19 செப்டம்பர் 2011

சுற்றுச் சூழல் மாசுபடுதல்

                        சுற்றுச்சூழல்

             

         உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின் படி உலகில் மிகவும் மோசமாய் மாசுபட்டிருக்கும் பத்து நகரங்களில் இந்தியாவின் தலைநகரமான டில்லியும் ஒன்று. நுரையீரல் நோயின் பாதிப்பு புதுடில்லியில், தேசிய சராசரியைக் காட்டிலும் 12 மடங்கு மிகுந்து காணப்படுகிறது. இன்னொரு ஆய்வின்படி 20 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், வாகனங்களில் ஏற்படும் மாசு எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. காற்று மாசுபடுதல் போன்றே தண்ணீரும் மாசுபடுகிறது. இந்நிலை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியவற்றில் அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


                  சுற்றுச் சூழல் என்றால் என்ன?

          மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை;
1)      நிலம்
2)      நீர்
3)      காற்று
4)      ஆகாயம்
5)      நெருப்பு

   இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.

          சுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன?
  • தொழிற்சாலை கழிவுகள்
  • ரசாயன திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
  • வாகனங்களின் இறைச்சல்
  • வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
  • மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
  • பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
  • மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
  • மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
  • இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு

           நிலம் மாசுபடுததல்
            தொழிற்சாலை கழிவுகளும், ரசாயன திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.

                நீர் மாசுபடுதல்
               மனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது ஆழ்துளைக் கிணறுகளும்  நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

                   காற்று மாசுபடுதல்
        சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன்  பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணறல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.

           ஆகாயம் மாசுபடுதல்
           இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த விண்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதையாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயன குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

நெருப்பு மாசுபடுதல் (உலக வெப்பமயமாதல்)
          நெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஷ்ணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.


        சிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா ?அப்படித்தானே  நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகளாக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.

      கல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது. மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும்! நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடுகளை  மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது  மனிதன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    paramesdriver.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...