30 நவம்பர் 2013

பாண்டிச்சேரி முகநூல் நண்பர்கள் சந்திப்பு-2013

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.
             கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நாளை அதாவது டிசம்பர் ஒன்றாம் தேதியன்று காலை பாண்டிச்சேரி முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் வாங்க!




2013 டிசம்பர் 01 புதுச்சேரி முகநூல் சந்திப்பு
         போதையில்லா திருவிழா-
                      நல்ல பாதை காட்டும் திருவிழா.....


நிகழ்ச்சி நிரல்:

09:30 நண்பர்கள் வருகை பதிவு
அடையாள அட்டை மற்றும் டி-ஷர்ட் வழங்குதல்
10:30 தமிழ்த்தாய் வாழ்த்து
10.35 வரவேற்புரை (முகம்மது அலி )
10:50 காலை சிற்றுண்டி
11.00 நண்பர்கள் அறிமுகம்
12:00 ரத்ததான முகாம்
01.00 பல் பராமரிப்பு முகாம் ( Dr இளையராஜா& Dr.எழிலன்)
01.30 மதிய உணவு (சைவம் & அசைவம் )
02.30 புத்தக வெளியீடு
03.00 நண்பர்கள் கொண்டாட்டம்
(விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசு வழங்குதல் )
05.00 வாழ்த்துரை
06:30 நன்றிஉரை
நாட்டுப்பண்
  எனது முதல் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோடு மாநகரில்

அதற்கான ஏற்பாடு செய்த சான்றோர்கள் விவரம்;-
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707

ஆகிய சான்றோர்கள்

ஏன் சங்கமம்?
ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.இவ்வாறான நோக்கத்தில் நடத்தினார்கள்.
                அடுத்தது சென்னை
ஈரோடு பதிவர்கள் சங்கமம், கோயம்புத்தூர் பதிவர்கள் சந்திப்பு என்ற வரிசையில் உருவாகியதுதான் சென்னைப் பதிவர் சந்திப்பு திருவிழா..








                        


           மாநிலத் தலைநகர் சென்னையில் நடந்த இந்த பதிவர் சந்திப்பு விழாவுக்காக அரும்பாடுபட்டு வந்தவர்கள் பலர்.. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் திரு.மதுமதி.திரைப்படப்பாடலாசிரியர்  அவர்கள்.

விழாவிற்காக முனைப்புடன் செயல்பட்ட சென்னைப் பதிவர்கள்: 

மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ், கவிதை வீதி சௌந்தர், பட்டிக்காட்டான் பட்டிணத்தில் ஜெயக்குமார், கரைசேரா அலை அரசன், தென்றல் சசிகலா, டி.என்.முரளிதரன், புலவர் இராமானுசம், கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின், டீக்கடை சிராஜுதீன் மற்றும் சென்னைப் பித்தன் ஐயா அவர்கள். (இதில் பெயர்கள் விடப்பட்டிருக்கலாம்.. )

பெரும்பாலான வலைப்பதிவர்களை இணையவழி உரையாடலில் அழைத்தும், தொலைபேசி, மின்னஞ்சல்கள் வழியாக அழைத்தும், யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் பொது வலைத்தளங்களில் விளம்பர அழைப்பை வைத்தும் எத்தனையோ வழிகளில் அனைத்து வலைப்பதிவர்களையும் சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு வரவழைத்துவிட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டவர் மரியாதைக்குரிய மதுமதி அவர்கள்..

        பதிவர்கள் சந்திப்பு(Bloggers meeting) என்பது இன்று நேற்று அல்ல.... கடந்த சில வருடங்களாகவே நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்கள்.. அவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்துக்கொள்ளக் கூடிய சிறிய சிறிய சந்திப்பாக இருந்தது. ஆனால் ஈரோடு கதிர் அவர்கள் ஆரம்பித்த ஈரோடு பதிவர்கள் சங்கமம்தான் எனக்குத் தெரிந்தவரை முதன் முதலில் அதிகபட்ச பதிவர்கள் சந்தித்துக்கொண்ட பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி என நினைக்கிறேன்.
       ஆம் நண்பர்களே..! திருவிழாதான்.. சுற்றம் எல்லாம் கலந்துகொண்டு கூடிப் பேசி மகிழ்ந்து, மீண்டும் பிரிவதைப்போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்துவதுதான் திருவிழாக்கள்.. திக்கொரு பக்கம் இருக்கும் உறவினர்கள் ஒரு நாளில் ஓர் இடத்தில் கூடி, வேண்டிய செய்திகளைப் பரிமாறி, விருந்துண்டு, கூடி கலந்துப் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே ஏற்பட்டன திருவிழாக்கள்.

