19 ஆகஸ்ட் 2026

பவானிசாகர் புத்தகத்திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி, மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி - 2026

 



மதிப்பிற்குரிய வாசகர்களே,

         வணக்கம். வருகின்ற 2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமையும் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இரண்டுநாட்கள்  னவானிசாகர் பேருந்துநிலையம் அருகிலுள்ள  தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் ஐயா அவர்கள் நினைவு அரங்கத்தில்,


     சத்தியமங்கலம் மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு,யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் இணைந்து, மக்களின் வாழ்வாதாரத் திருவிழாவாக

 பவானிசாகர் புத்தகத் திருவிழா,மரபு விதைகள் கண்காட்சி மற்றும் பள்ளிகளின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி மற்றும் குறிப்புரை வழங்குதல் நிகழ்வு என நடத்துகின்றன.



பேரன்புகொண்ட பொதுமக்களே,  வாசகர்கள் மற்றும் வேளாண்பெருங்குடி மக்களே,

வணக்கம்.பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் மரபு விதைகள் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம் .அனுமதி இலவசம்,அனைவரும் வருக.அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்க.

 தெற்காசியாவின் மிகப்பெரிய மண் அணை அமைந்துள்ள பவானிசாகரில் ஈரோடு பாசனத் தந்தை தியாகி M.A.ஈஸ்வரன் அரங்கத்தில்,

சத்தியமங்கலம் தாலுக்கா மனித உரிமைகள் அணிகளின் ஒருங்கிணைப்புக்குழு, யங் மைன்ட்ஸ் இன்டர்நேசனல் கிளப்  மற்றும் சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் இணைந்து ,

முதன்முறையாக ,

பவானிசாகர் புத்தகத் திருவிழா மற்றும் விற்பனை, மரபு விதைகள் கண்காட்சி மற்றும் விற்பனை,பள்ளி மாணவ,மாணவிகள்  பங்கேற்கும் மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி

வருகின்ற 2026- ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை மற்றும் 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள்   நடத்துகின்றன.

காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பல்லாயிரக்கணக்கில் 

பொது அறிவுப் புத்தகங்கள் கண்காட்சி &10℅தள்ளுபடி விற்பனை,

நாட்டுக் காய்கறி விதைகள், கீரை விதைகள், மூலிகை விதைகள், விதைக் கிழங்குகள், விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களுக்கும் தேவையான உபகரணங்கள்,இடுபொருட்கள்,கண்காட்சி & விற்பனை நடைபெறுகின்றன.

2026 ஆகஸ்டு மாதம் 29 ஆம்தேதி சனிக்கிழமை காலை சரியாக 10.00 மணிக்கு மீன்வளத்துறை,வனத்துறை உட்பட  வேளாண்துறைகளின் விஞ்ஞானிகளும்,அரசு ஊழியர் பயிற்சிநிலையம், பேரூராட்சி மன்றத்தலைவர் அனைத்து வார்டு உறுப்பினர்கள்,வணிகர் சங்கம்,வியாபாரிகள் சங்கம்,சமூக சிந்தனையாளர்கள் உட்பட சான்றோர் மேன்மக்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

மாலை 3.00 மணியிலிந்து 4.00 மணிவரை வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் வேளாண் கருத்தரங்கம் மற்றும்  தற்போது நம்மை மிரட்டிவரும் எல்- நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்கொள்ளும் வறட்சி,அதிகவெப்பம், மற்றும் பெருமழையின் பாதிப்புகளும் பாதுகாப்பும் கலந்தாலோசனைகளும் நடைபெறுகின்றன.இரவு 6.00 மணிக்கு இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அடுத்தநாள் 2026 ஆகஸ்டு 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு

மகளிர் சுய உதவிக் குழுக்களும்,தன்னார்வ அமைப்புகளும் ,குடும்பப் பெண்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.அதுசமயம், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுப் பொருட்கள்,தின்பண்டங்கள்,நஞ்சில்லா உணவுகள்,கைவினைப் பொருட்கள்,கைத்தறி ஆடைகள் கண்காட்சியும் குறைந்தவிலையில் விற்பனையும் நடைபெறுகின்றன.

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

மதியம் 2.00 மணிக்கு மீனவர் நலனில் தமிழக அரசு தலைப்பில் ஒளிப்படக்காட்சியுடன் மீனவர்கள் குடும்பவிழாவும் மீன் உணவுகள் விற்பனையும் நடைபெறுகின்றன.

மாலை 4.00 மணிக்கு சித்த மருத்துவர்களும், மூலிகை மருந்துகள் விற்பனையாளர்களும்,மூலிகைத் தாவரங்கள் சாகுபடியாளர்களும் சூழல் ஆர்வலர்களும் கலந்துகொள்ளும், " தமிழ்வழி மருத்துவம் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

மாலை 6.00 மணிக்கு நிறைவுவிழாவுடன் நிறைவுபெறுகின்றது.







11 பிப்ரவரி 2026

கொளப்பலூர் திரு. K. முருகன் அவர்களுக்கு அஞ்சலி...

 















ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழா- 2026 பிப்ரவரி 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை.

 







ஓடும் நேரத்தோடு இயங்கவேண்டிய கட்டாயம் 🙏

  பணிவான வணக்கம்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழாவில்  பங்கேற்ற சான்றோர்களில் சில மேன்மக்கள் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்....அதாவது, 

(1) நூல் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப்பரவலாக்கும் தன்னார்வலர்களுக்கான ''மக்கள் சேவகர் விருது''  வழங்கப்பட்ட இருவருமே சரியான தேர்வு...

