அன்பு நண்பர்களே, வணக்கம்.
நம்மில் பலர், தென்துருவமான அண்டார்டிக்கும், வடதுருவமான ஆர்ட்டிக்கும் ஒன்று போல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா?
ஜெட் போர் விமானம் சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும் எப்படிப் பறக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஆகஸ்ட் 26, 2011 vayal 3 பின்னூட்டங்கள்
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
Categories: அறிவியல் செய்திகள்
விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables) அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables) அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் ‘கால அளவு’ என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது.
சீபீட்கள் என்ற பெயர் எப்படி இந்த விண் மீன்களுக்கு வந்தது என்று நாம் காண்போம். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான விண்மீன் சீபஸ் (Cepheus) என்கிற விண்மீன் தொகுதியில் அமைந்த டெல்டா சீபி (Delta Cephie) என்கிற விண்மீன் தான். அதனால் தான் இப்படி மாறும் விண்மீன்களை சீபீட்கள் என அழைக்கின்றனர். டெல்டா சீபியின் கால அளவு 5.3 நாட்கள் ஆகும். நமக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள சீபீட் துருவ நட்சத்திரம் (Pole Star) ஆகும். இதன் கால அளவு வெறும் 4 நாட்கள் தான். சீபீட்கள் எனப்படும் மாறும் விண்மீன்கள் விண்வெளியில் தொலைவுகளை அளப்பதில் மிகவும் உதவியாக உள்ளன.
வானத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே என்றென்றும் மாறாதவை என்றும் நிரந்தரமானவை என்றும் நிலவி வந்த கருத்துக்களுக்கு சாவு மணி அடித்தது, இந்த சீபிட்களின் கண்டுபிடிப்பு தான். இன்னொரு வகையான மாறும் விண்மீன்கள் கூட உள்ளன. அவற்றை ‘மறைக்கும் மாறிகள்’ (Eclipsing Variables) என்கின்றனர். சில விண்மீன்கள் வானத்தில் இரட்டை விண்மீன்களாக (Binary Star‡) உள்ளன. அதாவது இரண்டு விண்மீன்களும் தங்களின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இப்படியான இரட்டை விண்மீன்களில் ஒன்று பிரகாசமாக ஒளிரக் கூடியதாகவும் மற்றொன்று மங்கலான விண்மீனாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இரு விண்மீன்களும் ஒரு பொது மையத்தைப் பொறுத்து ஒன்றை ஒன்று சுற்றி வரும்போது, மங்கலான விண்மீன் பிரகாசமாக ஒளிரும் விண்மீனுக்கு முன்பாக வர வாய்ப்பு உள்ளது. அப்போது அது ஒளிரும் விண்மீனை மறைத்து விடுகிறது. இது ஒரு தற்காலிக ஒளி இழப்பு தான். மங்கலான விண்மீன் மீண்டும் தன் சுழற்சியில் ஒளிரும் விண்மீனை விட்டு விலகும்போது, அது மீண்டும் பிரகாசிக்கிறது. இது போல ஒரு ஒழுங்கில் எல்லாமே நிகழ்கிறது. முதன் முதலில் (1782ம் ஆண்டு) இந்தக் கருத்தை சொன்னவர் ஆங்கில வானியல் வல்லுனர் ஜான் கூட்ரிக் (John Goodricke) என்பவர் தான். ஆல்கால் (Algol) என்கிற இரட்டை விண்மீன்கள் இதற்கு உதாரணம். இப்போதைக்கு இந்த ‘மறைக்கும் மாறிகளை’ நாம் கண்டு கொள்ளாமல் விடுவோம்.
விண்மீன்களை வகைப்படுத்துவதில் அதனுடைய ஒளிரும் தன்மை அல்லது பிரகாசம் (Brightne‡‡) முக்கியமான பங்கு வகிக்கிறது. ஹிப்பார்கஸ் என்பவர்தான் விண்மீன்களை முதன் முதலாக அவற்றின் பிரகாசத்தை வைத்து தரம் பிரித்தார். அவர் மொத்தம் ஆறு அளவு நிலைகளாக (Magnitîde) விண்மீன்களை வரிசைப்படுத்தினார். மிகவும் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்கள் இவருடைய தரப்படி குறைந்த அளவு நிலைகளைக் கொண்டிருந்தது. விண்ணில் தெரிந்த இருபது பிரகாசமான விண்மீன்களை அவர் முதல் அளவு நிலை (Fir‡t Magnitîde) அல்லது முதல் தர விண்மீன்கள் என அழைத்தார்.