  இணையத்தில் இன்பத்தமிழை வளர்ப்போம் 
என 
உங்கள் டிரைவர் 
பரமேஸ்வரன்-
தாளவாடி -
ஈரோடு மாவட்டம்.

10 நவம்பர் 2013

தொற்றாநோய்கள்-நீரிழிவு நோய்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன்.வாழ்க்கை முறையிலும்,உணவுப் பழக்கவழக்கங்களிலும்,மாற்றங்களை கொண்டுவந்து நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
                       நீரழிவு நோய்(Diabetes Mellitus)
         நீரிழிவு நோய் என்றால் என்ன?
 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிலையேநீரிழிவு நோய் ஏற்படக் காரணமாகிறது.2நமது உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்காமல் போனாலோ,அல்லது சுரக்கப்படும் இன்சுலின் சரியாக உடலில் பயன்படுத்தப்படாமல் போனாலோ நீரிழிவு நோய் ஏற்படும்.3இன்சிலின் என்பது நமது உடலில்,வயிற்றின் நடுப்பகுதியில் உள்ள கணையம் என்னும் நாளமில்லா சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.இதுதான் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சர்க்கரையை எடுத்துச்சென்று அதை ஆற்றலாக (சக்தியாக) மாற்றித்தர உதவி செய்கிறது.4இன்சுலின் உடலில் சரியாக சுரக்காதபோதோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் செயல்பாடின்றி போனாலோ நமது உடலில் சர்க்கரையை எடுத்து செல்லும் பணி நடக்காமல் போய் விடுகிறது.அதனால் உடலில் சர்க்கரை தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சிறுநீரில்கூட வெளியேறலாம்.அதனால் உடலுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்காமல் உடல் சோர்வுறுகிறது.
    
