மேலாண்மை யை விளக்கும் குறள்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
என்பதாகும்.
இக்குறள் தெரிந்துவினையாடல் என்ற அதிகாரத்தில் உள்ளது.
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திரு மு.வரதராசனார் உரையாகும்.
இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக எனபது திரு.பரிமேலழகர் உரையாகும்.
முகாமைத்துவ கருமங்கள்
நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும். ஹென்றி பயோலின் (Henri Fayol) கருத்துப்படி:
- planning - திட்டமிடல்
எந்த செயலைச் செய்தாலும் செய்யத்தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது , அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முன்பே திட்டமிடுதல் அவசியம்.
- organizing - ஒழுங்கமைத்தல்
திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் (நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள்) திரட்டுதல்.
- commanding - ஆணையிடுதல்
- co-ordinating - இயைபாக்கல்
எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்தல்.இதனால் ஒரே பணியை இருவர் செய்வது அல்லது ஒரு பணியை யாருமே செய்யாமல் விட்டுவிடுவது போன்றவை தவிர்க்கப் படுகின்றன.
- controlling - கட்டுப்படுத்தல் என்பன முகாமைத்துவ கருமங்களாகும்.
திட்டமிட்டப் பணிகளை ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்துகையில் பாதையில் இருந்து யாரேனும் அல்லது ஒரு சில பணிகளோ வழுவுவதாகத் தோன்றினால் அவற்றை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செலுத்துவது கட்டுப் படுத்துதல் எனப்படும்.
இதை அவர் POCCC என்ற குறியீடாக சுருக்கி விளக்குகிறார்.Fayol#cite note-2
இவை தவிர ஊக்கப்படுத்தல் (motivation),நெறிப்படுத்தல் (directing),ஊழியரிடல் (staffing) போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் கொள்ளப்படும்.
மேலாண்மை குறித்த பதினான்கு தத்துவங்கள்
அறிவியல் அடிப்படையிலான மேலாண்மை - Scientific Management)
முகாமைத்துவ செயற்பரப்புக்கள்
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக