05 ஏப்ரல் 2020

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி 09

                           திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09
                                        ---------------------------------------------------------

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  திருக்குறளின் தனிச்சிறப்பு  இந்தப் பதிவில் அறிவோம்...

    (1)திருக்குறளின் பெருமையை உணர்த்தும்          நூல்,'திருவள்ளுவமாலை'நூலாகும்.
(2)திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர்.
 (3)திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு.முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம்?  என கருதப்படுகிறது.
(4)தமிழக அரசு திருவள்ளுவர் வாழ்ந்த காலம் என அறிவித்துள்ள ஆண்டு கி.மு.31ஆகும்.
(5)திருக்குறள் சங்க இலக்கிய நூல் ஆகும்.
(6)திருக்குறள் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
(7)திருக்குறளின் முதற் பெயர் 'முப்பால்' ஆகும்.
(8)திருக்குறள் என பெயர் வரக் காரணம் பாடல்கள் அனைத்தும் குறள்வெண்பா வகையினைச் சேர்ந்தது ஆதலால் 'குறள்' என்ற காரணப் பெயரை வைத்து அதன் உயர்வு கருதி 'திரு' என்ற அடைமொழி சேர்த்து 'திருக்குறள்' என அழைக்கப்படுகிறது.
(9)உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றவகையில் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படியாக போதனைகள் அமைந்துள்ளதால் உலகப் பொதுமறை நூல் என்றழைக்கப்படுகிறது.அதாவது சாதாரண மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியதால் பொதுமறை எனப்பட்டது.
(10) திருக்குறளின் மூல ஆசிரியர் மணக்குடவர் ஆவார். தொகுப்பு ஆண்டு தெரியவில்லை.
(11)திருக்குறள் நூலை முதன்முதலில் அச்சுப் பதிப்பித்தவர் தஞ்சை மலையத்து வசன் மகன் ஞானப்பிரகாசம் ஆவார்.1812ல்.
(12)திருக்குறள் முதல் அச்சிடப்பட்ட ஆண்டு கி.பி.1812ஆம் ஆண்டு.பதிப்பகம்  பெயர் தெரியவில்லை.
(13)திருக்குறள் பிறமொழியில் பெயர்த்த முதல்மொழி இலத்தீன்.
(14)கி.பி.1730 ல் திருக்குறள் முதன்முதலாக பிறமொழியில் மொழிபெயர்த்தவர் வீர மாமுனிவர் என்றழைக்கப்படுகின்ற கான்ஸ்டன் ஜோசப் பெஸ்கி என்னும் இத்தாலிய பாதிரியார் ஆவார்.
(15) கி.பி. 1730ஆம் ஆண்டு பிறமொழியில் முதன்முதலாக இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரால் மொழி பெயர்க்கப்பட்டது.
(16) கி.பி.1812ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்புக்கு அடித்தளமாகும்.எல்லீஸ் துரை அவர்கள் மொழிபெயர்த்தது அறத்துப்பாலின் முதல் 13அதிகாரங்கள் மட்டுமே.
(17)ஆங்கிலத்தில் முதன்முதலாக திருக்குறள் 1330 குறட்பாக்களையும் பெயர்த்தவர் ஜி.யூ.போப் என்னும் ஆங்கிலேயர் ஆவார்.1886ல்.
(18)ஆங்கிலத்தில் திருக்குறள் முதன்முதலாக மொழிபெயர்த்த ஆண்டு கி.பி.1886ஆம் ஆண்டு.
                          (konguthendral.blogspot.com)
(19)ஆங்கிலத்தில் திருக்குறள் கருத்துக்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிண்டெர்ஸ் லே என்பவர் ஆவார்.கி.பி.1794ல்.
(20)ஆங்கிலத்தில் திருக்குறள் கருத்துக்களை முதன்முதலில் வெளியிட்ட     ஆண்டு கி.பி.1794ஆம் ஆண்டு.
(21)திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis) ஆவார்.1812ல்,
(22)திருக்குறளின் ஒவ்வொரு குறளும் இரண்டடிகளில் ஏழு சீர்களைக் கொண்ட நூல் ஆகும்.
(23) அறம்,பொருள்,இன்பம் ஆக மனித வாழ்வுக்குத் தேவையான மூன்று பாக்களை உள்ளடக்கியது திருக்குறள்.
(24) திருக்குறளின் முதல் பாலான அறத்துப்பால் 4இயல்களையும்,38அதிகாரங்களையும்,380குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
(25)திருக்குறளின் இரண்டாவது பாலான பொருட்பால் 7இயல்களையும்,70 அதிகாரங்களையும்,700குறட்பாக்களையும் கொண்ள்ள்ளது.
(26)திருக்குறளின் மூன்றாவது பாலான இன்பத்துப்பால் 2 இயல்களையும் 25 அதிகாரங்களையும்,250குறட்பாக்களையும் கொண்டுள்ளது.
(27)திருக்குறள் மொத்த இயல்கள் மு.வரதராசனார் முறைப்படி  4+7+2 =   13இயல்கள்  ஆகும்.  (konguthendral.blogspot.com)
பரிமேலழகர் முறைப்படி 4+3+2 = 9 இயல்கள் ஆகும்.