                    நீரிழிவு நோய்க்கான காரணிகள் இருவகை;-
 மாற்ற இயலாத காரணிகள் &மாற்றக்கூடிய காரணிகள்.
  (அ) மாற்ற இயலாத காரணிகள்
(1)வயது வயது அதிகரிப்பதற்கு ஏற்ப இந்நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
(2)பாலினம்-ஆண் மற்றும் பெண் என வேறுபாடின்றி சமமாக பாதிக்கின்றனர்.
(3)குடும்ப பின்னணி-குடும்பத்தில் இரத்த சம்பந்தமுடைய உறவினர் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால் குறிப்பாக தாய்,தந்தை,மகன்,மகள்,சகோதர.சகோதரிகள்.
(4)மரபியல் காரணங்கள்,
(5)கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால்
                                 தவிர்க்கவேண்டியவைகள்;-
 புகையிலை மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவேண்டும்.
2வாழ்க்கை நடைமுறையில் உடல் உழைப்பு &உடல் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும்.
3எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்தல்.
4தனிநபர்களுடைய உடல் எடை மற்றும் பருமனை குறைத்தல்.
5வாழ்க்கை நடைமுறை மாற்றத்திற்கான ஆலோசனைகள்(Counselling on Life Style Modification)
தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி.
மன அழுத்த சூழலை தவிர்த்தல்.
தினசரி உணவில் குறைவாக எண்ணெய் பயன்படுத்துதல் ஒரு நபருக்கு எண்ணெய் மாதம் ஒன்றிற்கு400மில்லிக்குள் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு உப்பு (ஒரு டீஸ்பூன் அளவு) ஐந்துகிராம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்,சிறுநீரகம்,இருதயம்,நரம்பு,கால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
உயரத்திற்கேற்ற எடையை பராமரித்தல் 
சுறுசுறுப்பாக செயல்படுவதை அதிகரித்தல்.
அதிக உண்ணுவதையும்,அதிக எடையையும் தவிர்த்தல்,
பருவகாலங்களில் கிடைக்கும் காய்கறிகள்,பழங்களை அதிகமாக சாப்பிடுதல் 
பழங்கள்,காய்கறிகள் அதிகமாக சாப்பிடுவதால் தேவையற்ற கொழுப்பு சத்து குறைகிறது.இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது.
 வனஸ்பதி எண்ணெயில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளதால் அதை உணவுப்பொருட்களில் தவிர்ப்பது நல்லது.எல்லா வகை எண்ணெயிலும் கொழுப்பு உள்ளது.
 அதிக கலோரி ஆனால் ஊட்டச்சத்து குறைவாக உள்ள பொருட்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் ஆதலால் அவைகளைதவிர்க்க வேண்டும்.
உதாரணம்-வடை,பஜ்ஜி,போண்டா,சமோசா,பப்ஸ்,பர்க்கர்,பிட்ஸா,கேக்,ஐஸ்கிரீம்,எண்ணெயில் நன்கு பொரிக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உப்பு நிறைந்த பொருட்கள்,மிக்சர்,பக்கோடா,மிக்சர் போன்றவை.தவிரக்கவேண்டும். பழங்கள்,காய்கறிகள்,முளைகட்டிய பயிர்வகைகள்,பொட்டுக்கடலை,புட்டு,இட்லி,சுண்டல்,அரிசிப்பொரி,கொழுக்கட்டை போன்றவை சாபிடலாம்.சர்க்கரை ஜாம் பயன்படுத்துவதற்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தலாம்.நார்ச்சத்து உட்கொண்டால்தான் வைட்டமின்களும்,தாது உப்புக்களும் உடலுக்கு கிடைக்கும் எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
பருப்பு வகைகள்,காய்கறிகள் மறும்பழங்களில் உடலுக்கு தேவையான பொட்டாசியம் உப்பு உள்ளதால் இவற்றில் உப்பு சேர்க்காதே.உப்பிற்கு பதிலாக எலுமிச்சை,புதினா பயன்படுத்து.பொரிக்கப்பட்ட உணவு,அப்பளம்,தக்காளி சாஸ்,பதப்படுத்தப்பட்ட உணவு ஊறுகாய்,மோர்மிளகாய்,கருவாடு,ஜாம்,வேண்டாம்.மாமிசவகைகளான ஆடு,மாடு,பன்றிகளுக்கு பதிலாக தோலுரித்த கோழிக்கறி,மீன் சாப்பிடலாம்.முட்டை மஞ்சள்கரு தவிர்த்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடக்கூடிய உணவுவகைகள்
