- பச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடவும்
-
- சாதாரண திட்ட உணவு முழுமைபெறவும், சுவையாக இருக்கவும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.
- காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.
- பழங்கள் மற்றும் காய்கறிகளில், நார்ச்சத்துகளும் கண் பார்வைக்கான ஒளி வேதிப்பொருட்களும் உள்ளன.
- கீரைகள், காய்கறிகள் (மஞ்சள் / ஆரஞ்சு) மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் முலம் நுண்ணுாட்டக் குறைபாட்டினால் ஏற்படும் சத்துக்குறைவு நோய்கள் மற்றும் நெடுநாள் நோய்களைத் தவிர்க்கலாம்.
- கண் பார்வைக்கு வைட்டமின் 'ஏ' தேவை.
- வைட்டமின் 'ஏ' குறைபாடு, மாலைக்கண் நோய் மற்றும் கண்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
- அதிகமான வைட்டமின் 'ஏ' குறைபாடு இருப்பின், இளங் குழந்தைகளுக்கு கண் குருடாகிவிடும்.
- குழந்தைப் பருவங்களால் ஏற்படும், வயிற்றுப்போக்கு, அம்மை, மூச்சுக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்களினால் வைட்டமின் 'ஏ' உட்கிரகித்தல் குறைகிறது.
- பால், முட்டை, ஈரல் மற்றும் மாமிச உணவுகளில் வைட்டமின் 'ஏ' உள்ளது.
- தாவர பொருட்களில், வைட்டமின் 'ஏ', பீட்டா கெரோடின் வடிவில் உள்ளது.
- அடர் பச்சைக் கீரை வகைகளான முருங்கைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தய கீரை, பருப்புக் கீரை மற்றும் பழங்கள், கேரட், மஞ்சள் பூசணி, மாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் அதிக அளவில் கரோட்டின் உள்ளது.
- அன்றாட உணவில் பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
- காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும்.
- வீட்டுக் காய்கறித் தோட்டத்தில், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவும்.
- பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும். பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
28 செப்டம்பர் 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முத்தமிழ் என்றால் என்ன?
முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக