07 செப்டம்பர் 2011

கவிதைகள்




மனிதனாக இரு!
விழுவதாய் இருந்தால்
மழைத்துளியாக  விழு
-
மடிவதாய் இருந்தால்..
விதைகளாக மடி
விழிப்பதாய் இருந்தால்
சூரியனாக விழி!
மலர்வதாய் இருந்தால்
மலர்களாக மலர்
-
இவையெல்லாவற்றையும் விட
எப்போதும்
நல்ல மனிதனாக வாழ்.

>கவியரசர் கண்ணதாசன்
————————-
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்என்றான்!
==========================================

ஆளாகி நாளானேன்!
பூவாகி நாரானேன்!
விளையாத விதையாகி
வீட்டுக்கு சுமையானேன்!
மனசெல்லாம் மல போல
கதைகதையாய் வச்சிருக்கேன்
மனசெல்லாம் கனத்திருக்க..
விறகொடித்து அடுப்பில் வைத்தால்
என் மனம் எரிந்து உலைகொதிக்கும்!
நான் ஒரு முதிர் கன்னி
அப்பா
-
பல ஆண்டுகள்
வாழ்ந்தார்
முதியோர் இல்லத்தில்!
இன்று
ஊதுபத்தி வாசனையுடன்
இல்லத்தில் புகைப்படமாக..!
===========================
பாசம்
-
அன்னையர் தின
வாழ்த்து சொல்ல
கிளம்பினான்
முதியோர் இல்லத்தில்
இருந்த அன்னையைத் தேடி
================================
அடடே
-
குளிர் காலத்திலும்
குளிர்வதில்லை
ஏழையின் வயிறு
======பிடிப்பதற்கு குடையில்லை
ஒதுங்குவதற்கு இடமில்லை
வழித்துணைக்கும் ஆளில்லை
ஆன போதிலும் நகர வாழ்வில்
சோர்ந்து போன மனதை
ரசிப்பதற்கு தூண்டியது
எதிர்பாராது பெய்த
கோடை மழை..!
=========================

நன்றி:
தினத்தந்தி குடும்ப மலர் 8-6-08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...