 பச்சைக்காய்கறிகளான,கத்தரிக்காய்,பீன்ஸ்,கறிவேப்பிலை,பீர்க்கங்காய்,நூல்கோல்,குடமிளகாய்,வாழைப்பூ,
முட்டைக்கோஸ்,இஞ்சி,பாகற்காய்,கொத்தவரங்காய்,முருங்கைக்காய்,வாழைத்தண்டு,
சாம்பல் பூசணிக்காய்,வெங்காயம்,புடலங்காய்,காராமணி,புதினா,கோவைக்காய்,முள்ளங்கி,தக்காளி,வெண்டைக்காய்,காலிபிளவர்,கொத்தமல்லி,சுரைக்காய்,சௌசௌ,
வெள்ளரிக்காய்,கேரட் ஆகியன சாப்பிடலாம்.
கீரைவகைகள் அனைத்தும் சாப்பிடலாம்.
நீர்மோர்,சர்க்கரை போடாத பால்விடாத அல்லது பால் குறைவான காபி,தேநீர்,சூப் அருந்தலாம்.
இரு உணவு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் சாப்பிடுவதற்கு உகந்த உணவுப்பொருட்களாக மோர்.தக்காளிப்பழம்,வெஜிடபுள் சூப்,வெள்ளரிக்காய்,அரிசிப்பொரி ஆகியவற்றை சாப்பிடலாம்.
சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளபோது ஒரே நாளில் சாப்பிட சாத்துக்குடி ஒன்று அல்லது பேரிக்காய் சிறியது ஒன்று அல்லது ஆப்பிள் அரைப்பழம் அல்லது தர்பூஸ் பழம் ஒருதுண்டு(100கிராம்) அல்லது கொய்யாப்பழம் அரைப்பழம் அல்லது பப்பாளி ஒரு துண்டு(100கிராம்) ஆகியன சாப்பிடலாம்.
சமையலுக்கு நல்லெண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்,அரிசி உமி எண்ணெய் பயன்படுத்தலாம்.
          அசைவ உணவுகள் கோழிமுட்டை வெள்ளைக்கரு மட்டும் தினசரி இரண்டு அல்லது குழம்புமீன் இருதுண்டுகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அல்லது தோலுரித்த கோழிக்கறி ஐம்பதுகிராம் மாதத்திற்கு ஒருமுறை மட்டும்.சேர்த்துக்கொள்ளலாம்.
சேர்த்துக்கொள்ளக்கூடிய சட்னிகளாக தக்காளி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை,வெங்காய சட்னி,சாம்பார்,மிளகாய்ப்பொடி சேர்க்கலாம்.
உணவில் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்
 எல்லா கிழங்குவகைகளும்(உருளை,சேனை,கருணைக்கிழங்கு,பீட்ரூட்,வாழைக்காய்)
எல்லா இனிப்பு வகைகளும்(சர்க்கரை,வெல்லம்,கற்கண்டு,தேன்,குளுக்கோஸ்)
கேக்,சாக்லெட்,ஐஸ்கிரீம்,ஜாம்,ஜெல்லி,இனிப்பு பிஸ்கட்,பால்கோவா,
ஹார்லிக்ஸ்,போன்விட்டா,பூஸ்ட் போன்ற சக்தி தரும் பானங்கள்,
லிம்கா,ஃபாண்டா,கோகோகோலா,பழச்சாறு போன்ற குளிர்பானங்கள்,
ரெக்ஸ்,ரஸ்னா,ட்ரின்கா போன்ற டின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்,
வெண்ணெய்,நெய்,டால்டா,தேங்காய் எண்ணெய்,பனை எண்ணெய்
எண்ணெய் அதிகமுள்ள ஊறுகாய்,
பொரித்த உணவுப்பொருட்கள்,
மாட்டு இறைச்சி,கல்லீரல்,இதயம்,மூளை.
முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவைகள்,
மாம்பழம்,பலாப்பழம்,சப்போட்டா பழம்,பேரிச்சம்பழம்,உலர்ந்த பழங்கள்,(முந்திரி,பிஸ்தா,வால்நட் போன்றவை)
மது வகைகள்,
கேழ்வரகு,அரிசி,கோதுமை ஆகியவற்றை கஞ்சி,கூழ்,களி வடிவில் சாப்பிடக்கூடாது.
எருமைபால்,பால் ஏடு.மேதாமாவு,அரோரூட் மாவு,ஜவ்வரிசி,அதிக உப்பு உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்கவும்.புகை பிடிக்கக்கூடாது.புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
சாப்பிடும் நேரங்கள் மாற்றக்கூடாது.
          MEAL TIMING ARE FIXED.NO FASTING/ NO FEASTING

தொற்றாநோய்கள்-இதய நோய்.

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
     கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
                         தமிழ்நாடு சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள''தொற்றாநோய்களுக்கான தடுப்பு,கண்டறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டம்''குறித்த களப்பணியாளர்கள் பயிற்சி கையேட்டிலிருந்து சமுதாய நலனுக்காக  விழிப்புணர்வுப் பதிவு

                   தொற்றா நோய்களில் நான்குவகை நோய்கள் அதிக அளவில் மக்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு (1)இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்,(2)நீரிழிவு நோய்,(3)மார்பக புற்றுநோய்,(4)கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய நான்கு நோய்களை பற்றிய பல்வேறு தகவல்களையும்,விழிப்புணர்வுகளையும் மக்களிடையே கொடுக்க வேண்டும்.

            (1)இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்  நோய் பற்றிய ஓர் கண்ணோட்டம்.
சமுதாயத்தின் தேவை;-
              இதயத்தின் இயக்கநிலை குறித்த விழிப்புணர்வு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்குமானால் மக்கள் உண்மையிலேயே இதயத்தை மிக்க கவனத்துடன் பாதுகாப்பார்கள்.நாட்டிலும் இதய நோய் காரணமாக ஏற்படுக்கூடிய இறப்பு கணிசமாக குறையும்.இந்நோய்களை ஆரம்ப நிலையிலேய கண்டறிந்து தகுந்த மருத்துவம் மற்றும் உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களினால் இந்நோய்களின் பின்விளைவுகளையும்,அதனால் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகள் மற்றும் பொருளாதார இழப்புகளையும் தவிர்ர முடியும்.மேலும் பொதுமக்கள் ஆரோக்கியமான உணவு,உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை கடைப்பிடித்தால் இதயநோய்,உயர் இரத்த அழுத்தம் வராமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இதய நோய்(Cardiovascular Diseases)
           இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் அதிக கொழுப்பு சத்து,உயர் இரத்த அழுத்தம்,புகைப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகள் ஆகிய அனைத்துமே இதயநோய் என்று அழைக்கப்படுகிறது.
இதயநோயை மாற்ற இயலாத காரணிகள்,மாற்றக்கூடிய காரணிகள் என இரண்டுவகைகளாக பிரிக்கலாம்.;-
                 (அ) மாற்ற இயலாத காரணிகள்;-
           (1)வயது;-வயது அதிகரிப்பதற்கு ஏற்ப தொற்றா நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது.
(2)பாலினம்;-ஆண்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
(3) குடும்ப பின்னணி;-குடும்பத்தில் யாருக்காவது இதய சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லது பக்கவாதம்(Stroke) தந்தை அல்லது சகோதரர்கள் யாருக்காவது 55வயதுக்கு முன்னும்,தாய் அல்லது சகோதரிகள் யாருக்காவது 65வயதுக்கு முன்னும் பக்கவாதம் வந்து இருந்தால் அதுவும் ஒரு காரணியாகும்.
(4)மரபியல் காரணிகள்;-

       (ஆ) மாற்றக்கூடிய காரணிகள்;-
         ( நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்)

        (1)எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுதல்,துரித உணவுகள்,சிப்ஸ்,(2)அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை உண்ணுதல்,(3)இனிப்பகத்தில் கிடைக்கக்கூடிய அதிக கொழுப்புள்ள தின்பண்டங்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களான கேக்,பப்ஸ் போன்றவைகளை உண்ணுதல்,(4)உப்பு அதிகமுள்ள பொருட்கள்(உப்பு அதிகம் சேர்த்தில்,ஊறுகாய்,கருவாடு),(5)உடல் உழைப்பு இல்லாமை,சோம்பலான வாழ்க்கைமுறை,(6)உயரத்திற்கேற்ற எடையின்மை மற்றும் உடல் பருமன்,(7)புகை பிடித்தல்,(8)மன அழுத்தம்,(9)இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் மற்றும் இரத்தக்குழாய்களில் அடைப்பு,(10)உயர் இரத்த அழுத்தம்,(11)சர்க்கரை நோய்,(12)மதுப்பழக்கம்,போன்ற  நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து விழிப்படைந்தாலே இதயம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்-Changes in Life Style . (1) புகை பிடித்தல்Smoking,அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் மற்றும் அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளுதல்Abundance of fatty fiid and high calorie food ,& உடல் உழைப்பு இல்லாமை அல்லது உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை Sedentary Life Style  . இதனால் உடல் எடை கூடுகிறதுObesity.உடல் எடை கூடுவதால் இரத்தத்தில்  கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதுHyperlipidaemia.இதனால் இதயத்திற்கு கொண்டுசெல்லும் கொரோனரி தமனியின் உட்சுவற்றில் கொழுப்பு படிமம் ஏற்படுகிறது Coronary athrosclerosis.இதனால் கொரோனரி தமனியில்1 அடைப்பு ஏற்படுகிறது Coronary Occlusion.புகை பிடித்தலால் தமனியில் அடைப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுகள் அதிகரிக்கிறது Increased catecholamines thrombotic tendency.இதனால் கொரோனரி தமனியில்2 அடைப்பு ஏற்படுகிறது Coronary Occlusion.மன அழுத்தம் Stress&Emotional distubances ,முதுமை மற்றும் பிற காரணங்களால்Agingand other factors உடல் பருமன் அதிக உடல் உடல் எடையால்  உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது Hypertension.இதனால் தமனியின் உட்சுவற்றில் அடைப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள்Changes in Walls of arteries உருவாகிறது.இதனால் கொரோனரி தமனியில் 3அடைப்பு Coronary Occlusionஏற்படுகிறது .கொரோனரி Coronary Occlusion தமனியில் அடைப்பு ஏற்பட்டால் இதய தசைகளுக்குத்தேவையான ஆக்ஸிஜன் குறைந்து இதய தசைகளுக்கு பாதிப்பு Myocardial ischaemia ஏற்படுகிறது.இதயதசைகள் பாதிப்படைவதால் இதய தசைகள் அழிந்து மாரடைப்பு Myocardial infarction ஏற்படுகிறது.