முதல் தர விண்மீன்களை விட சற்றே மங்கலான விண்மீன்களை அவர் இரண்டாம் அளவு நிலை (Second Magnitîde) அல்லது இரண்டாம் தர விண்மீன்கள் என வகைப்படுத்தினார். இப்படி மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அளவு நிலை வரை விண்மீன்களை வரிசைப்படுத்தப் பட்டது. இவற்றில் ஆறாம் தர விண்மீன்கள் மட்டும் ஓரளவு கண்ணுக்குப் புலனாகும் அளவு மங்கலானவை ஆகும்.
Categories: அறிவியல் செய்திகள்
விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன.அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.
Categories: அறிவியல் செய்திகள்
லவ்வர்/இல்லத்துணையின் பேச்சை பெரும்பாலான நேரம் புரிந்துகொள்ள முடியாது. நண்பன் என்று நம்பிக் கொண்டிருப்பவர், பக்கத்திலேயே குழி வெட்டிக் கொண்டிருப்பார். இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு எச்சரிக்கும் மூக்கு கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை மற்றும் நரம்புகளின் ஒருவித பாதிப்பு ‘ஆட்டிசம்’ எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பேச முடியாமல், பழக முடியாமல் சிரமப்படுவார்கள். சமூகத்தில் இருந்து சற்று விலகியே இருப்பார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பேச வருகிறார்கள் என்பதை அவர்களால் சட்டென்று புரிந்துகொள்ள முடியாது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையில் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநில தொழில்நுட்ப கல்லூரி (எம்ஐடி) தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. லேட்டஸ்ட்டாக எக்ஸ்ரே மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகின்றனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது:
நமது மூளை நன்றாக செயல்படும் பட்சத்தில், அடுத்தவர்களின் முக பாவத்தை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இவ்வாறு உணர முடியாது. அவர்களுக்கு வசதியாக மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகிறோம். இதில் அரிசி அளவே உள்ள கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது பாக்கெட் அளவு கம்ப்யூட்டருடன் (பிராசசர்) இணைக்கப்பட்டிருக்கும். மனிதர்களின் 24 விதமான முக பாவங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஒருவருடன் பேசுகிறோம் என்றால், இந்த எக்ஸ்ரே கண்ணாடியை அணிந்துகொள்ள வேண்டும். அவரது முகத்தில் ஏற்படும் சிறு அசைவுகள், சுருக்கங்கள் ஆகியவற்றை கண்ணாடியில் இருக்கும் கேமரா கண்காணித்துக் கொண்டே இருக்கும். நேரில் எதிராளி சிரித்தாலும்கூட, அவரது முகத்தில் ஏற்படும் துல்லிய அசைவுகளை வைத்து அவரது மனோபாவத்தை பிராசசர் கணக்கிடும். அவரிடம் பாசிட்டிவ் உணர்வுகள், முகபாவங்கள் தென்பட்டால் கண்ணாடியின் உள் பகுதியில் இருக்கும் சிக்னலில் பச்சை விளக்கு எரியும். ‘தொடர்ந்து பேசலாம். ஆபத்தில்லை’ என்று புரிந்துகொள்ளலாம்.
அவர் நமக்கு ஆதரவானவர் அல்ல என்றாலோ, இனிக்க இனிக்க பேசி, வேட்டு வைக்கிறார் என்றோ தெரியவந்தால் இந்த சிக்னலில் மஞ்சள், சிவப்பு விளக்கு எரியும். உஷாராகி பேச்சை நிறுத்திக் கொள்ளலாம். எதிராளி எந்த நோக்கத்தில் பேசுகிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும். ‘உஷாரா பேசு’ என்று பிரத்யேக ஸ்பீக்கர் மூலம் காதுக்குள் எச்சரிக்குமாறும் வடிவமைத்துக் கொள்ளலாம். கண்ணாடி வடிவமைப்பு பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தற்போதைய அளவில் கண்ணாடி 64 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுகிறது. உரிய மாற்றங்கள் செய்த பிறகு கண்ணாடி அறிமுகமாகும்.
