14 ஏப்ரல் 2020

நீங்களும் சமைக்கலாம் பகுதி - 10

                                                 நம்ம ஊரு சமையல்
                                                       ---------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

         கொங்கு வட்டாரத்தில் அரிசீம்பருப்புச் சோறு என்றழைக்கப்படும்
 'துவரம் பருப்பு சாதம்' செய்வது பற்றி இங்கு காண்போம்...
(தக்காளி சாதம் பற்றி கீழே)
தேவையான பொருட்கள்..
(1)அரிசி - 400கிராம் (2 டம்ளர்)
(2)துவரம் பருப்பு - 100கிராம்
(3)புளி - எலுமிச்சை அளவு
(4) சின்ன வெங்காயம் -ஒரு கைப்பிடி அளவு(சாம்பார் வெங்காயம்)
(5)காய்ந்த மிளகாய் - 10 அல்லது சாம்பார்த் தூள் தேவைக்கேற்ப,
(6) கறிவேப்பிலை - இரண்டு இணுக்கு
(7)கடுகு - 2 ஸ்பூன்
(8)வெள்ளை உளுந்து - 1 ஸ்பூன்
(9)மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
(10)சீரகம் -1 ஸ்பூன்
(11)பூண்டு - 10பல்
(12)தேங்காய் - அரை மூடி
(13)உப்பு - தேவையான அளவு
(14)தக்காளி - 1
(15)நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
(16)தாளித வடகம் இருந்தால் ஐந்தாறு சேர்க்கலாம்.

செய்முறை... (c.parameswaran Driver)
 முன் தயாரிப்பு..
 மிளகாய் வற்றல்,சீரகம் இரண்டையும் நன்றாக அம்மியில் மசித்து அதாவது பொடித்துக் கொள்ளவும்.தேங்காயை துருவிக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க...
  குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும்,வெ.உளுந்து,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்  போட்டு தாளித்து,தக்காளி நறுக்கிப் போட்டு  நன்றாக வதக்கவும். துருவிய தேங்காய்,புளிக் கரைசல்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு,அரிசியின் அளவில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி அரிசி,துவரம் பருப்பு போட்டு கலந்து உப்பு சரிபார்த்து  மூடி 4விசில் விட்டு இறக்கவும்.
கவனி;
                 இந்த சாதத்தில் துவரம் பருப்புக்கு பதிலாக தக்காளி ஐந்தாறு நறுக்கி  எண்ணெய் கொஞ்சம் அதிகம் ஊற்றி தாளித்து சேர்த்தால் தக்காளி சாதம் ஆகும்.

                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...