இதயம் காக்கும் பஞ்சதந்திரம் அல்லது பஞ்ச கவசங்கள்;-
 அளவான உப்புடன் சத்தான உணவு,புகை பழக்கமின்மை மற்றும் மது அருந்தாமை,உயரத்திற்கேற்ற எடை, சாந்தமான மனநிலை அல்லது மகிழ்ச்சியான உள்ளம்,சுறுசுறுப்பான உடல் இயக்கம்.

                  இருதய நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க....
            பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை தினமும் உண்ணுதல்,நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல்,மன அழுத்தத்தை தவிர்த்தல்,தினசரி யோகா&தியான பயிற்சி செய்தல்,புகை பிடிக்கக்கூடாது,மது அருந்தக்கூடாது. கொழுப்புச்சத்து நிறைந்த மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்ணக்கூடாது.முழு தானியங்களையும்,பச்சைக்காய்கறிகளையும் உண்ணுங்கள். உட்கொள்ளும் உணவின் அளவினை கட்டுப்படுத்துங்கள்.துரித உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,குளிர்பானங்கள்,பேக்கரி உணவுப்பொருட்கள் இவற்றை தவிர்க்கவும்.அசைவ உணவுகள்,எண்ணெய்,உப்பு,சர்க்கரை குறைவாக உட்கொள்ளவும்.உடல் உழைப்பை அதிகரிக்கவும்.

08 நவம்பர் 2013

கலையிழந்த கிராமிய கலைகள்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
                               கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் கிராமிய கலைகள் பற்றி ஒரு பார்வை.........

கலையிழந்த கிராமிய கலைகள் 

கலையிழந்த கிராமிய கலை 
கலங்கி நிற்கும் மக்கள் கதை 
கேளுங்கய்யா எங்க கதை 
பாடிபுட்டோம் சோகக்கதை 

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ 
அடியோடு அழியும் நிலை 
அவலத்தில் எங்க நிலை 
அறிந்திடுவீர் அவல நிலை 

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ 
படிப்படியா அழியும் நிலை 
பரிதவிப்பில் எங்க நிலை 
பட்டினியில் சாகும் நிலை 

நயமாய் வளர்த்த கலை - இப்போ 
நலிவடைந்து நிற்கும் கலை ! 
நாட்டத்தோடு வளர்த்த கலை 
நாதி யற்று நிற்கும் கலை! 

கரகாட்டம் கட்டி நின்னா 
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ 
பசியிலே கிறங்கி நாங்க 
பரிதவித்து நிற்கிறோமே ! 

மயிலாட்டம் ஆடி நின்னா 
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ 
மறித்து போக மனமின்றி 
மயங்கி நாங்க நிற்கிறோமே! 

தப்பாட்டம் ஆடிபுட்டா 
தாறுமாறா கூடும் கூட்டம் 
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ 
படும் பாடோ திண்டாட்டம் ! 

தென்மாங்கு பாடிபுட்டா 
தெருவே கூடிநிற்கும் - இப்போ 
தேடுவார் யாருமின்றி 
தெருவிலே நிற்கிறோமே ! 

மெட்டு கட்டி பாடிபுட்டா 
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ 
பச்சபுள்ள பட்டினியா 
தொட்டிலிலே ஆடுதடா! 

