26 மார்ச் 2015

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-சத்தியமங்கலத்தில்..

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
     தமிழ்நாடு காவல் துறை- ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்  பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்  26.03.2015 வியாழக்கிழமை இன்று சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
    தலைமையுரை. திரு. எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி இ.கா.ப. அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...
     துவக்கவுரை.  திரு.எஸ்.மோகன் அவர்கள்,காவல் துணை கண்காணிப்பாளர் - சத்தியமங்கலம் உட்கோட்டம்.....

               சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் தேவையற்ற சர்ச்சைகளால்  சாலை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சமூக நலனுக்கான கருத்துக்களை பகிர இயலாமல் தடைபட்டது. 
       சாலை பாதுகாப்பு கருதி 
        நான் கூற இருந்த குறைகள் தங்களது பார்வைக்காக..
                  போக்குவரத்துக் காவல் மற்றும் லோகு டிரைவிங் ஸ்கூல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் இணைந்து சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு குழுவாக இணைந்து அறிவுநிலையில் விழிப்புணர்வு கொடுத்தால் மனநிலையில் மாற்றத்தை காண முடியும் என்று முடிவெடுத்து எனது பொறுப்பில்(பரமேஸ்வரன்.சி) இன்றுவரை 18 பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டங்களில் சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை நடத்தியுள்ளோம்.வருடம் முழுவதும் தமிழமெங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கொடுக்க உள்ளோம்.அந்த அனுபவத்தின் அடிப்படையில்....
 (1)சாலை பாதுகாப்பு கருதி....
           காவல்துறை,போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,நெடுஞ்சாலைத்துறை,கல்வித்துறை,ஊடகங்கள்,
அனைத்து அரசியல் கட்சி  பிரமுகர்கள்,தனியார்துறை சார்ந்த லாரி,டெம்போ,ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள்,,தனியார் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கங்கள்,பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள்,வணிகர்  சங்கங்கள்,விவசாயிகளின் சங்கங்கள்,தினசரிப்பயணிகள் குழுக்கள்,போக்குவரத்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ,அரசு சாரா சமூக நல அமைப்புகள்,மருத்துவர் சங்கங்கள்,வழக்கறிஞர் சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள்,இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரையும் அழைத்து சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் மாதம் ஒருமுறையாவது நடத்த வேண்டும். பொதுச்சாலையில் பயணிக்கும் அனைவரும் சமம் என்ற நிலையை உணரச்செய்ய வேண்டும்.அனைவரையும் ஒருங்கிணைத்து சாலை பாதுகாப்பு இயக்கம் வலுவுள்ளதாக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
 (2) ஆசனூர் பள்ளத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தவிர்க்க சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(3)தாளவாடி பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(4)சத்தியமங்கலத்தில் ஊர்க்காவல்படை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(5)சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி அனைத்து பள்ளிகளிலும் நடத்தும்போது அழைப்பு கொடுக்கும்போது காவல்துறை சார்ந்த காவலர் ஒருவராவது  கலந்துகொள்ள  அறிவுறுத்த  வேண்டும்.
          கண்டிப்பாக ஈரோடு மாவட்ட காவல்துறைக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் இந்த தகவல் வேண்டுகோளாக சென்றடைய வேண்டும்.
 என 
சமூக நலனில் அக்கறையுள்ள
 அன்பன் 
 C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண் 26/ 2013.


24 மார்ச் 2015

இலவச கல்வி தமிழமெங்கும்....

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி தற்போது பள்ளிகளுக்கு கொடுத்து வருகிறோம். உங்க பள்ளிகளுக்கும் அழையுங்க..
தமிழகமெங்கும் இலவச கல்வி..
சாலை பாதுகாப்பு கல்வி.....
 
.


16 மார்ச் 2015

கவியரசு என்னும் சமூக அக்கறையுள்ள இளைஞன்


      அவசியம் படியுங்க,பகிருங்க,சிந்தனை செய்யுங்க,
   கவியரசு என்னும் சமூக அக்கறையுள்ள இளைஞன்..


      மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். 
      கடந்த14மார்ச்2015சனிக்கிழமைஅன்று மாலை5.00மணியளவில் சத்தியமங்கலத்தில் நண்பர் கவியரசு (வயது22) அவர்கள் என்னைச் சந்தித்தார்.சமூதாய நலனுக்கான சேவைகள் செய்ய ஆர்வமுடன் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் 15பேரையும் சேர்த்துக்கொண்டு மரம் வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தக்க வழிகாட்டுமாறு என்னை ஆலோசனை கேட்டார்.
         நான் எனது அனுபவத்தை முன்னுதாரணமாகக்கூறி,  ''மரம் வளர்ப்பது என்பது நம்மைப்போன்றோர்களுக்கு இயலாத காரியம்.அரசியலும்,அதிகார வர்க்கமும்,சுயநலவாதிகளும் பொறாமையுள்ளவர்களும் உள்ள இக்காலத்தில் மரங்களை வளர்க்கவும் விடமாட்டார்கள் மாறாக நமக்கு பல இன்னல்களைத்தான் கொடுப்பார்கள்.நமது விருப்பம் நிறைவேறாது.
             எனவே சமூகநலனுக்காக மாற்று பணிகளை செய்யலாம் என ஆலோசனை வழங்கினேன்.
              அதன் பின்னர் மறுநாள் அதிகாலை கவியரசு அவர்கள்  4.46 மணிக்கு என்னிடம் முகநூல் இன்பாக்ஸ் இல் விவாதம் செய்த தகவலை தங்களுக்கு பகிர்கிறேன்.
                       இந்த கவியரசு போல இன்னும் பல கவியரசுகள் இருக்கத்தான் நம்ம நாடும் இந்த அளவிற்காவது சிறப்பாக இருக்கிறது.எனவே  கவியரசு என்னும் இளைஞனின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க ஆதரவளிப்போம் வாழ்த்தி வரவேற்போம் வாங்க.சமூகத்தின்பால் கொண்ட அக்கறை மாறாமல் இதேபோல நீட்டித்து பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துவோம் வாங்க..

  அவசியம் படியுங்க,பகிருங்க,சிந்தனை செய்யுங்க,

திங்கள் 04:46 AM
அன்பு நண்பரே இனிய இளங்காலை வணக்கம் இந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று அவ்வளவும் தெரியா தென்றாலும் ஏதோ தெரியும். ஒரு சமுதயத்தை சீர்படுத்துவது என்பது என்னற்ற மழலை செல்வங்களை நற்பண்புகளுடன் வளர்பதை காட்டிலும் மிகக் கடினமானது. சமுதாய சீர்குலைப்பது ஒரு மழலையை கற்பழிப்பு-கு ஈடானது என்று தாங்கள் கூறியது என்மனம் ஏற்க்க மறுக்கிறது. நல்லா பாருங்க எங்க குமரன்நகரில்.. எங்க வீட்டில் கொய்யா,நெல்லி மரங்கள் வைத்தோம். அதைக் கண்டு அருகில் வசிக்கும் அனைவரும் சிறு நெல்லி மரம் வேண்டும் என்று என்னிடம் அன்பு கட்டளையிட்டார்கள் சரி என்று கூறிவிட்டு எங்கள் வீட்டில் விதைகளை ஊன்றி பதியம் போட்டு வைத்திருந்தேன். விதை முளைத்தது மூன்று மாதங்கள் கடந்து ஒரு அடி அளவுக்கு சிறு நெல்லி 15 செடியும் கொய்யா 10 செடியும் வளர்ந்து விட்டது சரி நாளை கொடுத்துவிடலாம். என்று பார்த்தால் அனைத்து செடியும் காணவில்லை.;-( ஆத்திரத்துடன் கத்திக்கொண்டே வீட்டில் எனது வாதம் துவங்கியது எங்க செடியெல்லாம் என்று வீட்டில் சொன்னார்கள் அந்த செடியெல்லாம் முதலில் பக்கத்து தோட்டத்து காரங்க 3 நெல்லி செடியும் 2 கொய்யா செடியும் வேண்டும் என்றார்கள் குடுத்து விட்டேன் பக்கத்து வீட்டில் கேட்டார்கள் அவர்களுக்கும் இரண்டு செடிகளைக் குடுத்தேன் என்றார்கள். மீதி உன் சித்தி வீட்டில் போய் பாரேன். போய் பார்த்தேன் நெல்லி செடி 2 டும் கொய்யா செடி3 ம் இருந்து அங்கே கேட்டேன் சித்தி இருந்து உங்க சித்தப்பா யாரோ அந்த செடி வேண்டும் என்று வந்தார்கள். கொடுத்து விட்டார். என் சிந்தனை செயல் பட்டது என் இலட்சியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்களை சந்தித்த தினமே விவாதம் செய்ய வேண்டுமா என்று தான் யோசித்தேன் மேலும் தங்களை "குரு'வாக கருதிகிறேன் இப்போது கூறுங்கள் நமது உழைப்பு பலரின் வயிற்றை நிரப்பா விட்டாலும் மயக்கநிலை இல்லாம் மனதை புத்துணர்வோடு வைத்து விட்டால் போதும். தங்கள் நற்பண்புக்கு நன்றி
19 மணி நேரம் முன்பு
 