(28)திருக்குறள் மொத்தமாக  133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(29)திருக்குறள் மொத்தம் 1330குறட்பாக்களைக் கொண்டுள்ளது.
(30)திருக்குறள் முதல் குறளில்  'அ'கரத்தில் தொடங்கி 1330வது குறளில்  'ன்'இல் முடிகிறது.
(31)திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194ஆகும்.
(32)திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 12,000 ஆகும்.
(33)தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 இவற்றில் 37எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை.
(34)திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து, 'ஔ' எழுத்து ஆகும்.
(35)திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே எண்  9 ஆகும்.
(36)திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து 'னி' ஆகும்.அதாவது 'னி' 1705முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
  (parameswaran Driver - TNSTC Thalavadi Br)
(37)திருக்குறளில் ஒரேமுறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள் 'ளீ , ங' இரண்டு எழுத்துக்கள் ஆகும்.
(38)திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டு குறட்பாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(39)திருக்குறளில் எழுபது கோடி என்ற சொல் ஒரேயொரு குறளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(40)திருக்குறளில்  ஒரேயொரு அதிகாரம் மட்டும் பயன்படுத்தப்பட்ட இயல் 'ஊழியல்' ஆகும். ஊழ் 37வது அதிகாரம்.
(41)திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரேபழம் 'நெருஞ்சில்' ஆகும்.
(42)திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரே விதை குன்றிமணி ஆகும்.
(43)திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மலர்கள் அனிச்சம் , குவளை ஆகும்.
(44)திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் பனை,மூங்கில் ஆகும்.
(45) திருக்குறளில் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே அதிகாரம், 'குறிப்பறிதல்' ஆகும்.
(46)திருக்குறளில் பற்று என்ற  சொல் ஒரே குறளில் ஆறுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.350வது குறளில் ஆறுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  (konguthendral.blogspot.com)
(47)திருக்குறளில்தமிழ்,கடவுள் என்ற சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.
(48)திருக்குறளை நரிக்குறவர் பேசும் 'வாக்ரிபோலி' மொழியில் ( Indo - Aryan language called Vaagri Booli )  எழுதியவர் கிட்டு சிரோன்மணி என்பவர் ஆவார்.
(49)திருக்குறள் எந்த சமயத்தையும் சார்ந்திராமல் எழுதப்பட்டுள்ளது ஆதலால் தமிழ் வேதம் (Bible Of Tamils) என்று அழைக்கப்படுகிறது.
(50)திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்த்தவர் முனைவர்.அ.ஜாஹிர் ஹூசைன் பாகவி ஆவார்.
(51)திருக்குறள் இதுவரை 107மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
(52)திருக்குறளுக்கு இன்றுவரை 230க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியுள்ளனர்.
(53)திருக்குறள் உரை எழுதிய ஆசிரியர்களில் 10வது ஆசிரியர் பரிமேலழகர் ஆவார்.
(54)திருக்குறளுக்கு உரை எழுதுவது இமயமலைக்கு பொன்னாடை போர்த்துவது போன்றது என கூறியவர்.கலைஞர் மு.கருணாநிதி ஆவார்.
       (parameswaran Driver -9585600733, TNSTC Thalavadi Br)
(55) கலை என்னும் இதழை நடத்தி வந்த பாலு,சீனு என்னும் சகோதரர்கள் 1950ஆம் ஆண்டு வெளியிட்ட இதழில் எந்த மத அடையாளமும் இல்லாத திருவள்ளுவரின் படம் பிரசுரித்திருந்தனர்.
(56)அதன்பிறகு கவிஞர்.பாரதிதாசன்,திரு.மா.இராம.ராமசெல்வன் இருவரும் ஓவியர் வேணுகோபால ஷர்மாவுடன் சேர்ந்து வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் ஓவியம் வரைய முயற்சி எடுத்தனர்.
(57)  திருவள்ளுவர் ஓவியத்தை ஓவியர் K.R,வேணுகோபால ஷர்மா அவர்கள் ஓவியம் வரையத் தொடங்கி ஒவ்வொரு நொடியும் படைப்புச் சிந்தனையிலேயே மூழ்கி திருக்குறள் உரைகளுக்கேற்ப முப்பது ஆண்டுகளாக அதிக கவனமெடுத்து 1959ல் முடித்தார்.மாயவரம் திரு.பதி அவர்கள் உதவியாளராக துணைபுரிந்தார்.
(58)திருவள்ளுவர் ஓவியத்தை  1964ஆம் ஆண்டு  திரு.பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய துணை ஜனாதிபதி திரு.ஜாகீர் உசேன் அவர்கள்  சென்னை சட்டசபையில் திறந்துவைத்தார்.
(59) மேற்படியான திருவள்ளுவர் ஓவியம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு 1964 ஆகும்.
(60) மத்திய அரசு15பைசா அஞ்சல் தலையாக 1960ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஓவியத்தை வெளியிட்டது.
(61)மத்திய அரசு 1995 ல் திருவள்ளுவர் உருவம் பொறித்த 5ரூபாய் நாணயம் வெளியிட்டது.
(62)'திருவள்ளுவர் திருஉருவப்பட வரலாறு (அன்றும்-இன்றும்)' என்ற நூலை எழுதியவர் திரு.மா.இராம.ராமசெல்வன் ஆவார்.முத்தமிழ் வித்தகம்,வேலூர் மாவட்டம்-632602 .   (konguthendral.blogspot.com)
(63)திருவள்ளுவருக்கு பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கோயில் சென்னை அருகிலுள்ள மைலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
(64)திருவள்ளுவர் 2வது கோயில் விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
(65)கேரளாவில் வள்ளுவம் என்ற பெயரில் திருவள்ளுவருக்கான தனி மதம் உருவாக்கப்பட்டு வழிபடுகின்றனர்.42 கோவில்கள் இருப்பதாக தகவலறிகிறோம்.
  (இன்னும் கூடுதலாக கிடைக்கும் தகவல்களை இதனுடன் சேர்க்கப்படும்.)
    =====================================================
திருக்குறள் மாமலை - மாத இதழ் வாசித்துவிட்டீர்களா?
 இப்போதே தொடர்பு கொள்ளுங்க....

                 இன்னும் தொடரும்.....(தேதி; 5-4-2020)
  என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
 (konguthendral.blogspot.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...