Categories: அறிவியல் செய்திகள்
சிலநேரங்களில் நமது வேகத்துக்கு நம்முடைய கம்ப்யூட்டர் ஈடுகொடுக்காமல் போகிறது. அப்போதெல்லாம் ஆத்திரத்துடன் கீ போர்டை தடதடவென்று தட்டுகிறோம், `தட்’டென்று சுவிட்சை அழுத்தி அணைக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் அப்படிச் செய்வதற்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். கம்ப்யூட்டர் உங்களைத் திருப்பித் திட்டக்கூடும்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள் கணினி வல்லுநர்கள். `ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ்’ கொண்ட அந்த கம்ப்யூட்டர்கள், நம்முடன் உரையாடித் தகவல்களைப் பெறும், விவாதமும் செய்யும்.
இவ்வாறு, கணினியைப் பயன்படுத்துவோருடன் `பேசும் கம்ப்யூட்டரை’ உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பெரிய புராஜெக்டில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கை அறிவுக் கணினி, பயன்பாட்டாளரின் குரலை இனங்கண்டு கொள்ளும். மனிதர் களைப் புரிந்துகொள்ளச் செய்வதும், தேவையான விதத்தில் பேசச் செய்வதும், மனிதர்களைப் போல நடந்துகொள்ளச் செய்வதும்தான் இந்தத் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச லட்சியம்.
இங்கிலாந்து ஆய்வாளர்களின் இந்த ஐந்தாண்டு கால, பல கோடி ரூபாய் திட்டம் தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. ஆயினும் இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார்கள், குறிப்பிட்ட விஞ்ஞானிகள். எடின்பர்க், கேம்பிரிட்ஜ், ஷெப்பீல்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வாளர்கள்.
தற்போதைய ஆய்வின் மூலம், குரலால் இயக்கப்படும் கணினி, இணையதள தேடுபொறிகளுடன், குரலால் கட்டுப் படுத்தப்படும் உபகரணங்களும் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு இத்தகைய உபகரணங்கள் உதவியாக இருக்கும்.
கணினிப் பேச்சு, ஒரு மின்னணு உபகரணத்தில் இருந்து வருவது போலில்லாமல் இயற்கையாக இருக்குமாறும் பார்த்துக்கொள்ளப் போவதாக, ஆய்வாளர்களில் ஒருவரான ஸ்டீவ் ரெனால்ஸ் கூறுகிறார். வருங்காலத்தில் வீடு, அலுவலகம், பொழுதுபோக்கு எல்லாவற்றிலும் இந்தப் பேசும் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும் என்கிறார் இவர்.
Categories: அறிவியல் செய்திகள்
சிறப்புவாய்ந்த `பயானிக்’ மூக்குக் கண்ணாடியை உருவாக்கி வருவதாவும், சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் இவை, பார்வையற்றோருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் இன்ப அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்தக் கண்ணாடியைத் தயாரித்து வருகிறது. இதனுடன் இணைந்த மிகச் சிறிய காமிராக்களும், பாக்கெட் கம்ப்யூட்டரும், கண்ணாடி அணிந்திருப்பவருக்கு எதிரேயுள்ள பொருட்கள், ஆட்கள் பற்றி உஷார்ப்படுத்தும்.
இந்த விலை மலிவான, அதிக எடையற்ற கண்ணாடி, வெற்றிகரமான சோதனைக்குப் பின் 2014-ம் ஆண்டு வாக்கில் சந்தைக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்தக் கண்ணாடி அணிந்தால் பார்வையற்றவர்களால் நெருக்கடிமிக்க சாலைகளிலும் எளிதாகச் செல்ல முடியும், பஸ் நம்பரைக் கூட படிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதைப் போன்ற மூக்குக்கண்ணாடியை உருவாக்கும் முயற்சி ஏற்கனவே நடைபெற்றிருக்கிறது. ஆனால் அவை பெரிய கறுப்புக் கண்ணாடிகளாகவும், ஒழுங்கற்ற காமிராக்களையும், புடைத்துத் தெரியும் கம்ப்யூட்டர்களையும் கொண்டதாக இருந்தன. ஆனால் தற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தால், சாதாரண மூக்குக் கண்ணாடிகளைப் போலவே தோன்றும் இந்த `பயானிக் ஸ்பெக்டக்கிள்கள்’ உருவாக்கப்பட்டிருக்கின்றன.முக்கியமாக, இதன் விலை அதிகமாக இருக்காது என்பதால், தேவையுள்ள அனைவரும் இதை எளிதாக வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது மகிழ்ச்சியூட்டும் செய்திதான்.