 
தவறாக எண்ணிக்கொள்ளவேண்டாம் பிழைதிருத்த முடியவில்லை
 
12 நிமிடங்களுக்கு முன்பு
 மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.தங்களது வாதம் எனக்கான வாதமன்றுங்க.சமுதாய நலனுக்கான வாதம்தாங்க.முதலில் தங்களது மரம் வளர்ப்பு ஆர்வத்தை உளமார வாழ்த்துகிறேன்.அடுத்து தங்களைப்போன்றே பத்து சதம் நபர்களாவது தீவிரம் காட்டுவதால்தாங்க இன்னும் நாடு உள்ள பசுமையை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது..தாங்களைப்போன்ற இளைய சமூகம் ஆர்வமிகுதியால் நாட்டின் மீது பற்று மிகுதியால் சமூக நலப்பணிகளை செய்ய விருப்பப்படுவதை வரவேற்கிறேன்.மீண்டும் தங்களுக்கு அன்புடன் கூறுவது என்னவென்றால்,தங்களது எண்ணங்களும்,செயல்களும் நாட்டின் நலன் கருதி!.சமூதாய நலன் கருதி! என்பதை அறியும்போது எனக்கு மிகவும் சந்தோசத்தைக்கொடுக்கிறது.தங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்ன சந்தேகம் என்றாலும் என்னை அணுகலாம்.காரணம் எனது அனுபவங்களையும் சந்தித்த வேதனைகளையும் பிழிந்து சாறாக தங்களைப்போன்று ஆர்வமுள்ள நண்பர்களுக்கு ஆலோசனையாக தருகிறேன்.சிலவேளை கசப்பாக இருக்கலாம்.அதே ஆலோசனை அடிபட்டவர்களுக்கு ஆற்றும் மருந்தாக இருக்கலாம்.எந்தவகையாயினும் சமுதாய நலனுக்காக இருக்கும் என்பதால்,சமூக நலனுக்காக எப்படியான வாதத்தையும் என்னிடம் நடத்தலாம்.அதற்காக பெருமைப்படுபவன் நான் என்பதை மீண்டும் நினைவுப்படுத்திக்கொண்டு என்னை எப்போதும் சந்திக்கவும்,எதிர் வாதம் செய்யவும் வேண்டும் என்ற மகிழ்ச்சி நிறைந்த எதிர்பார்ப்புடன் அன்பன் பரமேஸ்வரன். 9585600733
 
 
தங்களது ஆர்வப்படி, சிந்தனைப்படி,கொய்யா மரங்கள் போன்று தேவைப்படும் மரங்களை விருப்பமுடன் வளர்க்கும் ஆர்வலர்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக வளர்ப்பார்கள்.அதேபோல பொதுச்சாலைகள்,வீதிகள்,புறம்போக்கு இடங்கள் போன்ற அரசுநிலங்கள் என மற்ற இடங்களில் வைக்கும் மரங்களை யார் காப்பாற்றுகிறார்கள்?உதாரணமாக நம்ம மக்கள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது  அவர்களது பிறந்த நாளை போற்றும் வகையில் 64இலட்சம் மரங்கள் அரசாங்கம்,அதாவது வனத்துறை,ஊராட்சித்துறை,கல்வித்துறை,நெடுஞ்சாலைத்துறை என அரசுத்துறைகள் உட்பட அரசியல்வாதிகளும் வைத்தார்கள்.அந்த மரங்களில்  எத்தனை மரங்கள் இன்றுவரை காப்பாற்றப்பட்டு உள்ளன? என கணக்கெடுத்துப்பார்க்க வேண்டும்.
அதனால்தாங்க,மரங்களை வைப்பது மிக எளிதானது.அதனை காப்பாற்றுவது மிக மிக கஷ்டமானது. என வாழ்த்துக்களுடன் மீண்டும் சந்திப்போம்.தங்களது எண்ணங்களும்,செயல்களும் சமூக நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும். என்ற வாழ்த்துக்களுடன் அன்பன் பரமேஸ்வரன் டிரைவர் consumerandroad.blogspot.com
உரையாடல் முடிவு
 

14 மார்ச் 2015

தண்ணீர் குடியுங்க...

