22 செப்டம்பர் 2011

கே. ஆனந்த ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஆனந்த ராவ்
Ananda rau.jpg
கே. ஆனந்த ராவ்
பிறப்பு 1893
பிறப்பிடம் சென்னை
தேசியம் இந்தியா
துறை கணிதவியல்
பணி நிறுவனம் சென்னை மாகாணக் கல்லூரி
ஆய்வு நெறியாளர்   ஜீ. ஹெச். ஹார்டி
குறிப்பிடத்தக்க
மாணவர்கள்  
கே. சந்திரசேகரன், வி. கணபதி அய்யர்,
எஸ். மீனாட்சிசுந்தரம், எஸ்.எஸ்.பிள்ளை,
ஸி.டீ. ராஜகோபால்,
டீ. விஜயராகவன்
அறியப்படுவது ஆனந்தராவ் தேற்றம், பகுவியல்
கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர். இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

பிறப்பும் கல்வியும்

சென்னையில் 1893 இல் பிறந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்து விளங்கினார். 1914 இல் கேம்பிரிட்ஜ் சென்று ஜீ. ஹெச். ஹார்டியின் மாணவராகச் சேர்ந்தார். உயர்ந்த பரிசான ஸ்மித் பரிசைத் தட்டிக்கொண்டார். அங்கு முனைவர் பட்டம் பெற்றபிறகு 1919 இல் சென்னை திரும்பினார்.

பணிகள்

சென்னையில் வந்ததுமே மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக எடுத்துக்கொள்ளப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தியநாதசுவாமியும் சென்னை வந்து சேர்ந்தார். இருவருமாக சென்னையை கணித ஆய்வுக்கு உகந்த சூழ்நிலை உடையதாகச் செய்தனர். இதனால் அவர்களிருவரும் பல சிறந்த கணிதவியலர்களை உருவாக்க முடிந்தது.

 சாதனைகள்

  • பகுவியல் பிரிவில் இந்தியாவிலேயே சிறந்த சிலரில் ஒருவராக மதிக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற எம்.ஹெச்.ஸ்டோன் இனால் இவருடைய ஆய்வுகள் மிகவும் பாராட்டப்பட்டன.
  • திறமைமிக்க ஆசிரியர் என்று பெயர் எடுத்தார்.
  • ஹார்டியின் 'ஒருங்காத சரங்கள்' (Divergent series) என்ற நூலில், ஆனந்தராவ் தேற்றம் என்று பெயர் சூட்டப்பட்ட தேற்றமுள்ளது.
  • அவரிடம் பயிற்சி பெற்று பிற்காலத்தில் சிறந்த கணித வல்லுனராக முதிர்ந்தவர்களில் சிலர்:
    • கே. சந்திரசேகரன் (TIFR Mumbai)
    • வி. கணபதி அய்யர் (அண்ணாமலை பல்கலைக்கழகம்)
    • எஸ். மீனாட்சிசுந்தரம் (ஆந்திரா பல்கலைக்கழகம்)
    • எஸ்.எஸ். பிள்ளை (எண் கோட்பாட்டில் சாதனைகள் புரிந்து கணித உலகப்புகழடைந்தவர்)
    • ஸி.டீ. ராஜகோபால் (ராமானுசன் கணித நிறுவனம், சென்னை)
    • டீ. விஜயராகவன் (ஆந்திரா பல்கலைக்கழகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...