Categories: அறிவியல் செய்திகள்
ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமானால் முதலில் அஸ்திவாரம் அமைப்பது வழக்கமான நடைமுறை. அஸ்திவாரம் அமைக்காமலே கட்டிடம் கட்டும் முறை ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
யூரி விளாசவ் என்பவர் கண்டுபிடித்த இந்த முறை, `மண்ணை அழுத்துதல்’ என்று கூறப்படுகிறது.
1968-ம் ஆண்டு, நோவாசி பிர்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடம், களிமண்ணும், மணலும் கொண்ட பரப்பு உடையது. எனவே அங்கு 16 மீட்டர் ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்டினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தீர்மானித்தனர்.
ஆனால் 11 மீட்டர் அளவுக்குத் தோண்டும்போதே அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அதற்குக் கீழே கடும் பாறையாக இருந்ததுதான் காரணம். உடனே மண்ணைப் பற்றி ஆராயத் தொடங்கினர்.
அந்தச் சமயத்தில்தான், 16 மீட்டர் ஆழத்துக்குத் தோண்டாமல் மண்ணை அழுத்திக் கடினமாக்கி, அதன் மூலம் கட்டிடம் அதனை அழுத்தும்போது மண் மிக உறுதியாக இருந்து கட்டிடத்தைத் தாங்கும் என்று விளாசவ் கண்டுபிடித்து உதவினார். அது நல்ல பலனைத் தந்தது.
விளாசவ் முறைப்படி, 12 அல்லது 14 டன் எடையுள்ள உலோக சிலிண்டரை ஒரு கிரேனுடன் இணைக்க வேண்டும். கிரேன் சுழன்று, சிலிண்டரை 15 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே போடும்.
அப்போது மணற்பரப்பில் 3 மீட்டர் ஆழமுள்ள துளை விழும். அதை அடைத்துவிட்டு, மீண்டும் அதே முறையில் பரப்பை அழுத்த வேண்டும். இநëத அதிஅழுத்த சக்தியால் பரப்பில் இருந்து நீர் நன்கு வெளியேற்றப்படும். (பூமிப் பரப்பின் அடியில் உள்ள நீர்க்கசிவே கட்டிடம் பலவீனம் அடைவதற்குக் காரணம். எனவே பரப்பை நீர் வற்றி உலரச் செய்ய வேண்டும்.) அப்போது அந்தப் பரப்பு, 300 டன் எடையுள்ள கட்டிடத்தையும் தாங்கும் வலுவை அடைந்துவிடும்.
இதனால் கட்டிடம் கட்டும் செலவு, நேரம் குறைகிறது. அதே நேரம் உறுதி அதிகரிக்கிறது.
Categories: அறிவியல் செய்திகள்
தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.
நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.
இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.
நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக் கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.
மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.
Categories: அறிவியல் செய்திகள்
நம்மில் பலர், தென்துருவமான அண்டார்டிக்கும், வடதுருவமான ஆர்ட்டிக்கும் ஒன்று போல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா?
தென்துருவம், அண்டார்டிகா என்ற நிலப்பகுதியால் ஆனது. வடதுருவப் பகுதியோ ஆர்ட்டிக் பெருங்கடலால் ஆன நீர்ப்பகுதி. இப்பெருங்கடலை வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் முனைப் பகுதிகள் சூழ்ந்திருக்கின்றன. தென்துருவம் நிலம். வடதுருவம் நீர்.
வடதுருவப் பகுதியில் மனிதர்கள், விலங்குகள், சில தாவரங்கள் அப்பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு வாழும் நிலை இருக்கிறது. தென்துருவப் பகுதியிலோ, நிலப் பகுதி விலங்குகள் எதுவுமே கிடையாது. அங்கேயே வாழும் மனிதர்களும் இல்லை. செடி, கொடிகள் என்றால் சிலவகைப் புற்கள், பாசிகள் மட்டும்தான்.
|
ஆனால் இப்பகுதியில் பெங்குவின் பறவைகள் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காரணம் அங்கு அவற்றுக்கு நிலத்தில் காணப்படும் எதிரிகள் கிடையாது.