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

தண்ணீர் தாகத்தை தீர்ப்பதோடு, உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட....
நாம் வசிப்பது இந்தியாவில் இங்கு அதிக படியான வெயில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..
அதனால் டீ-ஹைடிரேஷன் வர நிறைய வாய்ப்புகள் இருக்கு,
நாம் தண்ணீர் குடிப்பதை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் அதன் அடிப்படையிலேயே இந்த விழிப்புணர்வு பதிவு..
மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அறிவீரா? (சர்க்கரை நோயாளிகளை தவிர )
1)அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும்
2)தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது சுத்தமாக இருக்கும்.உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
3)அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.#உண்மை..அல்சரை வரவிடமால் தடுக்கும்
தண்ணீர் சரியா குடிக்காமல் இருந்தால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது #உண்மை
1) நம் உடம்பில் இருக்கும் ரத்தத்தில் தண்ணீரின் அளவு கூடுதல்%ல இருக்கிறது..அது குறையும் பட்சத்தில் இரத்தத்தின் தன்மை (thick) கெட்டியாக மாறும்.(blood volume drops)..சர்க்குலேஷன் குறைகிறது.
இரத்த அழுத்தம் குறையும்..
2) மூளைக்கு ரத்தத்தின் வழியே செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும்..
அதன் அளவு குறையும் போது மயக்கம் வரும்,இன்னமும் எழுந்து நிற்கும்போதே மயக்கம் வர வாய்ப்பு இருக்கிறது..இதனால் வரக்கூடியது Orthositic hypotension. இரத்தம் கெட்டி தன்மையடந்து முக்கியமான உறுப்புக்களுக்கு செல்லாமல் இருப்பதால்.”ஆர்கன் செயலிழப்புவரும் ( Hypovolemic shock )..இது உயிரிழப்பையும் கொண்டு வரும்.
3) ”கிட்னி” பிரச்சனைகளும் சரியாக தண்ணீர் அருந்தாமையால் வருவதே.
4)Mental Changes,confusion,seizures(fits) குழப்பமான மன நிலை,ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பு இருக்கிறது..
ஒரு நாளைக்கு நாம் அருந்த வேண்டிய தண்ணீரி அளவு 5 லிட்டர்
வயதானவர்களுக்கும்,மற்றும் குழந்தைகளுக்கும் இந்தவிதமான உடல் உபாதைகள் சீக்கிரத்தில் வந்துவிடும்.வயதானவர்கள்,சிறுபிள்ளைகள் யாரையவது சார்ந்துதான் இருக்கிறார்கள், மேலும் தண்ணீர்தானே என அலட்சியபடுத்தவும் கூடும்..ஒரு ”ஆர்கன்” செயலிழப்பு என்பது எத்துணை கொடுமையான விஷயம்..அதை நாம் வரும்முன்னே நீர் அருந்தி தடுப்போம்.
முக்கியமான விஷயம்: காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் நிச்சயம் அருந்த வேண்டும்..தூங்கிக்கொண்டிருக்கும் “ஆர்கன்கள்” அதை நாம் “ஆக்டிவே”செய்வதற்காக..(internal organ activate).
சாப்பிடுமுன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்..(digestionக்காக)
அது போல குளிக்க போகும் முன் ஒரு டம்ளர் நிச்சயம் அருந்த வேண்டும்..(குளிக்கும்போது ரத்த அழுத்தம் குறையும் என்பதால்..)
அதே சமய தூங்குமுன் நிச்சயம் 1 டம்ளர் நீர் அருந்தணும்..(அது ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டோக்” வருவதை தடுக்கும்)
தண்ணீர் கலர் அற்றது..மணமற்றது..ஆனால் அது நம்மை நம் உடல் நிலையை சரியான முறையில் வைத்துக்கொள்ள பயன்படும் ஒரு அருமையான உணவு..அந்த உணவு நம் உயிருக்கு தேவையான ஒன்று..
தண்ணீரை அருந்துவோம்..
உடலை பேணுவோம்.
உயிரை காப்போம்..
வரும் நோயிலிருந்து காத்துக்கொள்வோம்..
‪#‎நேசவிழுதுகளின்_சிந்தனையில்_இருந்து99‬
''எம்.ஆர்.ராதா மிகுந்த முரட்டு சுபாவம் கொண்டவராமே?''
''அந்த முரட்டுத்தனத்தில் ஓர் உண்மை இருக்கும். 1954-ம் வருடம் திருச்சி தேவர் ஹாலில் நடந்த 'கீமாயணம்’ நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டபோது, எம்.ஆர்.ராதா செய்த விளம்பரம், 'என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராக இருந்தாலும் கண்டிப்பாக வரவேண்டாம்; அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்து மனம் புண்பட்டால், அதற்கு நான் ஜவாப்தாரி அல்ல!’
நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் ராதா மைக்கில் சொன்ன அறிவிப்பு, 'உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டும் நாடகம் பார்க்க வரலாம்!’ இத்துடன் இன்னோர் அறிவிப்பையும் செய்தார். 'இந்த நாடகத்தில் தவறு இருந்தால், என்னைத் திருத்திக்கொள்ள நான் தயார். நாடகம் சரியாக இருக்குமானால், நீங்கள் உங்களைத் திருத்திக்கொள்ளத் தயாரா?’
மனசாட்சிக்கு நேர்மையாக நடந்துகொள்பவர்கள், மற்றவருக்கு கோபக்காரராகத்தான் தெரிவார்கள்!''
நானே கேள்வி... நானே பதில்
ஆனந்த விகடன்

திருக்குறளை எளிமையாக கற்பிக்கும் ஆசானை வாழ்த்துவோம் வாங்க.


மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.புதுச்சேரி கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஶ்ரீதர் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

               திருக்குறள், அதிகாரங்களை நூதன முறையில் படம் வரைந்து, தொடர்புபடுத்துதல் முறையில் மாணவிகளுக்கு பாடம் கற்றுத் தருகிறார், புதுச்சேரி கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஸ்ரீதர்.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களையும், 1,330 குறள் களையும் புதுச்சேரியில் உள்ள கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி மாணவிகள் மிக எளிதாக கூறுகின்றனர். பல்வேறு திருக்குறளையும் படங்கள் மூலம் எளிதாக விளக்குகின்றனர்.
படங்கள் வரைந்து அதன் மூலம் மாணவிகளுக்கு திருக் குறளை கற்று தரும் பணியை 6 ஆண்டுகளாக செய்து வரு கிறார், இந்த கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ஸ்ரீதர் (32). இதனால், மனதில் அப்படியே நிலைத்து நிற் கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது:
பொதுவாக புத்தகத்தை வைத்துதான் திருக்குறள் கற்றுத் தருவார்கள். ஆனால், நான் படங்களை வரைய வைத்து கற்று தருகிறேன். மனதில் எளிதாக பதி யும் வகையில் மாணவிகளையே படங்களை உருவாக்குமாறு கூறுவேன்.
இப்படியே 1,330 குறள்களுக் கும் கீ வேர்டுகளும் கண்டுபிடிப் பார்கள். குறள்கள் மட்டுமில்லா மல் 133 அதிகாரங்களையும் மாணவி கள் மனப்பாடமாக சொல்வார்கள்.
அனைத்து அதிகாரங்களுக்கும் தொடர்பு உள்ளது. முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வானத்தில் இருப்பதால் இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு. வானத்தில் இருப்போர் முன்னோர். அதனால், மூன்றாவது அதிகாரம் நீத்தார் பெருமை. இப்படி ஒவ்வொரு அதிகாரங்களையும் தொடர்புபடுத்தி படிப்பதால் எளிதாக குறள் அதிகாரங்களை கற்றுக் கொள்ளலாம். அதே போல் அதிகாரங்களில் வரும் திருக்குறளில் உள்ள வார்த்தை களுக்கான படங்களை வரைந்து பார்த்து அதையும் மிக எளிதாக எங்கள் கல்லூரி மாணவிகள் கூறுவார்கள்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
இது 90-வது குறள். இதில் கீ வேர்டு மோப்பம். அதை நினைவில் வைத்துக் கொள்ள பூவும் அருகே மூக்கும் வரைந்தால் ஞாபகமாக சொல்வார்கள். இதுபோலவே, 100-வது குறளான
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இதில் கனி, காய் வரைவதன் மூலம் எளிதாக சொல்வார்கள். இந்த கீ வேர்டுகளை மாணவிகளே உருவாக்கி விடுவார்கள். திருக் குறளை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை என்று பேராசிரியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நன்றி: தி ஹிந்து தமிழ் நாளிதழ்

13 மார்ச் 2015

THALAVADI - PUMSCHOOL -ANNUAL DAY-2015

              தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -
                                        ஆண்டுவிழா-13மார்ச்2015 
பெற்றோரை மதிக்கத்தெரிந்த சான்றோனை வாழ்த்தலாம் வாங்க!.
 மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா-2015மார்ச்13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  இன்று காலை 10.00மணிக்கு துவங்கி நடைபெற்றது. திருமதி.R.ராஜம்மா B.a.,M.Ed.,அவர்கள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்   துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினர். 
திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.
           இப்பள்ளி ஆண்டுவிழா
 குடும்ப உறவுக்கும் வழிகாட்டியாக அமைந்தது அரசுப்பள்ளி ஆண்டுவிழா..
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
  ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து தமிழ் மொழி,கன்னடம்,உருது,ஆங்கிலம்  என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா .
தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா-2015

 (எனக்கு மனிதப்பண்பு கொடுத்த விழா என்பதே மிகச்சரியானதுங்க..)

    தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.R.மாதேஷ் M.A.,B.Ed., அவர்கள்  பள்ளி ஆண்டுவிழாவில் தன்னை ஈன்ற தாயாரைப் பெருமைப்படுத்திய  காட்சி....

