02 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part - 08

                       திருக்குறள் பெருமைகள் அறிவோம்...பகுதி 08
                           -----------------------------------------------------------------
  மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
       உலக மொழிகளிலேநீதிபோதனை வழங்கும் நூல்களிலேயே முதன்மையானது தமிழிலுள்ள திருக்குறள் என்று முதன் முதலாக உலகறியச் சொன்னவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் ஆவார். திருக்குறளை பிறமொழிப் பெயர்ப்பாக1730ஆம் ஆண்டு  முதன்முதலாக இலத்தீன் மொழியில்  மொழிபெயர்த்தவெளிநாட்டு அறிஞரும் இவர்தாங்க.

                      வீரமாமுனிவருக்குப் பிறகு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றனர். ஆங்கிலத்தில்  G.U.. போப்  அவர்கள்தான் முதன்முதலாக மொழி பெயர்த்தார்.அதன்பிறகு   96 பேர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். இந்திய மொழிகளில் 13 மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளில் 14 மொழிகளிலும், கிழக்காசிய மொழிகளில் 10 மொழிகளிலும், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

           உலகத்தில் தோன்றிய நீதிநூல்களில் தமிழில் தோன்றிய திருக்குறள் ஒன்று தான் இருக்கின்ற உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டக்கூடிய நூலாக இருக்கிறது. ஆகவே,உலக இலக்கியநூல்களில் சிறந்தது திருக்குறள் என்று கூறினார் ஆல்பர்ட் சுவைட்சர்.

                 வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளூவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?
என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
        
                 எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் திருக்குறளை அவசியம் படிக்க வேண்டும் என்று கூறினார் பிரெஞ்சு நாட்டு மொழியியல் அறிஞர் ஏரியல்.

                     எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறளை ஏன் படிக்க வேண்டும்?  பைபிள் ஒரு கிறித்துவரைத்தான் உருவாக்குகிறது. குர் ஆன் ஓர் இஸ்லாமியரைத்தான் உருவாக்குகிறது. கீதை ஓர் இந்துவைத்தான் உருவாக்குகிறது. இவைகளெல்லாவற்றிலும் மேலாக திருக்குறள் ஒன்று தான் ஒரு மனிதனை உருவாக்குகிறது.
ஆக, மனிதனை மனிதனாக உருவாக்கக்கூடிய நூல் திருக்குறள் மட்டுமே!.என்று போற்றியவர் பிரெஞ்ச் அறிஞர் ஏரியல் அவர்கள்...
     
                    எந்த இனத்தையும் சாராமல், எந்த மொழியையும் சாராமல் மனித இனம் அனைத்திற்கும் பொதுவான நீதியை உரைப்பதால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.

                விக்டோரியா மகாராணியார்  நாள்தோறும் ஒவ்வொரு குறளைப் படித்து, அதன் பொருளை உணர்ந்து கொண்டார் என்று குறிப்பு இருக்கிறது

        அமெரிக்க வெள்ளை மாளிகையில் திருக்குறள் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
                            ரஷ்யாவின் இரும்பு மனிதர் என்று கூறப்படும் ஸ்டாலின், பாதாளச் சுரங்க அறையில் திருக்குறளைப் பாதுகாத்து வைத்திருந்தார் என்று அறிகிறோம்.
 