(2)பிற்பகல் சரியாக  4.00 மணிக்கே பவர்பாய்ண்ட் பிரசன்டேசன் ஒளிபரப்பி நேரத்தை பிரித்து வீண் ஆக்காமல்  சரியாக பயன்படுத்தப்பட்டது...

 (3) வரவேற்புரையிலிருந்து  கடைசியாக திரு.முரளிதரன் அவர்களின் இளமைக்காலத்தை உரையாக வழங்கியதுவரை சலிப்பே இல்லாமல் 8.30 மணிவரை நிகழ்வினை எதிர்பார்க்க வைத்து நேரத்தை கடத்தியது  பாராட்டவேண்டியது.

(4) நூலாசிரியரின் ஆசிரியர் திரு.அகஸ்டியன் அவர்களுடைய உரை நம்மையும் மாணவப்பருவத்திற்கு கொண்டுசென்றது.

(5) நூலாசிரியர் ஏற்புரை அருமை 👌

(6) நன்றியுரைக்கு நேரம் கொடுத்திருக்கலாம்.

(7) மேடையேறி உரையாற்றுவதற்காக தயாராக தயாரிப்போடு வந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும்..

என்று கருத்து கூறியிருந்தனர்.

மேற்குறிப்பிட்ட கருத்தினை ஏற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் அதற்கான விளக்கம் பின்வருமாறு...

(1) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிற்பகல்4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.(2) நூலக விதிகளின்படி இரவு 8.00 மணியுடன் வேலைநேரம் முடிவதால் 8.00 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றனர்.

(3) சரியாக 4.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவினை தொடங்குவதற்கேற்ப எல்லோருமே 3.50 மணிக்குள் அரங்கு வந்திருந்தால் நேரத்தை ஒழுங்குபடுத்தி சமூக சேவகர்களின் PPT ஒளிப்படநிகழ்வினை தலா பத்துநிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பிவிட்டு மற்ற நேரத்தை விழாநிகழ்வுக்கு கொண்டுவந்திருக்கலாம். ஓரளவாவது குறையினை சமாளித்திருக்கலாம்.

(4) நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்து உதவ வேண்டும்.

(5) நிகழ்வு அரங்கில் உள்ளோர் விழா நடத்துவதற்கான மொத்தநேரத்தையும், ஒவ்வொரு உரைக்கும் கழிந்துவரும் நேரத்தையும் கணக்கிட்டு வரவேண்டும்.

வரவேற்புரை 5  - 8 நிமிடங்களில் முடிந்துவிடும்.

தலைமையுரைக்கு நேரம் அறிவிக்க இயலாது.இருந்தாலும் 5 முதல் 15 நிமிடங்களில் முடிப்பர்.

நூல் அறிமுகவுரை,

நூல் ஆய்வுரைக்கு நேரம் சுருக்கி அறிவிக்க இயலாது.

சிறப்புரைக்கும் நேரம் அறிவிக்க இயலாது.

மீதமுள்ள நேரத்தை நூல் வெளியிடுதல்,

முதல்பிரதி பெறுதல்,

 சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கல்,

உரைக்கு முன்னதாக ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளர்களைப்பற்றி அறிமுகவுரை வழங்குதல், 

தேர்வு செய்யப்பட்ட சமூகசேவகர்களுக்கு அறிவித்தபடி விருது வழங்கல் ,

 நூலாசியருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுப்பொருட்களும்,பரிசுகளும் வழங்கல்,

வாழ்த்துரை வழங்கல்,

 ஏற்புரை வழங்கல்,

நன்றியுரைவழங்கல்,

நாட்டுப்பண் இசைத்தல் என அனைத்துக்கும் நேரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டிய சிக்கலான நெருக்கடி...

நீங்களே பகுத்தாய்ந்து கணக்கிட்டு பிரித்துப் பாருங்க.வேகமாக துரிதப்படுத்தியும் இரவு 8.30 மணிக்கு மேலாகி தாமதமாகிவிட்டது.

ஆதலால் இந்த விளக்கத்தில் எந்த இடத்தை சிக்கனப்படுத்தி நேரத்தை மீதப்படுத்துவது.நேரம் நமக்காக காத்திருப்பதில்லை.ஓடும் நேரத்தோடு ஓடிக்கொண்டே பகிர்ந்துகொள்ளவேண்டிய கட்டாயம்.ஆதலால் ஏற்பட்ட குறைகளை பொறுத்தருள வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

நிகழ்ச்சி நெறியாளர்,

செ.பரமேஸ்வரன்.

ஆளப்பிறந்தவன் நூல் வெளியீட்டு விழா

  அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

06-02-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை  சென்னை,கோட்டூர்புரம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்திலுள்ள நூல் வெளியீட்டுக்கூடத்தில் கும்மிடிபூண்டி சாலைப் போக்குவரத்து நிறவனத்தின் தூணை இயக்குநர் திரு.முரளிதரன்.சு.ரெ. அவர்களின்  'ஆளப்பிறந்தவன்' நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. 














25 ஆகஸ்ட் 2025

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம். 

கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்....

3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 சனிக்கிழமை மற்றும் 14-09-2025ஞாயிற்றுக்கிழமை இருநாட்கள் நடைபெறுகின்றன. 

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்  மற்றும்

 எழுத்தாளர்.த.ஸ்டாலின் குணசேகரன்,

தலைவர்,மக்கள்சிந்தனைப்பேரவை,ஈரோடு அவர்கள் கொளப்பலூர்  வருகை....




















கோடை பண்பலை மற்றும் தோழா பண்பலை 
ஊடகங்களின் ஆதரவு எனக்குப் பெருமை..