19 செப்டம்பர் 2011

நமது உடல்

 அன்பு நண்பர்களே,வணக்கம். 

           நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. இந்த உறுப்புகள் பல ஆயிரக்கணக்கான செல்களை கொண்ட திசுக்களால் ஆனது.

      திசுக்கள் செயல்பட, ப்ரீ ஆக்சிடன்ட், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை, தராசு போல செயல்பட வேண்டும். 

          ப்ரீ ஆக்சிடன்ட், பிராண வாயுவை கொடுக்கிறது. திசுவில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால், பல ப்ரீ ராடிக்கல்கள் வெளியே வருகின்றன.இந்த ப்ரீ ராடிக்கல்கள், உடலையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன.

              ப்ரீ ராடிக்கல்கள் தான், ஆக்சிடேட்டிவ் ஆக்சிடன்ட் (Oxidative Oxidants) என்றழைக்கப்படுகின்றன. இந்த, (Oxidant) களை வெளியேற்றி, உடலுறுப்புகளை காப்பாற்றுவது, ஆன்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) எனும் மூலக்கூறு.வியாதிகள், சர்க்கரை நோய், சாதாரணமாக வரும் ஜுரம், இருமல், விபத்து, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, தொப்பை, சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலைகள், காற்று மாசுபடுதல், கதிரியக்க வீச்சு, புகைப்பிடித்தல், ஊதாக்கதிர்கள் என பல காரணிகள், “ப்ரீ ராடிக்கல்’களை உருவாக்குகின்றன.

       இதே, “ப்ரீ ராடிக்கல்’ தான், முதுமைக்கும் காரணமாகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களை உருவாக்கி, உறுப்புகள் செயலிழக்க செய்து விடுகிறது. 

         ஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுப் பொருட்கள்…கரோடினாய்ட்ஸ் – இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறமுள்ள தக்காளி, காரட், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், ஆப்ரிகாட், பேரீட்சை, பிஸ்தா, பாதாம். 

      இந்த கரோடினாய்ட் நிறமுள்ள சிறு மீன்கள்.ஆன்டி ஆக்சிடன்ட், புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. கொழுப்பு, ரத்தக்குழாயின் உட்சுவரில் ஒட்டிக் கொள்வதை தடுக்கிறது. மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உண்டு.


       வைட்டமின் “இ’: இது, “ஆல்பா டோக்கோபரால்’ எனப்படுகிறது. இது கார்ட்டினாடு வகுப்பை சார்ந்தது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், கீரை வகைகள், காரட் ஆகியவற்றில் கிடைக்கிறது.மாமிச உணவை உட்கொள்ளும் புலி, சிறுத்தை ஆகியவை, 

         தாவர உணவை மட்டும் உட்கொள்ளும் மாடுகளை கொன்று, முதலில் அதன் வயிற்றை கிழித்து, அதிலுள்ள இயற்கை உணவான பச்சை இலை, காய்களை உணவாக உட்கொண்டு, பிறகு தான் மாமிசத்தை சாப்பிடுகின்றன; 


        செலினியம் (Selenium): “டிரேஸ் எலிமென்ட்’ எனப்படும் இது, நிலத்தில் இருக்கிறது. இது நிலத்திலிருந்து விளைந்து வரும் பயறு வகைகள் மற்றும் முட்டையில் அதிகம் உள்ளது. இந்த செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


        வைட்டமின் “சி’: இதை, “அஸ்கார்பிக் ஆசிட்’ என்பர். இது, “ப்ரீ ராடிக்கலை’ அழிக்கிறது. மேலும், புண்ணில் ஏற்படும் நச்சுகளை அழித்து, புண்ணை ஆற வைக்கிறது. உடல் இரும்பு சத்தை அதிகம் உறிஞ்ச உதவுகிறது. பல் ஈறுகளை பாதுகாக்கிறது. அடிபடும் போது ஏற்படும் சிராய்ப்புகளை, உடனே போக்குகிறது. இதய நோய், கண் புரையை தடுக்கிறது. இச்சத்து, தக்காளி, பப்பாளி, மாம்பழம், உருளைக்கிழங்கில்அதிகம் உள்ளது.
   

          யார் யாருக்கு இவை தேவை?:

          காலை முதல் இரவு வரை வேலை செய்யும் உழைப்பாளிகள்; தொழில்துறை வல்லுனர்கள்; அதிக பயணம் செய்பவர்கள்; காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை பார்க்கும் நிறுவனம் நடத்தும் முதலாளிகள்.
# நாள் ஒன்றுக்கு 1,200 கலோரி உணவு உட்கொள்பவர்கள்.
#கொழுப்புள்ள உணவு உட்கொள்பவர்கள்.
#குடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி, இவர்களில் இதய நோய், புற்றுநோய் இருந்தால், இவர்களுடைய வாரிசுகள் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை எடுத்து கொள்வது நல்லது.
 
      நீங்கள் நீண்ட பயணம், இரவு தூக்கம் விழித்து இருந்தால் வரும் அலுப்பு ஆகியவற்றுக்கு, “ப்ரீ ராடிக்கல்’கள் தான் காரணம். இதை வெளியேற்ற, “ஆன்டி ஆக்சிடன்ட்’ தேவை.


      என்ன நன்மை?


      செலினியம் (Selenium): நகம், முடி நன்றாக இருக்க உதவுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் “இ’யுடன் இணைந்து திசுக்களை பாதுகாக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது. நுரையீரல், புராஸ்ட்ரேட், பெருங்குடல் ஆகியவற்றை பாதுகாக்கிறது.


       பீட்டாகெரோட்டின்: தோல், எலும்பு, கண் இவைகளை காக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.


       வைட்டமின் “இ’: திசுவை சுற்றியுள்ள உரையை காக்கிறது. சிவப்பு அணுவையும் காக்கிறது. தாவர எண்ணெய், பட்டாணி, கோதுமை, சாலட் ஆகியவற்றில் பீட்டா கெரோட்டின் அதிகம்.


        வைட்டமின் “சி’: “ப்ரீ ராடிக்கல்’களை அழிக்கிறது. சிமென்ட் போன்ற பசையை உருவாக்கி, எலும்பை சேர்க்கிறது. புண் ஆற உதவுகிறது. பல் ஈறை காக்கிறது. புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.

paramesdriver.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...