கூத்துக்கட்ட ஆளிருந்தும் 
கூடுவார் யாருமில்ல ! 
பாட்டுக்கட்ட ஆளிருந்தும் 
பசி தீர்க்க யாருமில்ல ! 

சின்னத்திரை வெள்ளித்திரை 
சேர்ந்து செய்த சதிவலை 
ஆனதய்யா திரை சீலை 
போனதய்யா எங்க வேலை 

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு 
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ 
பட்டினத்தார் பாதம் தொட்டு 
நிற்கிறோமே வெக்கம் கெட்டு 

தெருவிலே கூத்துக் கட்டி 
தென்மாங்கு பாட்டுக்கட்டி 
படிச்சவன் பாடு -இப்போ 
நடுத்தெருவில் நிக்குதய்யா ! 

வயிற்ரை கட்டி வாயை கட்டி 
கலை வளர்த்த குடும்பமெல்லாம் 
கழுத்துல கயிறைக் கட்டி 
தூக்குல தொங்குதய்யா! 

ஆயர்கலை அறுபத்தி நான்கும் 
அழிகின்ற அவல நிலை 
அழியாத கலையாக என்றும் 
நிலை வாழ துணை செய்வீர் !
PM John Paul
  கலையிழந்த கிராமிய கலைகள்

கலையிழந்த கிராமிய கலை
கலங்கி நிற்கும் மக்கள் கதை
கேளுங்கய்யா எங்க கதை
பாடிபுட்டோம் சோகக்கதை

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ
அடியோடு அழியும் நிலை
அவலத்தில் எங்க நிலை
அறிந்திடுவீர் அவல நிலை

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ
படிப்படியா அழியும் நிலை
பரிதவிப்பில் எங்க நிலை
பட்டினியில் சாகும் நிலை

நயமாய் வளர்த்த கலை - இப்போ
நலிவடைந்து நிற்கும் கலை !
நாட்டத்தோடு வளர்த்த கலை
நாதி யற்று நிற்கும் கலை!

கரகாட்டம் கட்டி நின்னா
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ
பசியிலே கிறங்கி நாங்க
பரிதவித்து நிற்கிறோமே !

மயிலாட்டம் ஆடி நின்னா
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ
மறித்து போக மனமின்றி
மயங்கி நாங்க நிற்கிறோமே!

தப்பாட்டம் ஆடிபுட்டா
தாறுமாறா கூடும் கூட்டம்
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ
படும் பாடோ திண்டாட்டம் !

தென்மாங்கு பாடிபுட்டா
தெருவே கூடிநிற்கும் - இப்போ
தேடுவார் யாருமின்றி
தெருவிலே நிற்கிறோமே !

மெட்டு கட்டி பாடிபுட்டா
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ
பச்சபுள்ள பட்டினியா
தொட்டிலிலே ஆடுதடா!

கூத்துக்கட்ட ஆளிருந்தும்
கூடுவார் யாருமில்ல !
பாட்டுக்கட்ட ஆளிருந்தும்
பசி தீர்க்க யாருமில்ல !

சின்னத்திரை வெள்ளித்திரை
சேர்ந்து செய்த சதிவலை
ஆனதய்யா திரை சீலை
போனதய்யா எங்க வேலை

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ
பட்டினத்தார் பாதம் தொட்டு
நிற்கிறோமே வெக்கம் கெட்டு

தெருவிலே கூத்துக் கட்டி
தென்மாங்கு பாட்டுக்கட்டி
படிச்சவன் பாடு -இப்போ
நடுத்தெருவில் நிக்குதய்யா !

வயிற்றை கட்டி வாயை கட்டி
கலை வளர்த்த குடும்பமெல்லாம்
கழுத்துல கயிறைக் கட்டி
தூக்குல தொங்குதய்யா!

ஆயர்கலை அறுபத்தி நான்கும்
அழிகின்ற அவல நிலை
அழியாத கலையாக என்றும்
நிலை வாழ துணை செய்வீர் !
நன்றிங்க;-PM John Paul

2ஆம்ஆண்டு கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2024

கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு                அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  சென்ற ஆண்டு கொளப்பலூர் புத்தகத் திருவிழா-பொதுமக்களனைவரின...