடுகள் காற்றின் வழியே நகர்ந்து சென்று நம் காதை அடைகின்றன.

      பேச்சு, இசை போன்றவற்றில் உள்ள ஒலியலைகளைக் கேளொலி  என்கிறோம் அல்லவா, அந்த கேளொலியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒலியலைகள் இருக்கும். 

      பொதுவாக மாந்தர்கள் காதால் கேட்கும் கேளொலிகளின் அதிர்வெண்கள் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் (hertz)  வரை இருக்கும்.

         ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். 

      அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்" (Olson 1957) ஆகும்.


       அதிர்வெண், அலைநீளம், வீச்சு, மற்றும் திசைவேகம் ஆகியன ஒலியின் பண்புகளாகும். ஒலி அலைகளின் பெரும இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.

     மீயொலி (Ultrasound) என்பது ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும்.
    paramesdriver.blogspot.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...