                         திருக்குறளின் தனிச் சிறப்பு..
                                -------------------------
  (1) வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.
 (2) உள்ளுதல், உள்ளி உரைத்தல், உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற  முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.
 (3) திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு.
 (4)அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே.ஆனால் திருக்குறளை மக்களும்      சுவைக்கின்றனர். எனவே திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.
 (5)திருவள்ளுவர் தேவரினும் சிறந்தவர்.
(6)நாவுக்கு நல்வாழ்வு திருக்குறள்.
 (7)உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் திருக்குறளில் உண்டு.
(8) எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதில் இல்லாத எப்பொருளும் இல்லையால்.
 (9)இம்மை, மறுமை, எழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்) சொன்னார்.
 (10)கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம் என்றாலும் திருக்குறளின் நயம் திங்களுக்கு இல்லை.
 (11)வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.
(12)  ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும். திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்தது.  (konguthendral.blogspot.com)
(13) திருக்குறள் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்யமுடியாது.
  (14)ஆறு சமயத்தவரும் ஏற்கும்படி வாழ உதவும் பொருளை வகுத்துத் தந்தவர் வள்ளிவர்.
(15) செய்யாமொழி எனப்படும் வேதத்துக்கு உரியவர் அந்தணர் மட்டுமே. பொய்யாமொழி எனப்படும் திருக்குறளைச் சொல்வதற்கு உரியவர் எல்லா மக்களும்.
(16) சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரின் பெயரைச் சீழ்  ஒழுகும் தலையை உடைய சாத்தனார் என்று கொண்டு, புண்ணால் உண்டாகிய தலைவலி திருவள்ளுவரின் திருக்குறளைக் கேட்டதும் தீர்ந்துவிட்டது.
 (17) திருக்குறள் 'வாயுறை வாழ்த்து' . இன்பம் எய்தவும், தின்பம் போக்கவும் உதவும் மருந்து இது.
(18) இருவினை தீர்க்கும் மாமருந்து.  (konguthendral.blogspot.com)
(19)  பனித்துளி பனைமரத்தைக் காட்டுவது போல்த் திருக்குறளில் பொருள் செறிந்துள்ளது.
 (20) நன்னீர்ப் பொய்கையில் நீராடுவோர் பருகும் நீருக்காக வேறு குளத்துக்குச் செல்லார். அதுபோல வள்ளுவரின் முப்பால் படிப்பவர் வேறு நூல் தேடி அலைய வேண்டுவதில்லை.
(21)  மக்களின் கலையையும், வேதப் பொருளையும் இணைத்துப் பாடியுள்ளார்.
(22) திருக்குறளின் முதல் பாடலிலேயே மூன்று பால்களில் சொல்லப்பட்ட செய்திகளும், நாற்பொருள் செய்திகளும் அடக்கம்.
 (23)கடலில் மணல் தோண்டத் தோண்ட நீர் ஊறும். குழந்தை சுவைக்கச் சுவைக்கத் தாய்க்குப் பால் ஊறும். திருக்குறள் ஆய ஆய அறிவு ஊறும்.
(24)திரு வள்ளுவர் புலவர். அவர் காலைப்பொழுது. மற்றவர்களும் புலவர். அவர்கள் மாலைப் பொழுது.
(25)செய்க, செய்யற்க என்று வள்ளுவர் கூறுவனவே மேலானவை.
(26) திருவள்ளுவர் 1(ஒருவர்). குறள் 2 (இரண்டடி). சொன்னது 3 (முப்பால்). அளித்தது 4 (அறம்,பொருள்,இன்பம்,வீடுபேறு ஆகிய நான்குபொருள்). அடக்கம்  5 (ஐம்புலன்) வேதம். 6 (ஆறுசமயங்கள்).
(27)திருக்குறளால் மக்கள் மனத்தில் பொய் போயிற்று. மெய் நிலவிற்று.
(28)அறம், பொருள், இன்பம், வீடு பற்றி இதுவரையில் கேளாதனவற்றை யெல்லாம் திருக்குறளில் அறியலாம்.
                               (konguthendral.blogspot.com)
                  என்றெல்லாம் திருக்குறளின் மேன்மையை  வேதம் என்றும், கடவுளின் மேலானர் என்றும்,மாமருந்து என்றும்,இயற்கையோடு ஒப்பிட்டும்,பொதுநூல் என்றும்,
சங்ககாலம் தொட்டு இந்தக்காலம் வரை அனைத்து அறிஞர் பெருமக்களாலும் புகழப்பட்டு அறிகிறோம்.
--------------------------------------------------------------
திருக்குறள் மாமலை-மாத இதழ் வாசித்துவிட்டீர்களா?
 உடனே சந்தாதாரர் ஆகுங்க!...

                                                   இன்னும் தொடரும்....

  என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
 தொடர்பு எண் 9585600733.
 (konguthendral.blogspot.com)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...