14 ஏப்ரல் 2020

நீங்களும் சமைக்கலாம் - பகுதி-08

                                        நம்ம ஊரு சமையல் -
                                  சமைத்துப் பழகலாம் வாங்க!                                                  
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

 
            பொடி வகைகள் தொடர்ச்சி...

 (உ) கறிவேப்பிலை பொடி
தேவையான பொருட்கள்
(1) கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு,
(2) சீரகம் - 2 தேக்கரண்டி  (டீ ஸ்பூன் ),
(3) உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி  (டீ ஸ்பூன் ),
(4) சோம்பு -  1 தேக்கரண்டி (டீ ஸ்பூன்),
(5) கடலைப் பருப்பு - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்),
(6) மிளகு - 1 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்),
(7) பச்சரிசி - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்),
(8) பெருங்காயம் - சிறிதளவு,
(9)உப்பு - தேவையான அளவு.  
மேற்கண்ட பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறைந்த தீயில் பொன்வறுவலாக வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்சியில் அல்லது மெஷினில் கொரகொரப்பாக அரைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்க....
சாதம்,இட்லி,தோசை என எல்லாவற்றுக்கும் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுங்க.....
-------------------------------------
(ஊ) பருப்புப் பொடி
தேவையான பொருட்கள்..
(1)துவரம் பருப்பு -100கிராம்
(2)கடலைப் பருப்பு - 100கிராம்,அல்லது
சிறு பருப்பு (பாசிப் பருப்பு)
(3)பொட்டுக் கடலை - 100 கிராம்,
(4)மிளகாய் -6
(5)மிளகு - 15கிராம், 
(6)சீரகம் - 15கிராம்,
(7)பெருங்காயம் - 1 கட்டி,
(8)கறிவேப்பிலை - கொஞ்சம்,
(9)வெள்ளைப் பூண்டு - 10 பல்
(10உப்பு - தேவைக்கேற்ப...
செய்முறை.........
குறைந்த தீயில் வறுத்தெடுக்க வேண்டும்.கருகிவிடக் கூடாது...
பொட்டுக்கடலையை சூடு தட்டுமளவு வறுத்துக் கொள்.
பூண்டு நசுக்கி அல்லது தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி மொறுமொறு என வறுத்துக் கொள் .
பெருங்காயக் கட்டியை சிறிது எண்ணெய் ஊற்றிபொறித்துக் கொள்.
மற்றவற்றை தனித்தனியாக வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்.இனி எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்...மிக்சியில் அரைத்தால் முதலில் மிளகாயைப் போட்டு அரைத்துக்கொண்டு பிறகு மற்றவற்றைப் போட்டு அரைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு பயன்படுத்துங்க..



                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...