            மேற்கண்ட படத்தில் உள்ளவர்தாங்க, திரு.R.மாதேஷ் M.A.,B.Ed.,தலைமை ஆசிரியர் அவர்களை ஈன்றெடுத்த தாய்.
                ஆரம்ப காலத்தில் கொடுமையான வறுமையிலும்,எழுத்தறிவு இல்லாமல் இருந்தாலும் கல்வியின் சிறப்பை உணர்ந்து தன் மகனை (தலைமை ஆசிரியர் திரு.R.மாதேஷ் M.A.,B.Ed.,அவர்களை)
            எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற விடா முயற்சியினால் படிக்கவைத்து இன்று சிறந்த தலைமை ஆசிரியராக பணியாற்றுவதை கண்ணால் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டு,இந்த வயதிலும் மேடையில் கூடியிருந்த பொதுமக்களிடம் ஐயா,என் மகனை  மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்.இதே போல பொதுமக்களாகிய நீங்களும் உங்க மகனை,உங்க மகளைப் படிக்க வையுங்க.என்று கல்வியின் சிறப்பைக் கூறினார்.மேலும் தன் மகனின் பணிப்பெருமை பற்றி எல்லோரும் பாராட்டும்போது மகிழ்வுற்ற தாய் ஆனந்தக்கண்ணீர் விட்டு கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்தவிதம் கல் மனதையும் கலங்க வைக்கும்படியாக இருந்தது.மேலும் தன் மகனைப்பற்றிக்கூறும்போது
            .அவனுக்கு ஒன்றும் தெரியாது?என் மகன் தவறு ஏதாவது செய்து இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க...என்று நா தழுதழுக்க வேண்டுகோள் வைத்தார் அப்போது,,,,
                      மேடையில் இருந்த சான்றோர்கள்,உயர்ந்த மனிதர்கள் அனைவருமே கண்ணீர் விட்டு கலங்கிவிட்டனர்.அந்த அம்மையாருக்கு தலை வணங்கி வாழ்த்துவோம். அவரை நமக்கு முன்னுதாரணமாக ஏற்போம்.நம் பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைப்போம்.திருமதி.R.ராஜம்மா அவர்கள்,உதவித் தொடக்கப்பள்ளி அலுவலர்-தாளவாடி.குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆண்டுவிழாவை தொடங்கிவைத்து தலைமை ஏற்ற காட்சி.


         திரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,தாளவாடி ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் ஆண்டுவிழாவிற்கு  முன்னிலை வகித்த காட்சி
பெற்றோர் சங்கத்தின் தலைவர் அவர்கள் ஆண்டுவிழாவிற்கு முன்னிலை வகித்த காட்சி.
திரு. சென்னஞ்சப்பா அவர்கள்,
    (திருக்குறள் பேரவை செயலாளர் )ஆண்டுவிழாவிற்கு முன்னிலை வகித்த காட்சி.

                                                    தமிழ்த்தாய் வாழ்த்து
திருமதி.R.ராஜம்மா B.A.,M.Ed.,,உதவித் தொடக்கப்பள்ளி அலுவலர்-அவர்களுக்கு பள்ளி சார்பாக பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி.
திரு. சென்னஞ்சப்பா அவர்கள்,
    (திருக்குறள் பேரவை செயலாளர் )தாளவாடி அவர்களை பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி..
சிறப்பு விருந்தினரான அரசு மருத்துவர் டாக்டர் பால சுப்ரமணியம்M.D.,SIDDHA _GOVT HOSPITAL THALAVADI அவர்களுக்கு பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து வரவேற்ற  காட்சி..
 தாளவாடி வட்டார வள மையம் பொறுப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி.
 திருமதி.R.ராஜம்மா B.A.,M.Ed.,,உதவித் தொடக்கப்பள்ளி அலுவலர்-அவர்களது தலைமை உரையில் அரசுப்பள்ளிகளில் என்ன குறை? என்று கேள்வி எழுப்பினார்.
          நம்ம தமிழ்நாடுஅரசு மாணவர்களுக்காக,  இலவசப் பயண அட்டை,பாடப்புத்தகங்கள்,கணினிகள்,சீருடைகள்,உணவுகள், விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள்,பாதணிகள்,பள்ளிக்கட்டடங்கள்  கட்டமைப்பு வசதிகள் என மாணவர்களின் நலனுக்காக,பொதுமக்களின் நலனுக்காக என பள்ளிகள் அனைத்திற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து வருகிறது.ஆசிரியப்பெருமக்களும் மாணவர்கள் மீது முழுமையான கவனம் செலுத்தி பாடங்களை கற்பித்து வருகின்றனர்.பொதுமக்களாகிய நாம்தான் சரியாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