தட்பவெப்பநிலை? தென்துருவத்தில் கடுங்கோடையிலும் வெப்பம் மிகக் குறைந்து குளிர் வாட்டி எடுக்கும். மழைக் காலத்திலோ கடும் பனிப்புயல் வீசிக்கொண்டேயிருக்கும்.
வடதுருவத்திலோ, கடற்பகுதியில் இருந்து காற்றலைகள் எழும்பி தட்பவெப்பத்தைச் சற்று மிதப்படுத்துகின்றன. தென்துருவத்தில் கடுங்கோடையிலும் தட்பவெப்பம் 0 டிகிரி அல்லது அதற்கும் கீழேதான். எப்போதாவது அபூர்வமாய் 30 முதல் 40 டிகிரி வரை ஏறுவதுண்டு. மழைக் காலத்தில் கேட்கவே வேண்டாம். வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரிக்கு கீழேதான்.
Categories: அறிவியல் செய்திகள்
அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் போக்குவரத்து நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இதில் அடுத்த புரட்சியாக `ராக்கெட் பிளேன்’ உருவாகவிருக்கிறது.
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `ஈ.ஏ.டி.எஸ்.’, ஜப்பான் நாட்டுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய `ராக்கெட் பிளேன்’ பற்றி ஈ.ஏ.டி.எஸ். கூறுகையில், `கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைந்த ஹைபர்சோனிக் போக்குவரத்து’ என்று தெரிவித்துள்ளது.
இந்த `ராக்கெட் பிளேன்’ மூலம் உலக நாடுகளுக்கு இடையே அதிவேகத்தில் பயணிக்க முடியும். உதாரணமாக, ஆசியக் கண்டத்தில் உள்ள ஜப்பானின் டோக்கியோவில் இருந்து ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பாரீஸுக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
இந்த விமானத்தில் 50 முதல் 100 பயணிகள் வரை பயணிக்கலாம். இது, சாதாரண என்ஜினைக் கொண்டே `டேக்-ஆப்’ ஆகும். அதற்கான எரிபொருள், கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எரிபொருளாக இருக்கும். தரையில் இருந்து சாதாரண என்ஜினால் எழும்பும் விமானம், பின்னர் ராக்கெட் என்ஜினால் செயல்படத் தொடங்கும்.
அந்த ராக்கெட் என்ஜின், ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் எரிபொருளாகப் பயன்படுத்தும். எனவே என்ஜினில் இருந்து வெளியேறுவது வெறும் நீராவியாக மட்டுமே இருக்கும்.
இன்றைய விமானங்கள் பூமிப் பரப்பில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கின்றன என்றால், இந்த ராக்கெட் பிளேன் 32 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும்.
கீழே இறங்குவற்கு, ராக்கெட் என்ஜின் அணைக்கப்பட்டு, மெதுவாகப் பூமி நோக்கித் தாழும். தரையை நெருங்கியதும் சாதாரண என்ஜினை பயன்படுத்தி இறங்கும்.
என்ன, ராக்கெட் பிளேனில் பயணிக்கத் துடிக் கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இதற்கான மாதிரியே 2020-ம் ஆண்டுவாக்கில்தான் தயாராகும். 2050-ம் ஆண்டில் மக்கள் போக்குவரத்துக்கு வரும்.
Categories: அறிவியல் செய்திகள்
இதயம் தனக்குத் தானே பழுதுநீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் செல்லை இடம்மாற்றம் செய்வதன் மூலம், சேதம் அடைந்த செல்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது, இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்ப்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.
தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரிசெய்யமுடியாத நிலையே இன்றும் இருக்கிறது.
இறந்த செல்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான ரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.
பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப்பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர்கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரிசெய்யும் முயற்சியில்தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப்படும் குறிப்பிட்ட செல்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Categories: அறிவியல் செய்திகள்
ஜெட் போர் விமானம் சாதாரண விமானமும், `ஜெட்’ விமானமும் எப்படிப் பறக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
சாதாரண விமானத்தில் என்ஜின், சுழல் விசிறி, இறக்கைகள் இருக்கின்றன. என்ஜின், சுழல் விசிறியை இயக்குகிறது. அது சுழலும்போது காற்றை முறுக்கித் திருப்புகிறது. அதன் விளைவாக விமானம் முன்னோக்கி இழுக்கப்படுகிறது.
