10 ஏப்ரல் 2020

நாலடியார் & திருக்குறள்

                           நாலடியாரும் வாழ்வியல் நூலே!.....
 
மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

                அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற  உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர்.
நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன. 

                        நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். 

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
                   நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். 
இயற்றப்பட்ட காலம்; 
   சங்கம் மருவிய காலம் அதாவது கி.பி.250ஆம் ஆண்டுகள்.


   "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 

'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது',

 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' 

   என்ற நமது முன்னோர் உரைகள், நாலடியாரின்  பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்துரைக்கின்றன
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை
 கடவுள் வாழ்த்து : 1 
அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) 
பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்)
 இன்பத்துப் பால் : 30 பாடல்கள் (3 அதிகாரங்கள்)
 மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்) 

    2020ஆம் ஆண்டு  திருக்குறள் மாமலை  ஏப்ரல் மாத இதழில் எனது கட்டுரை...



 
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
  (konguthendral.blogspot.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...