                   திரு.C. பரமேஸ்வரன் ,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் பள்ளி ஆண்டுவிழா  வாழ்த்துரையில் , 
          நம்ம தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தாங்க, உருது, கன்னட, தமிழ், ஆங்கிலம்  என பல மொழிகளில் கல்வி கற்பித்து வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது.நாம் அனைவரும் இந்தியரே என்ற ஒற்றுமையை இங்கு காணும்போது மிக்க மகிழ்ச்சிங்க.
             சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும் லோகு டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலத்துடன் இணைந்து
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கொடுத்து வந்தோம்.அனைத்து பள்ளிகளும் மிகச்சிறப்பாக ஒத்துழைப்புக்கொடுத்தன.அடுத்த ஜூன் மாதம் முதல் ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து இளையோர்களான  மாணவ சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும்  கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
                        கடந்த ஆண்டு தாளவாடியில் நடத்திய மூன்று இலவச கண் சிகிச்சை முகாம்களும்  தாளவாடி மக்களுக்கு மிகுந்த பயனை அளித்துள்ளது.வரும்2015 மே மாதம்30 ஆம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவோம்.
              வரும் 2015ஜூலை மாதம் முதல் வாரத்தில் சாதி,இன,மொழி,மத வேறுபாடு இன்றி ஒன்றுபட்ட சமூக நல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து   அந்த நிகழ்வில் ,
    சாலை பாதுகாப்பு படை அனைத்து பள்ளிகளிலும் அமைத்து செயல்படுத்துவது.அதற்கான ஒத்துழைப்பு கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ,வட்டார போக்குவரத்து அலுவலகம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ,ஆகிய சான்றோர்களிடம் சட்டப்படியாக விண்ணப்பித்து அனுமதி பெற்று செயல்படுவது.
      திரு.சென்னஞ்சப்பா அவர்கள்  மற்றும் திரு. M.வெங்கட்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  ஆகியோர் பொறுப்பில்  தாளவாடி திருக்குறள் பேரவையை செயல்படுத்துவது., 
  அரசு சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியம்M.D., Siddha Govt.Hospital- Thalavadi  அவர்கள் தலைமையில்   மூலிகை பாதுகாப்பு இயக்கம் துவக்கி 
                   வனத்துறையின் உதவியுடன் தாளவாடி பகுதியில் உள்ள மூலிகை வளங்களைசேகரிப்பது மற்றும்
                 (அறிந்த தாவரங்கள்-அறியாத மருத்துவக்குணங்கள் என்னும் தலைப்பில்)   மூலிகைகளின் மருத்துவங்களை பரப்புரை செய்வது.                      
                 அனைத்து பள்ளி இருபால் ஆசிரியப் பெருமக்களையும் ஒருங்கிணைத்து
 இளைய சமூகத்திற்காக உயர் கல்வி வழிகாட்டுதல் ,அறிவியல் திருவிழா,கணிதத்திருவிழா,சமையல் திருவிழா,விளையாட்டு நிகழ்வுகள் நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
         அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து பயன் பெற வேண்டுகோள் விடுத்தார்.
 அனைவரின் கவனத்திற்கு,
        தாளவாடிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி ஆண்டுவிழா நிறைவு வரை  எனது பணிச்சூழல் காரணமாக பங்கேற்க இயலவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என அன்பன்
 பரமேஸ்வரன்.C.
 TNSTC - DRIVER - 
THALAVADI (ERODE DT)
 மற்றும்
CONSUMER PROTECTION AND ROAD SAFETY ORGANISATION - TAMIL NADU. 

தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-2015 ஆண்டுவிழா

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா-2015 மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதன் தொகுப்பு படங்கள் தங்களது பார்வைக்காக...
...தொடர்ச்சி (5)
குடும்ப உறவுக்கும் வழிகாட்டியாக அமைந்தது அரசுப்பள்ளி ஆண்டுவிழா..
கல் மனதையும் கலங்கவைக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டுவிழாவில் ....
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருதுமொழி,ஆங்கில மொழி,கன்னட மொழி,தமிழ் மொழி என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா .
தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா-2015 (எனக்கு மனிதப்பண்பு கொடுத்த விழா என்பதே மிகச்சரியானதுங்க..)
திருக்குறள் 67,69,70 களுக்கு சான்றாக,அதாவது,
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்,
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்,
என்ற குறள்வரிகளுக்கேற்ப தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் இளமைப்பருவத்தில் தம் தாயார் வறுமை மிகுந்த அன்றைய காலத்திலும் எப்படியாவது தன் மகனை படிக்க வைக்கவேண்டும் என்ற குறிக்கோளின்படி கஷ்டப்பட்டு கடன் வாங்கி,படிக்கவைத்த ஆரம்ப காலத்தை நினைவு கூர்ந்து குடும்ப உறவின் ஆழத்தை பெற்றோருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை பள்ளி ஆண்டுவிழாவில் தம் தாயாரை வரவழைத்து அனைவரின் முன்னிலையிலும் பெருமைப்படுத்திய நெஞ்சைக்குலுக்கிய நிகழ்வின் புகைப்படத்தொகுப்புதாங்க இவைகள்..தலைமை ஆசிரியர் அவர்கள் தம் தாயாருக்கு செலுத்திய பாராட்டும் ,மரியாதையும் நன்றிக்கடனும்,குழுமியிருந்த அனைத்து சான்றோர்களின் கண்களையும் கலங்கவைத்துவிட்டன..அவருடையை தாயாரையும் வாழ்த்துவோம்.அதேபோல நம்ம பெற்றோர்களுக்கும் மரியாதை செலுத்துவோம் ..
DrBalasubramanian Palanisamy உடன்

 .....தொடர்ச்சி (4)
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருதுமொழி,ஆங்கில மொழி,கன்னட மொழி,தமிழ் மொழி என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா .
''பிணியின்மை,செல்வம்,விளைவின்பம்,ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து''
என்ற 738வது திருக்குறளுக்கு உதாரணமாக ,நோயில்லாமை,செல்வம்,விளைபொருட்கள் வளம்,இன்பமான வாழ்வு,நல்ல காவல் இவ்வைந்தும் பெற இளைய மாணவ சமுதாயத்திற்கு வருடம் முழுவதும் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்கள் தங்கள் சேவைப்பணியினை நினைவுபடுத்த,பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி ,கலைத்திறனைகளை,பார்த்து மகிழ,மாணவச்செல்வங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்வாய்ப்பு கொடுப்பது இந்த ஆண்டுவிழாதாங்க
கூடியிருக்கும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்,வட்டார வளமைய அலுவலர்,முக்கிய பிரமுகர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் உட்பட பெற்றோர்கள் மற்றும் சான்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,சமூக சேவை அமைப்புகள்,அரசு மருத்துவமனை மருத்துவர்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,திருக்குறள் பேரவை செயலாளர் அவர்கள், கராத்தே மாஸ்டர் அவர்கள் என பல தரப்பினரும் வருகை புரிந்து சிறப்பித்தமையே சான்றுங்க...அதன் தொடர்ச்சியாக அடுத்து பதிவிலும்(5)பாருங்க...


Karuppu Samy உடன்.....தொடர்ச்சி (3)
அரசு பள்ளியில் என்ன குறை? என்ன குறை? என்ன குறை?
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ்M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தலைமையுரை முதல் நிறைவான வாழ்த்துரை வரை தங்களது உரையில் ,அரசு பள்ளிகளில் எவ்வித குறைகளும் இல்லாமல் இந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருதுமொழி,ஆங்கில மொழி,கன்னட மொழி,தமிழ் மொழி என பல மொழிகளில் இப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி நல்வழி காட்டுவது தாளவாடி மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.அதற்கான சான்றுதாங்க இந்த ஆண்டுவிழா என்றனர்.மேலும் தங்கள் உரையில்,
''பிணியின்மை,செல்வம்,விளைவின்பம்,ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து''
என்ற 738வது திருக்குறளை உதாரணம் காட்டி நாட்டிற்கு அழகான இவ்வைந்தும் பெற இளைய மாணவ சமுதாயத்திற்கு வருடம் முழுவதும் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்கள் நினைவுகொள்ள,பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி ,கலைத்திறனைகளை,பார்த்து மகிழ,மாணவச்செல்வங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்வாய்ப்பு கொடுப்பது இந்த ஆண்டுவிழாதாங்க..என்றனர்....
கூடியிருக்கும் பெற்றோர்கள் மற்றும் சான்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,சமூக சேவை அமைப்புகள்,அரசு மருத்துவமனை மருத்துவர்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,திருக்குறள் பேரவை செயலாளர் அவர்கள், கராத்தே மாஸ்டர் அவர்கள் என பல தரப்பினரும் வருகை புரிந்து சிறப்பித்தமையே சான்றுங்க...அதன் தொடர்ச்சியாக அடுத்து பதிவிலும்(4)பாருங்க...
..தொடர்ச்சி (2)
PUMSCHOOL-THALAVADI -2015
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -தாளவாடி
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பள்ளி ஆண்டுவிழா திரு.R.மாதேஷ் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரிய குழுவினர் மிகச்சிறப்பாக நடத்தினர்.சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை சகிதம் அணிவித்து ஆசிரியர்களின் இலக்கணத்திற்கு அடையாளமிட்டனர்.அதன் தொடர்ச்சியாக அடுத்து பதிவிலும் பாருங்க...

...
 ·

 பள்ளி ஆண்டுவிழா- PUMSCHOOL-THALAVADI 2015
மரியாதைக்குரியவர்களே
,வணக்கம்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா-நம்ம தாளவாடியில்...சிறப்பு விருந்தினர் மற்றும் தலைமை;திருமதி.R.ராஜம்மா அவர்கள்.A.E.E.O.தாளவாடி,முன்னிலை திரு.நஞ்சுண்டநாயக்கர் அவர்கள்,ஊராட்சி மன்றத்தலைவர்-தாளவாடி.திரு.பாலசுப்ரமணியம் அவர்கள்,மேற்பார்வையாளர்,அனைவருக்கும் கல்வி இயக்கம்,தாளவாடி,திரு.சென்னஞ்சப்பா அவர்கள்,தாளவாடி,டாக்டர்,பாலசுப்ரமணியம் அவர்கள்,அரசு சித்த மருத்துவர்,தாளவாடி,திரு. ஜேசுதாஸ் அவர்கள்,PALM2N.G.O.தாளவாடி,
தொடர்ச்சி அடுத்த பதிவு....பாருங்க...

Parameswaran Driver-ன் படம்.