நமக்குக் கைகள் இருப்பதைப் போல விமானத்துக்கு இறக்கைகள் இருக்கின்றன. காற்றைப் பற்றிக் கொண்டு நிலையாகப் பறப்பதற்கு இறக்கைகள் உதவுகின்றன. இவ்வாறுதான் சாதாரண விமானம் பறக்கிறது.
`ஜெட்’ விமானம் பறப்பதற்குச் சுழல் விசிறி தேவையில்லை. அதன் என்ஜினில் எரிபொருள் எரியும்போது சூடான வாயுக்கள் விமானத்தை முன்னோக்கித் தள்ளுகின்றன. விமானத்துக்குப் பின்னால் வால் மாதிரி நெருப்புத் தெரியும். வாயுக்கள் எரிவதால் அந்தத் தோற்றம் ஏற்படுகிறது.
பயணிகள் விமானம் எல்லா `ஜெட்’ விமானங்களும் ஒலியைவிட அதிக வேகமாகப் பறக்கின்றன. எனவே `ஜெட்’ போர் விமானத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. `ஜெட்’ விமானத்தின் இறக்கைகள் அம்பைப் போல் இருக்கின்றன. அதன் உடற்பகுதி நத்தையின் ஓடு போலத் தோற்றம் அளிக்கிறது. என்ஜின், ராக்கெட்டைப் போல் அமைந்திருக்கிறது.
விண்வெளி வீரர் அணிந்திருக்கும் உடையைப் போலவே `ஜெட்’ விமானியும் உடை அணிந்திருக்கிறார். ஏன் அந்த உடை? கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகத்தில் விமானம் செல்லும்போது விமானி மீது சுழல்விசை அழுத்தம் ஏற்படாமல் அந்தச் சிறப்பு உடை தடுக்கிறது.
ஜெட் விமானம் சில வினாடிகளில் மேகங்களைத் தாண்டிச் சென்றுவிடுகிறது. அது சென்றபிறகுதான் அதன் இடியோசை போன்ற உறுமலைக் கேட்க முடிகிறது.
Categories: அறிவியல் செய்திகள்
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.
பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.
இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.
Categories: அறிவியல் செய்திகள்
நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக் களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெவ்வேறு நிறங்களில் (அலைநீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த ஒளியை உண்டாக்குவதற்குச் செலவான ஆற்றலும் வீணாகிப் போய்விடுகிறது.
இந்தக் குறைகள் இல்லாத ஓர் அற்புத ஒளியை உண்டாக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் நம்பினர். அந்த அற்புத ஒளியை உருவாக்கியும் உள்ளனர். அதாவது, வெப்பமூட்டப்பட்ட அணுக்கள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும்போது அவற்றின் மீது ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள (நிறமுள்ள) ஒளியை மோதச் செய்ய வேண்டும். இதனால் அந்த அணுக்களை, நாம் அவற்றின் மீது பாய்ச்சினோமே அதே அலைநீளமுள்ள ஒளியை வெளியிடத் தூண்டலாம். புதிதாக வெளியிடப்படும் ஒளி, நாம் அணுக்களின் மீது பாய்ச்சிய ஒளியைப் பல மடங்கு பெருக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஒளிக்கற்றை அற்புத சக்தி வாய்ந்தது. இந்த ஒளி, எளிதில் சிதையாது, ஆற்றல் மிக்கது, அற்புதமானது. மோசமானவர்களின் கையில் கிடைத்தால் ஆபத்தானதும் கூட. இதைத்தான் நாம் `லேசர்’ என்கிறோம்.
லேசர் என்பது ஓர் ஆங்கில வாக்கியத்தின் முதல் எழுத்துகளின் சுருக்கம். அதன் விரிவு, `தூண்டப்பட்ட கதிரியக்கத்தினால் ஒளிப்பெருக்கம்’ என்பதாகும்.
1917-ம் ஆண்டு அறிஞர் ஐன்ஸ்டீன், `தூண்டப்பட்ட கதிரியக்கம்’ பற்றித் தம்முடைய கருத்தை வெளியிட்டார். ஆனால் அதைக் கருவிகள் மூலம் உருவாக்குவதற்கான வழிகள் 1950-களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்க இயற்பியல் அறிஞர்கள் சார்லஸ் கே. டவுனஸ் என்பவரும், ஏ.எல். ஷால்லோ என்பவரும், பார்க்கக்கூடிய ஒளியைப் பயன்படுத்தி, லேசர் கருவியை உருவாக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டினர். அதேசமயத்தில் சோவியத் யூனியனை சேர்ந்த இரண்டு அறிவியல் அறிஞர்களும் தனித்தனியாக இந்தக் கருத்தை உறுதிப்படுத்தினர்.
