23 செப்டம்பர் 2011

கல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒரு கடினமான பாடத்தை எப்படி நடத்தினால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதில் தொடங்கி வொர்க்‌ஷீட் எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரை அனைத்துவிதமான ஐடியாக்களையும் நமக்கு அளிப்பதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://atozteacherstuff.com
A to Z Teacher Stuff இது தான் இணையதளத்தின் பெயர் ஆசிரியர்களுக்கு எப்படி அவர்களின் அறிவை மேலும் பட்டை தீட்டலாம் என்று சொல்லும் இத்தளத்திற்கு சென்று நாம் Word Shapes Worksheet Generator , Word Search Maker , Handwriting Worksheet Generator , Leveled Books Database, Science Experiments Teacher Tools ,Teacher Tips , Lesson Plans , Printables & Worksheets என அனைத்தும் பயன்படுத்தலாம் தேவையான பிரிண்ட் செய்த பேப்பரை தறவிரக்கம் செய்யலாம். ஆசிரியர்களுக்கு பாடத்தில் ஏழும் சந்தேகங்களுக்கு விடை அளிக்க பல திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளையும் எவ்வாறு திட்டமிட்டு பாடம் நடத்த வேண்டும். பாடத்தில் உள்ள முக்கியமானவற்றை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்ல எண்னென்ன நுணுக்கங்கள் எல்லாம் உள்ளன என்பதை அழகாக பட்டியலிட்டு சொல்கிறது இத்தளம். நமக்கு அறிவை போதித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் நன்றியையும் அன்பையும், இந்தப்பதிவையும் சமர்ப்பிக்கிறோம்.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.
பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்
பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.
பேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் 12 நாட்களில் உருவாக்கும் டையேஸ்போரா
 
வின்மணி சிந்தனை
அன்பால் மாணவரை திருத்தும் ஆசிரியர்கள் இந்த
நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து.
 


இன்று செப்டம்பர் 5 

பெயர் : வ. உ. சிதம்பரம்பிள்ளை,
பிறந்ததேதி : செப்டம்பர் 5, 1872
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு
உரிமையோடு விளங்க வேண்டுமென்றால்
முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்
இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க
வேண்டும் என்று கூறியவர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...