22 செப்டம்பர் 2011

ஆர். வைத்தியநாதசுவாமி (1894-1960) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் கணிதப் பேராசிரியர். அப்பதவி முதன்முதலில் 1919 இல் கணித மேதாவி சீனிவாச ராமானுசனுக்காக உண்டாக்கப்பட்டும் அவருடைய உடல்நிலைக் குறைவினாலும் 1920இல் ஏற்பட்ட அவரது அகாலமரணத்தினாலும் அப்பதவியில் அவர் உட்காரவேயில்லை. வைத்தியநாதசுவாமியையும் சென்னை பல்கலைக்கழகம் 'ரீடர்' (Reader) பதவியில தான் வைத்திருந்தது. ஆனால் கணித வட்டாரங்களில் அவர் சென்னைப் பேராசிரியராகத்தான் புழங்கப்பட்டு வந்தார்.

   பிறப்பும் கல்வியும்

வைத்தியநாதசுவாமி அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த சென்னை மாகாணத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை மாயவரத்திலும் (தற்கால மயிலாடுதுறையில்) சென்னையிலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்துக்கொண்டு பிறகு சென்னை கிறிஸ்தவர் கல்லூரியிலும் மாகாணக் கல்லூரியிலும் படித்து முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வடிவவியலில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தார். பிறகு சென்னை பல்கலைக் கழகத்தின் படிப்புதவிச்சம்பளம் பெற்று ஸ்காட்லந்து சென்று St. Andrews University இல் Ph.D., D.Sc. ஆகிய இருமுனைவர் பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது அவருடைய சமகாலத்திய கணித ஆரய்ச்சியாளர்கள்: காப்ஸன், எட்வர்ட்ஸ், மற்றும் ஹாப்ஸன். அவருடைய ஆசிரியர்கள்: டர்ன்புல், மற்றும் விட்டேகர்.

முனைவர் பட்டத்திற்கான ஆய்வு

  • "Binary and Double Binary Forms" என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வு அவருக்கு Ph.D. பட்டத்தை அளித்தது.
  • "Pedal correspondence, general (m,n) correspondence and mixed determinants" என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வு அவருக்கு D.Sc. பட்டத்தை அளித்தது.

தொழில்

  • 1925: ஆராய்ச்சியாளர், சென்னைப் பல்கலைக்கழகம்.
  • 1926 ஆசிரியர், வாராணசி இந்து பல்கலைக்கழகம்.
  • 1927 - 1952 ஆசிரியர், பிற்பாடு ரீடர் (Reader), சென்னைப் பல்கலைக்கழகம்.

கௌரவப்பணிகள்

  • 1927-1950: ஆசிரியர், இந்தியக்கணிதக்கழகத்தின் Journal (Journal of the Indian Mathematical Society)
  • 1940-1942 தலைவர், இந்தியக்கணிதக்கழகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...