1960-ம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர் டி.எச். மேயன், ரத்தினக் கல்லைப் பயன்படுத்தி லேசரை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பலவகை லேசர்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் லேசர்கள், அலைநீளம், ஒளிக்கற்றையின் பருமன், திறன் ஆகிய பண்புகளில் ஒன்றுக்கொன்று அதிகளவில் வேறுபடும்.
திரவ லேசர், வளி லேசர், வேதியியல் லேசர், அரைக்கடத்தி லேசர் என்று இன்று பலவகை லேசர்கள் உள்ளன. சில குறிப்பிட்ட லேசர்களின் கூட்டமைப்பினால் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும்.
இரவு நேரத்தில் தொலைவில் உள்ள சுவரில் `டார்ச்’ ஒளியைப் பாய்ச்சுங்கள். டார்ச் ஒளி போகப் போக விரிந்துகொண்டே போய் முடிவில் ஒளியே இல்லாமல் போய்விடும். ஆனால் லேசர் ஒளி அத்தகையதல்ல. ஐந்து மில்லிமீட்டர் விட்டமுள்ள ஒரு லேசர் கற்றையை நிலவில் இருந்து பூமிக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அந்த லேசர் கற்றை சிறிதும் சிதையாமல் (விரிவடையாமல்) அதே ஐந்து மில்லி மீட்டர் விட்டத்துடன் பூமியை வந்து அடையும்! இதனால் அதனுடைய ஆற்றலும் சிதையாமல் இருக்கிறது.
லேசர் கதிரின் ஆற்றல் அளவிட முடியாதது. கோடானு கோடி கிலோவாட் ஆற்றல் உள்ள லேசர் கதிர்களை ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் ஒன்று குவித்தால், அந்தக் கதிர்களில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்றல் உலகத்தில் உள்ள எந்தப் பொருளையும் உருக்கி ஆவியாக மாற்றிவிடும்.
லேசர் கதிரைக் கொண்டு உருக்குப் பாளங் களையும், கான்கிரீட் பாளங்களையும் அறுக்கலாம். சலவைக்கல் பாளங்களை ஆவியாகக்கூட மாற்றலாம். லேசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் அணுச் சேர்க்கை மூலம் அளப்பரிய ஆற்றலை உருவாக்க முடியும். இது நடைமுறை ரீதியில் சாத்தியமாகும்போது எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். சுற்றுப்புறச் தூய்மை கெடுவது பற்றிய பேச்சுக்கே இடமிருக்காது!
Categories: அறிவியல் செய்திகள்
தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது.
1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர் களும் இதன் வழி வந்தன. 18-ம் நூற்றாண்டில்,
கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர்.
கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர்.
நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.
கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப்பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார்.
இதே காலகட்டத்தில், பிரிட்டீஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் `மைக்ரோகிராபியா’ என்ற நூலை வெளியிட்டார். அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.
Categories: அறிவியல் செய்திகள்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிகளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories: அறிவியல் செய்திகள்
மனிதர்கள் 2031 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டியூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் என்ற ரஷ்ய விஞ்ஞானி கூறியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.
அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்’ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Categories: அறிவியல் செய்திகள்
விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
Categories: அறிவியல் செய்திகள்
சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீரர்களையும், பொருட்களையும் எடுத்துச் சென்று வந்தது. அனைத்து விண்கலங்களும் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. டிஸ்கவரி, எண்டவர் விண்கலங்கள் ஏற்கனவே கடைசி பயணத்தை முடித்துவிட்டன. அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை தொடங்குகிறது. இதில் 4 வீரர்கள் செல்கின்றனர். புளோரிடாவின் கேப்கேன வரால் ஏவுதளத்தில் வானிலை தற்போது மோசமாக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் திட்ட மிட்டபடி அட்லான்டிஸ் இன்று புறப்படும். இரு வாரங்களுக்கு பின் பூமி திரும்பியதும் பணியிலிருந்து அட்லான்டிஸ் விடுவிக்கப்படும்.
அதன்பின் அனைத்து விண்கலங்களும் அமெரிக்க மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்படும். புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று வருவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக