வளிமம்
- பொருள்களின் நான்கு நிலைகள்: திண்மம், நீர்மம், வளிமம், பிளாஸ்மா (இயற்பியல்) (மின்மவளிம நிலை)
மாந்தர்களும் பிற பல விலங்குகளும் உயிர்வாழ அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு வகை வளிமம் ஆக்சிசன் (ஒட்சிசன்) எனப்படும். இதை உயிர்வளி என குறிக்கிறார்கள். ஐதரசன் (ஹைடிரஜன்) என்னும் வளிமத்தைத் தமிழில் நீரதை என்றும் வழங்குவதும் உண்டு. எனவே ஆக்சிசன், நைட்ரஜன், ஆர்கான், நியான், ஐதரசன் போன்ற பல பொருள்கள் வளிம நிலையில் உள்ளன.
நாம் வாழும் நில உலகில் உள்ள வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய 78% நைட்டிரசன் (நைதரசன்) என்னும் வளிமமும், 21% உயிர்வளியும் எஞ்சியுள்ள 1% மட்டும் தான் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பிற வளிமங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக