30 மார்ச் 2014

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்-தமிழில்-2014

மரியாதைக்குரியவர்களே, 

                                    வணக்கம்.

             'கொங்குத்தென்றல்' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
             'நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு' வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வாசகங்களை பகிர்ந்து உள்ளேன்.
                    

                        
               வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதிய வாசகங்களை உருவாக்கிக் கொடுத்த 
         'கோபி கல்வி மாவட்டத்தின்' கல்வி நிறுவனங்களான,

 (1)கோபி கலை அறிவியல் கல்லூரி - கோபிசெட்டிபாளையம், 
 (2)சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி - சத்தியமங்கலம்,  (3)ஸ்ரீராகவேந்திரா மேனிலை பள்ளி - சத்தியமங்கலம் ,
(4)அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி - ஆசனூர், (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-தாளவாடி. 
ஆகியவற்றிற்கும் & மாணவ,மாணவியருக்கும்  சமூக ஆர்வலர்களுக்கும்
                   நன்றிகள் பல....
      
       வாக்காளர் உணரவேண்டிய உண்மைகள்;
 (1)வாக்குரிமை நமது அடிப்படை உரிமை,

(2) நமக்கு கிடைத்திருக்கும் தார்மீக உரிமை வாக்குரிமை,

(3) வாக்களிப்பது ஜனநாயக கடமை,

(4)வாக்களிப்பது நமது வாழ்வுரிமை,

(5)ஜனநாயகம் காக்க வாக்களிப்போம்,

(6)தவறாமல் வாக்களிப்போம்,சமுதாயத்தை மேம்படுத்துவோம்,

(7)நமது வாக்கு நாட்டின் போக்கு,

(8)வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை,

(9)ஓட்டு என்ற அதிகாரம் செலுத்துவோம்,ஆட்சி செய்ய உத்தரவிடுவோம்.


(10)வாக்களிப்பது ஐந்தாண்டு ஆட்சியை தீர்மானிக்கும் உரிமை,

(11)வாக்களிப்போம் வாழ்வுரிமை காப்போம்,

(12)நல்லாட்சி அமைய வாக்களிப்போம்

(13)அனைவரும் வாக்களிப்போம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்,

(14)சிந்திப்போம் சுயசிந்தனையில் வாக்களிப்போம்,

(15)சுதந்திரமாக வாக்களிப்போம்,சுதந்திரத்தை பேணி காப்போம்,

(16) யாருடைய தூண்டுதலும் இல்லாமல் வாக்களிப்போம்,

(17)மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் மனசாட்சிப்படி வாக்களிப்போம்,

(18)நல்லாட்சியை தேர்ந்தெடுப்பதே நமது முதல் கடமை,

(19)நமக்கு இருப்பது ஒரே ஓட்டு,தவறாமல் வாக்களிப்போம்,

(20)வாக்களிப்பு என்பது நம்மை ஆளவேண்டியருக்கு நாம் கொடுக்கும்  உத்தரவு,

(21)நமது வாக்கு நாட்டின் தலை எழுத்தையே மாற்றியமைக்கும்,

(22)வாக்களிப்போம் சமூகத்தை வளப்படுத்துவோம்,

(23)நயவஞ்சக பேச்சுக்களை நம்பாதீர்,நல்லவருக்கே வாக்களிப்பீர்,

(24)வாக்காளர் என்பதில் பெருமை வாக்களித்தால் மட்டுமே,

(25)நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்,நியாயமாக வாக்களிப்போம்,

(26)எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,அனைவரும் வாக்களிப்போம்,

(27)நமக்கு நாமே எஜமானர் நேர்மையாக வாக்களிப்போம்,

(28)ஓட்டுப் போடுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்,

(29)எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையா "நோட்டா'' பட்டன் அழுத்துவோம்,

(30)எனது வாக்கு எனது உரிமை,

(31)விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்,

(32)எனது வாக்கு விற்பனைக்கு அல்ல,

(31)காசு,பணம் வாங்காமல் கண்ணியமாக வாக்களிப்போம்,

(32)மனதில் உறுதி வேண்டும்,கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும்,

(33)எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,எந்த இனாமும் வாங்காமல் வாக்களிப்போம்,

(34)ஓட்டுக்கு பணம் பெற்றால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை,

(35)வாக்களிக்க பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் குற்றம்,

(36)மதுபானம்,பிரியாணி,பணம் என ஒருநாள் கொண்டாட்டத்திற்கு ஐந்து வருட ஆட்சியை வீணடிக்கலாமா?

(37)நம் வாக்கினை விற்கலாமா - நல்லாட்சியை தொலைக்கலாமா?

(38)வாக்கை விற்க மாட்டேன்,எதிர்காலத்தை வீணடிக்க மாட்டேன்,

(39)விலை பெற்று வாக்களிக்க விட்டில்பூச்சிகளா நாம்,

(40)வலுவான ஜனநாயகத்திற்கு விறுவிறுப்பாக வாக்களிப்போம்,

(41)வாக்கின் வலிமை மறந்துவிட - நாம் என்ன கொம்பை மறந்த மாடுகளா? நன்றாக சிந்திப்போம்,நல்லவருக்கே வாக்களிப்போம்,

(41)நமது அடிப்படை உரிமைகளை வழங்குவது ஜனநாயகமே,அனைவரும் வாக்களிப்போம்,

(42)பணமோ,இனாமோ வாங்காமல் மனச்சாட்சிப்படி வாக்களிப்போம்,

(43)நம்மை ஆளவேண்டியவரை தீர்மானம் செய்வோம்,நல்லவருக்கே வாக்களிப்போம்,

(44)பணத்திற்கு ஆசைப்பட்டு உரிமையை இழக்கலாமா?

(45)அற்ப சுகத்திற்காக ஐந்து வருடத்திற்கு அடிமையாகலாமா?

(46)இன்று கை நீட்டி பணம் வாங்கினால்? நாளை விரல் நீட்டி பேசமுடியாது,
சிந்திப்பீர் நல்வாக்கினை அளிப்பீர்.

(47)வாக்களிப்பது இன்றியமையாத கடமை,

(48)மருத்துவமனை,ரேசன்கடை,இலவசங்கள்,மதுக்கடை,சினிமா,கேஸ் சிலிண்டர் பெற,கரண்ட் பில் கட்ட,எல்.ஐ.சி.பில் கட்ட,வங்கி கணக்கு கட்ட,கிரிக்கெட் பார்க்க,அன்றாடம் டி.வி. சீரியல் பார்க்க என பொன்னான நேரங்களை வீணடிக்கும் நாம் வாக்களிக்க மட்டும் சலிப்பு காட்டலாமா?வாக்களிப்போம் நமது தார்மீக உரிமையை உறுதிப்படுத்துவோம்,

(49)நம் வாக்கை விற்பது ஐந்து வருடங்களை விற்பது போலாகும்,

(50)வாக்களிப்பு பற்றிய புரிதல் அவசியமாகும்.எனவே பொறுமை இழக்காதீர், புறக்கணிப்பு செய்யாதீர்,
        வாக்களிப்போம் - வலிமையான ஆட்சி அமைப்போம்,

(51)கட்சிகளையும்,தலைவர்களையும் மனதில் வைக்காதீர் மனசாட்சிப்படி வாக்களிப்பீர்,

(52)நமது வாக்கு தர்மத்தை நிலைநாட்டும்,

(53)நம் விரல் நுனியில் வைக்கும் அடையாள 'மை' - சமூக அழுக்கை சலவை செய்யும்,வாக்களிப்போம்.

(54) இன்று நமக்கு தேவை?  வாக்களிப்பதற்கான பக்குவமும் அக்கறையுமே,

(55)சொந்த கரங்களால் ஓட்டு போடும் வாக்காளர்களே,சொந்த சிந்தனையால் ஓட்டு போடுங்கள்,

(56)நாட்டில் வளர்ச்சி ஏற்படவும்,ஊழலை ஒழிக்கவும் ஓட்டு போடுங்கள்,

(57)வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம்,வாக்களிக்க தயார் ஆவோம்,

(58)நமது வாக்குப்பதிவு நம்ம கருத்துரிமை,

(59)போலியான வாக்குறுதிகளை நம்பாதீர்! பொறுப்பாக வாக்களிப்பீர்,

(60)பிடித்த கட்சி என்று பார்க்காதீர்! அதுவே நமக்கு பாதிப்பு,

(61)பழகிப்போன சின்னம் என்று பாராதீர்!,பாதகத்தை தேடாதீர்,

(62)தெரிந்த வேட்பாளர்! என்று பார்க்காமல் எச்சரிக்கையாக வாக்களிப்பீர்,

(63) பழங்காலத்து கொள்கை! என தயங்காதீர்,தன்னிலை இழக்காமல் வாக்களிப்பீர்,

(64)நல்வாக்கு நாம் அளிப்போம்,நல்லவருக்கே அதை அளிப்போம்,
(65)வாக்களிப்பது புனிதமான கடமை ஆகும்,

(66)MY VOTE - MY GOVERNMENT - MY INDIA 

(67)MY VOTE NOT FOR SALE

(68)பணத்திற்கு மயங்கி பல நன்மைகளை இழக்கலாமா?

(69)எனக்கென இருப்பதுஒரே ஓட்டு,அதை வீண்டிக்க மாட்டேன்,

(70)என் வாக்கு என் எதிர்காலத்தின் குரல்,

(71) நமது வாக்கு ஐந்து வருட ஆட்சிக்கான சக்தி,

(72)வேட்பாளர்கள் எவரும் வேண்டாம் என்றால் ''எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை'' என்று ''நோட்டா'' வுக்கு வாக்களிப்போம்.

             தேர்தலில் அதிருப்தியடைந்த மக்களே,'' நம்முடைய ஒரு வாக்குப்பதிவால் எல்லாம் சரியாகிவிடுமா?'' என்ற மனப்பான்மையில் வெறுப்புடன் வாக்களிக்க மறுக்க வேண்டாம்.
''எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை''  
                                                   என்ற பட்டனும் உள்ளது.
    தேர்தல் நடத்தை விதிகள் 1961 ஆம் ஆண்டு 49 - ஓ விதியின்படி
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்க சட்டப்படி அனைவருக்கும் உரிமை உண்டு.
         அதனால் ''எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை''. 
அதாவது ( NOTA -  None Of The Above)  'நோட்டா' என்னும் விருப்பத்தினையும் வாக்குப்பதிவு செய்யலாம்.
              ''நோட்டா'' பட்டன்  இந்த ஆண்டு  வாக்குப்பதிவு எந்திரத்திலேயே பொருத்தப்பட்டுள்ளது. 'எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்ற ''நோட்டா'' பட்டன் அனைத்து வாக்கு எந்திரங்களிலும் கடைசியில் இருக்கும்.
இது தேர்தல் மற்றும் வாக்கு பற்றிய புரிதலுக்கான பதிவு.


1 கருத்து:

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...