13 செப்டம்பர் 2011

அணு03

எல்லாப் பொருள்களிலும் அல்லது தனிமங்களிலும் (Elements) அணு அதனுடைய அடிப்படை அளவாக இருக்கிறது. தனிமங்களை இதைவிட சிறிய அளவாக அவற்றின் தனிப்பட்ட அடையாளம் நீங்காமல் பிரிக்க முடியாது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவையே.
அதாவது ஒரு அணுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என கூறமுடியும். அணுவைப் பிரித்த பிறகோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். எல்லா அணுக்களிலும் அணுக்கூறுகள் ஒரே மாதிரியானவையே. அணுக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே தன்மை வேறுபடுகிறது

அணுவின் கூறுகள்

ஒவ்வொரு அணுவினுள்ளும் மூன்று வகையான அணுக்கூறுகள் உள்ளன. அவையாவன:
  1. நேர்மின்னி அல்லது புரோட்டான்
  2. எதிர்மின்னி அல்லது எலக்டிரான்
  3. நொதுமின்னி அல்லது நியூட்ரான்

இவற்றில் நேர்மின்னியும் நொதுமின்னியும் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கும். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் (உண்மையில் இந்த மாதிரி முழுக்க உண்மை இல்லையாயினும் இதுவே பொதுவாக பயன்படுத்தப்படும் எளிமைப்படுத்தப்பட்ட மாதிரியாகும். மிகச்சரியான ஓர் மாதிரி குவாண்டம் பொறிமுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.).
இதில் எலக்ட்ரானும், ப்ரோட்டானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம அளவில் இருப்பதால் இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது.

நேர்மின்னி

நேர்மின் தன்மை கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu.

எதிர்மின்னி

எதிர்மின் தன்மை கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். ப்ரோடானுக்கு சமமான மின்சக்தி இருந்தாலும், ப்ரோட்டானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu.

நொதுமின்னி

நேர்மின்னியும் , எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டத்தட்ட ந்யூட்ரானின் எடை 1.0087amu. இது இல்லாமல் ப்ரோட்டான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணு உண்டு.

அணுவின் அளவு

ஒரு எலக்ட்ரான், ஒரு ப்ரோட்டான் மட்டும் கொண்ட மிகச்சிறிய அணுவான ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 5X10(-8) MM,.,..,. உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.

அணு எண்

அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அணு எண் எனப்படுகிறது.. இதுவே அணுக்களை வரிசைப்படுத்த உதவும் குணமாகும். ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே அணு எண்ணைக் கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

SANTHOME INTERNATIONAL (ICSE) SCHOOL, SATHYAMANGALAM - 638402

        ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம், செண்பகப்புதூரில்   சாந்தோம் இன்டர்நேசனல்(ICSE) பள்ளி ஆண்டுவிழா 2024-25              ஈரோடு மாவட்டம், ச...