13 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam Part 06

                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி 06
                                    சமைத்துப் பழகலாம் வாங்க!
                                            ------------------------------
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)
   வாசனை மட்டும் இருந்தால் போதுமா?ருசியும் வேண்டுமல்லவா!
              சமையல் விரைவாக முடிக்க முன்னரே சில பொருட்களை பொடிகளாகவும்,வேறு சில வடிவங்களிலும் மாற்றி இருப்பில் தயாராக வைத்திருக்க வேண்டும்.அந்த வரிசையில்....
(1)அங்காயப் பொடி,(2)மிளகாய்ப் பொடி,(3)மஞ்சள் பொடி,(4)தனியாப் பொடி(கொத்துமல்லிவிதை பொடி),(5)சாம்பார்ப் பொடி,(6)ரசப் பொடி,(7)கரம் மசாலாப் பொடி(கறி மசாலாப் பொடி),(8)கறிவேப்பிலைப் பொடி,(9)பருப்புப் பொடி(இட்லிப் பொடி),(10)பூண்டுப் பொடி,(11)இஞ்சிப் பொடி,(12)வெங்காயப் பொடி,(13)தக்காளிப் பொடி,(14)மாங்காய்ப் பொடி,(15)தேங்காய்ப் பொடி,(16)சுக்குப் பொடி,(17)மிளகுப் பொடி,(18)லவங்கப் பொடி என சமையலுக்கான மூலப்பொருட்களை   தனிவகை பொடியாகவும்,கூட்டு பொருட்கள் பொடியாகவும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....

            நாம் அதிகமாக பயன்படுத்தும் பொடிகளான (அ)சாம்பார்ப் பொடி, (ஆ)ரசப் பொடி, (இ) கரம் மசாலாப் பொடி ஆகிய மூன்று பொடிகளுக்கும்  பொதுவாக பயன்படுத்தும் மூலப் பொருட்களாவன....(1)தனியா(கொத்துமல்லி)., (2)சீரகத் தூள், (3)மிளகுத் தூள் ஆகியனவாகும்.இவற்றுடன் கூடுதலாக (4) மிளகாய், (5)துவரம் பருப்பு, (6)கடலைப் பருப்பு, (7)வெந்தயம், (8)கறிவேப்பிலை, (9)பெருங்காயம், (10)உப்பு ஆகிய மூலப்பொருட்கள் (அ) சாம்பார்ப் பொடி மற்றும் (ஆ) ரசப் பொடிகளுக்கு சேர்க்கப்படுகின்றன.இந்த மூலப் பொருட்களுடன் கூடுதலாக (11)அரிசி,(12)கடுகு, (13)வெள்ளை உளுந்து ஆகியன (அ)சாம்பார்ப் பொடிக்கு சேர்க்கப்படுகின்றன.
(இ) கரம் மசாலாப் பொடிக்கு முதல் பட்டியலில் குறிப்பிட்டுள்ள (1)தனியா(கொத்துமல்லி), (2)மிளகு, (3)மிளகுத்தூள் ஆகியவற்றுடன், (1)லவங்கப் பட்டை, (2)கிராம்பு, (3)சோம்பு, (4)ஏலக்காய், (5)பிரிஞ்சி இலை, (6)அன்னாச்சி மொக்கு ( நட்சத்திர சோம்பு ), (7)கல்பாசி, (8)ஜாதிப் பத்திரி, (9)ஜாதிக்காய், (10)விரலி மஞ்சள் ஆகிய மசாலாப் பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.
  என்னங்க குழப்பமாக இருக்குதா? கவலையே வேண்டாம்...இனி  ஒவ்வொரு பொடியையும் தனித்தனியாக செய்வது பற்றி அறிவோம்....

 (அ) சாம்பார் பொடி...
தேவையான பொருட்கள் மற்றும்  அளவுகள்....
(1)தனியா(கொத்துமல்லி)-அரை கிலோ.,
(2)சீரகத் தூள் - 150கிராம்,
(3)மிளகுத் தூள்- 150கிராம்,
காரத்திற்கு மிளகு இன்னும் அதிகமாக சேர்த்தால் மிளகாய் தேவையில்லைங்க...
 (4) மிளகாய்-500கிராம்,
(5)துவரம் பருப்பு-100கிராம்,
(6)கடலைப் பருப்பு-100கிராம்,
(7)வெந்தயம்-100கிராம்,
(8)கறிவேப்பிலை- மூன்று கட்டு அல்லது தேவைக்கேற்ப ,
 (9)பெருங்காயம்-100கிராம்,
(10)உப்பு-தேவைக்கேற்ப,
 (11)அரிசி-50கிராம்,
(12)கடுகு-50கிராம்,
(13)வெள்ளை உளுந்து-100கிராம்,
ஆகியனவற்றை தனித்தனியாக  வறுத்து எடுங்க. குறைவான தீயில்  கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்தெடுத்து எடுங்க.
ஆறவைத்து அரைத்து பத்திரப்படுத்துங்க....
 அடுத்த பதிவில் ரசப் பொடி,கரம் மசாலாப் பொடி
 தயாரிப்பது பற்றி பார்ப்போம்.


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...