உணவில் இருக்கு ஆரோக்கியம்!!!
சித்த மருத்துவ அடிப்படையில் ஒருவரின் உடல் நலத்தில் வாதம்-பித்தம்-கபம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாதம்-பித்தம்-கபம் ஆகியவற்றை உடலில் மிகாமலும் குறையாமலும் சீராக வைத்திருக்க உதவுவது உணவுகளே ஆகும்.
இந்த நிலையில் வாதம்}பித்தம்-கபத்தின் மிகு-குறை குணங்களைச் சீர்படுத்தும் உணவுகள் குறித்துத் தெரிந்து கொள்வது உடல் நலன் காக்க உதவும்.
வாதம் மிகு குணம்: 1. உடல் இளைத்துக் கருத்தல்; 2. சூடான உணவுப் பொருள்களின் மீது விருப்பம்; 3. உடல் நடுக்கம்; 4. வயிறு உப்பல்; 5. தூக்கம் கெடுதல்; 6. வாய் பிதற்றல், தலை சுற்றல்.
வாதம் குறை குணம்: 1. தாழ்ந்த குரல்; 2. அறிவு மங்கல்; 3. மூர்ச்சை அடைதல்; 4. தொழிலில் அதிக சோர்வு.
வாத நோய் குறிகுணங்களைப் போக்கும் உணவுகள்: 1. தேன்; 2. மிளகு; 3. நல்லெண்ணெய்; 4. பெருங்காயம்; 5. விளக்கெண்ணெய்; 6. உளுந்து.
பித்தம் மிகு குணம்: 1. கண்-தோல்-சிறுநீர்-மலம் ஆகியவை மஞ்சள் நிறம் அடைதல்; 2. அதிக பசி மற்றும் அதிக தாகம்; 3. உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுதல்; 4. குறைந்த தூக்கம்.
பித்தம் குறை குணம்: 1. குளிர்ச்சி; 2. நிறக் குறைவு.
பித்த நோய் குறிகுணங்களைப் போக்கும் உணவுகள்: 1. வாழை இலையில் உணவு சாப்பிடுதல்; 2. நாவல் பழம்; 3. தென்னை இளம்பூ 4. வெள்ளை பூசணிக்காய்.
கபம் மிகு குணம்: 1. மந்தமான செரிமானம்; 2. வாயில் நீர் ஊறுதல்; 3. ஊக்கம் குறைதல்; 4. உடல் கனமாக தோன்றுதல்; 5. உடல் வெண்ணிறத்தையும் குளிர்ச்சியையும் அடைதல்; 6. உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் தளர்வடைதல்; 7. அதிக தூக்கம், இருமல்.
கபம் குறை குணம்: 1. தலை சுற்றல்; 2. மூட்டுகள் தளர்ச்சி அடைதல்; 3. மயிர்க்கால்களில் அதிக வியர்வை; 4. இதயத்தில் படபடப்பு ஒலி.
கப நோய் குறிகுணங்களைப் போக்கும் உணவுகள்: 1. முள்ளங்கி; 2. தூதுவளை; 3. விளாம்பழம்; 4. ஓமம்; 5. தேன்; 6. சர்க்கரை.
நன்றி: தினமணி
வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும்.
பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது.
கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு ஒழுங்காய் நடக்கும்.
இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள்.
இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை விட்டு விடவேண்டும்.
புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும்.
மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.
வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.
பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு.
இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது.
பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்).
கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்.
இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.
ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படியாவது தேவை.
அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.
மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.
வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!
வாதம் ,பித்தம் ,கபம் , இந்த மூன்று தோஷத்தை வைத்துதான் ஒரு மனிதன் எப்படி பட்டவன் என்பதை சித்த மருத்துவம் தீர்மானிக்கிறது.
வாதம்
வாதம் என்றால் வாயு அதாவது காற்று .அந்த காற்றை போல லேசா வெயிட் இல்லாமல் இருப்பவர்கள் .
இவர்கள் சிலர் குண்டாக இருப்பார்கள் நினைத்தால் உடல் எடையை உடனடியா குறைக்கலாம் .ஆனால் கூட்டமுடியாது.
சம்மர் சீசன் விரும்புவார்கள் .வெயிலில் அதிகம்
வியர்க்காது.குளிர்ச்சியான சூழல் இவர்களுக்குஒத்துகொள்ளாது .
ஊட்டி கொடைக்கானல் மாதிரியான இடங்களுக்கு போனால் உடல் எண்ணை பசை இல்லாமல் வறண்டு வெடிப்பு வரும.தலை முடி சுருண்டு வறண்டு கறுப்பாக மாறி விடும்.
எதையும் வேகமாக கற்றுக்கொள்வர்கள்.அதே வேகத்தில் மறந்தும் விடுவார்கள் .
உடம்பு மனசு ரெண்டும்.அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும் .
மலச் சிக்கல் இருக்கும் . அதிகம் தூங்குபவர்கள்.
உருப்படியா ஒரு முடிவு எடுக்க முடியாத குழப்பவாதி.
ஒரு வேலை சாப்பாடு இல்லாட்டிலும் மயங்கி விழுந்துடும் .
ஆனால் இன்னைக்கு நல்லாருக்குனு வெளுக்குற சாப்பாட்ட மறுநாள் பாத்தா வாந்தி தான் எடுக்கும்.
பித்தம்
இவர்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் வாகு இருக்கும் .முடி நேராக வளரும் . சீக்கிரமா நரைத்து விடும் .வழுக்கை தலைதான் .
ஏசி ரூம்ல கூட வியர்வை வரும் . அதிகப் பசிஉணர்வு உள்ளவர்கள்.
ரொம்ப குளிர்ச்சியை விரும்புவார்கள். . ஜில்லுனுதான் சாப்பிடப் பிடிக்கும் .
சீக்கிரம் போதை பழக்கம் , பீடி, சிகரெட், தண்ணி-போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.எளிதில் மறக்கமாட்டார்கள்.நல்லவர்களாக இருப்பார்கள்.
.சுறுசுறுப்பானவர்கள்.வெற்றிபெற அதிக வேகத்தில் செயல்படுவார்கள்.
அதிக தூக்கம் கொள்பவர்கள.நினைத்தால் உடனே எழுந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
கபம்
சொகுசானவர்கள்(விரும்புபவர்கள்). குண்டானவர்கள்.உடம்பு எடையைக் குறைக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்கள்.பொறுமையானவர்கள்.அதிக சோம்பல் உடையவர்கள்.எந்த வேலையும் மெதுவாகத்தான் நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக